Skip to main content

Posts

Showing posts from December, 2011

எதையாவது சொல்லட்டுமா.........64

ஒரு வழியாக 2011 போய்விட்டது.  ஓராண்டு ஆரம்பிக்குமுன் எதையெல்லாமோ செய்ய வேண்டுமென்ற எண்ணம் ஓடிக்கொண்டிருக்கும்.  ஆனால் ஒன்றும் செய்ய முடியாத இயலாமை இல்லாமல் இருக்காது. கடந்த ஆண்டில் 10 புத்தகங்கள் கொண்டு வரவேண்டுமென்று நினைத்துக்கொண்டிருந்தேன்.  பெரிய ஏமாற்றமாகப் போய்விட்டது.  பின் பத்திரிகையைத் தொடர்ந்து 3 மாதங்களுக்கு ஒருமுறை கொண்டு வர வேண்டுமென்று நினைப்பேன்.  ஒன்றும் நடக்கவில்லை.  இந்த ஆண்டு நான் ரொம்ப குறைவாகவே எழுதியிருக்கிறேன்.  என் நாவல் முயற்சி பாதியில் நிற்கிறது.  கவிதைகள் சிலவற்றை மட்டும் எழுதினேன்.  ஆனால் சிறுகதை எழுத முடியவில்லை. ஏன் மனம் அதில் செல்ல மறுக்கிறது?  அதேபோல் தினசரி செய்தித் தாள்களைத் தவிர நான் எந்தப் புத்தகமும் படிக்கவில்லை. ஒரு கட்டத்தில் சர்க்கரை நோய் பற்றி பயம் வந்துவிட்டதால், தினமும் நடக்க ஆரம்பித்துவிடுகிறேன்.  காலையில் எழுந்தவுடன், ஓட்டலுக்குச் சென்று காப்பி குடித்துவிட்டு, நடக்க ஆரம்பித்துவிடுவேன்.  பின் கொஞ்சமாக சாப்பிடுவேன்.  அலுவலகம் ஓடுவேன்.  அதைவிட்டு திரும்பி வருவதற்குள் 9 மணி ஆகிவிடும். பின் எதைப் பற்றி சிந்திப்பது?  எழுதுவதும் கிடையாது.  படிப்
எப்படி சௌகரியம் ?! மழைச்சாரலில் நனைந்த என் கவிதையை உலரவைக்க தென்றலை எதிர்பார்த்து காத்திருக்கிறேன் உலராத உயிர்ப்புள்ள கவிதையில் மட்டுமே விருப்பமுள்ளவராயின் முன்னரே நனைந்துள்ள உங்களின் ஈர இதயம் காட்டி என்னிடமிருந்து கவிதையைப் பெற்றுக்கொள்ளலாம் உலர்ந்து தெளிந்த கவிதையில் மட்டுமே விருப்பமுள்ளவராயின் அலங்கமலங்கலாக சிறிது அழிந்து மறைந்த எழுத்துகளை உங்கள் விருப்பப்படி நிரப்பிக்கொள்ள வேண்டிவரும்.
நான் புத்தகக் காட்சி தேதியை தவறாகக் குறிப்பிட்டு விட்டேன்.  தேதி 5.1.2012 முதல் 17.1.2012வரை என்று வாசிக்கவும் .

அன்புள்ள நண்பர்களே,

வணக்கம். வருகிற 35வது புத்தகக் கண்காட்சி 5.1.2012 முதல் 17.1.2012வரை சென்னையில் நடைபெறுகிறது.  அதில் நவீன விருட்சமும் கலந்துகொள்கிறது.  நவீன விருட்சம் ஸ்டால் எண் 394.  இங்கு கலந்துகொள்ள விடுமுறை நாட்கள் தவிர மற்ற நாட்களில் நவீன விருட்சம் ஆசிரியரான நான் கலந்துகொள்ள முடியுமாவென்று தெரியவில்லை.  சீர்காழியிலிருந்து வரவேண்டும்.  எனக்கு ஸ்டாலைப் பார்த்துக்கொள்ள நண்பர்கள் உதவி செய்ய முடியுமா? புதிய புத்தகம் எதுவும் விருட்சம் வெளியீடாக வரவில்லை.  ஏன் நவீன விருட்சமே வரவில்லை?  எல்லாம் பழைய புத்தகங்கள்தான்.  புத்தகக் காட்சி முடிவதற்குள் ரூ.5000க்குப் புத்தகங்கள் விற்றால் அதன் வெற்றியைப் பெரிதாகக் கொண்டாடலாம் என்று நினைக்கிறேன்.  உதவ விரும்புவர்கள் தகவல் தரும்படி கேட்டுக்கொள்கிறேன். அன்புள்ள

