Skip to main content

Posts

Showing posts from February, 2013

அறிந்தரகசியம் போல

***அறிந்தரகசியம் போல என் படுக்கையறைச்சன்னலோரம் புறா ஒன்று அமர்ந்திருக்கிறது நெடு நேரமாய் அது இருப்பது இல்லாதது போல் இருக்கிறது. ஒரு அந்தரங்கத்தை அறிந்த ரகசியம் போல அவ்வளவு அமைதி அவ்வளவு சாந்தம் எப்பொழுதாவது தன் இணைக்கு மட்டும் அனுப்புகிறது. தனது  தனிமையை குறுஞ்செய்தியாக்கி க்கும்...  க்கும்... ரவிஉதயன்.

பீட்டர்ஸ் சாலையும் பெசன்ட் சாலையும்

பீட்டர்ஸ் சாலையும் பெசன்ட் சாலையும் அழகியசிங்கர்                                                                                       தூரத்தில் வண்டி வருகிறது   வேகமாகவும் மெதுவாகவும சுற்றி சுற்றி பல வண்டிகள் வந்தவண்ணம் உள்ளன. ஹாரன் அடித்தபடி வண்டிகள் கிடுகிடுக்க                வைக்கின்றன                                 பீட்டர்ஸ் சாலை காலை நேரத்தில் அதிர்கிறது ஸ்கூட்டரில் பள்ளிச் சிறார்கள் அலுவலகம் போக அவசரம் அவசரமாக வண்டி பறக்கிறது. மெதுவாக பீட்டர்ஸ் சாலை பெசன்ட் சாலையாக மாறுகிறது. பல்லவன் பஸ்கள் நிற்க கூட்டம் எல்லா இடத்திலும் நானும் நிற்கிறேன் மேலே நகராமல்                        அழுக்கு வண்டிகளும் அழுக்கில்லாத வண்டிகளும் பொறுமை இல்லாமல் கதற கதற ஹாரன் அடிக்கின்றன காலையில் அலுவலகத்தில்                         கூடும் கூட்டத்தை மனம் எண்ணி எண்ணி  படபடக்கிறது.....

சீரியல் மகத்துவம்...

சீரியல் மகத்துவம்... அழகியசிங்கர்                 அலுக்காமல் சலிக்காமல் தினமும் சீரியல் பார்க்கும் குடும்பம் எங்கள் குடும்பம் ... நானும் அதில் ஒருவனாக மாறிவிடுவேனோ என்று பயமாக இருக்கிறது சீரியலே வாழ்க்.

பூனைக்கும் மனிதனுக்கும் பொதுவான உணவு

பூனைக்கும் மனிதனுக்கும் பொதுவான உணவு செல்வராஜ் ஜெகதீசன் வாங்கிய பொருட்களின் கனம் தாங்காமல் கடை வாசலில் வைத்தேன் சற்றே இளைப்பாற. பாய்ந்து வந்து பைகளின் மேல் மோதிய பூனையொன்றை விரட்டியவன் வேகமாய் அவ்விடம் விட்டு அகன்றேன். பூனைக்கு உதவும் மனமில்லாமல் இல்லை. பூனைக்கும் மனிதனுக்கும் பொதுவான உணவொன்றும் பை - வசம் இல்லாததே காரணம்.

அலைதலின் முற்றுகை

அலைதலின் முற்றுகை  கோவில் மதிற்சுவர் நரகல் மணம் கூசுவதொத்த  மனம் எனது  தவறவிட்ட  பிடித்தே ஆகவேண்டிய தொடர்வண்டியை  மழையும் வெயிலும்  துரத்திக் கொண்டிருக்கிறது  மேல்நோக்கி  கீழிறங்கி  அந்தரத்தில் மிதந்து அலையும்  இறகு ஒன்றினைத் தனதாக்க  நெஞ்சு விம்ம விம்ம  கைகளை நீள.. நீள... நீட்டுகிறேன்  ஓணான் அடிக்கும் குழந்தைகளை  யதேச்சையாய்க் கடக்கிறேன்  தொப்பலென  உனதான எனக்கானத் தாய்மடியில்  தலை வைத்து சாய்ந்து கொண்டேன் ***  --ஆறுமுகம் முருகேசன் 

