Skip to main content

சந்திரா மனோகரன் .

               



               









                     1.  என்னைக்  காண வில்லையென்று 
                    அவள்  அவளுக்குள்  தேடிக் கொண்டிருந்தாள் 
                     உறுமும்  புலிபோல்  நான் 
                    தப்பித்துவிட்டேன் 
                    எனக்குக்  கூண்டுவாழ்க்கை  பிடிக்காது 
                     அவள்  என்னைமட்டும்  தேடியிருந்தால் 
                    விலகிவந்திருக்கமாட்டென் , ஒருவேளை 
                     என்னைக்  கொல்வதற்குப்  பயன்படும் 
                    ஒரு  கூராயுதம்  அத்தருணத்தில் 
                     அவள்  கைக்கு  சிக்காமலிருந்தது .

                2.  மான்கள்  துள்ளும்  புல்வெளியில் 
                     என் தேடல்  விரிந்துகொண்டே  போயிற்று 
                     பெருகும்  ஈரப்  பனிபோல .
                      வேட்டைக்காரனின்  மிதியடிகளில் 
                     என் ரத்த  நாளங்கள்  நசுங்கின .
                     அவன்  காலடியோசையின்  மிரட்சியில் 
                     எங்கோ  தொலைவில்  ஓர்  அலறல் 
                     எனக்கு  ஒன்று  புரியவில்லை 
                     அழகு  புள்ளிமானின்  தோலை  மட்டும் 
                     யாருக்காகவோ  விட்டுச்  சென்றிருக்கிறான் .

                 
                 3.   சாமங்கியும்  சம்பந்தியும்  அவரைப்பூ  நிறமும் 
                        வருகிறாள்  அவள்  தீயின்  நாக்குபோல !
                        வளைக்கரங்களில்  ததும்பும் 
                        தேநீர்க் கோப்பைகளும் , திகட்டாத  பார்வையில் 
                        குழைந்து  குழைந்து  வரும்  வாசமும் 
                        நீருக்காக  ஏங்கும்  வேர்களைப்  போன்றவனுக்கு 
                        வெற்றுத்  தாளில்  வடிந்த 
                         வெறும்  கவிதைகளாகத்தான் ....
                         குப்பைக்கூடை  நிரம்பி  வழிகிறது 
                        அவன்  மனதைப்போலவே .



Comments