Skip to main content

Posts

Showing posts from February, 2015

புத்தக விமர்சனம் 2

                                                        அழகியசிங்கர் நந்தாகுமாரன் என்ற கவிஞர் üமைனஸ் ஒன் - 1ý என்ற கவிதைத் தொகுப்பை எனக்கு அனுப்பியிருந்தார்.  உடனே நானும் அவர் கவிதைகளைப் படித்து அது குறித்து சில குறிப்புகளை எழுதி வைத்திருந்தேன்.  பின் அத் தொகுப்பையும், குறிப்பையும எங்கோ வைத்துவிட்டேன்.  உடனே எழுத முடியாமல் போய்விட்டது.   இத் தொகுப்பைப் பற்றி எதாவது எழுதியே தீர வேண்டுமென்ற எண்ணத்துடன் திரும்பவும் அவருடைய புத்தகத்தையும், நான் எழுதி வைத்த குறிப்புகளையும் தேடிக் கண்டுபிடித்தேன்.   இந்தப் புத்தகத்தில் அவர் 89 கவிதைகள் எழுதி உள்ளார்.  அவருடைய கவிதைகள் எல்லாம், எல்லாப் பத்திரிகைகளிலும் பிரசுரம் ஆகி இருக்கின்றன.  வெகு சுலபமாக வார்த்தைகளை வைத்து கவிதைகளில் விளையாடி இருக்கிறார்.  அவர் இப்படியே எழுதிக்கொண்டு போனல் ஒரு ஆயிரம் கவிதைகளாவது எழுதி இருப்பார்.   நான் அப்போது எழுதி வைத்த குறிப்புகளை இப்போது ஒவ்வொன்றாய் அடுக்குகிறேன். - நந்தாகுமாரன் கவிதைத் தொகுதி எல்லா விதங்களிலும் வித்தியாசமாக இருக்கிறது; - தன் முதல் கவிதைத் தொகுதியில் நந்தா பல த

மொட்டை மாடியில் தொட்டிப் பூவோரம்.. (காதல் கவிதை)

வித்யாசாகர் 1 மாடி மேலேறி ஆண்டெனா திருப்ப வருவாய் நான் கூரை மேலேறி கோழி தேடுவேன் கோழியும் கிடைத்ததில்லை ஆண்டெனாவும் திரும்பியதில்லை கூரைக்கும் மாடிக்கும் தெரியும் நாம் யாரை தேட வந்தோமென்று.. ------------------------------------------------------- 2 மொட்டைமாடியில் பூ பூத்திருக்கும் நான் எட்டிப் பார்ப்பேன் மழை வரும் மழையில் நீ நனைந்து ஓடி கொடியில் போட்ட துணிகளை எடுப்பாய் உன்னம்மா மேலேறி வந்து நீ என்ன செய்கிறாய் என்பாள் நான் பூ பார்க்க வந்தேனென்பேன் அவளுக்கு தெரியும் அது எந்தப் பூவென்று அசடு நீ தான் தெரிந்திருக்கமாட்டாய்; நான் உன்னைப் பார்க்க வந்ததை.. ------------------------------------------------------ 3 ஒளியும் ஒலியும் பார்க்க ஓடிப்போய் அமர்வோம்.. முதல் பாட்டு வரும் நீ என்னையேப் பார்ப்பாய் இரண்டாவது பாடல் வரும் நான் உன்னையேப் பார்ப்பேன் விளம்பரம் மாற மாற எல்லோரும் மாறி மாறி அமர்வார்கள் நீயும் நானும் அதே இடத்தில் அமர்ந்திருப்போம் நமக்குள் ஒரு பாடல் ஓயாது ஒலித்துக் கொண்டேயிருக்கும்.. ------------------------------------------------------ 4

புத்தக விமர்சனம்

                                                      அழகியசிங்கர் சமீபத்தில் நான் படித்த ஒரு நாவல் எஸ் ராமகிருஷ்ணனின் சஞ்சாரம் என்ற நாவல்.  375 பக்கங்கள் கொண்ட இந் நாவலைப் படிக்க சில நாட்கள் ஆயிற்று.  ஒரே சமயத்தில் இப்போதெல்லாம் என்னால் ஒரு புத்தகத்தைப் படிக்க முடியவில்லை.   இந் நாவல் குறித்து இரண்டு கருத்துகளை அறிய முடிந்தது.  இப்புத்தக வெளியீட்டுக் கூட்டத்திற்கு நான் சென்றேன்.  இந் நாவலைப் பற்றி ராமகிருஷ்ணன் ஒன்று சொன்னார்.  அவருக்கு இசையைப் பற்றி  ஒன்றும் தெரியாதாம்.  இசையை ரசிப்பது வேறு; இசையைப் பற்றி நுணுக்கம் தெரிந்து கொள்வது வேறு.  இந்த நாவலுக்காக இசையைப் பற்றி தெரிந்த நண்பர்கள் பலரைத் தொடர்பு கொண்டு பல விஷயங்களûத் தெரிந்து கொண்டாராம்.  எனக்கு அவர் சொன்னது ஆச்சரியமாக இருந்தது.  இந்தப் புத்தகததை வாங்கி வைத்துக்கொண்டிருந்த நான், எப்படி இப் புத்தகத்தில் இசையைப்ப் பற்றி அதுவும் நாதஸ்வரம் வாசிப்பைப் பற்றி எழுதியிருக்கிறார் என்பதை அறிய ஆவலாக இருந்தது. இன்னொரு விஷயம்.  இப் புத்தகத்தை அந்த அரங்கில் விமர்சனம் செய்த ஒருவர் இப் புத்தகத்தின் எந்தப் பக

சந்திரா மனோகரன் .

