Skip to main content

Posts

Showing posts from January, 2012

பந்தநல்லூரில் கிடைத்த பதவி உயர்வு....

பத்மநாபனாகிய நான் பேசுகிறேன்.  யார் இந்த பத்மநாபன்?  யாருமில்லை, சாதாரணத்திலும் சாதாரண மனிதன்தான் நான். என்னைப் பற்றி உங்களிடம் சொல்ல ஆசைப்படுகிறேன்.  ஒவ்வொருவருக்கும் அவரவரைப் பற்றி பேச எத்தனையோ இருக்கும்.  ஏன் உங்களுக்குக்கூட ஏதோ தெரிவிக்க ஆசைப் படுவீர்கள்.  யாரும் பேசத்தான் விரும்புவார்களே தவிர, மற்றவர்கள் பேசுவதைக் கேட்க விரும்ப மாட்டார்கள்.  ஆனால் ஒருவர் மற்றவர்கள் சொல்வதைக் கேட்க விரும்புகிறார்கள் என்றால் ஒன்று அவர்கள் மனோதத்துவ மருத்துவர்களாக இருப்பார்கள்.  ஏன்என்றால் அவர்கள் கேட்டுத்தான் ஆக வேண்டும்.  கேட்டால்தான் அவர்களுக்குப் பணம் கிடைக்கும். இன்னும் சிலர் இருக்கிறார்கள்.  அவர்கள் தங்களை கடவுளின் தூதுவர்களாக நினைத்துக் கொள்பவர்கள்.  அவர்கள் கேட்க மட்டும் செய்வதில்லை.  பிரச்சினைகளுக்குத் தீர்வும் சொல்வார்கள். நான் ஏதோ என்னைப் பற்றி உங்களிடம் சொல்கிறேன்.  நீங்களும் நான் சொல்வதைக் கேளுங்கள்.  வேறு எதுவும் சொல்ல வேண்டாம்.  சரி, எப்படி ஆரம்பிப்பது?  நான் பிறந்தது வளர்ந்தது எல்லாம் சொல்ல விரும்பவில்லை.  எனக்கு சொல்லவும் அலுப்பாக இருக்கும்.  உங்களுக்குக் கேட்பதற்கும் அலுப்பாக இர

வாசல்

        சிற்றூரில் வாழ்ந்திருந்த சிறுவயதில் விடியற்காலம் வாசற்படியில் நான் படிக்கும் சத்தத்தோடு விதவிதமான பறவைகளின் சத்தங்களும் சேரும் சேவலின் கூவல் காகங்களின் கரைச்சல் குருவி, மைனாக்கள், மற்றும் பெயர் தெரியா பறவைகள் பகலுக்காக ஆயத்தமாகும் சத்தங்கள் இப்போதெல்லாம் விடியற்காலத்தை சந்திப்பதேயில்லை பறவைகளின் சத்தமும் கேட்பதேயில்லை வாசல் மட்டும் இருக்கிறது…. பக்கத்து ஃப்ளாட்டின் செருப்புகள் சிதறி

மாயங்கள் புரிகிறதே மதுவாகினி

உன்னுடனான உரையாடலுக்குப் பின் செத்தை வெளியேற்றிய தாய்பசுவின் அமைதி கவ்வ நூல் கோர்த்து தொங்கவிடப்பட்ட வண்ண பலூன்களாக மிதக்கும் உன் வார்த்தைகள் என்னுள் பயணிக்கத் துவங்குகிறது சலவைக்குறியின் மையாகி மகரந்தம் விதைக்கும் தட்டானாகவும் நிலத்தை உயிர்ப்பூட்டும் மண்புழுவாகி ஊற்றுக் கண்ணாகி கினற்றை ஈரமாக்குகிறது இலுப்பை பூவாகி உடலை சக்கரையாக்கி பவளமல்லியாகி சுவாசம் மணந்திட்டு தொட்டாஞ்சிணுங்கியாகி நாணம் காட்டுகிறது சுற்றும் நாய் ஒன்றிற்கு பரிவுபொங்க சோறிட்டு மீந்த மீந்த பாலூட்டுகிறது பூனைக்கு வழிய வழிய செடிகளுக்கு நீர் இறைத்து கையேந்துபவருக்கு ரூபாய்தாளை பிச்சையிடுகிறது இருசக்கர வாகனத்தையும் குதிரைகள் பூட்டிய ரதமாக்கி புவி ஆளப் பிறந்தவனாய் பவனி வரச்செய்து மாயங்கள் புரிகிறதே மதுவாகினி...

