Skip to main content

Posts

Showing posts from August, 2011

எதையாவது சொல்லட்டுமா..........55

கடந்த ஒரு மாதமாக நாங்கள் சனி, ஞாயிறு தினங்களில் மட்டும் சுற்றிக்கொண்டிருப்போம்.  நயக்கரா பயணத்தின்போதுதான் அரவிந்த் 4 நாட்கள் எங்களை அழைத்துச் சென்றான்.  ப்ளோரிடா வந்திறங்கியபோது களைப்பு அசாதாரணமாகவே இருந்தது.  மலைப்பாகவும் இருந்தது.  நடக்கும்போது நான் பின் தங்கி நடப்பேன்.  அரவிந்தனுக்கு அதுவே படபடப்பாக இருக்கும்.  ''அப்பா, இவ்வளவு மெதுவாக நடப்பார் என்று நான் எதிர்பார்க்கவில்லை,'' என்பான் என் மனைவியிடம்.  திருமணமானபோதில் நான் மனைவியை விட வேகமாக நடப்பேன்.  கிண்டல் செய்வேன்.  ஆனால் இப்போதோ வேறு மாதிரி ஆகிவிட்டது.  பெரும்பாலும் இங்கே கார் எடுத்துக்கொண்டுதான் எல்லா இடங்களுக்கும் செல்ல வேண்டும்.  ஒரு பால், ஒரு தயிர் வாஙகக் கூட கார்தான்.  அமெரிக்காவில் சினிமா தியேட்டர்கள் எப்படி இருக்கிறது என்பதை அறிய ஆசை.  2 சினிமாக்களைப் பார்த்தேன். இரவு 10 மணிக்குமேல்தான் சினிமாவே போக முடிந்தது. சினிமார்க் என்ற இடம்.  அந்த ஒரு இடத்திலேயே 24 தியேட்டர்களில் சினிமாக்கள் ஓடிக் கொண்டிருந்தன. ஒரு டிக்கட்டை வாங்கிக்கொண்டு எந்த சினிமாவையும் பார்க்கலாம்.  புதிதாக வந்த ஒரு ஆங்கிலப் படத்தைப் பார்த்

நாளை.

    நாளைக்கு ஒரு நாடகம் நடிக்க வேண்டியிருக்கிறது நாடக ஸ்க்ரிப்ட் கைக்கு வரவில்லை நாள்முழுவதும் ஒத்திகை செய்ய வழியில்லை கதாபாத்திரம் அதே தான் என்றாலும் இன்றுபோட்டது நாளைக்கு இறந்ததாகிவிடும் புத்தம்புது நாடகம்தான் நித்தம்! க்ரீன் ரூமைவிட்டு வெளியே வந்து விளக்குபோட்டதும் வெளிச்சத்தில்தான் வசனம்பேசவேண்டும் இன்றையநாடகத்திற்கான ஒத்திகையை நேற்றைக்குப்பார்க்கவில்லை இன்றுதான் நேற்றின் நாளையாகி இருந்ததே. கைநழுவும் பாதர்சமில்லைதான் நாளை ஆனாலும் கைபிடிக்க இயலா காற்று நாளை பிறந்ததும்  மேடை ஏறியதும் தானாய் வருகின்றன வசனங்கள் நாளையின் தலை எழுத்ததினை அசலைப்பத்திரப்படுத்திக்கொண்டு நகலையாவது இறைநாயகன் நம்கைக்கு அனுப்பி வைத்தால் சரிபார்த்து நடிக்கலாம் அதற்கு வழி இல்லாததால் நாளை கதி என்ன என்று தெரியாமலே மேடை ஏறி நடிக்கத் தயாராகிக்கொண்டுதான் இருக்கிறோம்!

கல்லில் உள்ள மீன்

    கல்லில் உள்ள மீன் கடலுக்குத் திரும்ப விழைகிறது ஆய்வு, சிறிய ஊகிக்க முடிகிற உண்மைகள் குறித்து அது அலுப்புற்றிருக்கிறது வெண்ணொளியால் அழுத்தம் பெற்ற பக்கவாட்டுத் தோற்றத்தோடு பகிரங்கமாகக் காத்திருப்பது குறித்து அது அலுப்புற்றிருக்கிறது. கடலில் மௌனம் மீண்டும் மீண்டும் அலைகிறது அவ்வளவு - தேவையற்றதுமே! தன் எலும்புக் கூட்டு மலர்ச்சியை பதிக்கும் கணம் வரும் வரை அது மிதக்கிறது - பொறுமையாக. கல்லில் உள்ள மீனிற்குத் தெரியும் வீழ்வது என்பது வாழ்பவருக்குச் செய்யும் உபகாரமென. அதற்குத் தெரியும் - ஏன் ஒரு எறும்பு ஒரு கடத்தல்காரனின்  எரியூட்டு போல பகட்டாகவும், துல்லியமான அம்பரிலும் தன்னுடயதைக் கட்டமைத்துக் கொள்கிறதென. அதற்குத் தெரியும் - ஏன் ஒரு விஞ்ஞானி பெரணியின் இச்சையூட்டும் ப்ரைலியை இரகசிய உவப்பில் வருடுகிறார் என. குறிப்பு: புதைபடிவம் (fossil) குறித்த இந்த  ஆங்கிலக்கவிதையின் தலைப்பு The Fish in the Stone .  எழுதியவர், ஆப்ரிக்க-அமெரிக்க எழுத்தாளரான Rita Dove.                               - மிருணா.

