Skip to main content

Posts

Showing posts from July, 2008

உள்ளே

வராதே!", அந்தக் குரல் கம்பீரமாக ஒலித்தது. "என்னது?!?", சட்டென்று ஒலித்த அந்தக் குரலால், சற்று உறுதி குலைந்த குரலில் கணிதன் கேட்டான். "உள்ளே வராதே என்றேன்." .'தமிழா?' கணிதன் மனதுக்குள் மீண்டும் குழப்பம். "இங்கு மொழி ஒரு தடையல்ல". 'அட! நான் மனதிற்குள்தானே நினைத்தேன். டெலிபதியா? அது சரிதான். இவருக்கு இந்த வித்தை கூட தெரியாவிட்டால் எப்படி! கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். கண்டபடி நினைக்க கூடாது!' கணிதனின் மனதுக்குள் சிந்தனை ஓடிக் கொண்டிருந்தது. "இது டெலிபதியல்ல! உன் மனதிற்குள் உள்ளவை அனைத்தும் எனக்குத் தெரியும். ஆனால் நான் நினைப்பது, நான் நினைத்தால் மட்டுமே உனக்கு கேட்கும். கேட்கிறது என்பது கூட உனது மாயைதான். அவற்றை நீ உணர்கிறாய். அவ்வளவுதான்!" கணிதன் மனதைக் கட்டுப்படுத்த கொஞ்சம் கஷ்டப்பட்டான். 'மனதைக் கட்டுப்படுத்த வேண்டும். மனதைக் கட்டுப்படுத்த வேண்டும். கண்டபடி ஓடாதே. சரி! நீங்கள் யார்? அப்பாடா! சரியான கேள்வியை கேட்டு விட்டேன்.' "உன் மனம் கட்டுப்படவில்லை. ரொம்பக் கஷ்டப் படுகிறாய். நான் யாரென்று கேட்டாய். நீ எ

என் நண்பர் ஆத்மாநாம்

கடைசிப் பகுதி எனக்கும் அவருக்கும் இடையே இருந்த பன்னிரெண்டு வருட உறவு வினோத தருணங்களாலும் அவ்வப்போது விபரீத தருணங்களாலும் அடுக்கப்பட்டடிருந்தது. அவையெல்லாம் எனக்கு உரமாகி விட்டிருந்தன. ஆத்மாநாமை அவை உலுக்கிப் போட்டிருந்தன. அவருக்கு ஒரு பெண்ணிடம் அறிமுகமான குறுகிய காலத்திலேயே மெல்லிய நட்பை அரும்ப வைத்திருந்தது. நட்பு உறவாகவும் மலர வித்திட்டுக்கொண்டிருந்தது. ஆனால் திருமணம் என்ற அவசர குறிக்கீடு ஆத்மாநாமையும் மீறி அப்பெண்ணை நோக்கி எய்யப்பட்டதில் அத்தனையும் கலைந்து போனது. அழகிய மலர்வனம்போல் உருவாகிக் கொண்டிருந்த சதுக்கம் ஒரே நாளில் காலிமனையாகி விட்டது. நிஜமாக வாழ்க்கையில் அந்தக் கணம் தன்னந்தனியாக நின்றார் - ஆத்மாநாம். ஒரு நிமிஷம் அவளை அவரால் பார்க்க முடியவில்லை. ஒரு விநாடி அவளின் குரலை தொலைபேசியிலும் கேட்க முடியவில்லை. அவள் அவளுடையகுடும்பத்தாரால் முழுவதுமாக மறைக்கப்பட்டு விட்டாள்..அந்த அத்தியாயம் மர்ம புதிராக முற்றுப் பெறாமலே முற்றுப் பெற்றுவிட்டது. மனச்சிதைவின் முதல் தாக்குதலுக்கு நான்கு மாதங்களுக்கு முன் ஆத்மாநாமும் நானும் மெரீனா கடற்கரையை நோக்கி நடந்துகொண்டிருந்தோம். பக்கிங்காம் கால்வாயின