மீன்கொத்தி ஆறு

மீன்கொத்தி ஆறு                        கரை ததும்பி நகர்கிற ஆறு நின்றவாறு பார்க்கிறீர்கள் உங்கள் கால் விரல்களை அதன் ஈர நுனிகள் வருடி விடுகின்றன நீர்க்குமிழிகள் உங்களை மிதக்க அழைக்கின்றன உங்கள் மூச்சுக்காற்றின் ஓசை போல ஆறு உங்களோடு தனிமையில் இருக்கிறது அதன் வசீகிர நீர்ச்சுழி உங்களை வரவேற்கிறது திறந்திருக்கிற நீர்ப்பரப்பிற்குள் சட்டென்று ஒரு துளிசிதறாமல் மீனைப்போல தாவிப் பாய்கிறீர்கள் காத்திருந்த ஆறு மீன் கொத்தியாகி உங்களை கவ்விக்கொல்கிறது! ரவிஉதயன்

எதையாவது சொல்லட்டுமா....81

எதையாவது சொல்லட்டுமா....81 அழகியசிங்கர்  நான் மாம்பல வாசி.  மாம்பலத்தில் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்குமேல் வசித்து வருகிறேன்.  நான் பார்த்த மாம்பலம் வேறு.  இப்போது பார்க்கும் மாம்பலம் வேறு. நான் வங்கியில் சேர்ந்த புதியதில் மாம்பலத்தில் குடியிருந்த என் அலுவலகப் பெண்மணிக்குத் திருமணம்.  அந்தத் திருமணத்தை மாம்பலத்தில் உள்ள ஒரு கல்யாண மண்டபத்தில் ஏற்பாடு செய்திருந்தார்கள்.  அந்தப் பெண் எப்பவாவது என் வீட்டிற்கு வந்து அலுவலகம் போக முடியாவிட்டால் வரமுடியவில்லை என்று கடிதம் எழுதி அலுவலகத்தில் கொடுக்கும்படி சொல்லிவிட்டுப் போவார்.   எங்களைப்போல அவர்களும் சாதாரண குடும்பத்தைச் சார்ந்தவர்கள்.  அந்தப் பெண்ணின் அம்மா ஒரு பள்ளிக்கூடத்தில் டீச்சராக பணிபுரிந்து கொண்டிருந்தார்.  பெண்ணின் திருமணத்தை ஒட்டி பணம் அதிகமாக தேவைப்பட்டது அவர்களுக்கு.  ஒருமுறை எதிர்பாராதவிதமாய் அந்தப் பெண் வீட்டிற்கு வரும்படி கேட்டுக்கொண்டார்.  ஒரு காலை நேரத்தில் நானும் அவர்கள் வீட்டிற்குச் சென்றேன்.  என்னைக் கூப்பிட்டுப் பேசிக்கொண்டிருந்தவர்கள்.  எதிர்பாராதவிதமாய் அந்தப் பெண்ணின் அம்மா என்னிடம் ஒரு வேண்டுகோள்

நிழற்படங்கள்

நிழற்படங்கள் எம் . ரிஷான் ஷெரீப் நான் அப்படிக் கேட்டிருக்கக் கூடாதுதான் . மிகவும் சோகத்துக்குள்ளான அந்த நண்பரது கண்கள் எனது கண்களை நேரே பார்த்தன . பின்னர் தாழ்ந்துகொண்டன . அறையிலிருந்த என் கணவர் ' என்னடா இது ?' என்பது போல முறைப்புமில்லாமல் அதிகளவான திகைப்புமில்லாமல் கேள்வியோடு என்னைப் பார்த்தார் . ' பொண்ணு வீட்டுக்கும் இந்த போட்டோவைத்தான் கொடுத்தீங்களா ?' என்ற எனது கேள்வி , இயங்கிக்கொண்டிருந்த குளிரூட்டியின் சத்தத்தோடு யன்னல்களேதுமற்ற அந்த அறையின் எல்லாப்பக்கங்களிலும் பதில்களற்று உலாவருமென எனக்கு எப்படித்தெரியும் ? நான் விளையாட்டாகத்தான் அதைக் கேட்டேன் .   சில நிகழ்வுகளையொட்டிக் கேள்விகள் தானாக உதித்துவிடுகின்றன . எல்லாக் கேள்விகளுக்கும் எல்லோரிடமும் பதில்கள் இருப்பதில்லை . சொல்ல வேண்டிய பதில்களைக் காலம் கொண்டிருக்கும் . அதன் வாய்க்குள் புகுந்து விடைகளை அள்ளிவர எல்லோராலும் இயல்வதில்லை . அவ்வாறு இயலாமல் போனவர்கள் மௌனம் காக்கிறார்கள் . இல்லாவிடில் சிரிக்கிறார்கள் அல்லது அழுக