நிலவும் குட்டி முதலைகளும்

  சலனமற்ற இரவில் சல்லாபமாய் மிதந்து கொண்டிருந்தது பிறைநிலா அந்தப் பெரிய குளத்தில் ... குத்து வாள் போலிருந்த அதன் கூர்பகுதிகளிரண்டிலும் குட்டி முதலைகள் தனது முதுகைச் சொறிந்து கொண்டன .  

இன்னும் அவளுக்குத் தெரியாது

  நீ கனவில் வந்து  காலடி வைக்கும்  நேரங்களிலெல்லாம்  அதிகாலை வந்து  என் கதவைத் தட்டி  எழுப்பிவிடுகிறது... உன்னைப் பார்க்கும்  தருணங்களில்  காமம் பீறிட்டு ஊற்றெடுக்கும்  ஆனால்  உத்தமனாகக் காட்டிக்கொள்கிறேன் என்னை... நீ அருகில் இருக்கையில்  கரம் பிடிக்கவிடாமல்  கட்டுப்படுத்திவிடுகிறது  உன் பார்வை  பார்வையைத் தின்று தொலைத்துவிட்டேன்  என்ன செய்ய... விக்கல் நிற்க முத்தம் கொடு  சந்தர்ப்ப வசத்தால்  உயிர் பரிகசிக்கும்  விரலின்  மெல் உரசலுக்காக  காத்துக்கிடக்கிறேன்... உன் கீழ் வானம் இறங்குமா? இத்தனையும்  நான் உன்னை  காதலிக்க தொடங்கிய நாள் முதல்  தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது...                                          

இருத்தலியல்

  ஹைடென்ஷன் ஒயர்களில் கூடு கட்டும் வீரமிகு குருவிகள் கைதட்டலுக்குப்பயந்து வீசிப்பறக்கின்றன கட்டிட உச்சிகளின் சிற்பப் பிதுக்கங்களிலும், மதில் மேல் நடந்து கொண்டும் சிந்தனை செய்யும் பூனைகள் சிறு துளி நீருக்குப்பயப்படுகின்றன. சூரியனின் எலும்புகளை தன் குலைத்தல்களாலேயே பிறாண்டி எடுக்கும் நாய்கள் கல்லெறிக்குப்பயந்து ஓடி ஒளிகின்றன. காட்டையும் துவம்சம் செய்யும் மாமத ஆனைகள் முழ நீள அங்குசத்திற்கு அடங்கி நிற்கின்றன அங்கு கில்லட்டின்களை சாணை பிடிப்பவர்கள் புறா இறகு வைத்து காது குடைந்து கொண்டிருக்கின்றனர் மானுடத்தைப் புரட்டிப்போடும் இலக்கியம் ஒரு துளி பேனா மையைக் கண்டு விக்கித்து நிற்கிறது.

என்ன சொல்ல?

இனிமேல் பார்க்கவே கூடாதென்று  நினைத்திருந்த இடுங்கிச் சிரிக்கும் அந்த கண்களை இனம் மொழி தேசம் கடந்து இன்னொரு இடத்தில் காணச் செய்யு ம் இந்த இயற்கையை என்ன சொல்ல? o

குற்றமுள்ள குக்கீகள் (cookies)

உனது செல்பேசியைக் கொந்த முயன்றதில் எனது சில நழுவிய அழைப்புகளும் கூந்தல் பராமரிப்பிற்கான குறுஞ்செய்திகளும் மட்டுமே கிடைத்தன உனது மின்னஞ்சலை புகுந்து படித்ததில் சில எரிதமும், எண்ணவே இயலாத அளவு பணப்பரிசு அஞ்சல்களும் மட்டுமே கிடைத்தன உனது இணைய அரட்டைகளை இடைமறித்து வாசித்துப்பார்த்ததில் கட்டுப்பட்டித்தன யுவதியின் சொல்லாடல்கள் மட்டுமே கிடைத்தன உனது சமூக வலைத்தளங்களின் பகிர்வுகளில் எந்த சுவாரசியமுமற்ற பொதுவான விஷயங்கள் மட்டுமே கிடைத்தன எனக்குள் அழிக்க இயலாத குற்றமுள்ள குக்கீகளாய் (cookies) இவையனைத்தும் மண்டிக்கிடக்கின்றன எப்போதும்.