என் நண்பர் ஆத்மாநாம்

பகுதி 2 அ தற்குமுன் 1983 அக்டோபர் மாதத்தில் தூக்க மாத்திரைகளை அதிகமாக சாப்பிட்டு ஒரு தற்கொலைக்கு முயன்றார். அதில் காப்பாற்றப்பட்டு விட்ட அவர் பத்துநாட்களுக்குப் பின் தியாகராய நகரில் இருந்த என் சகோதரியின் வீட்டுக்கு வந்திருந்தார். இடையில் ஒரு வருஷம் நான் என் சகோதரியின் வீட்டில் தங்கியிருந்தேன். காலை டிபன் சாப்பிட நான்தான் ஆத்மாநாமை வரச் சொல்லியிருந்தேன். அப்போது ஊரில் இருந்து என் அம்மாவும் வந்திருந்தார். "ஆத்மாநாமை சாப்பிட வரச்சொல்லு," என்று என் அம்மாவும் என்னிடம் கூறி இருந்தார். பொதுவாக நெருங்கிய நண்பர்களின் வீடுகளில் சாப்பிடுவதற்கு ஆத்மாநாம் ஆசைப்படுவார் - அன்று காலை என் சகோதரியின் வீட்டில் காலை டிபன் - ரவா தோசை. தோசையை என் அம்மாதான் வார்த்தார். பொன் நிறத்தில் முறுகலாக பரிமாறப்பட்ட ரவாதோசைகளைப் பார்த்து குழந்தையின் குதூகலத்தோடு வியந்து வியந்து பாராட்டி சாப்பிட்டார் ஆத்மாநாம். சாப்பிட்டப்பின் நானும் அவரும் மாமரத்தின் கீழ் உட்கார்ந்து கொண்டோம். அப்போதுதான் ஆத்மாநாம் பத்து நாட்களுக்குமுன் தான் தற்கொலை முயற்சி செய்துகொண்டதைப் பற்றி தணிந்த குரலில் கூறினார். நான் அதிர்ந்து போனேன்

என் நண்பர் ஆத்மாநாம்

பகுதி 1 ஆத்மாநாம் என்ற மதுசூதன் வாழ்க்கையில் முதல் முறையாக நான் சந்தித்தது திருவல்லிக்கேணியின் ஒரு தெரு முனையில். 1972 - ஆம் வருடம் ஏப்ரல் மாதத்தில் ஒரு ஞாயிற்றுக்கிழமை. மாலை நாலரை மணி இருக்கும். நானும் நண்பர் ஷர்மாவும் ஹோட்டல் ஒன்றில் டிபன் சாப்பிட்டுவிட்டு என் அறையை நோக்கி மெதுவாக நடந்துகொண்டிருந்தோம். கடை ஒன்றில் நின்று ஷர்மா சிகரெட் வாங்கிப் பற்ற வைத்துக்கொண்டிருந்தபோது, "ஹலோ ஷர்மா," என்ற குரல் கேட்க திரும்பிப் பார்த்தோம், 20 வயது மதிக்கத்தக்க அழகிய இளைஞனாக ஆத்மாநாம் நின்று கொண்டிருந்தார். நானும், ஆத்மாநாமும் அதற்குமுன் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்கொண்டதில்லை. எங்களுடைய முதல் சந்திப்பு அது. ஷர்மா எங்கள் இருவரையும் அறிமுகம் செய்து வைத்தார். அந்த நேரத்தில் நான் மூன்று சிறுகதைகள் மட்டுமே எழுதியிருந்தேன். ஜெயகாந்தனை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்து கொண்டிருந்த ஞானரதம் இதழில் பிரசுரமாயிருந்த என் ஒரு சிறுகதையை வாசித்திருப்பதாக ஆத்மாநாம் சொன்னார். நண்பர் மகா கணபதியைப் பார்ப்பதற்காக சென்றுகொண்டிருப்பதாகவும், இன்னொருமுறை திருவல்லிக்கேணி வரும்பொழுது என் அறையில் வந்து என்னைச் சந்திப்பத

