Skip to main content

Posts

Showing posts from September, 2020

கவிஞர் வைதீஸ்வரன் பிறந்தநாள் போது..

அழகியசிங்கர் சமீபத்தில் கவிஞர் வைதீஸ்வரன் பிறந்த நாள் போது அவரை அழைத்துப் பேச அழைத்தோம். அவரும் மனம் விட்டுப் பேசினார். இது மிகக் குறைவான எண்ணிக்கைக் கொண்ட கூட்டம். ஒரு சிலரைத் தவிரக் கூட்டத்திற்குக் கூப்பிடவில்லை. கிட்டத்தட்ட 1 மணிநேரம் பேசினார். அதனுடைய ஒளிப்பதிவை இங்கு அளிக்கிறேன்.

அசோகமித்திரன் கதைகளைப் படித்தோம்....

அழகியசிங்கர் 22ஆம் தேதி அசோகமித்திரன் பிறந்தநாள். 24ஆம் தேதி நாங்கள் ஒரு 18 பேர்கள் கூடினோம் ஒவ்வொருவராக ஒரு கதையை வாசித்தோம். எல்லோரும் 3 நிமிடங்களுக்குள் ஒரு கதையை வாசிக்க வேண்டும். நான் 2.30 நிமிடங்களுக்குள் அவருடைய இந்திரா வீணை கற்றுக்கொள்ளவில்லை என்ற கதையைப் பற்றி சொன்னேன். இது ஒரு அற்புதமான அனுபவம். சூம் மூலமாகப் படித்ததை யாருடனும் அப்போது பகிர்ந்து கொள்ளவில்லை. கலந்துகொள்பவர்கள் மட்டும்தான் அந்தக் கூட்டம். மொத்தமே 18 பேர்கள் அதாவது கதையை வாசித்தவர்கள் மட்டும் பகிர்ந்துகொண்ட கூட்டம். இங்கே உங்களுடன் அந்தப் ஒளிப்பதிவைப் பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

எஸ்.பி.பி என்ற பாடகர்

அழகியசிங்கர் 1. இன்றைய தினத்தைத் துக்க தினமாக அனுசரிக்கப்பட்டு நம் மதிப்பிற்குரிய பாடகர் எஸ்.பி.பி பூலோக வாழ்வைத் துறந்து விட்டார் அவர் ஒரு இசை மேதை அவர் ஒரு சகாப்தம் யாரோ ஒருவர்தான் அப்படித் தோன்றுவார்கள் கடந்த சில தினங்களாக அவரைப் பற்றி செய்தி குடும்பத்தில் எல்லோரிடமும் நுழைந்து நுழைந்து வந்து கொண்டிருந்தது. 2. இன்று மதியம்தான் தெரிந்தது தூங்கி விழித்தபோது எஸ்.பி.பியின் மறைவு வாட்ஸ்அப்பில் செய்தியாகப் பரவியிருந்தது நண்பர் ஒருவர் தெரிவித்திருந்தார் அவருக்கு எஸ்.பி.பி என்றால் உயர் மூச்சு நிச்சயம் கண்ணீர் சிந்தியிருப்பார் என் நினைவில் எஸ்.பி.பி வந்து வந்து போய்க் கொண்டிருந்தார் அவர் பூத உடல் அவர் இல்லத்தை அடைந்தபோது மழை பெய்ததாம் ஆம் அவருக்காக வானமும் துக்கத்தைத் தெரிவித்து கண்ணீர் சிந்தியதா? (25.09.2020) (நேற்று விருட்சம் கவிதை வாசிக்கும் கூட்டத்தில் படித்த கவிதை)

எல்லோரும் கவிதை வாசிக்க வாருங்கள்....

அழகியசிங்கர் நாளை வெள்ளிக்கிழமை அதாவது 25.09.2020 அன்று கூடுகிற கவிதைக் கூட்டத்தில், கவிதை எழுதுபவர்கள் எல்லோரும் இணைந்து கவிதை வாசிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். கூட்டம் அதிகமாகச் சேர்ந்துவிட்டால் ஒரே ஒரு கவிதை வாசிக்கும்படி நேரிடும். அரசியல் கவிதை, மதச்சார்பான கவிதை, நாத்திக கவிதை, ஆபாசமாக எழுதப்படுகிற கவிதை, கொரானா கவிதை, பற்றி கவிதையெல்லாம் தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறேன். கூட்டம் நடக்கும் அன்று உங்கள் பெயர்களைப் பதிவுசெய்து கொள்ளலாம். பாரதியைக் குறித்து சிறப்புரை ஆற்ற வருபவர் பதமா மோகன் அவர்கள். அவர் பேசப் போகிற தலைப்பு : மண் பயனுறு வேண்டும். எல்லோரும் வாருங்கள் கவிதை வாசிப்போம் இந்த முறை 6.30 மணிக்குக் கூட்டம். சூமில் இணைவதற்கான Topic: virutcham pooem meeting Time: Sep 25, 2020 06:30 PM India Join Zoom Meeting https://us02web.zoom.us/j/87503178512?pwd=bi9ENTN3aWlzaVlvNldROEZuNy9vZz09 Meeting ID: 875 0317 8512 Passcode: 478140