எதையாவது சொல்லட்டுமா.........68

ந.முத்துசாமிக்கு இந்த முறை பத்மஸ்ரீ பட்டம் கிடைத்துள்ளது.  முத்துசாமியை நினைக்கும்போது 'நீர்மை' என்ற அவருடைய சிறுகதைத் தொகுப்பு ஞாபகத்திற்கு வரும்.  அவருடைய கதைகளைப் போல ந.முத்துசாமியும் வித்தியாசமான மனிதர். எளிமையான மனிதர்.  அவரைப் பார்க்கும்போது அவருடைய மீசைதான் ஞாபகம் வரும்.  கூத்துக்காக ந.முத்துசாமி தன் வாழ்நாள் முழுவதும், இன்னும் பாடுபட்டுக்கொண்டிருக்கிறார்.  எதையும் தெளிவாக செயல்பட வேண்டுமென்று நினைப்பவர்.  நடிகரின் உடல் அசைவுக்கும், வசன உச்சரிப்புக்கும் முக்கியத்துவம் கொடுப்பவர்.  கூத்துப்பட்டறையில் நடிக்கத் தெரிந்த நடிகனுக்கு நடிப்பு என்பது வெகு சுலபம். கூத்துப்பட்டறையை ஒரு விஞ்ஞானபூர்வமான அமைப்பாக ந. முத்துசாமி மாற்ற முயற்சி செய்துகொண்டிருக்கிறார் என்று எனக்குத் தோன்றுகிறது.  இரண்டு மூன்று முறை விருட்சம் சார்பாக முத்துசாமியை வைத்துக் கூட்டம் நடத்தியிருக்கிறேன்.  ஞானக்கூத்தன் கவிதையை எப்படி ஒரு நடிகன் நடித்துக் காட்ட முடியுமென்று ஒரு நிகழ்ச்சியில் நடத்திக் காட்டினார். ஒருமுறை ஐராவதம் என்ற படைப்பாளியை வண்டியில் அழைத்துக்கொண்டு இலக்கியச் சிந்தனை கூட்டத்திற்குச் சென்றே

மிச்சம்

                                   மரம்போல் நிற்காதே                 மனம் திறந்து                 பதிலைச் சொல்லென்றேன்                                  மனிதனைப்போல                 மலிவானவையல்ல மரங்கள்                                  தேக்கின்விலை மனிதனுக்கில்லை                 சந்தனமணமும்                                 மழை, வெய்யில்,  பனி, புயல்                 எதுவானாலும் எதிர்கொள்ளும் மரங்கள்                                   குடையில் குளிரறையில்                 கம்பளியில் ஒளிவான் மனிதன்                                 தழையும் நிழலும் தந்தாலும்                 ஆடுகளைத் தின்னாது மரங்கள்                 மனிதன் தின்பான்                                 மரத்தை வெட்டினால்                 கட்டில் தொட்டில் கதவு ஐன்னல்                 மேசை நாற்காலி செய்யலாம்                                 மிச்சத்தை                 நீயே யோசித்துக்கொள்ளென்றான்          