தனலட்சுமி டாக்கீஸ்

இ டுப்பில் துண்டைக் கட்டிக்கொண்டு குளக்கரை படிக்கட்டில் தன்னுடைய வேட்டியை துவைத்துக்கொண்டிருந்தார் கட்டையன். மொறத்தூர் கிராமத்திலிருக்கும் தனலட்சுமி டாக்கீஸில் டிக்கெட் கொடுப்பவர்தான் கட்டையன். அவரது சொந்தப்பெயரான நாராயணன் அவருக்கே மறந்துபோகும் அளவிற்கு கட்டையனென்றே அழைத்தனர் ஊர்மக்கள். கொஞ்சம் குள்ளம் என்பதால் வந்த காரணப்பெயர்தான் கட்டையன். உருவு கண்டு எள்ளாத ஊர் ஏது? துவைத்தெடுத்த வேட்டியை கடைசி சொட்டு தண்ணீர் வடியும்வரை பிழிந்துவிட்டு தோளில் தொங்கபோட்டுக்கொண்டு வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தார். வீடு செல்லும் வழியில்தான் "தனலட்சுமி டாக்கீஸ்" இருக்கிறது. அதைக்கடப்பதற்கு முன் ஒருநிமிடம் நின்றார் கட்டையன். அவரது வாய் எதையோ முணுமுணுத்தது. கன்னத்தில் போட்டுக்கொண்டு வீடு நோக்கி நடந்தார். கட்டயனுக்கு கோவில் அந்த திரையரங்கம்தான். இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு திரையரங்கம் கட்டப்பட்ட நாளிலிருந்து இன்றுவரை நுழைவுச்சீட்டு கொடுக்கும் பணியில் இருக்கிறார். தினமும் மாலை ஐந்து மணிக்கும், இரவு எட்டு மணிக்கும் என மொத்தம் இருகாட்சிகள் மட்டுமே கொண்ட கிராமத்து திரையரங்கம் என்பதால் மாலை நான

சந்தி

அ ஞ்சலி அண்மையில் இயற்கை எய்திய ஓவியர் ஆதிமூலம், சுஜாதா, ஸ்டெல்லா புரூஸ் ஆகியோருக்கு என் அஞ்சலி. வாழ்க்கையில் இழப்புக்கள் தவிர்க்க இயலாதவை, சில இழப்புக்கள், சிந்தையில் ஆழமாக, வடுவாக, காலம் மட்டுமே ஆற்றக்கூடிய இரணங்களாகக் கூடிக் களித்த நினைவுகளே ஆறுதல் தரக்கூடியதாக அமைந்து விடுகின்றன. பல இரங்கல் பேச்சுகள், இறந்தோர் மாட்சியைவிட பேசுபவரின் பெருமையை இறந்தவர் எப்படிப் பாராட்டினார் என்று பீற்றிக்கொள்வதாக, கேட்பவர், படிப்பவர் கூசும்படியாக இருக்கின்றன. ஆதலால் இங்கு இயற்கை எய்திய அருமை நண்பர்களைப் பற்றி இவர்கள் சிறந்த கனவான்களாக இருந்தார்கள் என்பதைத் தவிர வேறு ஒன்றையும் கூற உத்தேசமில்லை. நீங்களும் அவர்களைப் போலவே என் உணர்வுகளைப் புரிந்துகொள்வீர்கள். ************************* தாய் நாடு, திரு நாடு, எந்தையும் தாயும் குலவி மகிழ்ந்த நாடு, இந் நாடு. விடுதலை பெற்று 60 ஆண்டுகளுக்குமேல் ஓடிவிட்டன. குடிமக்கள் இன்னும் வறுமையிலிருந்து, நோயிலிருந்து, அறியாமையிலிருந்து, அச்சத்திலிருந்து முழுமையாக விடுதலை பெறவில்லை. நெஞ்சை நிமிர்த்தி பெருமையுறவும் ஏற்றங்களும் கண்டோம், முதல் பெருமை முற்றிலும் கர்வம் கொள்ள இன்

புட்டா சுந்தரசாமியின் சென்னை விஜயம்

பெங்களூரிலிருந்து வந்திறங்கினார் புட்டா சுந்தரசாமி எங்களூருக்கு. ஹஸ்தினாபுரம் கிளையை ஒரு கலக்கு கலக்க ஏபிஎம் ஆக. பாதி கன்னடம், பாதி தமிழ் எல்லோரும் அரைகுறை ஆங்கிலத்தில் அவருடன் உரையாடுவோம் ஏறக்குறைய என் வயது அவரைப் போல தோற்றத்தில் முன் வழுக்கையோடு உயரம் சற்று கூடுதலாக இன்னொருவர் இருக்கிறார் எங்கள் அலுவலகத்தில் வியாதிகளிலே எங்கள் இருவருக்கும் பொதுத் தன்மை உண்டு குடும்பத்தினரை விட்டு விட்டு தனிமை வாசம் அதுவே தனி விசாரம் தற்போது இருக்குமிடம் பெரும் குழப்பம் மாதம் ஒன்று ஆகப் போகிறது தங்கும் இடம் தேடி தேடி தளர்ந்து போகிறார் புட்டா சுந்தரசாமி தினம் தினம் எங்களில் ஒருவரோடு வீடு தேடும் படலம் பார்க்கும் வீடெல்லாம் ஏனோ கோணலாய்த் தெரிகிறது வசதியாய் பங்களுரில் இருந்தவருக்கு வாழுமிடமெல்லாம் நரகமாய்த் தெரிகிறது நீண்ட கூடம்போன்ற அறை இருந்தால் வாடகை மலைக்க வைக்கிறது கொஞ்சம் மிச்சம் பிடித்து வீட்டிற்கும் பணம் அனுப்ப வேண்டுமென்று நினைக்கிறார் பாவம் புட்டா சுந்தரசாமி அலுவலகத்திற்கு எதிரே ஒரு இடம் இருந்தது. போய்ப் பார்த்தார் இடமும் பிடித்திருந்ததுஆனால் இன்னொருவருடன் பகிர்ந்துகொள்ள வேண்டுமாம் பாத்ரூமையும்,