நாய்

ஒரு நாய் உள்ளே நுழைந்துவிட்டது வாட்டச்சாட்டமான அதன் தோற்றம் பயமுறுத்தியது உறுமவில்லை பார்த்தால் ஒரு பெண்மணி பின்னால் சுற்றி சுற்றி வருகிறது அந்தப் பெண்மணி பஸ்ஸில் சென்றாலும் அது வந்து விடுகிறதாம். பணத்தைக் கட்டிவிட்டு பெண்மணி வங்கிக் கிளையைவிட்டுச் சென்று விட்டார். ஆனாலும் அந்த நாய் மாத்திரம் சுற்றி சுற்றி என் மனதில் வந்து கொண்டிருக்கிறது.

கூட்டல் கழித்தல்

  பாவக்கணக்குகளை எழுதும் சித்ரகுப்தன் எழுதி எழுதிக் கைசோர்ந்து  கணினிக்கு மாறினார். ஜிபியில் சேமித்து முடியாமல் டெராபைட் கொள்ளளவுக்கு மாறிய பிறகும் திணற நேர்ந்தது. அவுட் சோர்ஸிங் தீர்வாகுமென மானுடரை அணுகினார். முட்டிமோதி முன்வந்த எவருக்கும்  கணக்குகளில் எந்தப் பாவமும் தெரியவில்லை. பாவத்தைப் பற்றிய பார்வை மாறியிருந்தது. சம்பளமாகப் பூலோகத்தில் சொர்க்க வாழ்வைப் பேரம்பேசி வேலையைத் தொடங்கினார்கள். கூட்டலும் கழித்தலும் வகுத்தலும் பெருக்கலும் பணம், பதவி, புகழ் எனும்  விடைகளையே  திரும்பத் திரும்பத் தேடியிருந்தது சுவாரஸ்யத்தைத் தந்தது. சகமனிதரிடம் அன்பு பிற உயிரிடம் நேசம் இயற்கையிடம் நன்றி அற்றுப் போன பூமியின் கடவுச்சொல் ஒருநாள் காக்கும் சக்திக்கு மறந்து போகலாம். சுனாமிகளாலும் கலங்காத கோளினைத் தன் இரட்சிப்பின் எல்லையிலிருந்து  வைரஸ் பாய்ச்சி விலக்கலாம். அண்டவெளியில் பூமி அதிவேகத்தில் சுழலாம். இரண்டு மணிகளுக்கொருமுறை இரவு பகல் நேரலாம். அந்நாள்வரையிலும் கூட்டலாம் கழிக்கலாம் வகுக்கலாம் பெருக்கலாம். *** ***  

குழந்தையின் கோபம்

கடவுளின் குழந்தையொன்று உலகியல் விளையாட்டினை விளையாடிக் கொண்டிருந்தது. எது தவறு எது சரியென கடவுளிடம் கேட்டுக் கேட்டு குழந்தை அந்தப் பொம்மைகளை தவறு சரியென இரண்டு வட்டங்களுக்குள் பிரித்து பிரித்து வைத்தது. குழந்தை கடவுளிடம் ஏதோ கேட்பதற்காக திரும்பிப் பார்த்த சில நிமிடங்களில் வட்டங்களிரண்டிலிருந்தும் பொம்மைகள் சரிக்கும் தவறுக்குமாக மாறி மாறி குதித்துக் கொண்டிருந்தன. சலித்துப் போனக் குழந்தை தவறுகள் வைத்திருந்த வட்டத்திற்குள் தானேப் போய் உம்மென்று உட்கார்ந்து கொண்டது

பிரத்யேக நிறம் சூழ்ந்த நடைபாதை..

