Skip to main content

Posts

Showing posts from February, 2009

பூனைகள் பூனைகள் பூனைகள் பூனைகள்......

த.அரவிந்தன் பூனையின் உலக இலக்கியம் --------------------------------------------------- எலி சாப்பிடாத ஒரு பூனையை எனக்குத்தெரியும் வீட்டிற்கு வரும் லியோடால்ஸ்டாய், அன்ரன் செக்கோவ், பியோதர் தஸ்தயேவ்ஸ்கி காப்ரியேல் கார்ஸியா மார்க்வெஸ், ஜோர்ஜ் லூயி போர்ஹே மரீயாலூயிஸு பொம்பல், மார்கெரித் யூர்ஸ்னார், இஸபெல் அலெண்டே, நவ்வல் அல் ஸுதவி நதீன் கோர்டிமர், ஆல்பெர் காம்யூ, ஆஸ்கர் ஒயில்ட் - எனச் சகலரின் எழுத்தையும் படிக்கும் மழையில் நனையும் ஒரு பூனைக்குட்டி மீது பரிதாபம் கொள்ளும் பெண் பற்றி எர்னஸ்ட் ஹெமிங்வே எழுதிய 'மழையில் பூனை' * சிறுகதையை ஒருகுளிர்காலத்தில் சொன்னதிலிருந்து அந்தப் பூனைக்குக் கட்டுப்படாத பூனைகளே இல்லையாம் உச்சிவெயில் ஒழுகிக்கொண்டிருந்த சன்னலோரம் ஒருநாள் சினுவா ஆச்சிபி "சிதைவுகள்' நாவலின் இருபதாம் அத்தியாயத்தைப் படித்துக் கொண்டிருந்தபோது எதேச்சையாய் அதனிடம் கேட்டேன்: 'திருட்டுத்தனமாய் நீ எலிகளைச் சாப்பிடுகிறாயாமே' வீட்டிற்கு வருவதையே நிறுத்திவிட்டது. * தமிழில்: திலகவதி

மொழிப்பெயர்ப்புக் கவிதைகள்

டேவிட் சட்டன் கம்ப்யூட்டர் அறை, நடு இரவு குகையின் சில்லிப்பாய்க் காற்று...... இரண்டு மேலங்கிகளாவது இங்கே வேண்டும். பருவகாலங்களில்லை, வேறுபாடுகளுமில்லை. சுவர்களின் ரீங்காரமே இரவிலும் பகலிலும். அலமாரி அடுக்குகளில் ஏறி வீழ்கிறது வெள்ளோட்டுக் கூரையின் வெளிச்சம். எல்லாமே இங்கு நிழலின்றிச் சுதந்திரமாயுள்ளன. சந்தேகமின்மையின் இருப்பிடம் இதுவே இங்கேதான் நான் வாசம் புரிகிறேன் கட்டளைக்கிணங்கும் அசரீரிகளினிடையில் இயக்கி பாதுகாப்பாய் உணர்கிறேன் இந்தத் திரையைப் பார்த்து நடுநிசியின் குழிந்த கண்களுடன் குறிப்பெடுக்கத் தாமதிக்கையில் உடனே தோன்றுகிறது பசுமைத் தீயில் ஒளிரும் எழுத்தாகக் காவியத்தின் பதில் 'ஆரம்பி' இதன் சமாச்சாரங்களெல்லாம் எனக்குப் புரியும் ஆணையிடுகிறேன். இந்த விசித்திர விலங்குகள் புர்ரிட்டுக்கொண்டு அடிபணிகின்றன. அர்த்தமற்ற ஆனால் அழகான இவற்றை வசப்படுத்த எனக்கு 15 ஆண்டாயிற்று. சுண்டெலி சமைத்த, நேர்த்தியான தர்க்க வளைகளாய் எலித்தன்மையுடன் ஓடும் போட்டித்திறனால் கட்டுப்பட்ட இதன் உட்புறத்தில் பிரமிக்கிறது குறிகளின் மின்சாரம். வீடு செல்லும் நேரம்.....வெளிப்பக்கத்தில் குறியிடல்... காவல்காரனுக

