Skip to main content

Posts

Showing posts from September, 2012
அசோகமித்திரனின் கூட்டம் அழகியசிங்கர் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மிக மோசமான மாதம்.  3ஆம் தேதி, என் திருமண நாள்.  ஆனால் அதை மகிழ்ச்சியாக நினைத்துக்கொள்ள முடியவில்லை.  கிட்டத்தட்ட 32 ஆண்டுகள் முடிந்துவிட்டன திருமணம் ஆகி.  ஒவ்வொரு ஆண்டும் என் மாமியார் சுப்புலட்சுமி அவர்கள் வாழ்த்தாமல் இருக்கமாட்டார்.  இந்த முறை அவர் நினைவு தப்பிப்போய் மருத்துவமனையில் மோசமான நிலையில் கிடந்தார்.  5ஆம்தேதி அவர் இறந்து விட்டார். எதிர்பாராதவிதமாய் சோடியம் குறைந்துவிட்டதால், நினைவு தப்பிப் போய்விட்டது.  சில தினங்களாக சரியாக நடக்க முடியாமல் கால் நரம்பை எதோ பிடித்து இழுக்க, நாற்காலியைப் பிடித்துக்கொண்டு தள்ளி தள்ளி நகர்ந்தார்.  ஒவ்வொரு முறை குளிக்கும்போதும், பாத்ரூம் போகும்போதும் தடுமாறினார். ஆனால் கீழே விழாமல் ஜாக்கிரதையாக இருந்தார்.  தினமும் அவர் உடல்நிலை மோசமாகிக் கொண்டே வந்தது.  ஒருநாள் அவர் சாப்பிட்டதை எல்லாம் வாந்தி எடுத்தார்.  ஒருநாள் இரவு நினைவுத் தப்பிப்போய் திவான் படுக்கையிலிருந்து கீழே விழுந்து முகம் நன்றாக வீங்கிவிட்டது. ரத்தம் கொட்டோ கொட்டென்று கொட்டியது.  ஆனால் அவர் நினைவுத் தப்பிப் ப
அரேபிய ராசாக்கள்  துணையிழந்த  நோய்மையுடனான முதியவனின்  பார்வையாய் வ்டிந்து சொட்டுகிறது தனிமை, ஒருபொழுதும்  உங்களது மழையுடன்  ஒப்புக்கு வராதீர்கள்  மணற்காட்டில் நிச்சயக்கப்பட்ட வெயில்  எங்கள் பெருவானம்.   ஆறுமுகம் முருகேசன்
உறக்கத்தின் மீது. நெடுஞ்சாலையோரத்தில் ஆழ்ந்து உறங்கிக்கொண்டிருக்கிறார்கள் நடை பாதைவாசிகள். அவ்வுறக்கத்தின் மீது ஓடிக்கொண்டிருக்கின்றன எண்ணற்ற வாகனங்கள்.  ஒரு வினாடி வெறுப்புத்தோன்றி மறைகிறது. விழித்தபடிவாகனம் ஓட்டுபவர்களுக்கு உறங்கும்நடை பாதைவாசிகளின் உறக்கத்தின் மீது . ரவிஉதயன்
எதையாவது சொல்லட்டுமா....76 அழகியசிங்கர்   பொதுவாக எனக்குக் கூட்டத்தைக் கண்டால் எதுவென்று சொல்ல முடியாத நிலை ஏற்பட்டுவிடும்.  அதேபோல் மணிக்கணக்கில் வரிசையில் நிற்பது.  நெரிசலில் மாட்டிக்கொள்வது.  சின்ன வயதில் நான் பல மணி நேரங்கள் சினிமா பார்ப்பதற்கு வரிசையில் நின்றிருக்கிறேன்.  ரொம்ப குறைவான பணத்தில் நான் கூட்ட நெரிசலில் சினிமா பார்ப்பதற்காக நின்று அவதிப் பட்டிருக்கிறேன்.   திருச்சியில் பத்மாவதி என்ற தியேட்டரில் 'நாடோடி மன்னன்' என்ற எம்.ஜி.ஆர் படத்திற்கு நின்று தவித்திருக்கிறேன்.  