  * மரணத்தின் குறிப்பேட்டில் கையெழுத்து வாங்கும் தாதி அவசரமாகத் தவிர்த்து விடுகிறாள் கேள்விகளையும் அதற்குரிய பார்வைகளையும் திறந்து அவளை உள்வாங்கிக் கொள்ளும் கண்ணாடிக் கதவுக்கு அப்பால் நிதானமாய் நீள்கிறது பிரத்யேக நிறம் சூழ்ந்த ஒரு நடைபாதை நம் கைகளோடு தங்கிவிடுவது ஒரு பேனா மட்டுமே ******

கடைச் சொல்

  கிளையிலிருந்து தரைக்கு வீழ்கிற இலையைப்  போன்றே கணித நுட்பம் தவிப்பு மனிதர்களின் தந்திர வழி என்கிறார்கள் ? தீர வலிக்குச்செய்து கொள்ளும் நித்தியப்பணிவிடை என்கிறார்கள் ? காதல் ஜோடிகளின் கைகளிலிருக்கிற கடைசி துருப்புச்சீட்டுஎன்கிறார்கள் ? போதுமான தொரு வாழ்விலிருந்து மீளும் சுய விலகல் என்கிறான் ஞானி ஒரு வேளை துடித்தடங்கும் இக்கயிற்றை அறுத்து தரையிறக்குகையில் உடைந்த என் குரல்வளையில் எஞ்சியிருக்கலாம் ஒரு தற்க்கொலையின் காரணத்திற்கான கடைசிச்சொல்.

குற்றத்துக்கான புள்ளி..

* திருந்தி விடுவது பற்றி விவாதித்துக் கொண்டிருந்த பகலில் சூழ்ச்சிக்கான முதல் புள்ளியைக் கையில் வைத்திருந்தேன் நாளது வரை நடந்த சம்பவக் குறிப்புகள் எட்டு மடிப்புக் காகிதக் கோடுகளின் அழுக்கேறி கிழிந்திருக்கிறது ஒவ்வொரு எழுத்தின் வன்மத்தையும் அலசித் தழுதழுத்த நாக்கின் நுனி சிவந்திருந்தது சுலபம் என்கின்றன மனச் சுவர்கள் பாதுகாப்பின் உச்சியில் நீரோடும் மின்சாரக் கம்பிகள் தருணங்களின் கணத் துளிகளை ஆவியாக்குகின்றது திருந்தி விடுவது பற்றி விவாதித்துக் கொண்டிருக்கும் பகல் எங்கோ ஓர் இருட்டின் தனிமையில் சத்தமில்லாமல் திறந்து விடுகிறது குற்றத்துக்கான இறுதிப் புள்ளியை ******

எதையாவது சொல்லட்டுமா.........63

இந்த முறை 35வது புத்தகக் கண்காட்சி சென்னையில் நடைபெறுவது பற்றி யோசனையாக இருந்தது.  கலந்துகொள்ளலாமா வேண்டாமா என்ற யோசனை.  இந்த முறை புதிய புத்தகம் எதுவும் கொண்டு வரவில்லை.  ஏன் விருட்சமே கொண்டு வரவில்லை?  இருக்கிற புத்தகங்களை வைத்துக்கொண்டு உட்கார்ந்தால், ரூ5000 வரை தேறுமா என்பது சந்தேகம்.  எல்லாம் விற்கமுடியாத கவிதைப் புத்தகங்கள்.  இதற்கு உழைப்பு அதிகமாகத் தேவைப் படுகிறது.  பல நண்பர்களைத் தொந்தரவு செய்ய வேண்டியிருக்கிறது.  ஏன் இதில் கலந்துகொள்ளவேண்டும்?  புத்தகம் கொண்டு வர முடியவில்லை.  ஆடம்பரமாகப் புத்தக வெளியீட்டு விழா நடத்த முடியவில்லை. தமிழில் பெரும்பாலான புத்தகங்களை உயிர்மை, காலச்சுவடு, கிழக்கு போன்ற பதிப்பகங்கள் போட்டிப் போட்டுக்கொண்டு போடுகின்றன.  விருட்சம் போன்ற பத்திரிகை என்ன செய்ய முடியும்?  அப்படியே புத்தகம் போட்டால் யார் கவனத்திற்கு அது போகும்.  விற்கவும் விற்காது.  என்னை விட்டும் போகாது.  ஆட்சி மாறியதால், எப்போதும் கிடைக்க வேண்டிய லைப்ரரி ஆர்டரும் போய்விட்டது.  கண்டுகொள்ளவே இல்லை.  வரவும் இல்லை.  யாருக்கும் போய்ச் சேரவில்லை போல் தோன்றுகிறது.  பொதுவாக ஜனங்களுக்கு பு