எதையாவது சொல்லட்டுமா..........54

கடந்த 7 ஆண்டுகளாக நான் சென்னையிலிருந்து மயிலாடுதுறைக்குப் போயும் வந்தும் கொண்டிருக்கிறேன். பெரும்பாலும் பஸ் பயணத்தைத் தவிர்க்க முடியவில்லை.  இங்கே உள்ள Semi Deluxe பஸ் மூலம் சென்னையிலிருந்து இரவு 11 மணிக்குக் கிளம்பினால், காலையில் போய்ச் சேர்ந்துவிடலாம்.  ஆனால் பஸ் பயணம் இரவு முழுவதும் அளவுகடந்த வேதனையாக இருக்கும்.  பெரும்பாலும், யூரின் போகிற பிரச்சினையை எப்படி சமாளிப்பது என்பது தெரியாது.  ஆண்களுக்கே இப்படி என்றால், பெண்கள் நிலையை நினைத்துப் பாருங்கள். அரவிந்த் நியுயார்க்கிலிருந்து நயக்கரா நீர்வீழ்ச்சிக்கு இப்படித்தான் ஒரு பஸ் ஏற்பாடு செய்திருந்தான்.  எனக்கு சென்னை ஞாபகம் வந்தது.  என்னுடைய அதிருப்தியை அவனிடம் தெரிவித்துக்கொண்டேன்.  இரவு 10.30 மணிக்குப் பயணம்.  முன்னதாகவே வந்திருந்து பஸ் செல்லும் இடத்திற்கு வந்து சேர்ந்தோம். ஒரே கூட்டம்.  எல்லோரும் வரிசையில் நின்றிருந்தார்கள்.  கனடா நாட்டிற்குச் செல்பவர்கள் எல்லோரும் நின்றிருந்தார்கள்.  வரிசை வரிசையாக பஸ்கள் கிளம்பிக்கொண்டிருந்தன. நாங்கள் ஏற வேண்டிய பஸ்ஸில் ஏறிக்கொண்டேன்.  பொதுவாக எல்லாப் பஸ்களும் குளிர்சாதனப் பெட்டி பொருத்தப்பட்டிரு

மாலை மயக்கம்

    மூன்றாவது மாடி. படிக்கட்டுகளில் ஏறி வரும் நடை சப்தம். தட தட என அவனைத்தவிர வேறு யார் அப்படி வருவார்கள்? அவனாகத்தான் இருக்கவேண்டும். நிச்சயம்.   இன்றாவது கறாராகச் சொல்லிவிட வேண்டியது தான்.  இது சரிப்படாது இனிமேலும். எவ்வளவு கஷ்டம் இந்த வெய்டிங் என்பதை நீ எப்போதுதான் புரிந்து கொள்வாயோ, இப்படி வருவதாக இருந்தால் ஆபீசிலேயே இருந்துவிடு.. உனக்கு எதுக்கு வீடு மத்த கண்றாவியெல்லாம் -   ஒரு க்விக் குளியல், ஒரே கப்பிலிருந்து இருவரும் அவனுக்குப் பிடித்த டிகிரி டிகாக்ஷன் காபி, சில சமயம் அவன் வாங்கி வரும் அவளது பேவரிட் ராமச்றாய் மிக்ஸ் பஜ்ஜியும் உடன் சேரும். இன்டெலில் இருக்கும் இந்தியா வர மறுக்கும் ஒரேமகன் பற்றி தினம் தொடரும் ஒரே புராணம்.. அவனுக்கு சீக்கிரம் செய்துவைக்க வேண்டிய கல்யாணம் பற்றியும் சில நாட்களில் பேச்சு உண்டு. சாப்பாடு, டிவி, அவனது கால்கள் தன் கால்கள் மீது இதமாக தூக்கம்... சிலநாட்களில் சடக்-என்று அவன் இழுத்து அணைக்கும் வேகம் தூக்கத்தைக்கலைப்பதாக க்ரிப் செய்தாலும் உள்ளுக்குள் வேண்டி யிருப்பதை...    இன்னும் ஒரு நாள் - படிக்கட்டு ஏறிவரும் சப்தம் மேல் அபார்ட்மென்ட் குழந்தைகளின் விளையாட்ட

பிரயோகம்

                                                                                                                                  பாதி தூரம் வந்த பிறகு தான் தெரிந்தது அதல பாதாளம் அதற்கு மேல் ஒன்றுமில்லை தலை நோவ மண்டையிடி எதற்குத் தண்டனையோ உடல் நீலம் பாரித்தது ஈசன் கழுத்திலுள்ள பாம்பு தீண்டிற்றோ பேச்சு சாதுர்யத்துடன் தான் ஆரம்பிக்கிறது பெரும் சண்டையில் போய் முடிகிறது வந்த வழியை திரும்பிப் பார்த்தால் இவ்வழியா வந்தோம் மூக்கைப் பிடித்துக் கொண்டு எனத் தோன்றும் புலால் உண்ணத் தகுந்ததல்ல என்று புரிகிறது என்ன செய்வது ஆதியில் பச்சை மாமிசத்தை புசித்தவனுக்கு துறவி சொல்வது எங்கு புரிகிறது மயன் காலண்டர் முடியப் போகிறதாம் இதோ தோன்றப் போகிறாராம் வாழும் போது தண்டணை தருகிறோம் சென்ற பிறகு தேடி அழுகிறோம் மானுடமே மரித்த பிறகு தனித்து அலைவாரா கடவுள்.

