Skip to main content

Posts

Showing posts from October, 2011

மொழி அதிர்ச்சி

''பிரச்சனெ பெரிஸ்ஸா ஒண்ணுமில்லீங்க.'' ''பரவாயில்லெ, எதுவானாலும் சொல்லுங்க..அவங்களுக்கு என்ன பிரச்சினென்னு முழுஸ்ஸாத் தெரிஞ்சாத்தான் உதவி செய்யிறதுக்கு எங்களுக்குச் சுலபமா இருக்கும்.'' ''கொஞ்ச நாளாவே சிடுசிடுங்கறது, எங்கிட்டே எரிஞ்சு விழுறது, கொழந்தைகங்களெப் போட்டு மொத்தறது இப்பிடியாயிருக்குதுங்க.  சமாதானப்படுத்துனாகூட கோபம் தணியிறதில்லெ..'' ''வீட்டுலெ ஏதாச்சும் சிக்கலாச்சா?'' ''சிக்கலுன்னு என்னெத்தெங்க சொல்றது?  கொஞ்ச நாளா யாபாரம் அவ்வளவு சொகமில்லீங்க.. ஒருவேளை அதனாலெதான் ரிலேக்ஸேஸனாயி ஒரு மாதிரி ஆயிட்டாளோன்னு நெனெக்கிறேன்.'' ''என்ன ஆயிடுச்சின்னு சொன்னீங்க?'' ''அது ஒண்ணுமில்லீங்க..நீங்க மேக்கொண்டு என்ன வெவரம் வேணும்னு சொல்லுங்க..'' ''சரி, நல்ல ஆழ்ந்து தூங்குறாங்களா?'' ''தூங்குறா.  ஆனாக்க சில வேளெயிலே ரிலேக்ஸேஸனாயி ஒரே முட்டா யோசிக்க ஆரம்பிச்சிருவா..அண்ணிக்குப் படுக்கிறதுக்கு ரவெக்கி ஒரு மணி ரெண்டு மணி ஆயிரும்.'' ''என

காலம்

அறையின் மேலே சுற்றி அலையும் மின்விசிறியோடு சேர்ந்தே சுழன்றது எனக்கான காலம். எட்டிப் பிடித்துவிட எத்தனித்த தருணங்களில் கைகளுக்குள் சிக்காமல் சுழன்றபடி இருக்கிறது. துணைக்கு அழைத்த தாம்புக் கயிறும் காலத்தின் சுழற்சியில் என் கழுத்தை சுற்றிக் கொண்டது. மூச்சு முட்டி தத்தளித்து, தூக்கி வீசப்பட்டு, அறையின் ஓரத்தில் கிடந்தவன் மீது நான் பார்த்துக் கொண்டிருந்த கணத்திலேயே கீழிறங்கி, என்னை மிதித்து, நடந்து, கடந்து சென்றது காலம்

இரு கவிதைகள்

முதலில் முதலில் யானை மேலிருந்து இறங்கு பிறகு பேசுவோம் மராமத்து வெள்ளைத்துரை உனைக் கண்டு வேர்த்து வெளவெளத்து வேஷ்டியைத் தழையவிட்டு வளைந்து வணங்கும் காலம் போச்சு கொலம்பஸ் பிறக்குமுன்பே கடலோடி வணிகர் நாங்கள் அதனால் பையா அடக்கி வாசி எங்கள் சந்தை எங்கள் சட்டம் எந்தக் கொம்பனும் அதற்கு அடக்கம் சம்மதம் என்றால் கடையை விரி சரிப்படாதென்றால் கடையைக் கட்டு அரிசி, பருப்பு, ஆமணக்கு, காய், கறி மிளகாய், உப்பு, மஞ்சள், வெல்லம், மாம்பழம், வாங்கலாம்.  உன் சரக்கை நீ விற்கலாம்.  வாரந்தோறும் சந்தை உண்டு அடாவடி விலைக்கு அனுமதி இல்லை அடிமை வாணிபம் செய்வதற்கில்லை வணிகம் செய்ய வந்தவன் வணிகம் மட்டும் செய்வது நல்லது உலவு பார்ப்பது கலகம் செய்வது சித்துவேலை ஏதும் செய்தால் சீவி விடுவோம் பனங்காய்போல. உள்கோட்டில் பிஸ்டலை மறைத்து உதட்டோ ரம் புன்னகை மலர்த்தி கைக்குலுக்கும் கபடம் எனக்கும் தெரியும் நெடுநாள் முன்பு பிஸ்டல் செய்வது குடிசைத் தொழிலாய் இருந்தது எங்களூரில்..... இலவசம் கோழி வாங்கினால் முட்டை இலவசம் ஜாடி வாங்கினால் மூடி இலவசம் பழம் வாங்கினால் கொட்டை இலவசம் கடன