மொழிப்பெயர்ப்புக் கவிதைகள்

எம் கோவிந்தன் நானும் சைத்தானும் தேவனுக்குரியதை தேவனுக்கும் தேசத்திற்குரியதை அதற்கும் தர நான் முன் வந்தபோது யாரோ என் முன் வந்து சொன்னான் 'எனக்குரியதை கொடு' 'யார் நீ' என்றேன் 'தெரியாதோ சைத்தானை' என்றான் 'கேட்டுக்கொள் என்னுடையவை எல்லாம் எனக்குத்தான் என்பதே இன்றுமுதல் என் வேதம்' என்றேன் சைத்தான் உரக்க சிரித்தான் என்னை சிக்கென்று கட்டிப் பிடித்தான் செவியில் மெல்ல சொன்னான் 'எனக்கு வேண்டியதைத்தான் தந்தாய், நன்றி' (மலையாள அறிஞர், கவிஞர் எம் என் ராயின் பிரதான மாணவராக அறிவுத்துறையிலும் மலையாள மொழியின் திராவிட மயமாக்குதலை தொடங்கி வைத்தவர் என்ற நிலையில் இலக்கியத்திலும் முன்னோடியாக திகழ்ந்தவர்) மொழிபெயர்ப்பு : ஜெயமோகன் நவீன விருட்சம் இதழ் 5 - JULY - SEPTEMBER 1989

இலக்கியவட்டமும் காஞ்சிபுரம் வெ நாராயணனும்

இ ந்தப் புத்தகக் காட்சியின்போது வெ நாராயணன் மரணம் அடைந்த விஷயத்தை அவருடைய நண்பர்கள் தெரிவித்தார்கள். வருத்தமாக இருந்தது கேட்பதற்கு. நாராயணன் வட நாட்டிற்கு பயணம் செய்துவிட்டு சென்னை திரும்பும்போது Heart Attack வந்து இறந்து போனதாக நண்பர்கள் சொன்னார்கள்..நாராயணன் காஞ்சிபுரத்தில் இலக்கிய வட்டம் என்ற பெயரில் நூறுக்கும் மேலாகக் கூட்டம் நடத்தியவர். கொஞ்சங்கூட அலுக்காமல் மாதம் ஒரு முறை பள்ளிக்கூடம் ஒன்றில் கூட்டம் நடத்துவார். கூட்டத்தில் பங்கு பெறுபவர்களுக்கு மதியம் சாப்பாடு ஏற்பாடு செய்வார். காஞ்சிபுரம் தாண்டி வருபவர்களுக்கு போக வர செலவிற்குப் பணம் தருவார். நான் மூன்று முறை அவர் நடத்திய கூட்டத்தில் கலந்துகொண்டிருக்கிறேன். அவர் இலக்கியவட்டம் நடத்திக் கொண்டிருந்த சமயத்தில், நானும் மாதம் ஒருமுறை விருட்சம் இலக்கிய சந்திப்பு நிகழ்த்திக் கொண்டிருந்தேன். முதல் முறையாக அவர் கூட்டத்தில் என்னைப் பேச அழைத்தபோது எனக்குத் திகைப்பாக இருந்தது. இலக்கியக் கூட்டம் என்ற பெயரில் என்ன பேசுவது என்பது புரியாத புதிராக இருந்தது. எந்த விஷயத்தை எடுத்துக்கொண்டு பேசினாலும் என்னால் 5 நிமிட

பூனைகள் பூனைகள் பூனைகள் பூனைகள்......

8 பூனை........ காசியபன் எங்கிருந்தோ ஓடி வந்து என்னுடன் குடியிருந்த அழையாத விருந்தே எங்களில் ஒன்றாகி இங்கிதோ என்னைப் புல்கி அன்பிலொன்றி நிற்கின்றாய். பொன்வெள்ளி பகட்டும் பஞ்சுரோம மார்தவமும் கண்களில் குறும்பும் பேசாத பேச்சும் கேட்காத கேள்வியும் மெளனம் மெளனத்துக்கு விடை கொடுக்க அந்தரங்க இரகசியங்கள் மின்னாக கலக்கும் உன் குழந்தை முகத்தூய்மையில் காலம் தரும் ஞானமெல்லாம் கண்டு வியக்கின்றேன் உன் பூனை நடையினிலே சலனத்தின் தத்தவமும் வாலின் நெறியினிலே வாழ்க்கையின் கதியும் வண்ண வேற்றுமையிலே பிரபஞ்ச பிரிவுகளும் நன்றாக உணருகின்றேன் அடுக்களை பாலும் படுக்கையறை கரப்பும் கலவறை எலியும் மரத்து ஓணானும் நீயும் நானும் போல உன் நெடுநாளையத் தொந்தம் நேற்றின்று வந்ததன்று.