பறவை நண்பன்

  நிறம்  இரவை எழுதும் பொழுது  அறையில் வந்து அமர்ந்த  பறவை ஒன்று  என்னோடு கதைக்கத் துவங்கியிருந்தது... அது பேசும் பேச்சிற்கு  என்னால் தலையாட்ட முடிந்ததே தவிர  பதில் பேச முடியவில்லை  கொஞ்ச நேரத்தில்  அதனோடு சேர்ந்து  இரையைக் கொத்த தொடங்கினேன்   நீண்ட நேரத்திற்குப் பிறகு  என் படுக்கையையும் அது ஆக்கிரமைத்துக்கொண்டது  மென்மையான முனகலில் தூக்கம் சுவர்க்கம் நுழைய  நிறம் எழுதி முடித்திருந்தது  ஒரு பகலாக மாறிப்போயிருந்தது பறவை வந்து தங்கிவிட்டுச்  சென்றதற்குச் சாட்சி  படுக்கையில் கிறுக்கப்பட்ட  வெள்ளைக் கோடுகள் மட்டுமே... யாருக்கும் தெரியாமல்  அதை மறைத்தாக வேண்டும்...                                        

நிலவும் காகமும்

அந்த நகரத்தின் நடுவே ஒற்றை அடையாளமாய் இருந்த அந்த பழைய அரசமரமும் அன்று வெட்டி சாய்க்கப் பட்டது.    கிளையோடு விழுந்த கூட்டின் குஞ்சுகளுக்கு நிலாவைக் காட்டி நாளை அந்த கூட்டிற்கு போகலாம் யாரும் எதுவும் செய்ய முடியாதென சமாதானம் கூறி வாயில் உணவை ஊட்டிற்று தாயன்போடு காகம்.  

மழை இரவு

  அடித்துப் பெய்கிற மழையில் வளைகின்றது  தாவரம் குனிகின்றன பெருமரக் கிளைகள் ஒண்டிக் கொள்கின்றன பறவைகள் அணைந்து போகின்றன விளக்குகள் கம்பிகளுக்குப் பின் ஒளிகிறது நிலா மேல்நோக்கித் திரும்புகிறது குடை நடுக்கமுறுகிறது உடல் பயத்தில் குளிர்ந்து விடுகிறது காற்றும் ஒரு மின்னலில் ஒளிர்கின்றது ஜொலிக்கும் புன்னகையோடு இக்கரிய இரவு  மட்டும்.                             -

சூடாப் பூ ...

பள்ளி விட்டு வந்ததும் தன் ஆஸ்தான இடத்தில் அமர்ந்திருப்பாள்  அம்மு. எல்லோரும் வீட்டிற்குப் போக  தான் மட்டும் அனுதினமும் அங்கு வருவது பற்றிய ஆரம்ப காலக் கேள்விகள் அவளை விட்டுப் போய்விட்டன. ஓலைக் குடிலின் ஓர் மூலையில் அமர்ந்து எல்.கே.ஜி பாடங்களை  படித்துக் கொண்டிருப்பதும் அம்மாவிடமிருந்து  பூ வாங்கிப்போவோருக்கு புன்னகை ஒன்றை இனாமாய்க் கொடுப்பதும் அவளின் அன்றாடக் கடமைகள். மீதமிருக்கும் பூக்களுடன் வீடு திரும்பிக் கொண்டிருக்கும் அம்முவிற்கு என்றைக்குமே புரிந்ததில்லை அம்மா ஏன் சூடிக் கொள்வதில்லை அவைகளில் ஏதொன்றையும் என்பது.

எதையாவது சொல்லட்டுமா..........53

அடுத்த நாளும் நாங்கள் விடுதியிலிருந்து கிளம்பி நியுயார்க் சென்றோம். அதே, NFTA-METRO Trolley-ல் கிளம்பினோம். இந்த வண்டியின் கூரையில்தான் அனைவரும் உட்கார வேண்டும்.  அப்படியே வண்டி நகர்ந்து நகர்ந்து செல்லும்.  பின் ஒவ்வொரு இடமாக நின்று நின்று செல்லும்.  அந்த வண்டியில் வரும் கெய்ட் அந்த இடத்தின் பெருமையைச் சொல்வார். யாராவது விரும்பினால் அந்த இடத்தில் இறங்கலாம்.  பின் இன்னொரு NFTA-METRO Trolley வரும் அதில் ஏறி இன்னும் பல இடங்களுக்குச் செல்லலாம்.  பெரும்பாலும் நாங்கள் வண்டியிலிருந்தபடியே எல்லா இடங்களுக்கும் சுற்றிக்கொண்டிருந்தோம்.  அன்று இரவு பஸ்ஸில் நியுயார்க்கிலிருந்து நயக்கரா அருவி இருக்குமிடத்திற்குச் செல்ல திட்டமிட்டிருந்தோம்.  பஸ் கிளம்பும் இடத்தில் நாங்கள் சுமந்து வந்த பைகளை பத்திரப்படுத்திவிட்டுத்தான் நியுயார்க்கில் சுற்றிக் கொண்டிருந்தோம்.  உயரமான கட்டிடங்களையும், கூட்டமான ஜனத்திரள்களையும் பார்த்தபடி சென்று கொண்டிருந்தோம்.  American Museum of Natural History என்ற இடத்தில் இறங்கினோம்.  10 மணிக்குத்தான் திறப்பார்கள் என்றதால், எதிரில் உள்ள பூங்காவில் சுற்றிக்கொண்டிருந்தோம்.  பூங்காவ

நிலா

வெள்ளை நிறம் பெரிய முகம் சுருங்கிக் கிடப்பது ஏன்?...... அட, உனக்கும் வயதாகிவிட்டதா? (எப்பவோ எழுதிய கவிதை.  ஒரு நோட்டிலிருந்து எடுத்தது)

வருகை

பழுத்த இலைகள் மண்ணில் உதிர்கின்றன இன்று காலையிலேயே வெயில் கொளுத்தத் துவங்கிவிட்டது ரிடையர்டு ஆன பின்பு சூரல் நாற்காலி தானே கதி ஆளரவமற்ற வீதியில் காற்று அலைகிறது நேற்று நடமாடியவர்கள் இன்று காணாமல் போகும்போது மரணம் என்னைப் பார்த்து பல் இளிக்கிறது அந்தி வேளையில் கண்களை மூடி பறவைகளின் சப்தத்தை கேட்கும் போது மனம் இலேசாகிறது தூரத்தில் யார் வருவது இந்தக் கண்ணாடியை எங்கே வைத்தேன் ஓ பரந்தாமனா - எங்கிருந்து என்று கேட்டேன் காதோரம் வந்து சொன்னான் கைலாயம் என்று.