எதையாவது சொல்லட்டுமா..........60

1988 ல் நவீன விருட்சம் ஆரம்பித்தபோது, இலக்கியச் சந்திப்புகளை நடத்த வேண்டுமென்று என்ற எண்ணத்தைத் தூண்டியவர் க.நா.சு.  அதைச் செயல்படுத்தத் தூண்டியவர் லைன் சீனிவாசன்.  அவர் Pnb யில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது, ஷபினா என்ற க்ளீனிங் பவுடருக்கு இணையாக Coin என்ற பவுடரை ஆரம்பித்தார்.  அந்தப் பவுடருக்கு விளம்பரம் வேண்டியிருந்தது.  அதை Hindu பேப்பரில் Engagement ல் விளம்பரம் கொடுக்க ஒரு காரணம் வேண்டியிருந்தது.  அதுதான் விருட்சம் இலக்கியச் சந்திப்பு கூட்டத்திற்கு வித்திட்டது.  கூட்டம் நடத்த வேண்டிய இடத்திற்கு வாடகை, பின் விளம்பரம் என்று கொடுத்துவிடுவார்.  நான்தான் கூட்டம் ஏற்பாடு பண்ண வேண்டும்.  விருட்சம் இலக்கியச் சந்திப்பை நடத்த வேண்டுமென்று நினைத்தபோது, க.நா.சு இல்லை.  ஒரு இலக்கியக் கூட்டத்தில் க.நா.சுவைப் பார்த்தபோது, எனக்கு அவரை மட்டும் வைத்துக்கொண்டு இலக்கியக் கூட்டம் நடத்த வேண்டுமென்ற எண்ணம் இருந்தது.  ஆனால் கூட்டம் எப்படி நடத்த வேண்டுமென்பது தெரியாது.  க.நா.சு எந்தத் தலைப்பிலும் எந்தவிதத் தயாரிப்பும் இல்லாமல் பேசக் கூடிய வல்லவர்.  அவர் இலக்கியத்தைப் பற்றி பேசுவதும், எழுதுவதும்தான் அவர

உன்னிடம் எப்படிச் சொல்வது

கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இல்லாமல் போய்விடுமா தூர் வாரப்படும் கிணற்றிலிருந்து எடுக்கப்படும் பொருட்களைக் காண உனக்கு ஆவலாய் இருக்காதா புள்ளிகள் மட்டுமே அழகிய கோலமாகிவிடுமா வானம் எழுதும் ஓவியக் கவிதை தானே வானவில் காற்று நிரப்பப்பட்ட பலூன்களைக் கண்டால் குழந்தைமை உடைந்து வெளிவருவதில்லையா கருணை இல்லங்களுக்கு உதவிடும் போது நமது இறைமை கொஞ்சமாவது வெளிப்படுவதில்லையா ஒரு குழந்தை வந்து உன்னை அம்மா என்றழைத்தால் உனக்கு கோபிக்கத் தோன்றுமா மிக அரிதாகவே ஜோக்குகள் சொல்கிறேன் சிரிக்க மாட்டாயா.

பறவை

திருப்பிப்போடப்பட்ட 'எஃப்' வடிவத்தில் அமர்ந்திருந்தது ஒரு பறவை அந்தக்கிளையில் நீள அலகு , கால்கள் சிறகுக்குள் புதைந்து, விரல்களின் நகங்கள் மட்டும் நீண்டு மரக்கிளையை கவ்விக்கொண்டு நின்றது. வால் சிறிது நீண்டு மரக்கிளைக்கு கீழே வரை தெரிந்தது. கச்சிதமான "எஃப்" தான். எஃப்'பைத்திருப்பி சரியாக்கினால் என்ன எனத்தொன்றி கல்லை விட்டெறிந்தேன் அதன்மேல் பறந்து செல்கையில் ஒரு எழுத்தையும் போல அல்லாமல் நீண்ட கோடாகப்பறந்தது. எஃப்'ம் கோடும் எனக்குத்தெரிகிறது அந்தப்பறவைக்குத்தெரியுமா ?!

திருகும் தண்ணீர்த் துளிகள்..