ஆதிமூலம், சுஜாதா, ஸ்டெல்லா புரூஸ்......

க டந்த சில மாதங்களாகத் தொடர்ந்து நிகழ்ந்த மூவரின் மறைவு என்னைப் பெரிதும் நினைக்கும்படி தூண்டிக் கொண்டிருந்தது. ஒருவரின் மறைவு, ஒருவரைப் பற்றிய என் மனதில் தோன்றிய வரைபடமாக என்னை அடிக்கடி நினைக்கத் தூண்டி, ஒருவிதத்தில் என்னைச் சங்கடப்படுத்தியது. கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்குமுன், நவீன விருட்சம் தொடக்கக் காலத்தில், ஆதிமூலம், மருது போன்ற ஓவியர்களைச் சந்தித்திருக்கிறேன்.பழகுவதற்கு அற்புதமானவர்கள். ஆதிமூலமும், மருதுவும் தேனாம்பேட்டையில் அரசாங்க அலுவலகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த சமயத்தில் பார்த்திருக்கிறேன். ஆதிமூலம் பழகுவதற்கு எளிமையான மனிதராகவும், கம்பீரமான மனிதராகவும் எனக்குத் தோற்றம் தருவார். எனக்கு அவரிடம் அளவுகடந்த மரியாதை உண்டு. சத்தமாகவே பேச மாட்டார். விருட்சம் முதல் இரண்டு இதழ்கள் வெளிவந்தபோது, எனக்கு அவரிடமிருந்து விருட்சம் எழுத்தை கையால் எழுதி வாங்க வேண்டுமென்ற எண்ணம் உருவானது. அந்தச் சமயத்தில் நடந்த ஒரு ஓவியக் கூட்டத்தில் ஞானக்கூத்தனுடன் நான் சென்றிருந்தேன். அக் கூட்டத்தில்தான் ஆதிமூலத்தைப் பார்த்து விருட்சம் என்ற பெயரை எழுதித் தரும்படி

நமக்கிருப்பது

நமக்குத் தெரியும் ஒரு பொம்மலாட்டத்தில் நாம் மன்னர்களென்று. நமக்குத் தெரியும் உண்மையில் நாம் சம்பள அடிமைகளென்று நமக்குத் தெரியும் மன்னர்கள், குறுநில மன்னர்கள் பெருநில மன்னர்கள், மாமன்னர்கள் பெரு மாமன்னர்களின் பிரஜைகள் நாமென்று. நமக்குத் தெரியும் மாமன்னராகும் கனவு பலருக்குமிருக்கிறதென்று நமக்குத் தெரியும் அரசன் வசமும் அவன் எதிரிகள் வசமும் ஆளும் அம்பும் உண்டென்று. நமக்குத் தெரியும் பசுக்களை, இளங்கன்றுகளை காளைகளை, பறவைகளை, மரங்களை சாய்த்தது யாரென்று. நமக்குத் தெரியும் கண்ணால் கண்டதும் காதால் கேட்டதும் தீர விசாரித்ததும் மெய்யென்று. நமக்குத் தெரியும் நமதடுத்த கணம் கத்தியின் கூராய் அரிவாளின் மின்னலாய் துப்பாக்கியின் உறுமலாய் வருமென்று. நமக்குத் தெரியும் நாம் கண்களை, காதுகளை வாயை பொத்திக்கொண்டிருக்க வேண்டுமென்று. நமக்குத் தெரியும் நமக்கிருப்பது ஒரே உயிர் அதை எளிதில் விடக்கூடாதென்று. தமிழில் அங்கத உணர்வுடன் கவிதை எழுதுவது எளிதான விஷயம் அல்ல. இதில் கை தேர்ந்தவர் ஞானக்கூத்தன். அவருடைய கவிதைகளில் sense of humour தொடர்ந்து வந்து கொண்டிருக்கும். எந்தக் கவிதையைப் படித்தாலும், படிப்பவரை சிரி

