Skip to main content

Posts

Showing posts from 2015

விஷ்ணுபுர விருதும் தேவதச்சனும்....

விஷ்ணுபுர விருதும் தேவதச்சனும்.... அழகியசிங்கர் இந்த ஆண்டு விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் விருது தேவதச்சனுக்கு அளிக்கபபட்டிருக்கிறது.  கவிதை எழுதுபவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த விருது அளிக்கப்பட்டிருக்கிறது. இதுவரை தேவதேவன், ஞானக்கூத்தன், தேவதச்சன் என்று மூன்று முக்கிய கவிஞர்களுக்கு இந்த விருது அளிக்கப்பட்டிருக்கிறது.  இந்த விருதில் இன்னும் ஒருவரும் இருக்கிறார்.  எழுத்து காலத்திலிருந்து எழுதிவரும் வைதீஸ்வரன்தான் அவர்.   இது மாதிரி விருது வழங்குவதன் மூலம் படைப்பாளிகள் உற்சாகமடைவார்கள். பொதுவாக எந்த விருது வழங்கினாலும், அவருக்குக் கொடுத்தது சரியில்லை அல்லது சரி என்று விவாதம் நடக்கும்.  ஆனால் விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட விருதில் அதுமாதிரி விவாதத்திற்கு வாய்ப்பில்லை என்றுதான் தோன்றுகிறது.   இந்த விருதை கொடுப்பது மட்டுமல்ல.  அந்த நிகழ்வை ஒரு கொண்டாட்டமாக இந்த விருது கொடுப்பவர்கள் மாற்றி விடுகிறார்கள்.  தற்செயலாக இந்த நிகழ்வைப் கோவையில் பார்க்க   ஞாயிற்றுக்கிழமை மாலை சந்தர்ப்பம் கிடைத்தது.  பார்த்தபோது மகிழ்ச்சியாக இருந்தது.   ஜெயமோகன் பேசும்போது ஒன்றை குறிப்

சொல்வனம் - விருட்சம் சேர்ந்து நடத்தும் கூட்டம்

                     கலந்து உரையாடல் பங்கேற்பவர்கள் : ஜெயந்தி சங்கர், சத்தியனந்தன்                 இவர்களுடன் சொல்வனம் ரவி சங்கரும்,                 அழகியசிங்கரும்         இடம் :                  பனுவல் விற்பனை நிலையம்                         112 திருவள்ளுவர் சாலை                         திருவான்மியூர், சென்னை 600 041         தேதி            02.01.2016 (சனிக்கிழமை)         நேரம்           மாலை 5.30 மணிக்கு                           பேசுவோர் குறிப்பு : ஜெயந்தி சங்கர் : சிறுகதை, புதினம், மொழிபெயர்ப்பு என்று பல துறைகளில் தன் ஆளுமையைப் பதித்தவர். சத்தியனந்தன் :  சிறுகதை, புதினம், மொழிபெயர்ப்பு, இலக்கிய விமர்சனம் என்று பல துறைகளில் ஈடுபாடு கொண்டவர் அனைவரும் வருக, அன்புடன் ரவி சங்கர் - அழகியசிங்கர்

புத்தக விமர்சனம் 13

அழகியசிங்கர் சங்கவை என்ற பெயரில் இ ஜோ ஜெயசாந்தி எழுதிய 927 பக்கங்கள் கொண்ட மெகா நாவலை எல்லோரும் படிக்க வேண்டும்.  ஒரு பெண் எழுத்தாளர் இத்தனைப் பக்கங்கள் ஒரு நாவலை எழுதியிருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.  இன்றைய தமிழ் சூழ்நிலை மெகா நாவல் சூழ்நிலை.  ஆனால் யார் இத்தனைப் பக்கங்களைப் படிப்பது என்ற கவலையும் பலருக்கு ஏற்பட வாய்ப்புண்டு. எழுதுபவர்களுக்கு அதுமாதிரி கவலை இருப்பதாக தெரியவில்லை. இன்னொரு விஷயத்தையும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.  சமீத்தில் பெண் எழுத்தாளர்கள் யாரும் அவ்வளவாக நாவல் எழுதுவதாக தோன்றவில்லை.  கவிதைகள் அதிகமாக எழுதி புத்தகமாக வருகிறது.  அல்லது சிறுகதைத் தொகுதி வெளிவருகிறது.  மெகா நாவல் மாதிரி யாரும் முயற்சி செய்வதில்லை.  ஒரு நாளைக்கு ஒரு மணி நேரத்தில் நான் 30 பக்கங்கள் படிப்பேன் என்று வைத்துக்கொண்டால்  900 பக்கங்கள் படிக்க 30 நாட்கள் ஆகும்.  இதில் என்ன பிரச்சினை என்றால் புத்தகம் படித்துக்கொண்டிருக்கும்போது கதா பாத்திரங்களை  ஞாபகம் வைத்துக் கொண்டிருக்க வேண்டும். சங்கவை நாவலைப் படிக்கும்போது அது ஒரு நல்ல அனுபவமாக இருந்தது.  படித்து முடித்தப்பின் நான் திரும்ப