                                                     1.  என்னைக்  காண வில்லையென்று                      அவள்  அவளுக்குள்  தேடிக் கொண்டிருந்தாள்                       உறுமும்  புலிபோல்  நான்                      தப்பித்துவிட்டேன்                      எனக்குக்  கூண்டுவாழ்க்கை  பிடிக்காது                       அவள்  என்னைமட்டும்  தேடியிருந்தால்                      விலகிவந்திருக்கமாட்டென் , ஒருவேளை                       என்னைக்  கொல்வதற்குப்  பயன்படும்                      ஒரு  கூராயுதம்  அத்தருணத்தில்                       அவள்  கைக்கு  சிக்காமலிருந்தது .                 2.  மான்கள்  துள்ளும்  புல்வெளியில்                       என் தேடல்  விரிந்துகொண்டே  போயிற்று                       பெருகும்  ஈரப்  பனிபோல .                       வேட்டைக்காரனின்  மிதியடிகளில்                       என் ரத்த  நாளங்கள்  நசுங்கின .                      அவன்  காலடியோசையின்  மிரட்சியில்                       எங்கோ  தொலைவில்  ஓர்  அலறல

விருட்சம் தேர்ந்தெடுத்த மனதுக்குப் பிடித்த கதைகள்

    அழகியசிங்கர் அக்டோபர் மாதத்தில் ஏகப்பட்ட கதைகள்.  ஐந்தாறு கதைகளில் பாவண்ணனின் அப்பாவின் சைக்கிள் என்ற கதையைத் தேர்ந்தெடுத்துள்ளோம். ஆனால் நவம்பர் மாதத்தில்அக்டோபர் மாதம் மாதிரி கதைகள் கிடைக்கவில்லை.  இரண்டே இரண்டு கதைகள் மட்டும் கிடைத்தன.  அதாவது இலக்கியத் தரமான கதைகளை மற்ற கதைகளுடன் பிரித்து கண்டுபிடிப்பதுதான் முக்கிய பணியாக இருந்தது.   பெரும்பாலான பத்திரிகைகள் கதைகள் என்று பலவற்றைப் பிரசுரம் செய்கிறார்கள்.  அக் கதைகளைப் படித்தாலும் நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.   நான் கண்டு பிடித்த இரண்டு கதைகளில் ஒன்று தீராநதியில் இரா முருகன் எழுதிய கல்லத்தி என்ற கதை.  இரண்டாவது கதை சுகா எழுதிய ராயல் டாக்கீஸ் என்ற கதை. ஒவ்வொரு முறையும் ஒரு சிறந்த கதையைத் தேர்ந்தெடுக்கும்போது இன்னொரு கதையும் நிழல் போல் தொடரும்.  போனமுறை ஒரு சிறந்த கதையுடன் நாலைந்து கதைகள் தொடர்ந்து கிடைத்தன.   இந்த முறை ஒரே ஒரு கதைதான் தொடர்ந்து வந்தது.  இறுதியில் சுகா எழுதிய ராயல் டாக்கீஸ் என்ற கதையைத்தான் தேர்ந்தெடுக்க முடிந்தது.  அந்தக் கதையின் ஆரம்பமே தமபி என்ற ஒரு கதாபாத்திரத்தை

ஒரு பனித் துளி ஈரம்

எம் . ரிஷான் ஷெரீப் இலைகளை உதிர்த்தழும் விருட்சங்களைத் தடவிக் கொடுத்து தாண்டிச் சென்ற கோடையைக் கழுவி ஞாபகக் கொடியில் காயப்போட்டாயிற்று உலர்த்தவென வெண்சாயங்களில் தோய்த்தெடுத்த இழைகளைக் கொண்டு குளிர்காலக் கம்பளிகளை பின்னுகிறது காலம் அதைப் பிடித்துக் கொண்டு படர்கிறது நேற்றைக்கு முந்தைய தினங்களில் துளிர்விட்ட சிறு ஒற்றைக் கொடி வைசாக தினங்களில் வெண்ணிற ஆடையும் பூக்களுமென  விகாரைக்கு அணிவகுத்துச் சென்ற பக்தர்கள் எறிந்து போன சிறு விதையாக இருக்கலாம் தாவரத்தின் மூலம் நிலம் பிளந்து வந்த கொழுந்துக்குப் புதிது அலையெனச் சுழலும் காற்றும் நிமிரும்போதெல்லாம் உற்றுப் பார்த்தவாறிருக்கும் பரந்த ஆகாயமும் விசாலமாய் நகரும் பூச்சிகளும் இன்னபிற ஜந்துக்களும் இன்னும் மிதிக்கக் காத்திருக்கும் மனிதர்களும் வரும் காலங்களில் அதன் கிளைகளில் வந்தமரும் அணில்கள் இன்னும் பிறக்கவேயில்லை இலைகளின் மறைவுகளுக்குள் தம் கூடுகளைச் செதுக்கக் கூடிய பட்சிகள் கண்டங்கள் தாண்டி இன்னும் புலம்பெயரவேயில்லை வேர்களை வளப்படுத்தும் புழுக்களும் இன்னும் நகரவேயில்லை எனினும்