நிலவும் தவளையும்

  அலையற்ற நீர் படுக்கையில் அயர்ந்த தூக்கத்தில் நிலா. நிலவிற்கு இரங்கி நீரைத் தொடாமல் விலகிச் செல்கிறது காற்று. இரவின் அமைதியில் எங்கிருந்தோ வந்து விழுந்த தவளையின் துள்ளலில் வளைந்து நெளிந்தது நிலா.  

தொடரும் பயணம்

  ஒரு தேவதையைப் போலதான்  வாழ்ந்திருந்தாள். கிரீடத்தில் நட்சத்திரங்களாக  ஒளிர்ந்த வைரங்களுடன் கூந்தலின் நிறம் போட்டி போடவும் பறத்தலில் வேகம் குறைந்தது. உதிரும் சிறகுகளால் வீடெங்கும் குப்பையாவதாக இறக்கைகள்  வலுக்கட்டாயமாகப் பிடுங்கப்பட்டன. ஆயினும் கூட்டிலே ஓய்வெடுக்க அனுமதியில்லை. நடந்தேனும் ஊர்ந்தேனும்  தனக்கான தானியத்தை ஈட்டிக் கொள்ள வேண்டிய கட்டாயம். பாய்ந்து வந்த வார்த்தை அம்புகளைத் தடுக்க எட்டுகிற தொலைவில் கிடந்தும் கேடயத்தை எடுக்கின்ற தெம்பில்லை. சுழற்றி வீச வாளொன்று  சுவரிலே தொங்கியும் நிமிர்த்திப் பிடிக்க  விரல்களில் வலுவில்லை. இவள் தொட்டு ஆசிர்வதித்த செங்கற்களைக் கொண்டு  எழுந்த மனையென்பது எவர் நினைவிலும் இல்லை. மேகங்களுக்குள் புகுந்து வெளிவந்த காலத்தில்  அதன் வெண்மையை வாங்கி  மிளிர்ந்த உடை பழுப்பாகிப் போய்ப் பாதந்தடுக்க இரை தேடக் கிளம்புகிறாள். வழக்கமாகச் செல்லும் பேருந்தைத் தவற விட்டதாக எண்ணி நடக்கத் தொடங்குகிறாள். ஓரிரு மணித்துளிகளில் ஒட்டி வந்து நின்றது அன்றைக்குத் தாமதமாகப்  புறப்பட்டிருந்த பேருந்து. சாலைவிதிகளை மீறி நிறுத்தக் கூடாத இடத்தில் நிறுத்தி ஏறிக் கொள்ளுமாறு அழை

வரும்போகும்

முற்றத்தில் அடிக்கும் வெயிலும் பெய்யும் மழையும் இப்போது இல்லை ஓட்டிலிருந்து தேள் வந்து விழும் என்ற பயமுமில்லை குளியலறையை வசிப்பிடமாக்கிக் கொண்ட கரப்பான்பூச்சியைக் காணவில்லை வாங்கி வைத்த மாம்பழங்களை குதறிச் செல்லும் பெருச்சாளிகளின் தொல்லை இல்லை மழை பெய்தால் ஆங்காங்கே ஒழுகும் என்ற சிரமமில்லை வெளவாலுக்கு அடைக்கலம் தரும் இடமாக இல்லம் இனி இருக்கப்போவதில்லை இனி நெஞ்சை நிமிர்த்தி நடக்கலாம் எங்கள் வீடு ஓட்டு வீடு இல்லை மாடி வீடென்று.

கதிரொளி

மழையில் நனைந்த பறவை சிறகை உலர்த்தியது மின்னல் நரம்புகள் வானை வெளிச்சமிட்டுக் காட்டியது இடியோசை ஆகாயம் இடிந்து விழுவதைப் போல பயங்காட்டியது இயற்கை வரைந்த ஏழு வண்ண ஓவியத்தை ஜனக்கூட்டம் ரசித்தது மரங்களின் பாஷை பறவைக்கு புரிந்தது வீதியில் நடப்பவர்கள் மழைக்கெதிராய் கறுப்புக் குடை பிடித்தார்கள் மெல்ல பரிதி எட்டிப் பார்த்ததும் சகஜ நிலை திரும்பியது அடுத்த மழைக்கு முன்னே இரையைத் தேட எறும்பு சாரை சாரையாய் ஊர்ந்து சென்றது.

