Skip to main content

Posts

Showing posts from November, 2020

புயலே புயலே

அழகியசிங்கர்   Add caption நாளை நீ திரும்பவும்  கோரத்தாண்டவம் ஆடப் போவதாய் சிலர் சொல்கிறார்கள் உண்மையா.. 2015 ஆம் ஆண்டு  நீ வந்து ஆடிய ஆட்டத்தை யாரும் மறந்திருக்க மாட்டார்கள் தெரு முட்ட  முட்டச்  சாக்கடை கலந்த  வெள்ள நீர்.. கீழே உள்ள சின்ன அறையில் பாதுகாத்து வைத்திருந்த  புத்தகங்களைப் பதம் பார்த்துவிட்டாய் நான் வைத்திருந்த விற்க வேண்டிய புத்தகங்கள் ஏன் உன் கண்ணில் பட்டது. சேர்த்து வைத்திருந்த முக்கிய புத்தகங்களையும் அழித்தாய்.  படிக்கலாம் என்றும் எடுத்துப் பார்க்கலாம் என்றும் நான் காத்திருந்தேன்.  நியாயமா புயலே உனக்கு ஏதேதோ பெயர்கள் சூட்டுகிறார்கள் உனக்குத் தெரியுமா? நாளை என் பிறந்தநாள் என்று..

ஒரு கதை ஒரு கருத்து

        புதுமைப்பித்தனின்   டாக்டர்   சம்பத்         அழகியசிங்கர்                  டாக்டர்   சம்பத் என்ற புதுமைப்பித்தன் கதை ஒரு துப்பறியும் கதை.    இதை அவர் எழுதியிருக்கும் விதம் சிறப்பாக உள்ளது. படிக்கும் போது நமக்கும் இப்படியெல்லாம் ஒரு கதை எழுதிப் பார்க்க வேண்டுமென்று   தோன்றுகிறது .                ரெங்கசாமி   என்பவர்   உல்லாசனி   சபையின் தமிழ்   கண்டக்கடர்  ( போதகர்). அவர்   வருஷாந்திர   கொண்டாட்டத்திற்காக ஏற்பாடு செய்யப்பட்ட நாடகம்   ராவ்சாகேப்   சம்பந்த   முதலியார்   எழுதிய லீலாவதி -   சுலோசனா   நாடகம்.                  ரெங்கசாமி   கூற்றாக இந்தக் கதை சொல்லப்படுகிறது.                   இந்த நாடகம் அரங்கேறிய அன்று   சபேசய்யர்   சுலோசனையாகவும் ,  குற்றாலம் பிள்ளை லீலாவதியாகவும் வேஷம் தரித்திருந்தார்கள்.    நாடகம் மெதுவாக நகர்ந்தது.    லீலாவதி தன் தங்கைக்குபாலில்     விஷம் கொடுக்கும் கட்டம்.    சகோதரி கொடுத்த பாலை குடித்துவிட்டு ,  மரணத்தின் இன்பத்தைப் பற்றிப் பாடிக்கொண்டே ,  பக்கத்தில் அலங்கரித்திருந்த மஞ்சத்தில் போய்   ஒய்யாரமாகப்   படுத்தாள்.                அந்தக் காட்சியின் அகப்