ழ 5வது இதழ் - டிசம்பர் 1978 ஜனவரி 1979

தேனரசன் கவிதைகள்   வெள்ளை ரோஜா-கவிதைகள் அன்னம் வெளியீடு,   அகரம் சிவகங்கை   ரூ.5-00  தேனரசன் கவிதைகளை ஒருமுறை படித்ததும் ஒரு திறமையாளனை சந்திக்கிறோம் என்ற உண்மை உடனே புலப்பட்டு விடுகிறது.     காகங்கள் முடிபுனைந்தால்    கரைச்சல்களே சங்கீதம்    சிறுமைக்கு நீர் வார்த்தால்    தெருநெடுவே முள் வளரும். இந்த வரிகளைப் படிக்கும் பொழுது,'பேயரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்' என்ற பாரதியின் வரியும், மற்றதில் எதிர் மறையாய ஒரு திருக்குறளும் முற்றிலுமாக மறைந்து புதிய வரிகளும் இடம் கொடுத்திருப்பதைப் பார்க்க முடிகிறது.     'தேவை பணம் இதுவே    திருவாய் மொழி  எனவே    சேவை மனப்பான்மை    சிவலோகம் போகிறது'    'அவரவர்கள் பாட்டுக்கு    அகப்பட்டது சுருட்டல்    தவறில்லை என்னுமொரு    தருமம் தழைக்கிறது.' என்ற வரிகளில் ஒரு புதிய கவிஞனின் குரல் ஒலிப்பதைக் கேட்கலாம்.  சொல்லே கவிதை என்பது உண்மையென்றாலும் கவிஞன் கலைஞனுமாகவே காணப்பட்டு வருகிறான்.  கூற்றின் அளவிலேயே மேற்கண்ட வரிகள் தேனரசனுக்குக் கவிதை ஆகிவிட்டாலும் இந்தத் தொகுப்பில் சிருஷ்டி அளவிலான கவிதைகளும் உள்ளது  நிம்ம

ழ 5வது இதழ் - டிசம்பர் 1978 ஜனவரி 1979

காளி-தாஸ் ஒரு கவிதை  பொழுது விடிந்து  தினமும்  நான் வருவேனென்று  கடற்கரை மண்ணெல்லாம்  குஞ்சு நண்டுகள்  கோலம் வரைந்திருக்கின்றன.     

ழ 5வது இதழ் - டிசம்பர் 1978 ஜனவரி 1979

நீல பத்மநாபன் முன்னுரை அஞ்சுவரி  வஞ்சப்புகழ்ச்சிக்கு  பத்தாயிரமென்றால்  பத்து பக்க  புஷ்பார்ச்சனைக்கு  அட்சர லட்சமா?       முன் செல் உடனோடி நாய்கள்  வீறுடன் குரைக்கட்டும்  கூடப் பறந்து காகங்கள்  கத்தி களைக் கட்டும்  ரதமே நீ  மு  ன்  செல்  முன்  செ  ல்