குட்டி குட்டி அழகு

குட்டி குட்டி பற்களை  பிரசில் தேய்த்துவிட்டு  சாக்கடையில் வந்து  நுரை ததும்ப எச்சிலைத் துப்பும்பொழுது சாக்கடையில் வழிந்தோடுகிறது  அழகு... குட்டித் தலையை  அப்பாவின் கைக்குள்  நுழைத்து தூங்கும்பொழுது  காற்றில் பரவுகிறது  அழகின் மணம்...  குறு குறு பார்வையில்  கொஞ்ச நேரத்திற்கெல்லாம்  குட்டிச் சிரிப்பொன்று வந்து  வெட்கம் கொள்கிறது... குட்டிக் கண்களில்  மாட்டிய கறுப்புக் கண்ணாடி  எதிர்வரும் வாகனங்களை  மமதைக் கொள்ளச் செய்கிறது... பாசை புரியா பாடலில்  செல்பேசிக்கு ரெக்கை முளைத்து விடுகிறது... அளப்பரிய அர்த்தத்தை  குட்டிக் கணத்தில்  கொட்டிச் செல்வது  அழகு... ம்ம் அழகு...                              

அன்புடையீர்,

வணக்கம். Navinavirutcham blogspot.com படைப்புகள் சில வேறு வலைத்தளங்களிலும் பிரசுரமாகின்றன. தயவுசெய்து, ஒரே படைப்பை எல்லா வலைத்தளங்களிலும் அனுப்ப வேண்டாமென்று கேட்டுக்கொள்கிறேன்.  உங்கள் படைப்பு நவீன விருட்சம் இதழிலிலும் வெளி வர வாய்ப்பு உள்ளது.  கவிதை அனுப்புவோர், ஒரு கவிதை மட்டும் ஒரே சமயத்தில் அனுப்பும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அழகியசிங்கர்

எதையாவது சொல்லட்டுமா..........52

வாஷிங்டனில் நாங்கள் ரயில் பிடித்தபோது மணி இரவு 8.30.  ரயில் பார்ப்பதற்கு பிரமாதமாக இருந்தது.  முதலில் ரயில்வே ஸ்டேஷனில் நுழைவதற்கு வரிசையில் நிற்க வேண்டியிருந்தது.  அதன்பின்தான் உள்ளே விட்டார்கள்.    எந்த இடத்தில் வேண்டுமானாலும் எல்லோரும் உட்காரலாம் என்பதால், அவசரம் அவசரமாக இடம் பிடித்துக்கொண்டோ ம்.  வாஷிங்டனிலிருந்து நியுயார்க் செல்ல 2 மணி நேரம்தான். அன்று இயந்திரக் கோளாறால் ரயில் 1 மணி நேரம் தாமதமாகக் கிளம்பியது.  1 மணி நேரம் தாமதம் ஏன் என்பதை அவர்கள் ஒலிபெருக்கியின் மூலம் தெரியப் படுத்தினார்கள்.  ரயிலில் நாங்கள் உட்காரும் இடத்திலேயே அந்த ஒலிபெருக்கியைப் பொருத்தி இருந்தார்கள்.  ரயில் உள்ளே ஒரு கம்பார்ட்மெண்டிலிருந்து இன்னொரு கம்பார்ட்மெண்டிற்கு எளிதாக செல்லலாம்.  அப்படி போகும்போது கதவு தானகவே திறந்து கொண்டு வழிவிடும்.  இதைச் சொல்ல கொஞ்சம் கூச்சமாக இருந்தாலும், இதையும் சொல்லாமல் இருக்க முடியவில்லை.  ரயிலில் ஒவ்வொரு பெட்டியிலும் இரண்டு பக்கங்களிலும் இரண்டு இரண்டு கழிவறைகள் பொருத்தப்பட்டிருந்தன.  அவைப் பார்ப்பதற்கு அவ்வளவு சுத்தமாக இருந்தன. நம் ஊரில் உள்ள  ரயிலில் பயணம் செல்லும்போது, ரி

தேடிப்பற

          தேடித்தேடி அலைந்த என்னை குமபல்சேர்ந்து கேள்விகேட்டது.   தேடும்பொருளின் பெயர்தான் என்ன   என்றே என்னிடம் கேட்பவர்களிடத்தில் நானும்,   தேடும்பொருளின்  பெயரை அறியேன்   என்றதும் பார்வையாலே என்னை பரிகசித்துப் பைத்தியம் என்று பட்டமும் சூட்டி பரபரவென்று  கலைந்ததுகும்பல்!   பெயருள்ளபொருளையே தேடும் உலகில் பெயரற்ற பொருளைத் தேடுபவர்களுக்கு கிடைக்கும் பெயர்தான் பைத்தியம்போலும்!    

மாற்றம்

நிலைக்கண்ணாடி முன்பு தான் தொலைத்த இளமையைத் தேடுகிறார்கள் தன் பிம்பம் தான் இது என்று ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள் கடவுளால் பரிசளிக்கப்பட்ட பேரழகை சாத்தான் களவாடிவிட்டதாக எண்ணுகிறார்கள் வயதைக் காட்டிக் கொடுக்கும் நரைத்த முடியை டை அடித்து மறைக்கிறார்கள் பருவத்தில் மினுமினுத்த மேனியில் சுருக்கம் விழுவதை பார்த்து பதறுகிறார்கள் இன்று எந்தக் கண்களுமே ஆச்சர்யத்துடன் தன் எழிலை ஏறிட்டுப் பார்ப்பதில்லை என்பதை எண்ணும் போது நிலைக்கண்ணாடி முன்பு நின்று கேவி அழுகிறார்கள்.