என் ஏகாந்த வனம்

எப்போதும் ஏகாந்தம் என்றிருந்த வனதேவதை நான் என் அடர்ந்த வனங்களில் படர்ந்த முதல் சூரியக் கிரணம் நீ ஏனோ இப்போது என் காட்டில் குயில்கள் எல்லாம் கூவித் திரிகின்றன உன் பெயரை.... உன் வருகைக்குக் காத்திருக்கும் என் வாசனைப் பூக்கள்.... நீ கால் நனைக்க கன்னம் சிவக்கும் என் காட்டு நீரோடை..... எப்போதும் ஏகாந்தம் என்றிருந்த வனதேவதை நான் ஏனோ இப்போது என் வசமில்லை என் வனம் ஏன் நுழைந்தாய் உன் புல்லாங்குழலுடன் என் ஏகாந்த வனத்தில்......?

என் அம்மா

அவளுக்கு நன்றகவே தெரியும் மகாபாரதமும் இராமயணமும்- தினமும் எங்களுக்கு ஏதாவது ஒரு கதை சொல்லுவாள் அவற்றிலிருந்து தினமும் ஒரு புதிய கதை உண்டு - அவற்றில் ஆயிரக்கணக்கில் கதைகள் உண்டல்லவா? எப்போதும் அவளுக்கு அவைதான்.. படித்துக்கொண்டிருப்பாள்- பிரார்த்தனையின்போதும் அவைதான் சில பகுதிகள் சில காண்டங்களிலிருந்து நிதமும் ஒரு மண்டலம் ஒரு குறிப்பிட்ட பலனைத்தருமென்று. நாங்களெல்லாம் பிரசாதத்திற்கெனவே காத்திருப்போம் அதுவுமல்லவா என்ன எப்படிச் செய்ய என்று சொல்லப்பட்டுள்ளது.... சீதை மற்றும் இலவகுசர்களின் கட்டங்கள் அவளுக்குத் தெரிந்திருந்தும் அவற்றைச் சொல்லும் போது கண்ணில் நீர் வந்தபோதும்- இராமனின் மேல். சீதையின் மேல் சந்தேகித்து அக்னிப்பிரவேசம் செய்யவைத்த இராமனின் மேல் அவளுக்கு கோபம் வந்ததாக எங்களுக்குத் தெரிந்ததில்லை- அந்த வயதில் நாங்கள் கேட்டதுமில்லை அது அவளுக்கும் பிடித்திருக்குமாவென்றும் எங்களுக்குத் தெரியாது.. எங்களுக்குத் தெரிந்ததெல்லாம் அது பற்றிப் பெரியதாக விவாதித்தவர்களை அவளுக்குப் பிடித்ததில்லை என்பதே- அது. ஒரு மாதிரியான, பிணம்தின்னிக்கொள்ளிகளைப் பற்றி நினைக்கையில் வருமே அது போன்றவொரு அருவருப்பு.

புரிவதில்லை கவிதை

உன்னுடைய இந்தக் கவிதைக்கு என்ன அர்த்தம் ஒன்றும் புரியவில்லை ஆச்பிரின் கடித்துப் பாதியாகக் கிடக்கும் ஒரு ஆப்பிள் துண்டு காபியோ அல்லது டீயோ ஏதோ ஒன்றின் ஒரு காய்ந்துபோன கோப்பை- ஒரு இளம் பெண் அரைகுறை ஆடையில் ஒரு மூலையில் சிவலிங்கம் சாய்ந்து கிடக்கிறது- நாற்காலி மீது ஜென் புத்தகம் பாதி திறந்த நிலையில் - தண்ணீர் கொட்டி அது கோடிட்டாற் போல இதுபோன்ற சில வார்த்தைகள் வேறொன்றும் இல்லை - கேட்டால் - புரியாது உனக்கு என்கிறாய் அது சரி இது ஒரு ஓவியமல்லவா எனக்கு கவிதைப் புரிவதில்லை தான் நவீன விருட்சம் 79-80வது இதழில் வெளிவந்த எ தியாகராஜன் கவிதைகளை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன். பொதுவாக கவிதைகள் எளிதாகப் புரியவேண்டும். ஆனால் பாமரர்களுக்கு எப்படியாக இருந்தாலும் கவிதைப் புரியாது. ஆனால் கவிதைப் படிக்கவேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்களுக்கு கவிதை புரியும்படியாக எழுதப்பட்டிருக்க வேண்டும். கவிஞர் எதையாவது எழுதி வாசகர்கள் எதையாவது புரிந்துகொள்ளவது சரியாக இருக்குமா என்பது எனக்குத் தெரியாது. பாரதியாரே எளிதாகத்தான் கவிதைகளை எல்லோரும் தெரிந்துகொள்ள வேண்டும் என்று எழுதியிருக்கிறார். க.நா.சு ஒருபடி மேல் போய்விட்ட

