Skip to main content

Posts

Showing posts from September, 2010
d/b காற்றில் தத்தி பறக்கும் வெள்ளை காகிதம் சேர்வது எவ்விடம்... வானில் இருந்து யார் வரையும் கோடுகள் இம்மழை... கோலிப் பளிங்கின் கண்ணாடி உலகுள் வடிவங்கள் எப்படி... d - ஐ b - போலவும் b - ஐ d - போலவும் எழுதினால் என்ன.. வேகமாக ஓடாமல் எதற்காக சாலைகளில் மெதுவான இந்த நடை... கடலின் அலைகள் எதையோ சொல்ல வந்து ஏதும் சொல்லாததேன்... வண்ணங்களால் வசீகரிக்கப்பட்டு பந்தை சுழற்றும் சிறுமி வண்ணங்களை எண்ண எண்ண வளர்கின்றன நிறங்கள்.

பங்குனிப் பெருவிழா

ராட்சஸ ராட்டினம் ஐஸ்கிரீம்,வளையல் கடைகள் எல்லாம் உண்டு திருவிழா நடைபெறுகின்ற பதினைந்து நாட்களுக்கு நடக்கும் அன்னதானத்துக்கு கூடும் கூட்டத்தால் கோயிலே அல்லோலஹல்லோலப்படும் ராஜகோபாலசுவாமிக்கு ஏற்றவளாகத்தான் வாய்த்திருக்கிறாள் செங்கமலத்தாயார் பங்குனிப் பெருவிழாவில் கண்ணனுக்கு வெண்ணெய்யை தின்னக் கொடுக்காமல் முகத்தில் அடித்து சந்தோஷப்படும் கோபிகைகள் கூட்டம் விழா முடிந்து பெருமானும், பிராட்டியும் ஊஞ்சல் ஆடுவதைப்பார்த்து ஆதிசேஷன் பொறாமைபடக்கூடும் ஏகாந்தமாய் இருக்கும் பெருமாளின் மனசு அன்னையாய் அணைவரிக்கும் தாயாரின் மனசு நெறைஞ்சி போய் கிடக்கும் மக்களின் மனசு.

அப்பாவி

காய்கறிகாரனிடம் பேரம் பேசுவதில்லை எதிர் வீட்டுக்காரனிடம் முறைத்துக் கொள்வதில்லை உறவுகளிடம் உரசிக் கொள்வதில்லை மளிகைக் கடை அண்ணாச்சியிடம் கடன் வைப்பதில்லை நடத்துனரிடம் மீதிச் சில்லரைக்காக சண்டையிடுதில்லை மாமனாரிடம் பணம் கேட்டு நச்சரிப்பதில்லை யாராவது கிண்டல் செய்தாலும் பதிலுக்கு அவர்களை நையாண்டி செய்வதில்லை இப்படி இருப்பதினாலேயே ஊரில் அவனுக்கு பெயர் அப்பாவியென்று.

கவிதையின் ஜனனம்

படிப்பவர்கள் இல்லையென்றே எழுதுபவர்களின் கைகள் எழுத மறுத்தும் கவிதைகள் அவர்களை வட்டமிட்டுக் கொண்டே இருக்கின்றன. காதில் வந்து வண்டு போல் சதா ரீங்கரித்து கொண்டே இருக்கின்றன கவிதைகள். மூக்குகளை மூர்ச்சையாக்குகிற அளவிற்கு ஊடுருவிப் பாய்கின்றன கவிதைகளின் வாசம்.

துலக்கம்

காரின் சடசடத்த மழைச் சத்தம் பச்சையின் சலசலக்கும் பயிரொலி மஞ்சளின் சரசரத்த ஒளி வார்த்தை நீலத்தின் பரபரக்கும் சிறகோசை வெண்மையின் சப்தமற்ற சப்தம்... இனி தோன்றுவதை நீங்கள் எழுத............................. இப்படி மட்டும் சொல்கிறது கவிதை. நிறங்களுக்கு சப்தங்கள் போல் பிரதிக்கு வடிவங்கள்... வாசிப்பிற்கே விரிந்த சிறகுகள்.