கமலாவும் நீலாவும்....

  கந்தாச்ரமத்தில் கமலா என்ற பெண் நாய் இருந்தது.   அது குட்டியாக ஆச்ரமத்திற்கு வந்தபோது அங்கிருந்தவர்கள் அதை வெளியே துரத்தினார்கள்.  அது பெண்ணாக இருந்ததினால் ஒவ்வொரு வருடமும் குட்டிகள் போடும் என்று நிடனைத்து அவ்வாறு செய்தனர்  ஆனாலும் குட்டி கமலா அவர்கள்  திட்டியதையெல்லாம் பொறுத்துக்கொண்டு அந்த இடத்தைவிட்டுச் செல்லாமல் இருந்து விட்டது.  இறுதியில் ஆச்ரமவாசிகள் அவளுடைய உறுதிக்கு மதிப்புக் கொடுத்தனர்.  கமலா ஆச்ரமத்திலேயே வளர்ந்து ஒவ்வொரு வருடமும் குட்டிகளை ஈன்றது.  அவளுடைய குட்டடிகளே சந்தாச்ரமத்தில் ஒரு பெரிய குடும்பமாக விளங்கியது. மனிதர்களுக்குக் குழந்தை பிறந்தால் எவ்வாறு பத்தாம்நாள்தொட்டிலிடும் சடங்கு நடக்குமோ, அதுபோல கமலா முதன்முறையாக குட்டிகள் ஈன்றபின் அக்குட்டிகளுக்கும் கமலாவுக்கும் பொட்டிட்டு, மாலை சூட்டி அங்கிருந்த அன்பர்கள் மகிழ்ந்தனர்  அன்று பாயசம் மற்றும் இனிப்புகளுடன் ஒரு பெரிய விருந்து நடந்தது. புதிய அன்பர்கள் முதல் முறையாக கிரிபிரதடசிணம் செய்ய விரும்பினால் பகவான் கமலாவை அழைத்து "அவர்களுக்கு வழிகாட்டி அழைத்து வா" என்று ஆணையிட அதுவும் அவ்வாறே செய்

அக்டோபர் மாதக் கதை.......

அக்டோபர் மாதம் சிறந்த கதையாக பெருமாள் முருகனின் ஆசை முகம் என்ற சிறுகதையைத் தேர்ந்தெடுத்தோம். இப்படி ஒரு கதையைத் தேர்ந்தெடுக்கும் கூடவே சில சிறப்பான கதைகளை தள்ள வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாக நேரிடுகிறது. அக்டோபர் மாதம் பெருமாள் முருகனின் கதையைத் தேர்ந்தெடுக்கும் முன் சிறந்த கதைகளை இரண்டை பாவண்ணனும், அகஸ்தியம் என்ற ஒரு கதையை வண்ணதாசனும், அதேபோல் அபிமானியும் எழுதி இருந்தார்கள். ஆனால் எங்கள் முடிவு பெருமாள் முருகனின் ஆசை முகம் கதையுடன் நின்று விட்டது.   மாதெரரு பாகன் என்ற நாவல் பிரச்சினையால் பெருமாள் முருகன் தன் எழுத்துக்களை விலக்கிக் கொள்வதாக சொல்லிவிட்டார். அதனால் மேலே குறிப்பிட்ட ஆசைமுகம் கதையை நாங்கள் தேர்ந்தெடுத்தாலும், பெருமாள் முருகன் முடிவால் நாங்களும் அந்தக் கதையை எடுத்துக்கொள்ள முடியாமல் உள்ள நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். அக் கதைக்குப் பதிலாக 15.10.2014 ஆனந்தவிகடன் இதழில் வெளியான பாவண்ணனின் அப்பாவின் சைக்கிள் என்ற கதையைத் தேர்ந்தெடுத்துள்ளோம். பாவண்ணனுக்கு எங்கள் வாழ்த்துக்கள்.

கசடதபற ஜனவரி 1971 - 4வது இதழ்

ஒரு தாஒ கவிதை சோளைக் கொல்லைப் பொம்மையிடம் இரவல் பெற்ற தொப்பியின் மேல் மழை வலுத்துப் பெய்கிறது. தமிழில் : ஞானக்கூத்தன்