அறிவிப்பு

     அழகியசிங்கர்          திருமதி ரங்கம்மாள் நினைவு தமிழ் நாவல் போட்டியின் பரிசளிப்பு விழா  2013 மற்றும் 2014ம் ஆண்டுகளில் வெளியாகி இவ்வாண்டு பரிசுப் போட்டிக்கு வந்த நாவல்களில் விருட்சம் வெளியீடாக வந்த எழுத்தாளர் இ ஜோ ஜெயசாந்தி எழுதிய üசங்கவைý என்ற நாவல் 2015ம் ஆண்ட திருமதி ரங்கம்மாள பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசளிப்பு விழா  27.10.2015 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு கஸ்தூரி சீனிவாசனம் அறநிலையம், கோயமுத்தூரில் நடைபெற உள்ளது.  அன்று காலை நாவலாசிரியையும், நாவலைப் பிரசுரம் செய்த பதிப்பாளரையும் கௌரவம் செய்கிறார்கள்.   அந்த விழாவிற்கு பதிப்பாளர் என்ற பொறுப்பில் நானும் செல்கிறேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.  1983ஆம் ஆண்டிலிருந்து திருமதி ரங்கம்மாள் பரிசு நாவல்களுக்குப் பரிசு கொடுத்து வருகிறார்கள்.  1985ல் பாலங்கள் என்ற சிவசங்கரி நாவலுக்குப் பிறகு, இ ஜோ ஜெயசாந்திக்கு 2015ல் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.  நாவலுக்குப் பரிசாக 17 முறைகள் கொடுக்கப்பட்ட விருதில், இரண்டே இரண்டு பெண் எழுத்தாளர்கள்தான் இதுவரை பரிசு பெற்றுள்ளார்கள் என்பதைத் தெரிவித்து

சார்வாகன் இறந்துதான் விட்டார்............

அழகியசிங்கர் நான் பார்க்க வேண்டுமென்று நினைத்த எழுத்தாளர்களில் ஒருவர் சார்வாகன்.  இன்னொருவர் ராஜம் கிருஷ்ணன்.  இவர்கள் உயிரோடு இருக்கும்போது சந்தித்துப் பேச வேண்டுமென்று நினைத்தேன்.  ஆனால் அது சாத்தியம் இல்லாமல் போய்விட்டது.  முதல் காரணம்.  நான் பார்க்க நினைத்த எழுத்தாளர்களை யாராவது ஒருவராவது அவர்களுக்குத் தெரிந்தவர்கள் எனக்கு அறிமுகப் படுத்தி இருக்க வேண்டும்.  புத்தகம் மூலம் இந்த எழுத்தாளர்களை எனக்குத் தெரிந்திருந்தாலும் முழுமையாக இவர்கள் எழுதிய புத்தகங்களை நான் படித்தவனில்லை. ஏன்எனில் புத்தகம் படிப்பது எனக்குப் போராட்டமாக இருக்கிறது.  நான் விரும்பும் எழுத்தாளர்களின் புத்தகங்களைப் படிக்கும்போது பெரிய போருக்குத் தயாராவது போல் இருப்பேன்.  அதே சமயத்தில் புத்தகம் படிப்பது போல் அற்புதமான விஷயம் வேறு எதுவுமில்லை என்றும் நினைப்பவன். ராஜம்கிருஷ்ணன் புத்தகங்களை நான் ஆரம்ப காலத்திலேயே படித்திருக்கிறேன்.  க்ரியா வெளியீட்டின் மூலம் வெளிவந்த சார்வாகனின் சிறுகதைத் தொகுதியான üஎதுக்குச் சொல்றேன்னா,ý என்ற புத்தகத்தை அது வந்த சமயத்திலேயே வாங்கி வைத்திருக்கிறேன்.  ஆனால் வழக்கம்போல்

எழுத்தாளர் சார்வாகன் பற்றி அசோகமித்திரன் எழுதியது......