எதையாவது சொல்லட்டுமா / 26

இ ப்போதெல்லாம் யோசிக்கும்போது இந்தக் கவிதைகளை ஏன் எழுதுகிறோம் என்று தோன்றுகிறது. கவிதைகளை வாசிப்பவர்கள் மிக மிகக் குறைவானவர்கள். யாருக்ககாக நாம் கவிதை எழுத வேண்டும் என்ற ஒரு கேள்வியைக்கூட நான் கேட்டுக்கொள்கிறேன். கொஞ்சம் யோசிக்கும்போது எனக்காகத்தான் நான் கவிதையை எழுதுகிறேன் என்றாலும், நானே எழுதி நானே வாசிக்கத்தான் கவிதை எழுதுகிறேனா என்ற கேள்வியும் உடன் எழுகிறது. நகுலன் அவர் கவிதைத் தொகுதியைப் புத்தகமாகப் போடுபவர்களைப் பார்த்து 50 பிரதிகளுக்குமேல் போடாதீர்கள் என்பார். தலையை எண்ணி கவிதைப் புத்தகத்தைக் கொடுத்து விடலாம் என்றும் சொல்வார். ஆரம்பத்தில் எனக்கு வள்ளலார் கவிதைகள் மீது ரொம்ப ஆசை. என்னடா வரிகளை இப்படி கொட்டு கொட்டென்று கொட்டுகிறாரே என்று தோன்றும். பின் என் மனநிலை மாறிவிட்டது. இன்று ஆயிரக்கணக்கான பேர்கள் கவிதைகளை எழுதிக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால் கவிதையைப் புரிந்துகொண்டு அதில் ஆழ்ந்து சிந்தித்து எழுதுபவர்கள் மிகக் குறைவாகவே இருப்பார்கள். கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு முன்பு நான் அலுவலகம் செல்லும்போது மின்சார வண்டியில் எதாவது கவிதையை வாசித்துக் கொண்டே போவேன். இப்படி கவிதை வாசிப்பு க

அன்புள்ள நண்பர்களே,

நவீன விருட்சம் 87-88 வது இதழ் தயாராகி விட்டது. இந்த இதழ் எதிர்பார்த்தபடி 6 மாதம் மேல் ஆகிவிட்டது. ஒவ்வொரு நாளும் இரவு பத்து மணிக்குமேல்தான் இதழ் குறித்து சிந்திக்க முடிந்தது. அதனால் தாமதம். இதழில் கீழ்கண்டவர்களின் படைப்புகளைத் தேர்ந்தெடுத்துள்ளேன். இதழ் அனுப்ப முகவரிகளைத் தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். நானும் என் எழுத்தும் ஐராவதம் கையெழுத்து முத்துசாமி பழனியப்பன் கவிதை நந்தாகுமரன் யாவரும் கேளீர் அசோகமித்திரன் துரோகத்தின் கத்தி ஆதி கிழிசல் சேலை குமரி எஸ் நீலகண்டன் இலா கவிதைகள் 6

விமர்சனங்களைத் தாங்காத கலைஞன்

பெற்றோரைப் பேணாத பிள்ளையென்ன பிள்ளை? பேரிரைச்சல் இல்லாத அருவியென்ன அருவி? பேரின்பம் காணாத பிறவியென்ன பிறவி? சிற்றின்பம் துறக்காத துறவியென்ன துறவி? மனைவியர் மனசு நோகப்பண்ணும் கணவனென்ன கணவன்? மற்றெந்த உயிரையும் மதிக்காத மனிதனென்ன மனிதன்? மனதில் கல்மிஷம் கொண்டலையும் பிறப்பென்ன பிறப்பு? விமர்சனங்களைத் தாங்காத கலைஞன் என்ன கலைஞன்?

தங்கப் பெண்

ஃபேன்சி கடையில் வேலை பார்க்கும் அவள் அலங்காரமாய் பேசி கவரிங் நகைகளை விற்று வீட்டுக்கு திரும்பும் வழியில் வழக்கம் போல் அந்த பெரிய நகை கடையில் தொங்கும் தங்க விலைப் பட்டியலைப் பார்த்தாள். தற்போதெல்லாம் கிராமின் விலைக்கும் அவள் எதிர்கால நம்பிக்கைக்குமான தூரம் வெகு தொலைவாகி விட்டதால் அவள் அந்த கடை வருகிறபோது குனிந்தே செல்கிறாள். அந்த கடையில் வேலை பார்க்கும் அந்த பையன் மிகவும் வருத்தத்தில் இருக்கிறான் இப்போதெல்லாம் அவள் தன்னை பார்ப்பதில்லை என்று.