ழ 5வது இதழ் - டிசம்பர் 1978 ஜனவரி 1979

மீர்ஸா காலிப் முஹம்மது இக்பால் ஒரு அறிமுகம்  உலகப் புகழ் பெற்ற உருதுக் கவிஞர்களான மீர்ஸா காலீப் முஹம்மது இக்பால் இவர்களின் சில கவிதைகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து ஸ்டர்லிங் பப்ளிஷர்ஸ், டெல்லி வெளியிட்டிருக்கிறார்கள்.  உருதுக் கவிதைகளைப் பற்றி ஒரு ஆச்சரியமான விஷயம்,    கல்வியறிவு உள்ளவரும் அற்றவரும் அவற்றை ஒருங்கே புகழ்கின்ற தன்மை உருதுக் கவிதைகளின் இசை வடிவமும், அக்கவிதைகள் மனித வாழ்க்கையோடு தங்களை ஐக்கியப் படுத்திக் கொள்வதும் இதற்கு ஒரளவு காரணம் எனலாம். இக்பாலும், காலிப்பும் பிரிவடையா இந்தியா தந்த பொக்கிஷங்கள்.  காலிப் இறந்த பத்தாண்டுகளுக்குப் பிறகு பிறந்தவர் இக்பால்.  காலிப்பின் கவித்துவத்தினால் பெரிதும் கவரப் பட்டவர்.  காலிப்பை கோதேயுடன் ஒப்பிட்டால் இக்பாலை காலெரிட்ஜுடன் ஒப்பிடலாம்.  இந்த ஒப்புமை முழுவதும் பொருந்தாது.  காலிப் பின் கவிதைகள் உணர்ச்சி வயப்பட்டு வெளி வந்தவை.  பேரானந்தத்தினின்று  வெளி வந்தவை.  இக்பாலின் கவிதைகள் தத்துவ பூர்வமானவை.  மக்களை விழிப்படையச் செய்தவை.  காலிப்பின் கவிதைகள் பெரும்பாலும் கஸல்களாய் வெளிவந்தவை.  அராபிய மொழியில் கஸல் என்பது தனது பிரியத்துக்க

ழ 5வது இதழ் - டிசம்பர் 1978 ஜனவரி 1979

இறப்புக்குமுன் சில படிமங்கள் பிரம்மராஜன் ஜன்னலில் அடைத்த வானம் குறுக்கிடும் பூச்செடிகளுடன் சுப்ரபாதம் இல்லை என்றாலும் மங்களமான பனிப்புகையில் விடியல். நரைத்த உடைந்த இரவின் சிதறல்கள் நேரமாய் வந்துவிட்ட தோட்டியின் கால்களின் முன். மண் தின்று எஞ்சிய எலும்பின் கரைகளில் சிற்பத்தின் வாசனை காற்றைத் தவிர அவனுக்கு மட்டும் பியானோவென இசைத்து ஒலித்தது உறங்காமல் திரிந்த மணிகூண்டு உணர்விழந்துவிட்டது உறையும் குளிரில். பறந்த பறவைகள் வானில் கீறியஓவியம் பார்த்ததில் பந்தயம் இழந்தது நேற்று விரலிடுக்கில் வழிந்த காலத்தின் துளிகளை மற்றொரு கையேந்த கணங்களை முழுவதும் எரித்தாகிவிட்டது அவன் இறந்து விட்டான் இன்றெதற்கு இரண்டாவது மாடியில் அழகான அறை? பூக்கள் நிஜமாய் மலராது அங்கு  

ழ 5வது இதழ் - டிசம்பர் 1978 ஜனவரி 1979

காலம் காளி - தாஸ் யாரோ காலமானார் என்ற செய்தி என் எதிரில் நட்சத்திரமாகத் தொங்குகிறது காலமென முதலில் உணர்ந்தவன் கபாலச் சூடு பொரியும் ஆன்மை நிறைந்தவனாக இருந்திருப்பான் சில சமயத்தில் தோன்றுகிறது காலம் நிர்ணயிக்கப் பட்டிருப்பது போல ஆனால் பற்ற முடியாமல் நழுவிப் போகிறது. எங்கேயோ காத்திருக்கிறது? காதலுடன் மெளனம் சாதிக்கிறது காலம் காலமாகக் கடல் ஒலிக்கிறது வெற்று வெளியில் மேகம் சஞ்சரிக்கிறது கனத்த காலப் பிரக்ஞையை எனக்குள் விதைத்து விட்டார்கள்.  எவ்வளவோ காலம் கடந்தும் அறிந்து கொள்ள என்னவென்று அது-முளைக்கவே இல்லை.  ஆனால் விலகாத கிரஹணமாக என் எதிரில் தொங்கிக் கொண்டேதானிருக்கிறது யாரோ காலமான செய்தி. நானும் ஒரு காலத்தில் காலமாகி விடுவேனோ என்பதில் மட்டும் முளைத்து விடுகிற பயம் சொட்டுச் சொட்டாய் உதிரக் காத்திருக்கிறது - காலம் வராமல்........