சார்வாகன் திங்கட்கிழமை (21-12-2015) காலமான சார்வாகன் என்றும் அறியப்பட்ட ஹரி ஸ்ரீநிவாசன் தொழில்முறையில் அறுவை சிகிச்சை நிபுணர். நீண்ட காலம் செங்கல்பட்டு தொழுநோய் மருத்துவமனியில் பணி புரிந்தவர். பின்னர் ஆக்ரா சென்று பணியாற்றினார். அதன் பிறகு சென்னையில் மிகச்சின்ன அளவில் வீட்டிலேயே மருத்துவ ஆலோசனைகள் தந்தவர். எண்பத்தேழு வயதில் காலமாவதற்குக் காரணம் தேட வேண்டியதில்லை. தொழு நோய் கண்டவர்கள் விரல்களைச் செயலாக்கம் தரும் அறுவை சிகிச்சையில் அவர் உலகப் புகழ் பெற்றவர். சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்பே அவர் பணியைக் குறித்து ‘ரீடர்ஸ் டைஜஸ்ட்’ ஒரு கட்டுரை வெளியிட்டது. அவர் ஆர்.கே.நாராயண் குடும்பத்துக்கு உறவினர். அவருடைய தொழில்முறைக் கட்டுரைகள் ஆங்கிலத்தில் இருந்தாலும் அவர் விரும்பி எழுதத் தேர்ந்தெடுத்த மொழி தமிழ். சி.சு.செல்லப்பா வெளியிட்ட’எழுத்து’ மாத இதழிலும் ’புதுக்குரல்’ நூலிலும் அவருடைய கவிதைகள் உள்ளன. அவருடைய இலக்கியத் தனித்தன்மையைக் கண்டு கொண்ட ‘நகுலன்’ (டி.கே. துரைசுவாமி) அவருடைய சில கவிதைகளையும் இரு சிறுகதைகளையும் அவர்  தொகுத்து வெளியிட்ட ‘குருக்ஷேத்திரம்’ நூலில் இடம் பெறச

சின்ன தப்புகள்....

.... அழகியசிங்கர் குவியம் இலக்கிய அமைப்பு ஏற்பாடு செய்த நேர்பக்கம் என்ற என் புத்தக அறிமுகக் கூட்டத்திற்கு வந்திருந்த அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்வது அவசியம் என்று தோன்றுகிறது. சிறப்புப்   பேச்சாளராக வந்திருந்த அசோகமித்திரனுக்கும், என் பொருட்டு பேச வந்திருந்த ப்ரியாராஜ், க்ருஷாங்கினி, லதா ராமகிருஷ்ணன், உமா பாலு அவர்களுக்கும், குவியம் சார்பில் ஏற்பாடு செய்த கிருபானந்தன், சுந்தர்ராஜனுக்கும் என் நன்றி. நன்றி. நன்றி. அசோகமித்திரன் பேசுவதைக் கேட்கும்போது அவர் பக்கத்தில் அமர்ந்திருந்த நான் என்னை மறந்து அவர் பேச்சை ரசித்து சிரிக்க ஆரம்பித்து விட்டேன். வெள்ளத்தால் ரொம்பவும் நனையாத கொஞ்சம் நனைந்த புத்தகங்களை அள்ளி எடுத்துக்கொண்டு கூட்டத்திற்கு வந்திருந்தேன்.என் புத்தகத்தில் புத்தகம் முடிந்தபின் நான் சில சின்ன தப்புகளைச் செய்துவிட்டேன். இந்தப் புத்தகத்தில் அட்டைப் பட ஓவியத்தை வரைந்தவர் கவிஞர் எஸ் வைதீஸ்வரன். இதைக் குறிப்பிடாமல் விட்டுவிட்டேன். அற்புதமான ஓவியம் அது. உண்மையில் இந்தப் புத்தகம் வந்ததே ஒரு விபத்துதான். கிட்டத்தட்ட 5 அல்லது 6 ஆண