* மேஜையின் எதிர் விளிம்பில் முடிந்து விட்டது வசீகரத்துக்கென விரித்திருந்த மஞ்சள் பூக்கள் விரல் நகங் கொண்டு நீ திருகும் தண்ணீர்த் துளிகளில் கரைந்துக் கொண்டிருக்கிறது பேச முடியாமல் தவிக்கும் உனது வார்த்தைகள் நெற்றிப் பரப்பில் மிச்சமிருக்கும் எனது வெயிலை ஒற்றியெடுக்க பயன்படும் நாப்கின்னில் காத்திருந்த வரை நீ வரைந்து வைத்த கோட்டுச் சித்திரமொன்று கையேந்திச் சிரிக்கிறது நம் மௌனத்தை கூரையிலிருந்து வழியும் ஆரஞ்சு நிற விளக்கொளியில் உன் முகத்தில் படர்ந்துக் கொண்டிருக்கிறது மஞ்சள் பூக்களின் இதழ்கள் *******  

எதையாவது சொல்லட்டுமா..........59

சமீபத்தில் தேர்தல் வருகிறது என்றால் கதிகலங்க வேண்டிய நிலை வந்து விட்டது.  என்னைப் பொருத்தவரை எந்த ஆட்சி ஆட்சிக்கு வந்தாலும் ஒன்றுமில்லைதான்.  ஆனால் என் மனைவிக்கு தேர்தல் ஒரு பிரச்சினையாக மாறி விட்டது.  அதுவும் சமீபத்தில்தான்.  பொதுவாக அரசாங்கப் பணியாளர்கள்தான் தேர்தலுக்கு உட்படுத்துவார்கள்.  ஆனால் இந்த முறை வங்கியில் பணி புரிபவர்களையும் தேர்தல் பணிக்காக அழைத்துவிட்டார்கள்.  என் மனைவி பணிபுரியும் வங்கியில் உள்ள மேலதிகாரி அங்கு பணிபுரியும் 10க்கும் மேற்பட்டவர்களை தேர்தல் பணிக்காக சிபாரிசு செய்து விட்டார்.  அந்த விபரீதம்தான் என் மனைவி தேர்தல் பணிக்கு ஆளானது.  நாங்கள் இருப்பது மேற்கு மாம்பலம்.  தேர்தலில் பணிபுரிய வேண்டுமென்றால் அதைத்தாண்டி வேறு ஒரு இடத்தில்தான் தேர்தல் பொறுப்பாளராகப் பணிபுரிய விடுவார்கள்.  மாநிலத் தேர்தல் போது, அண்ணாநகரில் உள்ள ஒரு பள்ளியில்  Proceeding Officer ஆகப் பணிபுரிய சொன்னார்கள்.  நான் சீர்காழியிலிருந்ததால், என்னால் மனைவிக்கு உதவி செய்ய முடியவில்லை.  மனைவியின் தேர்தல் பணிக்காக ஒரு நாள் விடுமுறை எடுத்துக்கொண்டு மனைவிக்கு உதவி செய்ய வேண்டுமென்று என் மேலதிகாரியைக்

காகிதத்தின் மீதுகடல்

      சிறுமி காகிதத்தின் மீது ஏழு கடலின் சித்திரத்தைத் தீட்டுகிறாள் அதில் ஏழு மீன்களை நீந்தவிடுகிறாள் ஏழு மலைகளின் சித்திரத்தைத் தீட்டுகிறாள் அதன் முகடுகளில் ஏழு பஞ்சு மேகங்களை மிதக்கவிடுகிறாள் ஏழு மேகங்கலிருந்து சில மழை துளிகளை உதிர விடுகிறாள் மழைத் துளிகள் விழுமிடத்தில் ஒரு பூவின் சித்திரத்தைத் தீட்டுகிறாள் அதனடியில் தன் பெயரை எழுதுகிறாள் இனி அவளை காண்பதென்றால் ஏழு கடல்  ஏழு மலைளைத் தாண்டி பயணிக்க வேண்டியிருக்கும் நமக்கு

ஊனப் பிள்ளையார்

அடுக்கு மாடிக் குடியிருப்பின் கீழ் தளத்தின் குறுஞ்சுவரில் கையொடிந்த பிள்ளையார் அண்டுவார் யாருமின்றி.... பட்டினியாய்... பரிதாபமாய்... இரண்டு தினம் முன்பு ஆறாவது மாடி அனந்த நாராயணன் வீட்டுப் பூஜை அறையில் புஷ்டியான கைகளுடன் பருத்த  வயிறோடு மோதக பாத்திரத்துடன் பார்த்த நினைவு.   