114வது இதழ் நவீன விருட்சம்...

அழகியசிங்கர் கொரானா நேரத்தில் நான் 112வது இதழ் நவீன விருட்சம் அச்சிட்டு எல்லோருக்கும் அனுப்பியிருந்தேன். அதன்பின் 113வது இதழைத் தயாரித்தேன். முதலில் வோர்டில் தயாரித்ததால் சில சிக்கல்கள் ஏற்பட்டுவிட்டன. சரிசெய்து 113வது இதழை அச்சடிக்க வேண்டும். ஆனால் இப்போது 114வது இதழை எப்போதும் போல் பேஜ்மேக்கரில் தயாரித்து அச்சடித்து விட்டேன். பிஒடியாக அச்சடித்துள்ளேன். ஒரு இதழ் தாயாரிச்சும் செலவு ரூ.33. ஆனால் பத்திரிகையின் விலையோ ரூ.20 தான். இந்த இதழை முதலில் சந்தாதாரர்களுக்கு மட்டும் அனுப்புவதாக உள்ளேன். இன்னும் தேவையான பிரதிகளை அச்சடித்து விடுவேன். செலவு அதிகமாக இருந்தாலும் தேவையான பிரதிகளை அச்சடித்து நிறுத்தி விடலாம். சாதாரண ஆப்செட்டில் அடிக்க வேண்டுமானால் குறைந்தபட்ச 300 எண்ணிக்கையில் அடிக்க வேண்டும். இதழ் பிரதிகள் மீந்து போய்விடும். வழக்கம்போல இந்த இதழிலும் 5 கதைகள் இடம் பெற்றிருக்கின்றன. பொதுவாக என்பெண், மனைவியெல்லாம் நவீன விருட்சம் இதழைப் பார்த்தால் படிக்க மாட்டார்கள். படி, படி என்று கெஞ்ச வேண்டும். ஆனால் இந்த முறை விதிவிலக்காக அவர்கள் படித்து வி

கவிஞர் வைதீஸ்வரனின் பத்து கேள்விகள் பத்து பதில்கள்

22.09.2020 அழகியசிங்கர் வைதீஸ்வரனின் பிறந்த நாள் இன்று. 1935ஆம் ஆண்டு பிறந்தவர். 4 ஆண்டுகளுக்கு முன் பத்து கேள்விகள் பத்து பதில்கள் என்ற தலைப்பின் கீழ் பேட்டி எடுத்தேன். அவர் பிறந்தநாளை முன்னிட்டு அந்தப் பேட்டியை மறுஒளிபரப்பு செய்கிறேன்.

அசோகமித்திரன், வைதீஸ்வரன் இருவர் பிறந்தநாள் இன்று

அழகியசிங்கர் எட்டாண்டுகளுக்கு முன் (22.09.2012) அசோகமித்திரனின் 82வது பிறந்த தினத்தை பாரதியார் இல்லத்தில் நடத்தினேன். அப்போது கூட்டம் நடத்துவது விட்டுப் போய் ரொம்ப ஆண்டுகள் ஆகிவிட்டன. அசோகமித்திரன் கூட்டம் நடத்தும்போது, எங்கே கூட்டம் வராமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் பேசுபவர்ளை அதிக எண்ணிக்கையில் கூப்பிட்டுப் பேச வைத்தேன். அசோகமித்திரனுக்காக பல எழுத்தாளர்கள் வந்திருந்து பேசினார்கள். சிறப்பான கூட்டமாக அது இருந்தது. ஒளிப்படமாகப் பதிவு செய்தவர் க்ளிக் ரவி. எட்டாண்டுகள் கழித்து அதை இப்போது திரும்பவும் தர விரும்புகிறேன். அசோகமித்திரனின் பிறந்த தினம் இன்று.

18.09.2020 அன்று சூம் மூலமாக 17வது கவிதை வாசிக்கும் கூட்டம்.