எதையாவது சொல்லட்டுமா.........67

இந்த முறை புத்தகக் காட்சி ஆரம்பிக்கும்போதே வேண்டாம் என்று மனம் சொல்லியது. ஏன் என்ற காரணம் புரியவில்லை.  மிகக் குறைந்த அளவில் புத்தகங்களைப் போட்டு வியாபாரம் செய்வது சரியில்லை.  ஆனால் புத்தகங்களை வைத்துக்கொண்டு விற்கவும் வழியில்லை.  ஒவ்வொரு முறை புத்தகக் காட்சியில் காண்பது, ஒன்றிரண்டு புத்தகங்களைப் போட்டு விற்பதற்கு எல்லோரும் அலை அலையென்று அலைவது.  நானும் ஸ்டால் எடுக்காவிட்டால், அந்த நிலைக்குத் தள்ளப்படுவேன்.  என் புத்தகங்கள் ஒரு 30 தேறும்.  ஆனால் அது போதாது. எப்போதும் விருட்சம் புத்தகங்கள் ரூ.10000 வரை விற்கும்.  இந்த முறை புதிய புத்தங்கள் போடாவிட்டாலும், 10000வரை விற்க முடிந்தது.  ஆனால் அது போதாது.  ஸ்டால் வாடகையே அள்ளிக்கொண்டு போய்விடும்.  பின் மற்றப் புத்தகங்களை விற்றுத்தான் மற்ற செலவுக்கு முயற்சி செய்ய வேண்டும்.  ஒரு ஒழுங்கான கணக்கு இருந்தால், புத்தகக் காட்சியில் புத்தகங்களை நன்றாக விற்கலாம்.  இந்த முறை நல்ல இடத்தில் ஸ்டால் கிடைத்தும் ரூ.50000க்கு மேல் புத்தகங்களை விற்க முடியவில்லை.  இந்த வருடம் எப்போதும் விட Low.  இரண்டு முக்கியம விஷயங்களை கவனத்தில் கொண்டு வர வேண்டியுள்ளது.  ஒன

மக்கள் அவரைச் சூழ்ந்திருக்கிறார்கள்

  அஸீஸ் நேஸின்        அவர் இறுதியாக சிறையில் கழித்த காலம் மிகவும் கொடுமையானது . சிறையிலிருந்து விடுதலை பெற்ற பிறகு மிகவும் தொலைதூரத்திலிருந்த ஒரு பிரதேசத்திற்கு அவர் நாடுகடத்தப்பட்டார் . அந்தப் பிரதேசத்துக்கும் அம் மக்களுக்கும் அவரொரு புதியவராக இருந்தார் . அவர் சிறையிலிருந்த போது அவரது மனைவியால் அவர் விவாகரத்து செய்யப்பட்டிருந்தார் .        அவரது எல்லா எதிர்பார்ப்புக்களும் சிதறுண்டு போயிருந்தன . வாழ்க்கையைக் கொண்டு செல்லப் போதுமான பணம் கூட அவரிடமிருக்கவில்லை . வேலையொன்றைத் தேடிக் கொண்டு , அமைதியான வாழ்க்கையொன்றைக் கழிப்பதற்கு அவர் நிரந்தரமாக அரசியல் வெளியிலிருந்து விலகிக் கொள்வாரா ?        எல்லாவற்றுக்கும் முதலில் அவர் ஓர் இருப்பிடம் தேடி நடந்தார் . அவர் நாடுகடத்தப்பட்டிருக்கும் பிரதேசத்திலிருந்த நகரத்தில் மட்டுமல்ல , நகருக்கு வெளியேயும் கூட வீடொன்றைப் பெற்றுக் கொள்வதற்கு அதிக வாடகையைச் செலுத்தவேண்டியிருக்கும் . வாடகையைச் செலுத்தத் தவறினால் , வீட்டின் உரிமையாளன் வந்து தொந்தரவு செய்வான் என்பதனால் அவ்வாறான சந்தர்ப்பமொன்றுக்கு முகம்கொடுக்க அவர் விரும்பவில்லை . ஆனாலும் அவரது பழைய