எஸ் எம் எஸ் மட்டுமே

அவள் எழப் போவதில்லை  பேத்தியின் கல்யாணம் என்ன ஆச்சு என்று  கேட்கப்போவதில்லை- டாக்டர் வந்து பல்ஸ் பிடித்து  உதட்டைப் பிதிக்கி  இல்லை என்று சொல்லியும் ஆச்சு- அவன் பேசலேன்னா, நீ அவனை  கூப்பிடக்கூடாதா என்று சொல்ல இனி  மூச்சுமில்லை - நாம் அனைவரும்- அண்ணன்கள், தம்பிகள், தங்கைகள், அக்காக்கள்,  அப்பாவின் தம்பிகள், அப்பாவின் கிராமத்து அக்காவின் பெண்கள்  எல்லோரது பங்கும் அவளது வடுக்களாய் விடாது மூச்சையும் மீறி உடலில் ஊமைசொல்லென  சாம்பலாகக் காத்திருந்தன,  ஒன்று மட்டும் அறியாமல்- எங்களது விருந்தோம்பல் என்பது ஸ்ரார்த்தம் வழி  அதுவும் வாழைக்காய் அரிசி பருப்பு மட்டுமே கா கா வழி தினமும் ஜன்னல்வழி- எங்களை மன்னித்து விடு மற்றவர் வடுக்கள் உன்னைப் போல  சுமக்க  எங்களுக்கு  இடமும் அவகாசமும் இல்லை பேசுவதற்குக் கூட நாங்கள்  எஸ் எம் எஸ் மட்டுமே  அறிவோம் ..

வாசிக்கநேரு​ம் தருணம்

  |   இன்றைய நாளிதழ் செய்தியில் நேற்று இறந்து இருந்தான் இன்று அதிகாலை வரை உயிரோடு இருந்தவன் வாசிக்க தொடங்கிய கணத்திலிருந்து சிறிது சிறிதாக இறக்க தொடங்கியிருந்தான் அன்றைய நாளிதழ்களை அன்றைக்கே வாசிக்க இயலாதவர்களுக்காக இறந்தவன் மீண்டும் உயிர்த்தெழுகிறான்.  பின்னொரு நாளில் அவர்கள்அச்செய்தியை வாசிக்கநேரும் தருணம் மீண்டும் அவன்  இறக்க வேண்டியிருந்ததது.

பறவையின் இறகு

   வாசித்துக் கொண்டிருந்த புத்தகத்தில் 67 -ம் பக்கஎண் அடையாளமாக ஒரு பறவையின் இறகை செருகி இருந்தேன். மீண்டும் வாசிக்கஎடுத்தபோது 83  -ம்பக்கத்தில் பறவையின் இறகு இருந்தது. இப்பொழுது பறவையின் இறகை கையில்வைத்துக்கொண்டு கற்க ஆரம்பித்திருக்கிறேன் 67 -ம் பக்கத்தில் இருந்து 83  -ம் பக்கத்திற்கு எப்படி பறப்பதென்று?      

தசாவதாரம்

அலைகள் ஒன்றையொன்று துரத்தி விளையாடுகிறது குளத்தில் சலனம் எறிந்த கல் நீரில் அமிழும் கோயில் நகரத்தில் கடவுளுக்கு இடமில்லை விபத்து நடந்த பகுதியில் வாகனங்கள் விரையும் வேகத்தைக் குறைக்காமல் வாழ்க்கை ரகசியம் ஜாதகக் கட்டத்தில் தெரியுமென்றால் ஜோதிடக்காரன் அன்னாடங்காச்சியாக இருப்பதேன் ஈரம் இல்லாத மனிதர்களால் தான் உலகம் விளிம்பில் நின்று கொண்டிருக்கிறது ஆளுக்கேற்றபடி வேஷம் போடத் தெரியாதவன் தேசாந்திரியாகத் திரிய வேண்டியது தான்.

சொல்லிச் சென்ற நொடியிலிருந்து..

* நீ மீண்டும் வருவதாக சொல்லிச் சென்ற நொடியிலிருந்து நான்கு மொட்டுகளோடு மலராமல் காத்திருக்கிறது பூச்செடி உனக்கென எழுதிக் கொண்டிருக்கும் கடிதத்தை நினைக்கும் கணமெல்லாம் மேஜை விளிம்புவரை வந்து எட்டிப் பார்த்து விலகுகிறது ஜன்னல் திரை ஒரு வார இடைவெளியை ஓராயிரம் பட்டாம்பூச்சி சிறகுகளின் வர்ணங்கள் உதிர்ந்து புரியா ஓவியமாகிறது இத்தனிமை அறை ******

இரண்டு கவிதைகள்

1. நான் பஸ்ஸில் வந்து கொண்டிருந்தேன் இருக்கை எதுவும் தட்டுப்படவில்லை பஸ் ஊர்ந்து ஊர்ந்து சென்று கொண்டிருந்தது பல ஊர்களைத் தாண்டியது பல மனிதர்களைச் சுமந்து சென்றது வயல்களைத் தாண்டியது உயரமான மரங்களைத் தாண்டியது கூட்ட நெரிசலில் ஒழுங்கற்ற சப்தம் பஸ்ஸில் சுழன்றபடி சென்றது ஊர்ந்து ஊர்ந்து பஸ் நகர்கிறது நான் பஸ்ஸில் பயணித்துக்கொண்டிருக்கிறேன். 2. இந்த இடத்திற்கு நான் வருவதற்கு முன் இந்த இடம்தானா என்று எனக்குத் தெரியாது.