வாழ்தல் நிமித்தம்

தீர்மானித்துக் கொண்டேன் கலங்குவதில்லை...யென. நம்பிக்கை கொள்ளவோ தாக்குப் பிடிக்கவோ ஏதுமில்லையென்ற தெளிவுக்கு வந்தேன். சாகும் முறை குறித்த குழப்பம் கொஞ்சமும் இல்லை. கடலில் மூழ்குவதென்பது பால பாடம்.(ஆடைகளைக் கவனமாக ஊக்குகளால் இணைப்பது குறித்தகவிதைகளுக்கு நன்றி!). எதற்குமொருமுறை இருக்கட்டுமேயென இறப்புச் செய்தி கேட்கும் முகங்களை மனத் திரையில் ஓட விட்டேன். எதிர்பாரா ஒரு தருணம் கேட்டதொரு பெருவிம்மல். எந்த முகம் அந்த முகம் என விழிக்க நனைந்திருந்தன கண்கள். சுயம் வெட்கி ஆரம்பித்தது யென் வாழ்க்கை குறித்த அத்தனைச் சிரிப்புச்சத்தங்களும்...

விநாயகர் சதுர்த்தி சிறப்பு நிகழ்ச்சிகள்...!

காலை வணக்கத்தில் தனம் சங்கீதா முற்பகல் பேட்டியொன்றில் கேரளத்துப் பாவ்னா பிற்பகல் பேட்டியில் பேரிளம்பெண் நமீதா மாலைத் திரைப்படத்தில் மறுபடியும் நமீதா கும்கும் குமரிகளின் குளுகுளு பேட்டிகளும் குத்தாட்டப் பாட்டுக்களும் பிரம்மச்சாரி பிள்ளையார்க்கு பெருங்குஷிதான்! பேரின்பம்தான்!

வனச்சிறுவனின் அந்தகன்

சூழ்ந்த நீருக்குள் மீனென அறியப்பட்டதை செவிட்டூமை அந்தகனுக்குணர்த்திடும் படி மிகக்கடின பணியொன்று வனச்சிறுவனுக்கிடப்பட்டது எந்தக் கொம்பிலும் ஏறித் தேனெடுப்பவன் கொடிய விலங்கினையும் தனியே வேட்டையாடி ராசாவுக்குத் தோல் / ள் கொடுப்பவன் வனாந்தரத்தின் அத்தனை மூலைகளுக்கும் அமாவாசை நிசியிலும் அச்சமின்றிப் போய்வருபவன் முதன்முதலில் அயர்ந்து நின்றான் கட்டளையை மறுக்க வழியற்றும் மேற்கொண்டு ஏதும் செய்யும் நிலையற்றும் விதிர்த்து நின்றான் செய்வதறியாச் சிறுவன் நடுங்குமந்தகனின் விரல்கள் பிடித்து வனத்தின் மத்திக்கு வழிகூட்டிப் போனான் அல்லிப் பெருங்குளத்தினுள்ளவன் கரங்களை நுழையச் செய்திவன் ' தண்ணீர் ' என்றான் காலங்காலமாய்க் கடந்துவந்த வாழ்வின் சோர்வு தீரவெனவோ வற்றாத் தேகத்தின் எல்லாத்தாகங்களுந் தீரவெனவோ கரங்களைக் குழிவாக்கி உள்ளங்கையில் நீரேந்தி அள்ளியள்ளிக் குடித்தான் அந்தகன் சிறுவனின் பார்வைக்கு மட்டுமென நீரின் எல்லாச் சுழிகளிலும் நழுவி நீந்தின வண்ண வண்ண மீன்கள் கற்றுக் கொடுக்கவேண்டிய கால எல்லை முடிந்ததெனச் ச