அதேபோல் சென்னை பிரபாவதி தியேட்டரில் 'இரு மலர்கள்' என்ற சிவாஜி படத்திற்கு தீபாவளி அன்று பல மணி நேரங்கள் நின்று டிக்கட் வாங்கிக்கொண்டு சினிமா பார்த்திருக்கிறேன்.  கிருஷ்ணவேணி தியேட்டரில் நான் வரிசையில் நின்றிருக்கும்போது, திடீரென்று கூட்டம் அலைமோதும்.  பின் நின்று கொண்டிருக்கும் எங்கள் தலைகள் மீது கால் வைக்காத குறையாக சிலர் முன்னால் போய்க் கொண்டிருப்பார்கள்.  அவர்களை ஒன்றும் செய்ய முடியாது. ஒரு காலகட்டத்தில் எனக்குக் கூட்டமே பிடிக்காமல் போய் விட்டது.  எங்கு கூட்டத்தைக் கண்டா
விழிப்பறவை சன்னலை திறந்து உன் பார்வை இரையெடுக்க இறங்குகிற பறவை போல் என்னுள்இறங்குகிறது. பதுங்கி ஓடாது தன்னை ஒப்புக்கொடுக்கும் இரையை கொத்தித்தின்னாது கீறிப்பறக்கிறது உன் விழிப்பறவை. ரவிஉதயன்
புகழ் இப்படிச் சொல்கிறேனேயென்று என்மீது வருத்தப்படாதீர்கள் . வேறெப்படிச் சொல்வதென்று எனக்குத் தெரியாதபோது. நகரத்தில் பாருங்கள் நாளுமொரு தனிவீட்டை இடிக்கிறார்கள் குடியிருப்புகள் கட்டுகிறார்கள் அதுபோல்தானிதுவும். தாத்தா கட்டினாரென்பதால் வௌவால்கள் நிறைந்த வீட்டில் வசிக்கமுடியுமா, சொல்லுங்கள். இடித்துப் புதிதாய் கட்டுவதுபோல்த்தானிதுவும். பெருமையேதுமில்லாத பேய்வீடிது நள்ளிரவுக் கள்வர்கள் ராவணத்துறவிகள் கபாலிகர்களின் விடுதியான வீடிது நகரின் நடுவில் நிற்கிறது பெருங்கேடிது இதற்குப் பதிலாய் புதிதாய் அனைவரும் பயன்பெறுவதாய் சுயமாய் நாமொன்று கட்டலாமென்கிறேன் உங்களுக்குச் சம்மதமானால் என்க்குக் கைகொடுங்கள் இந்த பேய்வீட்டை இடியுங்கள் தரைமட்டமாக்குங்கள். உங்கள் புகழை ஒரு கவிதையாயெழுத எனக்கொரு வாய்ப்புக் கொடுங்கள். லாவண்யா கிளி எரிமலை மனது ஏரியாகிக் குளிர்ந்திருந்த்து சுடுசொல் உதடு சுமுகமாகப் பேசக்கற்றது மயிரைக்கட்டி மலையைப் பெயர்க்கும் சூதாடி மாயமானான் அமைதி புதிதாயிருந்த்து ஆர்ம்ஸ்ட்ராங்கின் நிலாவைப
வயதான பெண்மணி அழகியசிங்கர் அந்த வயதான பெண்மணி இறந்து போய்விடுவாள் என்று எல்லோரும் எதிர்பார்த்தார்கள் நான் அப்படி இருக்க முடியாது என்று யோசித்தேன் எல்லாவித சக்திகளையும் இழந்து படுத்துக் கிடக்கிறாள்.. சிலநாட்கள் கண்களை பாதி மூடி நினைவுத் தப்பிப் போய்.. உடலுக்குத் தேவையான சோடியம் குறைந்து விட்டதாம்.. பழையபடி ஆகலாம்....சொல்லமுடியாது என்கிறார்கள் மருத்துவர்கள்... தீவிர சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்து படுத்துக் கிடக்கிறாள் வயதான பெண்மணி... மனம் கிடந்து அடித்துக்கொள்கிறது அப்படி இருக்கக் கூடாது திரும்பவும் அந்த வயதான பெண்மணி எழுந்து வரவேண்டும் 03.09.2012