சிக்கிம் –டாகுமெண்டரி

சத்யஜித்ராய் வாழ்ந்த காலத்தில் அவரால் முடிக்கப்பட்ட ஒரு படம் திரையிடப்படாமல் இருந்ததென்றால் அது சிக்கிம் டாகுமெண்டரி படம் மட்டுமே. அது மட்டுமல்ல அந்தப் படம் தீவிரமாக தணிக்கைக்கு உள்ளாகி தடையும் செய்யப்பட்டது. சிக்கிம் 1971 ம் வருடம் எடுக்கப்பட்டது.  அது திரையிடப்படாமலேயே பலகாலம் இருந்ததால் அது தொலைந்துவிட்டதாயும் கருதப்பட்டது. திடிரென 2003 ல் அதன் நல்ல பிரதி பிரிட்டிஷ் பிலிம் இன்ஸ்டிட்யூட்டில் பத்திரமாக இருப்பதாக நம்பகமான தகவல் கிடைத்தது. அந்தப் படம் சென்ற வருடம் தான் பார்வைக்கு வந்தது.தற்சமயம் அது இணைய தளத்திலும் கிடைக்கிறது. இதன் மூலம் அவரது அனைத்துப் படைப்புகளும் மக்களுக்கு கிடைக்கப் பெற்றுள்ளன. ஏன் இந்தப் படத்திற்கு இத்தனை எதிர்ப்புகள் என்பதை படத்தைப் பார்த்து எவராலும் புரிந்து கொள்ள இயலாது. ஒரு வேளை இந்தப் படம் சிக்கிம் முடியாட்சியின் கீழ் இருந்தபொழுது எடுத்த ஒன்று என்பதால் இது அந்த மக்களை இந்திய இணைப்புக்கெதிராக தூண்டிவிடும் என்று அச்சமுற வைத்ததா என்றால் அதற்கான ஆதாரங்கள் எதுவும் இதில் இல்லை . அதை எடுத்த இயக்குனர் ராய் தனது படங்களில் எத்தகைய பிரச்சாரத்திற்கும் தீவிர எண்ணங்க

காக்கைகள் துரத்திக் கொத்தும் தலைக்குரியவன் - சிறுகதை

காக்கைகள் எப்பொழுதும் அவன் தலையைத்தான் குறி வைத்தன . அவன் பகல் வேளையில் வெளியே வந்தால் போதும் . தெருவின் கரண்ட் கம்பிகள் , தொலைபேசிக் கம்பிகளில் , வேலியோரப் பூவரச மரங்களில் , வீட்டுக் கூரைகளில் , மீன் வாடியிலெனக் காத்திருக்கும் காக்கைகள் அல்லது ஒற்றைக் காக்கையேனும் அவனது தலையைக் குறி வைத்துப் பறந்து வந்து கொத்திவிட்டுச் செல்லும் . ஒரு முறை கொத்திவிட்டுப் போன காக்கை , திரும்ப அவன் வெளியில் அலைந்து வீடு திரும்பும் வரை கொத்துவதுமில்லை , துரத்துவதுமில்லை . அவன் வீட்டுக்குத் திரும்பி , மறுபடியும் வெளியே வரும் சமயம் வந்து கொத்திவிட்டுப் பறக்கும் . அதை அவன் கவனித்திருக்கிறான் . ஒருமுறை கழுத்துப்பகுதியில் சிறகுதிர்ந்த , சற்று சாம்பல் நிறம் கலந்த காக்கை இப்படித்தான் செய்தது . எல்லாக் காக்கைகளும் இப்படித்தானென அதிலிருந்து அவன் புரிந்து கொண்டான் . தங்களுக்குள் முறை வைத்துக்கொண்டு வந்து கொத்துகின்றனவோ என்று கூட ஐயப்பட்டான் . காக்கை கொத்திவிட்டுப் பறக்கும்போதுதான் அவன் ஆதி முதல் கற்றறிந்த வசவு மொழிகளை வெளியில்