ழ கவிதைகள் - 5வது இதழ்

நீலமணி சேரிகள் சிறியார்க் கில்லாப் பெரியார் உறுப்பு பச்சைத் தோரணம்.  பொற்கொடி முட்கள் உற்றுழி உதவாது ஓடிப்போகிற பட்டைப் போலவும் பருத்திபோ லவுமின்றி ஒட்டிஉற வுகொளும் வெட்டிவேர், வேடர் ஒட்டமுடி யாத தேனீ மொய்ப்பு. ஆண்டவன் தந்த அத்தி இலை.  இது இடையில் வந்நது.  மூலைகளில் ஒளியும் இருட்டு, காலம் போர்த்திய பொன்னாடை அழைப்பு விடுக்கும் பச்சை விளக்கு பாடல் பெறாத்திருப் பதிகள்.  விழல்கள் பாம்பின் பச்சைப் படம்.  உயிர் வேலி சந்தன மரத்துப் புல்லுரு விக்கொடி வீட்டு வாசலில் போட்ட கோலம் சல்லிவேர்ச் சல்லடை.  மவுன சாட்சி விளக்கடி நிழல்இது எப்பறவைக் கூடு? தோள்மீ தமரும் வழக்கம் மாறி தோளுள் அமர்ந்த பச்சைக் கிளிகள் பிரியும் புத்தகப் பக்கங் களிடை பையன் வைத்த நீலமயி லிறகு பொன்னுலகத்து இருண்டகண் டங்கள் மாம்ச ஒட்டடை.  ராமன் கோடுகள் காலம் ஒட்டிய பச்சை ஸ்டாம்புகள் சிறையின் கம்பிகள்.  தேதிமுத் திரைகள் புழுக்க நேரத்துத் தோகை விசிறிகள் தாரால் எழுதிய புரட்சிகோ ஷங்கள் புரியாத அயல்மொழிக் கவிதைகள்.  பாசி சாயம். தீவுகள்.  பொன்வேய்ந்த கூரை இக்கறை களுக்குக் கடவுள் பொறுப்பு வெற்றித் தலைவ

ழ கவிதைகள் - 5வது இதழ்

மூன்று கவிதைகள் 1. அவர்கள் சென்றபின் இவர்கள் இடம் பெயராது இருந்தனர் 2. நாய் கொடுத்த காசு குரைக்கும்; பட்ட மரத்திலுண்டு பல கெட்ட நாய்கள்; நடுப்பகல் இருட்டாகும் 3. பிறந்த சூட்டில் இரத்தச் சிவப்பில் எலிக்குஞ்சு  போல் கிடக்கும்; புழுப்போல் நெளியும்                                                                      நகுலன் டிசம்பர் 1978 ஜனவரி 1979

அலைகள் காத்திருக்கும்...

பாக்கெட்டில் இருந்து பறந்து போன பட்டாம் பூச்சியை உதிர்ந்த வண்ணம் , ஒரு சிறகுடன் மீண்டும் தேடி மீட்ட போது பூச்சி சொன்னது " நொண்டுவது நான் மட்டுமல்ல    காலத்தில் கரைந்து போகும் நீயும் தான் , நொண்டினாலும் , பாடி பறந்து திரிவேன் நான் " என்ற பூச்சியை பார்த்து சொன்னென் "நான் மானுடன் -Man can be destroyed ,but not deafeted."

காதல் கவிதைகள்

கொஞ்சம் காதல் கவிதைகள் எழுதித்தரவேண்டும் என பதிப்பாளர் என்னிடம் கேட்டிருக்கிறார், யாருக்கேனும் என் கனவில் வந்து போக விருப்பமா ? ஏற்கனவே பிறரின் கனவுகளில் உலவியவராயிருப்பினும் பரவாயில்லை. நீங்களும் உங்கள் நினைவுகளும் என் காதல் கவிதைகளில் நிச்சயம் இடம்பெறும் என்பது உறுதி. என் கனவுகளில் என்றும் நிலைத்திருக்க வேண்டிவரும் என்று அஞ்சத்தேவையில்லை. அச்சில் வெளிவரப் பெறுமானமுள்ள கவிதைகள் தேறும் வரையே உங்களின் நினைவுகள் எனக்குத் தேவைப்படும் நான் உறங்கிக்கொண்டிருக்கும் நேரம் பார்த்து என் கனவுகளில் நுழைந்துவிடுங்கள் நான் விழித்திருக்கும் நேரம் நுழைய நேர்ந்தால் எப்போதும் அழியாமல் தங்கிவிட வாய்ப்புண்டு.