வெள்ளம் பற்றிய ஐந்து கவிதைகள்

அழகியசிங்கர் கவிதை 3 வெள்ளம் வடிந்த அடுத்தநாள் காலை பால் எங்கே கிடைக்கிறது என்று அலைந்து கொண்டிருந்தேன் எங்கள் தெரு வீரமணி மாடுகளை வைத்து வியாபாரம் செய்வான் அவனிடம் உள்ள மாடுகளை அடுத்தத் தெருவிற்கு மேட்டுப்பகுதிக்கு ஓட்டிச் சென்று விட்டான் மழைத் தூறலில் அவனும் மாடும் நனைந்தபடி பால் கறந்து கொண்டிருந்தான் அவனைப் பார்த்து சிரித்தேன் üதருகிறேன் அரை லிட்டர் யார் கண்ணிலும் படாதீர்கள்..ý என்றான். கவிதை 4 சொல்கிறேன் கேளுங்கள் இனிமேல் மழை என்றால் வெள்ளம் வருமென்று ஞாபகம் வந்து பதட்டமடைய நேர்கிறது என்ன செய்வது? கவிதை 5 தெருவில் வெள்ளம்  புகுந்த காலத்தில் மொட்டை மாடியில் போய் தஞ்சம் அடைந்தோம் சுற்று முற்றும் பார்த்தோம் வானத்தைப் பார்த்து கையெடுத்துக் கும்பிட்டோம் பின் எதிர் வீடு பக்கத்து வீடென்று எல்லோர் வீட்டு மொட்டை மாடிகளையும் பார்த்தோம் இவ்வளவு பெண்களா எங்கள்     தெருவில்.....

வெள்ளம் பற்றிய ஐந்து கவிதைகள்

அழகியசிங்கர் கவிதை 2 ராமன் வீடு தனியாக இருக்கும் கீழே மேலே என்று பள்ளத்தில் இருக்கும் எப்பவோ கட்டிய வீடு சாதாரண மழைக்கே வந்து விடும் உள்ளே மழை நீர் இது பெரும் மழை தெருவில் உள்ள சாக்கடை நீரெல்லாம் உள்ளே வந்து ராமன் அதிர்ச்சி அடைந்து தன் வீட்டு மாடியில் குடியிருக்கும் வீட்டில் தஞ்சம் அடைந்தார் மனைவியுடன் மறு நாள் மாடியில் இருந்து தெருவைப் பார்த்தார் கவலையுடன் அவர் முகமே சரியில்லை அடுத்தநாளுக்கு அடுத்தநாள் தெருவில் நடந்தபோது என்ன ஆயிற்று என்று கேட்டேன் சீலிங் பேன் வரை சாக்கடை நீர் நாற்றம் வீட்டுப் பத்திரம் எல்லாம் போய்விட்டது இன்னும் என்னன்ன துயரமெல்லாம் சுமக்கப் போகிறேனோ என்று உடைந்த குரலில் கூறி மேலும் பேசப்பிடிக்காமல் நகர்ந்து விட்டார்

வெள்ளம் பற்றிய ஐந்து கவிதைகள்

          அழகியசிங்கர்         கவிதை 1         கண் முன்னே நடந்தது         நீரின் ஓட்டம்         வகை தெரியாமல் மாட்டிக்கொண்டோம்         கீழ்த் தரை வளாகத்தில்            வைத்திருந்த புத்தகங்களின்         பெருமையை யார் அறிவார்         வந்த நீர் லபக்கென்று         வாயில் இட்டுக்கொண்டது.         திரும்பவும் நீர் அரக்கன்         முதல் மாடி வளாகத்தில் வீற்றிருக்கும்         எங்களை மிரட்டப் போகிறதோ         என்று பயந்தவண்ணம் இருந்தோம்         ஒவ்வொரு படிக்கட்டையும்         தொட்டு தொட்டு         வந்து கொண்டிருந்த கரும் நிற         நீர் அரக்கனை         ஒன்றும் புரியாமல் பார்த்துக்கொண்டிருந்தோம்         அன்று இரவு தூக்கம் சிறிதுமில்லை         ஆனால் தர்மத்திற்குக் கட்டுப்பட்ட         நீர் அரக்கன் எங்களை விட்டுவிட்டான்         பயபபடாதே         என்று ஆறுதல் படுத்தபடியே         கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து         பின்னோக்கிப் போய்விட்டான்         ஆனால்         எங்கள் மனதில் புகுந்த அச்சம்         அவ்வளவு சுலபத்தில்         எங்களை விட்டு அகலவில்லை                                                        