மொழிப்பெயர்ப்புக் கவிதைகள்

சுக்வீர் வண்ணங்கள் வண்ணங்கள் சாவதில்லை அவை கரைந்து விடுகின்றன அல்லது அடித்துக்கொண்டு போகப்படுகின்றன அல்லது பூமியின் அந்தகாரத்தில் விதைக்கப்படுகின்றன. வண்ணங்கள் மலர்களாக மாறுகின்றன மேகங்களின் ஒளிர்ந்து உதடுகளில் புன்னகை பூக்கின்றன கண்ணீரைப் பெருக்கி ஒளியை ஈன்றெடுக்கின்றன வண்ணங்களாகிய நாம் வண்ணங்களை உருவாக்கும் நாம் வாழ்க்கையை நம் முதுகுகளில் சுமந்துகொண்டோ நம் பின்னால் இழுத்துக்கொண்டோ நம் சிறகுகளில் அலைந்துகொண்டோ இங்கு வந்து சேர நூற்றாண்டுகளைத் தாண்டியிருக்கிறோம். இருள் முதல் ஒளிவரை உள்ள எல்லா வண்ணங்களுமான நாம் பல தடவைகளில் அடித்துக்கொண்டு போகப்பட்டு மறுபடியும் பிறந்திருக்கிறோம் இன்றும் காலத்திரையை வண்ணங்கொண்டு தீட்டுகிறோம் அனாதிகாலத்தொட்டுப் பிறந்து வரும் நாம் வாழ்க்கையின் அமுதைக் குடித்ததால் இன்றும் நஞ்சுடன் கலந்த வாழ்க்கையமுதைச் சுவைக்கிறோம் கனவுகளை உருவாக்குகிறோம் மூலம் : பஞ்சாபி (ஆங்கில வழி தமிழில் - மேலூர் ) நவீன விருட்சம் இதழ் 5 - JULY - SEPTEMBER 1989 (சுக்வீர் (1925) நாவல், சிறுகதை, கவிதை இத்துறைகளில் பஞ்சாபி மொழியில் சிறந்து விளங்குகிறார். நான்கு கவிதைத்தொகுதிகள் வெளிவந்துள்ளன.

மொழிப்பெயர்ப்புக் கவிதைகள்

சுக்வீர் நடத்தல் நான் நடக்கிறேன் என் கால்களால் அல்ல கண்களால் - சாலைகளையும் தெருக்களையும் இதயத் தொகுதிகளையும் இரவின் இருளையும் கடந்து செல்கிறேன் சுற்றிலும் மக்களின் காடு என் கண்களின் துணையோடு அதைக் கடந்து செல்கிறேன் கண்களுக்கே அதனூடு செல்லும் திறன் உண்டு. என் கால்கள் களைத்துவிட்டன மிகவும் களைத்துவிட்டன ஆனால் நான் நடந்துகொண்டேயிருக்கிறேன் மக்கள் கூட்டங்களில் சிக்குண்டு நான் முன்னேறிப் போகிறேன் என்றாலும் இதயங்களின் வலி என்னும் எல்லையைக் கடக்க என்னால் முடியவில்லை நான் நடக்கிறேன் என் கால்களால் அல்ல கண்களால்- ஒரு நீண்ட பயனம் மூலம் : பஞ்சாபி (ஆங்கில வழி தமிழில் - மேலூர் ) நவீன விருட்சம் இதழ் 5 - JULY - SEPTEMBER 1989