தூக்கம்

இரவு நேரங்களில் தூக்கம் வருவதில்லை எழுந்து உட்கார்ந்து விடுவேன் பின் திரும்பவும் படுத்துக்கொண்டுவிடுவேன் லைட் எதுவும் போடுவதில்லை மின்விசிறி மாத்திரம் சுற்றிக்கொண்டிருக்கும் சன்னமாய் விளக்கு வெளிச்சம் ஹாலை நிரப்பிக்கொண்டிருக்கும் எதையும் யோசனை செய்யாமல் யோசனையைத் துரத்திக்கொண்டிருப்பேன் பின் தூங்கு என்று கண்ணை மூடிக்கொள்வேன் தூக்கம் வருவதில்லை கனவை வாவென்று கூப்பிட்டாலும் கனவும் வருவதில்லை உடம்பு எப்படி விரும்புகிறதோ அப்படி இருந்துவிடலாமென்று யோசிக்கும்போது தூக்கம் மெல்ல கண்ணைச் சுழற்றும்.  

எங்கும் தேங்கி நிற்கும் உனது மணித்துளிகள்..

* ஒரு அனுமதி என்னைக் கொஞ்சம் அசௌகரியப்படுத்துகிறது அது உன் அறைவாசலில் எப்போதுமே நிரந்தரமாய் ஸ்டூல் ஒன்றைப் போட்டு வைத்திருக்கிறது வருவதும் போவதுமான உத்தரவுகளை அச்சிட்டுக் காகிதத்தில் வைத்திருக்கிறாய்  உனக்கான மணித்துளிகள் உனது இருப்பிடத்தில் தொடங்கி அலுவலகம் வரை மழைக்குப் பின்னான நீர்த் துளிகளைப் போல் எங்கும் தேங்கி நிற்கிறது முறை செய்யப்பட்ட பாதுகாவலோடு சின்னஞ்சிறிய உதவி ஒன்றைக்  கோரவும் ஒரு பால்ய நினைவைப் பகிரவும் காத்திருக்க நேரும் ஒரு அனுமதி என்னைக் கொஞ்சம் அசௌகரியப்படுத்துகிறது

வெளிச்சம்

அந்தகாரத்தில் எனக்கு வழி காட்டிய அச் சிறிய தங்க நிற ஒளிப் புள்ளி வெளியே தென்படாதது எங்கு, எப்பகுதியலது தேடினாலும் தென்படாதது அலங்காரங்களற்ற விழிகளில் இருளை விடவும் அனேகமானவை வெளிச்சத்தில் மறைந்துபோகும் தென்படாமலேயே இஸுரு சாமர சோமவீர

இருளில் உருளும் மனம்

இரவோடு இருளும் வந்தது . சுற்றிலும் எதுவுமே தெரியவில்லை . மனம் வெளிச்சமாக இருந்தது . வெளியே வெளிச்சம் வந்தது . இடங்களும் இடுக்குகளும் பிரகாசமாய் தெரிந்தன . மனம் இருளத் தொடங்கியது .