நட்சத்திரங்கள் பூத்த இரவொன்று

நட்சத்திரங்கள் பூத்த இரவொன்று சில்லிட்டு காத்திருக்கிறது... சப்தமின்றி விரைகின்றன நிலழடுக்குப் பறவைகள் கருநீல வானில் அசையும் சித்திரங்களாய். பந்தெனச் சுழலும் உணர்வுக் குவியல்களை உயர எறிகிறேன் உயிர் சினக்க. அவையோ பறவைகளோடு பயணித்து அயர்ந்த வேளை திரும்பி வீழ்கின்றன பனித் துளிகளாய். செய்வதறியாமல் திகைக்கும் வேளையில் உள்ளீடற்று கரையத் துவங்குகின்றன மனத் துகள்கள் இருள் உருகும் இந்நிசப்த பரப்பில்...
கவிஞனென்றானதெல்லாம் அறிந்துகொள்ள ஆசைப்பட்டுத்தான் அறிந்து கொண்டது தெரிந்துகொள்ளத் தலைப்பட்டுத்தான் தெரிந்துகொண்டது புரிந்துகொள்ள பிரயாசைப்பட்டுத்தான் புரிந்துகொண்டது அறிந்தது தெரிந்தது புரிந்தது அத்தனையும் சேரத்தான் கவிஞனென்றானதே கவிஞனென்றானதெல்லாம் நன்றோ தீதோ கர்மவினைதான் போடி அமர் மெய்ப்பு பார்ப்பவனில்லை புஸ்தக மதிப்புரையாளனில்லை பத்திரிகையாளன்இல்லை கருத்துரையாளன்இல்லை பேச்சாளன் அல்லன் பத்தி எழுத்தாளன்அல்லன் கட்டுரையாளனோ விமர்சகனோ கூட அல்லன் சிறுகதை ஆசிரியனோ புதின ஆசிரியனோ கூட அல்லன் கவிஞன் அவனுக்காக காத்திருக்கின்றன கவிதைகள்

தாத்தா தந்த கடிகாரம்

குமரி எஸ் . நீலகண்டன் எனது தாத்தா இறக்கும் முன் ஒரு நாள் அவரது ஓடாத பழைய கடிகாரத்தை எனக்கு பரிசாக தந்துவிட்டு போனார் . தாத்தாவின் இதயம் துடிக்கும் அதை நான் மிகவும் பத்திரமாக பாதுகாத்து வருகிறேன் . உலகம் போற் றும் அந்த சிற்பி தற்போது புதிதாய் கவிதை எழுத துவங்கி இருக்கிறார் கவிதை பக்கம் செல்லாதவர்களும் தற்போது அவரது கவிதையைப் புகழ்ந்து போற்றுகின்றனர் . கவிதையே போடாத பத்திரிகைகளும் தற்போது அவரது கவிதைக்காக ஒரு பக்கம் ஒதுக்கி உள்ளன . நான் தற்போது அந்த கவிதைகளையெல்லாம் ஒரே ஒரு தடவை மட்டும் படித்துவிட்டு தாத்தா தந்த அந்த கடிகாரத்தின் அடியில் வைத்து பாதுகாத்து வருகிறேன் குமரி எஸ். நீலகண்டன்

எதையாவது சொல்லட்டுமா / 25

சில தினங்களுக்கு முன் ஒரு கனவு வந்தது. அதில் ஸ்டெல்லா புரூஸ் வந்திருந்தார். ஆகஸட் 8ஆம் தேதி அவர் பிறந்தநாள். நான் அவரைப் பற்றி எழுதியிருந்தேன். அந்தக் கனவில் அவர் வேறு ஒரு இடத்திற்குப் போகப்போவதாக குறிப்பிட்டார். அவருடைய மனைவியையும் பார்த்தேன். பொதுவாக சமீணபத்தில் எனக்கு கனவுகள் வருவதில்லை. கனவு காண்பதும் பிடிக்காது. (அப்துல்கலாம் சொல்லும் கனவு இல்லை இது). பின் கனவும் நிஜமாக நடந்ததுபோல் ஒருவிதத் தோற்றத்தைக் கொடுக்கும். நம்முடைய நினைப்புதான் கனவாக மாறிவிடுகிறதா என்றும் தோன்றும். அப்போதுதான் ஸ்டெல்லா புரூஸ் பற்றி இன்னும் எதாவது சொல்லாமல் இருந்து விட்டேனா என்றும் தோன்றியது. எழுந்தவுடன் அவருடைய கவிதைகள் ஞாபகத்திற்கு வந்தது. காளி-தாஸ் என்ற பெயரில் அவர் ழ, விருட்சத்தில் கவிதைகள் பல எழுதி உள்ளார். நானும் நானும் என்ற பெயரில் கவிதைத் தொகுதி கொண்டு வந்துள்ளோம். அவர் கவிதைகள் சிலவற்றை எடுத்து இந்த blogல் அளிக்கலாம் என்று தோன்றியது. ஒரு கவிதையைக் கொண்டும் வந்துவிட்டேன். இன்னும் சில கவிதைகளை அப்படி கொண்டுவர உத்தேசம். ஒருமுறை கனவுகள் பற்றி நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருக்கும் போது, கனவுகளைப் பதிவு