அழகியசிங்கர் இன்று புதுமைப்பித்தனின் நினைவு நாள். எதாவது ஒரு கதையைப் படித்துவிட்டு எதாவது எழுத முயற்சி செய்ய வேண்டுமென்று தோன்றியது. பக்கம் குறைவாக உள்ள கதையாக எடுத்துக்கொள்ளலாமென்று பட்டது. புதுமைப்பித்தன் 97 கதைகள் எழுதி உள்ளார். ஜøன் 30ல் மரணம் அடைந்தார். 1948ஆம் ஆண்டு. இங்கு எடுத்துக் கொண்டிருக்கும் கதையின் பெயர் 'ஒரு கொலை அனுபவம்.' ஊழியன் என்ற பத்திரிகையில் 22.02.1935ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது. சாதாரண ஒன்றரைப் பக்கம் கொண்ட கதையில் புதுமைப் பித்தன் நகைச்சுவை உணர்வுடன் இந்தக் கதையை எடுத்துக்கொண்டு போகிறார். கதைசொல் லி சொல்வதுபோல் இந்தக் கதை ஆரம்பமாகிறது. இது ஒரு தானே சொல்கிற கதை. இருட்டிலே ஒரு மனிதன் தள்ளாடிக் கொண்டு வருகிறான். ரோட்டில் ஒற்றை விளக்கு வெளிச்சம் மட்டும்தான் இருக்கிறது. வருகிற மனிதன் விளக்கு இருக்கும் இரும்பு கம்பத்தில் ஏறி குறுக்கில் அமர்ந்து கொண்டு விடுகிறான். உட்கார்ந்து கொண்டு 'ராஜாதி ராஜன்' என்று பாடுகிறான். இப்போதுதான் அவன் முகத்தைக் கவனிக்கிறான் கதைசொல் லி. 'நான் தான அவன் இதென்ன வேடிக்கை' என்கிறார் கத