ஒரு வேண்டுகோள்

சமீபத்தில் 79-80-வது இதழ் கொண்டு வந்துள்ளேன். நவீன விருட்சம் என்ற இதழ் ஜூலை மாதம் 1988 ஆம் ஆண்டு கொண்டு வரும்போது, கவிதைக்கான இதழாக மாறிவிடுமா என்ற கேள்விக்குறி தொக்கி நின்றது. இன்றும் அதிகமாக கவிதைகளைப் பிரசுரம் செய்யும் இதழாக நவீன விருட்சம் திகழ்கிறது. வாசகர்கள் வட்டமும் சரி, இதழுக்காக ஆகும் செலவும் அதிகமில்லைதான். முதல் இதழ் தயாரிக்கும்போது எனக்கு ரூ.500 வரை செலவு ஆனாது. 16 பக்கம். (தபால் செலவு சேர்க்கவில்லை) இப்போது ஒரு இதழ் (100 பக்கம்) தயாரிக்க ரூ10000 மேல் ஆகிறது (தபால் செலவும் சேர்த்து). இந்த இதழ் 79/80 இதழ்களின் தொகுப்பு. காலாண்டு இதழாகவே இதைக் கொண்டுவர வேண்டும் என்ற என் எண்ணம் இன்னும் பசுமையாக இருக்கிறது. இதழ் தயாரிக்க எனக்கு 6 மாத கால அவகாசம் ஆகிவிடுகிறது. ஆனால் இரண்டு நாட்களில் அச்சாகி விடுகிறது. பின் அதை அனுப்ப 3 வாரம் ஓடிவிடுகிறது. இப்போதுதான் எல்லோருடைய முகவரிகளையும் தயார் செய்து கொண்டு வருகிறேன். சந்தா கட்டுங்கள் என்று முன்பு கேட்டு கடிதம் எழுதுவேன். இப்போது ஏனோ முடிவதில்லை? இந்த ஏனோ ஏன் என்பதும் புரியவில்லை. தற்போது கம்புயூட்டரில் அடித்து அதை பிரிண்ட் எடுத்து எல்லோரு

துங்கபத்திரை

எனக்கு நினைவு மங்கிக்கொண்டு வருகிறது என்று சொன்னால் சட்டென்று நம்ப மறுக்கிறார்கள். நுண்ணிய தகவல்கள் நினைவுக்கு வராது. ஆனால் அனுபவம் நிலைத்திருக்கிறது. பாவண்ணனின் ஆரம்பக் கதை 'கணையாழி' யில் வெளியானது. இரு எழுத்துக்களில் தலைப்பு என்ற ஞாபகம். 'இந்த இளைஞன் எவ்வளவு நன்றாக எழுதியிருக்கிறான்! தொடர்ந்து எழுதிப் புகழ் பெற வேண்டும்!' என்று நினைத்துக் கொண்டேன். வெகு நேர்த்தியான கையெழுத்து. நல்ல கதையொன்று தபாலில் வந்தால் அது எழுதப்பட்ட விதத்திலிருந்து அந்தக் கையெழுத்துக்குரியவர் எப்படி இருப்பார் என்று சில நிமிடங்கள் யோசிப்பேன். நான் அன்று நினைத்தது பொய்த்துப் போகவில்லை. சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு ஐந்து அமெரிக்க எழுத்தாளர்களுடன் கலந்து ஒரு படைப்புக்களம் புது டில்லியில் நடந்தது. அதற்குப் பாவண்ணன் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். தமிழ்ப் பிரிவு நடந்தது போல எந்த மொழிப் பிரிவும் நடக்கவில்லை. அவற்றில் இருந்த மூத்த எழுத்தாளார்கள் அவர்களைப் பற்றியே பேசிக்கொண்டு மூன்று நாளையும் முடித்தார்கள் என்று கூறினார்கள். ஒரு பயிற்சியாக ஒரு பத்திரிகைச் செய்தியை அடிப்படையாகக் கொண்டு இரு பக்கங்களில் ஒரு