மொழிப்பெயர்ப்புக் கவிதைகள்

சார்லஸ் போதலேர் கேரளக் கன்னிக்கு உன் பாதங்கள் உன் கைகளைப்போல் மென்மையானவை.உன் இடை மிக அழகிய வெள்ளைக்காரப் பெண்ணையும் பொறாமையுறச் செய்யும் சிந்தனைமிக்க கலைஞனை உன் சரீரம் வசீகரிக்கும். வெல்வட்டுப் போன்ற உன் கண்கள் உன் மேனியை விடக் கரியவை. நீல மேகங்களும் புழுக்கமும் நிறைந்த உன் தாய் நாட்டில் உன் முதலாளியின் புகை பிடிக்கும் குழாயைப் பற்ற வைத்து பாத்திரங்களில் நீரை நிரப்பி வாசனைத் திரவியங்கள் கலந்து, தொல்லை தரும் கொசுக் கூட்டங்களைப் படுக்கையினின்றும் விரட்டியடித்து, புலர்ந்து புலராப் பொழுதில் அத்திமர இலைகளின் வழி காற்று இசை எழுப்பும்போது அங்காடியில் அனாசிப் பழமும் நேந்திர வாழைப்பழமும் வாங்குகிறாய். நாள் முழுவதும் நீ விரும்புகிற இடத்துக்கெல்லாம் வெறுங்காலுடன் சென்று மறந்துபோன பழம் பாடல்களை மனதுக்குள்ளேயே முணுமுணுக்கிறாய் மேற்கே சூரியன் தன் சிகப்புச் சட்டையோடு சாயும்போது கோரைப்பாயில் நீயும் மெதுவாகத் தலை சாய்க்கிறாய் மிதக்கும் உன் கனவுகளில் குருவிகள் கீச்சிடும், வண்ணப்பூக்கள் மலர்ந்து வழியும் களித்துத் திரியும் கன்னியே, கடலோடிகளின் வன் கரங்களில் உன் வாழ்க்கையை ஒப்படைத்து உனக்குப் பிடிக்கும

மொழிப்பெயர்ப்புக் கவிதை

சமீபத்தில் மறைந்த இரு பெண் எழுத்தாளர்களான கிருத்திகாவிற்கும், சுகந்தி சுப்பிரமணியனுக்கும் நவீன விருட்சம் தன் இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது. அவர்கள் இருவர் நினைவாக ஜோர்ஜ் லூயி போர்ஹேயின் தற்கொலை என்ற கவிதையை இங்கு சமர்ப்பிக்கிறேன். இதை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு அளித்தவர் அஷ்டாவக்ரன் . அவரும் இப்போது உயிரோடில்லை. தற்கொலை தனித்த ஒரு நட்சத்திரத்தைகூட விட்டுவைப்பதாயில்லை இரவில் இந்தஇரவையும் விட்டு வைப்பதாயில்லை. நான் மடிந்து விடுவேன், என்னுடன் சகிக்க முடியாத இந்த அண்டத்தின் சுமையும். பிரமிடுகளையும், பெரும் பதக்கங்களையும், கண்டங்களையும், வதனங்களையும் நான் துடைத்துவிடுவேன் நான் உண்டாக்குவேன் புழுதியை,வரலாற்றிலிருந்து, புழுதியிலிருந்து. இப்பொழுது நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன் அந்திமகால அஸ்தமனத்தை நான் கேட்டுக்கொண்டிருக்கிறேன் இக்கடைசிப் பறவையை நான் தருகிறேன் சூன்யத்தை இங்கு ஒருவருமே இல்லாதபோது (நவீன விருட்சம் 1989 / 3வது இதழ்)

மொழிப்பெயர்ப்புக் கவிதைகள்

ஆற்றங்கரை வணிகனின் மனைவி ஒரு கடிதம் என் தலையிற் வகுடாக நெற்றியில் வெட்டியிருக்கும் போதே வாசல் முற்றத்தில் பூ பறித்து நான் விளையாடியிருக்க நீர் வந்தீர். மூங்கில் பொய்கால் ஏறி குதிரை விளையாடி வந்தீர். நீலக் கொடிமுந்திரிகளை வைத்து விளையாடிக் கொண்டு நான் இருக்கும் இடத்தைச் சுற்றி நடந்தீர். நாம் சொக்கான் கிராமத்திலேயே வாழ்ந்து வந்தோம். இரு சிறுவர்கள் வெறுப்பும் சந்தேகமும் இன்றி பதிநாலு வயதில் ஐயனே உம்மை மணம் புரிந்தேன் நான் ஒரு போதும் சிரிக்கவில்லை, நாணத்தினால் தலை குனிந்து சுவரைப் பார்த்து நின்றேன் ஆயிரம் தடவை அழைத்தும் ஒரு பொழுதாவது நான் திரும்பி பார்க்கவில்லை பதினைந்து வயதில் முகம் சுளிப்பதை நிறுத்தினேன் என் தூசு உங்கள் தூசுடன் கலக்க விரும்பினேன் என்றைக்கும் என்றைக்கும் என்றென்றைக்குமாக ஏன் நான் வெளியைப் பார்க்க ஏறிவர வேண்டும்? பதினாறில் நீங்கள் பிரிந்தீர்கள் குமளி மறையும் நீர்ச் சுழிகள் நிறைந்த நதி வழியாக தொலைவிலுள்ள கோடு யென்னுக்குச் சென்றீர்கள் நீங்கள் போய் மாதங்கள் ஐந்தாகி விட்டன மேலே குரங்குகள் சோகமாய் கரைகின்றன. நீங்கள் போகும்போது மனதில்லா மனதுடன் கால்களை இழுத்துச் சென்றீர்கள் வாசல