தரக்குடும்பம்

இரவை புணர்ந்தெழுந்ததும் தொங்கவிடப்பட்ட வெள்ளை துணி மூடி கொட்டாவி இறுமலை முடித்து மூக்கின் துவாரங்களில் காற்றோடு கணநேரம் பயிற்சித்தேன் கற்பிக்கப்பட்டதை பிசகிடாது பல் துடைப்பத்தில் பற்பசை இட்டேன் குறுக்கும் நெடுக்குமாக அசைக்க நினைவு உறுத்தியது அய்யய்யோன்னு தலையிலடித்து மேலும் கீழுமாக அசைத்து துலக்கினேன் தர முத்திரையிட்ட சோப்பு ஷாம்புகளால் உடல் கழுவினேன் துணையாளும் அவங்களுக்கான அட்டவணையின்படி ஸ்டிக்கரால் பெயரிடப்பட்ட டப்பாக்களிலிருந்து வெகு எளிதாக சமைத்து முடிக்க கொடுக்கப்பட்ட காலத்திற்குள் தயாராகி காலனிகளின் அணிவகுப்பிலிருந்து எனை பெயர்த்து வெளியேறினேன் வெளிச்சுவற்றில் மின்னிக்கொண்டிருந்தது என் தினக்கூலியை உத்திரவாதப்படுத்திக்கொண்டிருக் கும் ISO தரச்சான்று இல்லமெனும் பாலிமர் சீட்டில் பொறிக்கப்பட்ட பச்சை எழுத்துக்கள்...

நிழல் விமானம்

    வெண் திரைத்துனியில் கருஞ்சித்திரமாய் நகர்ந்து கொண்டிருந்தது நிழல் விமானம் பச்சை வயல்கள், மணற்பரப்புகள், தொழிற்சாலை கூரைகள்.. எல்லாவற்றின் மீதும் கருநாகம் போல ஊர்ந்து சென்றது. தந்தை கைப்பிடித்து குதித்து குதித்து நடக்கும் சிறுவனின் உற்சாகம்.   பிரம்மாண்டமானதொரு நீர்ப்பாசன கிணறொன்றில் பாய்ந்தபோது நிழல் விமானம் மறைந்துபோனது. சகபயணியொருவர் பயணத்தில் காணாமல்போனால் உண்டாகும் பதைப்புடன் பார்வையை சுழலவிட்டேன். கருமேகங்கள் சூழ்ந்திருந்தன. கதிரவன் ஒளிந்திருந்தான். போதுமான ஒளியின்மையால் நிழல் விமானத்தை தேட முடியவில்லை. மேகங்கள் விலகி சூரியன் மீண்டும் வெளிவந்த சில நொடிகளில் அதிர்வின்றி தரையை தொட்டது விமானம்.   முட்டிமோதி படியில் இறங்கி பேருந்தில் அமருமுன் நிழல் விமானத்தை மீண்டும் பார்த்தேன். எவ்வித அசைவுமின்றி ராட்சத அளவில் அமைதியுற்று  நிற்கும் விமானத்தின் அடியில் நிம்மதியாக உறங்கிக்கொண்டிருந்தது நிழல் விமானம்.

எமதுலகில் சூரியனும் இல்லை

  இறப்பர் மரங்களில் பால் இருந்த போதும் பெருந் தோட்டத்தில் நாம் வசித்த போதும் இறப்பர் விலை அதிகரித்த போதும் நாம் இன்னும் கையாலாகாத நிலையிலென உணர்கிறது இதயம் எப்போதும் அடர்ந்த பெரும் இறப்பர் காட்டில் பாறைகள், வேர்கள், நதிகள், ஓடைகளிடையே இரவு உட்கொண்ட ரொட்டியின் பலத்தினால் இரு பாதங்களையும் வைத்தபடி மரத்துக்கு மரம் வெட்டிச் சேகரித்த பால் எடுத்து நாம் வருகிறோம் சாயத் தேனீர் குடித்தபடி தாயும் தந்தையும் வாழ்ந்த குடிசையின் உரிமை எமக்கில்லை பிள்ளையே ஊருமற்று நாடுமற்று லயன் தான் வாழ்க்கையே கிணற்றுத் தவளைகள் போல லயத்திலிருக்கும் நம் எல்லோருக்கும் உரிமையில்லை எதற்கும் இது பற்றிக் கதைக்கவும் கூட - ஹெரல்ட் மெக்ஸிமஸ் ரொட்ரிகோபுள்ளே

யுகங்கள் கடந்தது

முகர்ந்து முகர்ந்து நாய்க் குட்டியொன்று என்வீடு வரை வந்து விட்டது. யுகங்கள் கடந்த அன்பின் புரியாத ரகசியத்தின்முன் தளும்பி நின்ற பேரமைதி கணமிது