நீரும் நிலாவும்

பித்தளை குட்டுவத்தின் நீரில் நிலா மிதக்க ஐந்து வயது சிறுவன் ஒரு தட்டால் நிலாவை சிறை வைத்தான். அடுத்த நாள் மூடியை பத்திரமாக திறந்து பார்த்தான். நிலா இருந்தது. கொஞ்சம் கரைந்துமிருந்தது. மீண்டும் மூடி வைத்து விட்டு அடுத்த நாள் பார்த்தான். இன்னும் கரைந்திருந்தது.   நாட்கள் செல்லச் செல்ல முழுவதும் கரைந்திருந்தது. நிலா முழுவதும் நீரில் கரைந்து விட்டதாக எண்ணி மூடியைத் திறந்தே வைத்திருந்தான். நீர் ஆவியாகி வானத்தில் நிலாவாகப் படியத் தொடங்கியது. நீர் ஆவியாக ஆவியாக நாட்கள் செல்லச் செல்ல வானத்தில் நிலாப் படிமம் வளரத் தொடங்கியது முழு நிலாவாக.  

என்ற போதிலும்

               மாட்டிக் கொள்ள வேண்டிய முகம் ஏற்றுக் கொள்ள வேண்டிய பாத்திரங்கள் உள்ளார்ந்த ஒரு உரையாடலின் தீவிரம் எதிராளியின்  முக பாவ மொழி முடியவும் துவங்கும் வேலை அலுத்துக் களைக்கும் வேளை காத்திருக்கும் கனங்கள் எல்லாம் மீறி ஒரு நாளின் எந்த வேளையிலும் வந்து விடுகிறது வளையும் வானவில்லோடு படிகளில் குதிக்கிற ஒரு மழை பிரத்யேகக் காரணங்களோடு பிரத்யேக ஈரத்தோடு.                          

எதையாவது சொல்லட்டுமா..........51

ராம்மோஹன் என்ற பெயர் கொண்ட ஸ்டெல்லாபுரூஸின் பிறந்த தினம் ஆகஸ்ட் மாதம் எட்டாம் தேதி.  அவர் இப்போது இருந்திருந்தால், எழுபது வயதுக்கு மேலிருக்கும். ஸ்டெல்லாபுரூஸ் தற்கொலை செய்து கொண்டு விட்டார்.  அவரைப் பற்றிய அந்த எண்ணம்தான் என் மனதில் நிழலாடிக்கொண்டிருக்கிறது.   மரணம் என்பது இன்னொரு நிலை.  அந்த நிலையை தானாகவே தேடிக் கொண்டுவிட்டார் ஸ்டெல்லாபுரூஸ். மனைவியை இழந்தத் துக்கத்தை அவரால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை.  உண்மையில் மனைவியை இழந்துவிடுவோம் என்று உணர்ந்து தன்னை தயார் செய்து கொண்டிருந்தார்.  நோயிலிருந்து தப்பிக்க முடியாமல் மனைவி இறந்தவுடன், அவர் முன்னால் அவரே வைத்திருந்த பிம்பங்கள் ஒவ்வொன்றாக உடைந்து விழுந்தன.  தன்னைப் பற்றிய மிகைப் படுத்திய பிம்பம்தான் அவரைத் தற்கொலையில் தூண்டி விட்டது. ஸ்டெல்லாபுரூஸ் வீட்டிற்குப் போகும்போது, அவர், அவருடைய மனைவி ஹேமா, ஹேமாவின் தங்கை பிரேமா என்று மூவரும் என்னை வரவேற்பார்கள்.  கோடம்பாக்கத்தில் உள்ள ஒரு அடுக்ககத்தில் அவர் வசித்து வந்தார்கள்.  ராம்மோஹன் புத்தகங்களை எல்லாம் ஒரு கண்ணாடி அலமாரியில் அடுக்கி வைத்திருப்பார்.  ஒவ்வொரு புத்தகத்திலும் அவர் கையெ

தேவதையும் கோடரியும்

  மரம் வெட்டி தான் தொலைத்த கோடரி வேண்டி நின்றான் தேவதையிடம்   தொலைத்த கோடரி தவிர வேறெந்த உலோகக்கோடரியும் வேண்டேன் என்றான் அவன் எந்தக்கோடரியும் மரத்தை வெட்டவே பயன்படும் ஆதலால் உனக்கு கோடரிகள் நான் கொடுப்பதிற்கில்லை கனி தரும் கன்றுகள் யாம் தருவோம் பயிர் செய்து பிழைத்துக்கொள் என்றாள் தேவதை. மரக்கன்றுகள் வாங்கி அவன் சென்று விட்டான் கொடுத்த மகிழ்வில் தேவதையும் மறைந்து விட்டாள். இப்போது என் கையில் இருக்கிறது அந்தக்கோடரி.  