தனித்துவங்கள்

ராமலக்ஷ்மி     கா ட்டுத் தீக்கு ஒப்பாக இரத்தச் சிகப்பு இலைகளோடு கனன்றிருந்த விருட்சத்தின் இலைகள்  பழுப்புக்கு மாறத் தொடங்கியிருந்தன இளவேனிற்கால முடிவில். ஒவ்வொன்றாய் உதிர்ந்து ஒற்றை இலையோடு  ஓரிருநாள் காட்சியளித்த விருட்சத்தின் கடைசி இலையும் விடை பெற்றுப் பறக்கலாயிற்று. கண்களுக்குப் புலப்படாத வளியில் சுழன்று சுழன்று பயணித்து  குவிந்து கிடந்த மற்ற இலைகளின் மேல் வீழ்ந்த இலையின் காற்றுக்கெதிரான கடைசிப் போராட்டத்தை கண்டு பாராட்ட எவருமில்லை. விருட்சத்தோடு  அதிகம் தாக்குப் பிடித்த முயற்சியை கவனிக்க நேரமுமில்லை. நேரே உதிர்ந்து உலர்ந்தவற்றுக்கும் அதற்குமான வித்தியாசத்தை உலகம் உணர வாய்ப்புகளற்று இலைகளோடு இலையாக வாடிச் சருகான  அதன் மேல் ஊர்ந்து கொண்டிருந்தது மண் புழு.

தண்ணீர் பக்கமா கண்ணீர் பக்கமா..........

அழகியசிங்கர் சமீபத்தில் நான் கொண்டு வந்த புத்தகம் பெயர் நேர்பக்கம்.  இப்புத்தகம் ஒரு கட்டரைத் தொகுதி.  பல எழுத்தாளர்களைப் பற்றி படைப்புகளைப் பற்றி எழுதிய கட்டுரைத் தொகுதி இது.   ஒரு காலத்தில் 1000 பிரதிகள் அச்சடித்த நிலை மாறி 300 பிரதிகள் அச்சடிக்கும் காலமாக இன்று மாறி விட்டது.  நான் 376 பிரதிகள் மட்டும் அச்சடித்துள்ளேன்.  என் பிறந்த தினமான டிசம்பர் ஒன்றில் எப்படியாவது கொண்டு வர வேண்டுமென்று கொண்டு வந்து விட்டேன். ஒரு ஆட்டோவில் புத்தகத்தைக் கொண்டு வந்தேன்.  என் புத்தகம் மட்டுமல்லாமல், பெருந்தேவியின் தீயுறைத் தூக்கம், நீல பத்மநாபனின் 148 கவிதைகள் தொகுதி, அய்யப்பப் பணிக்கரின் கோத்ர யானம் என்ற புத்தகமும் கொண்டு வந்துள்ளேன்.  என் புத்தகம் தவிர மற்றப் புத்தகங்கள் 100தான் அச்சடித்துள்ளேன்.  கவிதைப் புத்தகம் என்பதால்.  இந்த நான்கு புத்தகங்கள் அடிக்க 25000 ரூபாய் செலவு ஆகிவிட்டது. என் வீட்டின் கீழ் பகுதியில் உள்ள அறையில் என் புத்தகங்களை வைத்திருந்தேன்.  வேற வழியில்லை.  டிசம்பர் 1ல் நான் என் புத்தகத்தின் சில பிரதிகளை சில நண்பர்களுக்குக் கொடுக்க நினைத்தேன்.  முட

இனிமேல் இரண்டாவது மாடி வீடுதான் வேண்டும்....