பிரிவும் மரணமும்

என் நண்பர், நாகேஷ் இறந்த செய்தியைச் சொன்னபோது, நாகேஷ் பற்றிய ஞாபகத்தில் என் மனம் புகுந்து கொண்டது. பல ஆண்டுகளாக நாகேஷ் என்ற நடிகர் நடித்தப் பல படங்களைப் பார்த்து ரசித்திருக்கிறேன். ஆனால் ஒரு போதும் நான் எந்த நடிகனுக்கும் ரசிகனாக இருந்ததில்லை. ஆனால் நடிகர் நடிகைகள் பற்றிய செய்திகளையும், அவர்களைப் பற்றிய கிசுகிசுக்களையும் படித்திருக்கிறேன். நாமெல்லாம் ஏதோ வேலைக்குப் போய் சம்பாதிக்கிறோம். அவர்கள் நடித்து சம்பாதிக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு ஏராளமான ரசிகர்கள் வட்டம். ஏகப்பட்ட புகழ். பணம். அவர்களைப் பற்றியே செய்திகள். பல சமயங்களில் நாகேஷ் சிரித்து மகிழ்வித்திருக்கிறார். நகைச்சுவை நடிகர்களில் நாகேஷ் நடிக்காதப் படங்கள் இல்லை. அவர் படங்கள் பலவற்றை நான் ரசித்திருக்கிறேன். என் எஸ் கிருஷ்ணன், சந்திரபாபு, டணால் தங்கவேலு என்ற பல சிரிப்பு நடிகர்களை நான் ரசித்திருக்கிறேன். முகத்தைக் கோணலாக வைத்துக்கொண்டு சந்திரபாபு செய்யும் அட்டகாசம் ரசிக்கும்படியாக இருக்கும். ஆனால் சந்திரபாபு பேசும்போது என்ன பேசுகிறார் என்பதை முழுவதும் புரிந்துகொள்ள முடியாது. செய்கை அதிகமில்லாமல் பேச்சு மூலம் நகைச்சுவை உணர்வை காட்ட

உயிர்

"உனக்கு எப்பொழுது உயிர் வரும்?" என் முன்னால் அமைதியாக அமர்ந்திருந்த அதனிடம் விளையாட்டாகதான் கேட்டேன். "உன் கேள்விக்குப் பதில், உயிர் என்பதற்கு என்ன அர்த்தம் என்பதைப் பொறுத்தது. உயிருள்ளது, உயிரில்லாதது என்று எதை வைத்து நீ பிரிக்கிறாய்?" "உதாரணத்துக்கு எனக்கு இதயம் இருக்கிறது. அது இயங்கவில்லையென்றால், நான் உயிரில்லாத பொருளாகி விடுவேன்." "இதயம் என்ற உறுப்பு இல்லாத நிறைய உயிரினங்கள் இருக்கின்றன. அவற்றுக்கு உயிரில்லை என்று சொல்ல முடியுமா. உதாரணம் - மரம். உன் வாதப்படி பார்த்தால், எனக்குள்ளும் பிராஸஸர் என்ற சிப் இருக்கிறது. அது இயங்காமல் நின்றுவிட்டால் நானும் இயங்க முடியாது. அப்பொழுது எனக்கு உயிரில்லை என்றால், இப்போழுது எனக்கு உயிரிருக்கிறது என்றாகிவிடும்." "என்னால், இயங்குவது என்பதைவிட, இன்னும் பலவும் செய்ய முடியும். சிந்திக்க முடியும், முடிவெடுக்க முடியும். ஆனால், இவையெல்லாவற்றையும் இப்பொழுது நீயே செய்கிறாய். ஆனால், என்னால் எதைப் பற்றி சிந்திப்பது என்றே முடிவெடுக்க முடியும். அது என் இஷ்டம் ஆகிறது. அப்படி உன்னால் செய்ய முடியாதல்லவா?""தவ