அன்று கவிதைகள் வாசித்தவர்கள் : 1. கவிஞர் புவனா முத்துக்குமார் 2. கவிஞர் எல்.ரகோத்தமன் 3. கவிஞர் நந்தாகுமாரன் 4. கவிஞர் ப.சகதேவன்

18.09.2020 என்று பாரதியின் பேரறிவு

18.09.2020 என்று பாரதியின் பேரறிவு என்ற தலைப்பின் கீழ் பாரதி அன்பர் புலவர் இராம மூர்த்தியின் உரை வீச்சைக் கேளுங்கள். கவிதைகள் வாசிக்கும் சூம் கூட்டத்தில் இந்தச் சொற்பொழிவு நடந்தது. அறிமுக உரையை நிகழ்த்தியவர் வ.வே.சு. அழகியசிங்கர்

இது வரை......இது வரை......

அழகியசிங்கர் இதுவரை 75 கவிஞர்கள் விருட்சம் கவிதை வாசிப்பு கூட்டத்தில் கலந்துகொண்டு சூம் மூலம் கவிதை வாசித்து விட்டார்கள். இன்று நடைபெற உள்ள 17வது கூட்டத்தில் கலந்து கொள்பவர்களை (நான்கு பேர்கள்) வரவேற்கிறேன். அரசியல், மத, ஆபாச கலப்பில்லாமல் கவியரங்கக் கூட்டங்களை நடத்தியதே பெரிய விஷயம் என்று தோன்றுகிறது. கவிதைகளில் பல வகை உண்டு. மரபு, ஹைக்கூ, தன் முனைப்புக் கவிதைகள், புதுக் கவிதைகள் என்றெல்லாம். ஆனால் புதுக்கவிதை வாசிப்பவர்கள்தான் முன்னணியில் நிற்கிறார்கள். ஆக மொத்தத்தில் பலவிதமான கவிதைகளைக் காது கொடுத்துக் கேட்க முடிந்தது. கவிதை வாசிக்கும் நண்பர்களைப் பிடித்திழுப்பது சற்று சங்கடமாக இருக்கிறது. பலருக்கு சூமில் எப்படி கவிதை வாசிப்பது என்று தெரியவில்லை. சிலருக்குக் கலந்து கொள்வதில் விருப்பமில்லை. அதையும் வெளிப்படையாகச் சொல்லத் தயங்குகிறார்கள். இனிமேல் இந்தக் கவிதை வாசிப்பு கூட்டத்தை வேறு விதமாக மாற்றி அமைக்கலாமென்று நினைக்கிறேன். கூட்டம் தொடங்குவதற்கு முன் கவிதை குறித்து உரை நிகழ்த்துபவரை ஏற்பாடு செய்யலாமென்று நினைக்கிறேன். பின் யார் வேண்டுமானால
விருட்சம் 17வது சூம் கவிதை வாசிக்கும் கூட்டம் அழகியசிங்கர் கூட்டம் 18..09.2020 - வெள்ளிக்கிழமை மாலை 7 மணி அளவில் நடைபெற உள்ளது. சிறப்புரை : 'பாரதியின் பேரறிவு' என்பதைக் குறித்து புலவர் இராமமூர்த்தி அவர்கள் உரை நிகழ்த்துகிறார். கவிதைகள் வாசிக்க இசைந்துள்ளவர்களின் பட்டியல். 1. கவிஞர் புவனா முத்துக்குமார் 2. கவிஞர் எல்.ரகோத்தமன் 3. கவிஞர் நந்தாகுமாரன் 4. கவிஞர் ப.சகதேவன் Join Zoom Meeting https://us02web.zoom.us/j/86546571162?pwd=dHdtb0Rvak1JbEZpUGlzOHlVWkg1QT09 Meeting ID: 865 4657 1162 Passcode: 813182