எதையாவது சொல்லட்டுமா.........66

நான் சென்னையில் நடக்கும் புத்தகக் காட்சியைப் பற்றி எழுத ஆரம்பித்தால், நிறையாகவே எழுதலாம்.  ஒருமுறை சாக்கு மூட்டை நிறைய புத்தகங்களை வாரிக்கொண்டு விற்க வந்தது.  பின் அதேபோல் சாக்குமூட்டை முழுவதும் நிரப்பிக்கொண்டு வீட்டிற்கு தூக்கமுடியாமல் தூக்கிக்கொண்டு போனது. விற்பதற்காகக் கொடுத்த புத்தகங்கள் தீயினால் எரிந்து சாம்பலாகிப் போனது.  அப்போது அந்தப் புத்தகங்களை அன்னம் என்ற கடையில் விற்பதற்குக் கொடுத்தேன்.  பின்னால் அவர்களிடம் நான் கொடுத்தப் புத்தகத்திற்கு இணையாக அவர்கள் புத்தகங்களை வாங்கிக்கொண்டேன்.  அந்தத் தீ விபத்து ஞானச்சேரிக்கு பெரிய நஷ்டத்தைக் கொடுத்து விட்டது.  பின் நானே ஸ்டால் போட்டு விற்க ஆரம்பித்தேன்.  அப்போதிலிருந்து தடுமாற்றம்தான்.  ஓராண்டில் விருட்சம் புத்தகம் ஒன்று இரண்டுதான் வரும்.  அதை வைத்துக்கொண்டு ஸ்டால் போட்டால் அவ்வளவுதான்.  எல்லாப் பதிப்பகத்தாரிடமிருந்தும் புத்தகங்களை வாங்கி விற்போம்.  என்னுடைய பெரிய சவால்.  நான் சென்னையை விட்டுப் போனாலும், புத்தகக் காட்சியில் கலந்துகொள்ள முடியுமா என்பதுதான்.  ஒருமுறைதான் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை.  மற்றபடி ஒவ்வொரு ஆண்டும் கலந

எதையாவது சொல்லட்டுமா.........65

நேற்று (1.1.2012) கம்பன் எக்ஸ்பிரஸ் வண்டியில் உட்கார்ந்திருந்தபோது, க்ளிக் ரவிக்குப் போன் செய்தேன்.  அவர் இலக்கிய வாசகர், சிறுகதை எழுத்தாளர்.  புகைப்படம் எடுப்பதில் திறமைசாலி. அவர் ஒரு சிறுகதைத் தொகுப்பு கொண்டு வந்துள்ளார்.  எனக்கு அந்தத் தொகுப்பில் க்ளிக் ரவி என்ற பெயர்தான் உறுத்தலாக இருந்தது.  ஒரு திறமையான புகைப்படக்காரர், கதைகள் எழுத வேறு பெயர் எதையாவது தேர்ந்தெடுத்திருக்கலாம்.  அவர் சொன்ன ஒரு விஷயம் என் மனதில் ஓடிக்கொண்டிருந்தது.  இப்போதெல்லாம் யாரும் புத்தகம் படிப்பதில்லை என்று. ஒரு பெரிய புத்தகக் காட்சி நடைபெறும்போது, எப்படி க்ளிக் ரவி இதுமாதிரி சொல்லலாம் என்று தோன்றியது.  அவர் சொல்வதில் எல்லாவித நியாயமும் இருப்பதாகவும் தோன்றியது.  முன்பு மாதிரி இப்போதெல்லாம் யாரும் புத்தகம் படிப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை.  ஆனால் அளவுக்கதிகமாக புத்தகங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.  எனக்கும் அப்பாவிற்கும் புத்தாண்டு அன்று சண்டையே வந்துவிட்டது.  ''நீ வாங்குகிற புத்தகங்களையெல்லாம் படிக்கிறயா?'' என்று அவர் கேட்க, எனக்கு அவர் மீது கோபமே வந்து விட்டது.ஆனாலும் அந்த முணுக்கு கோபத்த