Skip to main content

Posts

Showing posts from March, 2014

சில குறிப்புகள்

     அழகியசிங்கர்     நேற்று காலையில் வழக்கம்போல் (சமீப காலமாய்) நடை பயிற்சி செய்துவிட்டு ராஜாமணி வீட்டிற்குச் சென்றேன்.  என்னைப் பார்த்தவுடன் ராஜாமணி, üதி.க.சி இறந்துவிட்டார்,ý என்ற செய்தியைச் சொன்னார்.      எனக்கு தி.க.சியைப் பற்றிய எண்ணம் ஓடிற்று.  காலையில் இந்தச் செய்தியைச் சொன்ன ராஜாமணியிடம் கோபம்.  பின் நான் வீட்டிற்கு வந்து, தினமணியைப் பார்த்தபோது அதில் செய்தி வந்திருந்தது.     எனக்கு தி.க.சியை 20 ஆண்டுகளுக்கு மேல் தெரியும்.  நவீன விருட்சம் ஆரம்ப காலத்திலிருந்து அவர் என் நண்பர்.  வல்லிக்கண்ணனும், தி.க.சியும் நவீன விருட்சத்திற்குக் கடிதம் எழுதாமல் இருக்க மாட்டார்கள்.  நான் முதல் தடவை திகசியை அசோக மித்திரன் வீட்டில்தான் சந்தித்தேன்.      எந்தப் பத்திரிகையும், புத்தகத்தையும் விடாமல் படிப்பார்.  படித்தவுடன் ஒரு கார்டில் அழகான கையெழுத்தில் தன் அபிப்பிராயத்தை எழுதாமல் இருக்க மாட்டார். வல்லிக்கண்ணனும் அப்படித்தான்.     இருவர் கையெழுத்தும் அழகாக இருக்கும்.  சிறுபத்திரிகையின் நண்பர்கள் இருவரும்.  பாராட்டாமல் இருக்க மாட்டார்கள்.  எனக்கு அவர்களிடமிருந்து கடிதங்கள் வந்தபிறகுதான்

மாதங்கள் கடந்து போதல்

ந.பெரியசாமி மேசையின்மேல் இரண்டு கண்ணாடி கோப்பைகள் ஒன்றில் பொவண்டாவையும் மற்றதில் பியரும் நிரப்பினீர்கள் புன்னகைத்து அருந்தத் துவங்கினீர்கள் எப்படியோ இம்மாதத்தை கடந்தாயிற்று நிம்மதி பெருமூச்சொன்றை விட்டீர்கள் அசட்டையான சிரிப்பை உதிர்த்து எனக்கு இன்னும் கடக்கவில்லை தேதி ஐந்தாகிவிட்டதே மறுபடியும் நகைத்து அதுகூடவா தெரியாது எனக்கு முடிவடையவில்லை சம்பளத் தேதியை சொல்கிறீர்களா இல்லை எனக்கும் ஒன்றாம் தேதிதான் புரியவில்லையே வேறென்ன குழப்பத்தோடு கடைசி துளியை வழியவிட்டீர்கள் இம்முறை கொஞ்சம் சப்தமாக சிரித்து உங்களால் புரிந்துகொள்ள இயலாதுதான் மாதங்களை கடப்பது உங்களுக்கு தேதிகள் தீர்மானிக்கும் எங்களுக்கோ எங்களின் உதிரப்போக்கு.

நாம் என்ன செய்ய முடியும்? - சார்லஸ் புக்கோவ்ஸ்கி கவிதை

 தமிழாக்கம்: ராமலக்ஷ்மி இருக்கிறது ஒரு சாந்தம் மனிதத்தின் சிறப்பில் சில புரிதல்கள், சில நேரங்களில் செயல்களில் துணிச்சல் மொத்தத்தில் அது ஒரு ஆற்றல் அதிகம் காணப்படாத ஒன்றாக உலகத்தில். ஆழ்ந்த உறக்கத்திலிருக்கும் ஒரு பெரிய விலங்கினை ஒத்ததாக எந்த ஒன்றாலும் எழுப்ப முடியாததாக. தூண்டப்படுகையில் விஸ்வரூபமெடுக்கின்றன முரட்டுத்தனமும், சுயநலமும், நேர்மையற்ற தீர்ப்புகளும், கொலைகளும். நாம் என்ன செய்ய முடியும், இந்த மனிதத்தை? எதுவும் செய்ய முடியாது. முடிந்தவரை விலகி இருப்போம் துஷ்டரை, விஷமிகளை, முட்டாள்களைக் கண்டது போல். ஆனால் ஜாக்கிரதை, நம்மிடமிருந்து தன்னைக் காத்துக் கொள்ள சட்டங்கள் இயற்றியிருக்கிறது மனிதம் எந்தக் காரணமும் இல்லாமல் அது நம்மைக் கொல்லக் கூடும் அதனிடமிருந்து தப்பிக்க சூட்சமம் வேண்டும் தப்பிக்கிறார்கள் வெகு சிலர் நாம் தப்பிப்பது நம் கையில் சரியான திட்டம் வேண்டும் தப்பித்த எவரையும் இதுவரை நான் சந்திக்கவில்லை உயர்ந்த, புகழ்பெற்ற மனிதர்கள் சிலரைச் சந்தித்திருக்கிறேன் அவர்களாலும் தப்பிக்க முடியவில்லை மனிதத்துக்கு மட்டுமே அவ