குருவின் துரோகம்

 எழுத்தாளர்களைப் பாத்திரங்களாக அமைத்துப் புனைகதைகள் எழுதுவதில் எனக்கு அதிகம் நம்பிக்கை இல்லை.  எழுத்தாளர்கள் பெரும்பாலும் மிகச் சிறிய, சாதாரண மனிதர்கள்.  அநேகமாக அவர்கள் எல்லாருக்கும் அவர்களைப் பற்றிப் பிறரிடம் சொல்லும்போதோ எழுதும்போதோ நிஜமல்லாதது மிகவும் இயல்பாக வந்து விடுகிறது.  மனித இயல்பின் தன்மை அது.  நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு அன்று மிகவும் செல்வாக்கோடு இருந்த எழுத்தாளர் அவர் பணிபுரிந்த வானொலியில் அவருடைய மேலதிகாரியைக் கரிய பாத்திரமாகக் கதை எழுதியதைப் பெருமையோடு சொல்லிக்கொண்டிருந்தார்.  அது தவறு என்று நான் சொன்னேன்.  அவர் வானொலியில் இருந்தவரை என் மூச்சு கூட அப்பக்கம் வீச முடியவில்லை.  கிட்டத்தட்ட என் அபிப்பிராயம்தான் அழகிரிசாமி வைத்திருந்தார்.  ஆனால் நண்பர் நா பார்த்தசாரதிக்குக் கதாநாயகனை எழுத்தாளனாக அமைப்பதில் மிகுந்த விருப்பம்.  நகுலனின் முதலிரு நாவல்கள் எழுத்தாளர்களைப் பற்றியல்ல.  அதன் பிறகு எழுதியதெல்லாம் அவர் நேரடியாக அறிந்த எழுத்தாளர்களைப் பற்றித்தான்.  சில இடங்கள் வேடிக்கையாக இருக்கும்.  ஆனால் பெரும்பாலும் வருத்தத்தைத் தருவதாக இருக்கும்.  பலரைப் பற்றி அவருடைய மத

எதையாவது சொல்லட்டுமா..........50

ஜூலை 29,30,31, ஆகஸ்ட் 1 என்று 4 நாட்கள் வருகிற மாதிரி அரவிந்த் (என் பையன் பெயர்) லீவு எடுத்திருந்தான்.  வாஷிங்டன், நியுயார்க், நயகரா அருவி என்று மூன்று இடங்களுக்கு அழைத்துப்போக திட்டமிட்டிருந்தான். நான் யோசித்தபோது இந்த முறை இடத்தைச் சுற்றிவிட்டு வருவது கொஞ்சம் சோதனையைக் கொடுக்கும் என்று தோன்றியது.  வெளியே காட்டிக்கொள்ளாவிட்டாலும் அரவிந்த் எங்களை விட பரபரப்பாக இருந்தான். வாஷிங்டன் செல்வதற்கு ப்ளோரிடா அருகிலுள்ள ஒரு ஏர்போர்டிலிருந்து செல்வதாக திட்டமிட்டிருந்தோம்.  ஒரு வாரம் முன்பே அரவிந்த் நெட் மூலம் டிக்கட் எடுத்திருந்தான். விமானப் பயணம் இரவு 8.30 மணிக்கு.  நாங்கள் மாலை 5 மணிக்கே கிளம்பிவிட்டோ ம்.  அரவிந்த் எடுத்த வாடகைக் கார் மூலம் ஏர்போர்ட் சென்று அங்கு வாடகைக் காரைத் திருப்பிக் கொடுத்தான்.  இந்த ஊரில் கார் இல்லாமல் எங்கும் செல்லமுடியாது என்பதால் காரை வாடகைக்கு எடுத்திருந்தான்.  வாடகைக்கு எடுக்கும் கார்கள்கூட ஏர்போர்டில் இருந்தது.   வாடகைக்குக் கார் கொடுக்க ஏகப்பட்ட கார் கம்பெனிகள் இருக்கின்றன.  அது பெரிய நெட்வொர்க். 2  வழக்கம்போல் நாங்கள் எங்கு சென்றாலும் எதாவது தாமதம் இல்லாமல் இர

மிகை

                                                                                                                                     பெண்பார்க்கப் போனபோதே அப்பாவுக்கும் அம்மாவுக்கும் சந்திரிகாவை ரொம்பப் பிடித்துவிட்டது.  புத்தம் புது மலரைப் போல பளிச்சென்றிருந்தாள் சந்திரிகா.  அவர்கள் பெண்பார்க்க வருகிறார்கள் என்றதும் சந்திரிகாவை மதியத்துக்குப் பின் விடுப்பு எடுத்துக்கொண்டு அலுவலகத்தில் இருந்து வரச்சொல்லி விட்டார்கள்.  அலுப்பின் சுவடே இல்லாமல் எப்படி கிரணங்கள் விகசிக்க புன்னகைக்கிறாள் இவள், என்று சுதாகரனின் அம்மாவுக்கு அப்பவே அவள்மீது ரொம்ப இஷ்டமாச்சு.  பெண்ணை ஏற்கனவே புகைப்படத்தில் பார்த்திருந்தார்கள், என்றாலும் சிலது நேரில் வேறுமாதிரி இருக்கும்.  ஃபோட்டோஜெனிக் அல்லாத முகங்கள் நேரில் இன்னும் அழகாகக் கூட அமையக்கூடும்.  "என்னடா?"அப்பா இவனைப்பார்க்க புன்னகையுடன் திரும்பினார்.  "என்னப்பா...."  "பொண்ணு லெட்சணமா இருக்கா."  "அம்மாவைப் போல..."  "குணம்தான் எப்படி...அதுவும் அம்மா மாதிரியா, தெரியல..."என்றார் குறும்பாக.  "என் கதை இப்ப எத