அழகியசிங்கர் டிசம்பர் முதல் தேதி என் பிறந்தநாள்.  இரண்டாம் தேதி நான் எதிர்பாராத நிலை ஏற்பட்டது.  மழை ஏற்பட்டதால் நான் வெளியே போகவில்லை.  இந்த நிலை அப்படியே நீடித்திக் கொண்டிருந்தது.  எங்கள் தெருவில் போன மழையில் தண்ணீர் வரவில்லை. நான்  ஹாய்யாக டிவி பார்த்துக்கொண்டிருந்தேன்.  முடிச்சூரில் தண்ணீர் சூழ்ந்து எல்லோரும் பாதிக்கப்பட்டிருந்தார்கள்.   அதை டிவியில் காட்டியபோது நம்ப முடியாமல் இருந்தது.  நம் சென்னையில் ஒரு பகுதியிலா இப்படி என்று பட்டது.  நம்ம இடம் பரவாயில்லை என்று நினைத்தது எவ்வளவு தப்பு. எனக்குத் தோன்றியது கரண்ட் கட் ஆகிவிட்டால் என்ன  செய்வது.  உடனே மோட்டார் போட்டு மேலே தொட்டியை நிரப்பினேன்.  அப்போது மழைப் பெய்து கொண்டிருந்தது.  ஒரு அரை மணி நேரம் போட்டிருப்பேன்.  பின் அணைத்து விட்டேன்.  ஆனால் 9 மணிக்கு கரண்ட் நின்றுவிட்டது.   மழை வலுத்துக் கொண்டிருந்தது.  சிறிது நேரம் கழித்து தெருவைப் பார்த்தபோது தெருவெல்லாம் தண்ணீர்.  நான் திகைத்துவிட்டேன்.  நம்ம தெருவிற்கே தண்ணீர் வராதே?  எப்படி? இன்னும் கொஞ்ச நேரம் பார்த்தேன்.  மழை வலுத்துக் கொண்டிருந்தது.  முன்ப

பிறந்தநாள் போது ஒரு குழப்பம்

     அழகியசிங்கர்         இன்றுதான் என் பிறந்தநாள்.  67 நாட்கள் பின்னால் அப்பா பிறந்த தினத்தை சர்டிபிக்கேட்டில் தப்பாகக் கொடுத்து விட்டார். ஏன் தெரியாமல் அப்படி கொடு:த்தார் என்பது தெரியவில்லை.  93 வயதாகிற  அவரைக் கேட்டால், ஞாபகமில்லை என்கிறார். அதனால் டிசம்பர் மாதம் பிப்பரவரி மாதம் ஆகிவிட்டது. பெரும்பாலோருக்கு பிறந்த நாளே ஞாபகத்தில் இருப்பதில்லை.  பிறந்த நாள் என்பதை நம் வயதை ஊகிக்க ஒரு அடையாளம். அவ்வளவுதான். நான் அந்தத் தவறை என் புதல்வனுக்கோ புதல்விக்கோ செய்யவில்லை.      பல ஆண்டுகள் நான் பிறந்த தினத்தைக் கொண்டாடுவதைப் பற்றி யோசித்ததில்லை.  பெரும்பாலும் எனக்கு அது தெரியாமல் கூட போய்விடும்.  யாரும் அன்று என்னை வாழ்த்தக் கூட மாட்டார்கள். உண்மையில் அன்று நான் யாரிடமாவது சண்டைக்குப் போவோனாக இருப்பேன்.  அல்லது என்னிடம் யாராவது வம்புக்கிழுத்து திட்டினாலும் திட்டியிருப்பார்கள்.       இன்று சினிமாவில் இருப்பவர்கள், அரசியலில் இருப்பவர்கள் இந்தப் பிறந்தத் தினத்தை வைத்துக்கொண்டு அடிக்கிற கூத்தை நினைத்து வேடிக்கையாக இருக்கிறது.  ஒரு அடையாளத்திற்காகத்தான் பிறந்த நாள் என்பதைத் தவிர

2 கவிதைகள்

                                                           நீல பத்மநாபன்                         1   நடப்பியல்   அன்றாட வாழ்வில்   மூச்சுத்   திணறவைக்கும்  ஒராயிரம் நடப்பியல் உண்மைகள்   நித்தம் நித்தம் நிரந்தரமாய்   குரல்வளையை                           நெறித்துக்கொண்டிருக்கையில்    உலக மகா தத்துவங்கள்    வரலாற்று ஆவணங்களை     பார்த்துப்    பரவசப்படச்சொன்னால்........?!                             2         வலியும் கிலியும்                                       வலியை சகித்துக்கொள்ள                                       நெடுநாள் பயின்று பயின்று                                       ஒரளவுக்கு பழகமுடிந்தும்                                        வலிகள் வரப்போகிறதென்ற                                       ஆரம்ப சைகைகள்                                       கிடைக்கத் தொடங்கையிலேயே                                       நெஞ்சில் வந்து உடும்பாய்                                       கவ்வுக்கொண்டுவிடும்                                       வரப்போகும் வலி