பேரறிஞர் அண்ணா சமாதியைப் பார்க்கச் சென்றேன்

அழகியசிங்கர் பேரறிஞர் அண்ணா மரணம் அடைந்தபோது நான் பள்ளியில் படிக்கும் சிறுவன். அப்போது அண்ணா சமாதியைப் பார்க்கப் போவது மாணவர்களிடம் பெரிய ஆர்வம் இருந்தது. நானும் என் கூட பள்ளிக்கூட நண்பர்களும் சேர்ந்து அண்ணா சமாதியைப் பார்க்கச் சென்றோம். நான் சென்னை தங்கச்சாலையிலிருந்து நடந்தே அங்குச் சென்றேன். மாணவர்களுடன் சேர்ந்துகொண்டு. அண்ணா சமாதியைப் பார்த்தபிறகு, அங்குள்ள கடற்கரையில் விளையாடப் போனோம். மாணவர்கள் ஒருவருக்கொருவர் நீரை ஒருவர் மீது ஒருவர் வாரி அடித்தபடி விளையாடினோம். என் சட்டை முழுவதும் நனைந்து விட்டது. நான் சட்டையைக் கழட்டிப் பிழிய நினைத்தேன். ஒரு குறும்புக்கார மாணவன் என் சட்டையைப் பிடுங்கி பந்து விளையாடுவதுபோல் மற்ற மாணவர்களுடன் சேர்ந்து விளையாடினான். கடைசியில் என் சட்டை கடலில் போய் விட்டது. நான் திரும்பும்போது சட்டை இல்லாமல் வீடு திரும்பிக்கொண்டிருந்தேன். குறிப்பாகச் சட்டை இல்லாமல் இருப்பதைப் பார்த்து என்அம்மா என்னை திட்டுவாளோ என்று திகைத்தபடியே வந்து கொண்டிருந்தேன். நடந்து வரும் வழியில் ஒரு போலீஸ்காரரைப் பார்த்தேன். அவர் என்னைப் பக்கத்தி

சுட்டிப் பெண்ணே ஆரபியே

எழுந்ததும் ஓடிவந்து என் போனைத் தட்டிப் பறிக்கிறாய் பின் என்னை விட்டு ஓட்டமாய் ஓடுகிறாய் இதோ - இப்போது இந்த ஊரை விட்டுக் கிளம்புகிறோம் என்றால் புரியாமல் முழிக்கிறாய் தலையை வாரவிடாமல் உடைகளைக் கழற்றி எறிந்து அங்கும் இங்கும் குதிக்கிறாய் அம்மாவையும் அப்பாவையும் பாடாய்ப் படுத்துகிறாய் உன் மழலைக் குரல் இன்னும் காதில் ஒலித்தவண்ணம் உள்ளது சுட்டிப் பெண்ணே ஆரபியே.... 03.05.2019 பீனிக்ஸ் காலை : 6

11.09.2020 அன்று சூம் மூலம் விருட்சம் கவிதை வாசிப்பு கூட்டம்.

அழகியசிங்கர் கடற்கரை மத்தவிலாஸம் அங்கதம் அவர்கள் பாரதியைத் தூக்கிச் சுமந்த கல்கி என்ற தலைப்பில் வாசித்தார். 24 கவிஞர்கள் பங்கு கொண்டு கவிதை வாசித்தார்கள்.

பாரதியாரைத் தூக்கி சுமந்த கல்கி

அழகியசிங்கர் விருட்சம் 16 சூம் கவிதை வாசிக்கும் கூட்டம் 11.09.2020 (வெள்ளிக்கிழமை) அன்று மாலை 7 மணி அளவில் 22கவிஞர்கள் கலந்து கொண்டு கவிதை வாசித்தார்கள். பாரதியாரைத் தூக்கி சுமந்த கல்கி என்ற தலைப்பில் கடற்கரை மத்த விலாஸம் அங்கதம் உரை நிகழ்க்தினார்

உலக தற்கொலை தினம்

அழகியசிங்கர் உலக தற்கொலை தினமாம் இன்று தற்கொலையைப் பற்றிப் பேசும்போது இரண்டு தற்கொலைகளை என்னால் மறக்க முடியாதது. ஒன்று ஆத்மாநாம். இரண்டு ஸ்டெல்லா புரூலு;. ஆத்மாநாம் தற்கொலை குறித்து நான் ஒரு சிறுகதை எழுதியிருக்கிறேன். ஆத்மாநாமிற்கு இரங்கல் கூட்டம் நடந்தபோது ஸ்டெல்லா புரூஸ் கலந்துகொள்ளவில்லை. முதன்முறை ஆத்மாநாம் தற்கொலைக்கு முயற்சி செய்தபோது, ரொம்பவும் பாதிப்பு அடைந்தவர் ஸ்டெல்லா புரூஸ். அந்த நிகழச்சிக்குப் பிறகு அவர் தனியாக இருக்கப் பிடிக்காமல் அவருடைய சகோதரி வீட்டில் தங்கியிருந்தார். அந்த அதிர்ச்சியிலிருந்து மீளப் பல நாட்கள் ஆயின. தற்கொலை செய்து கொண்டவர்கள் ஆத்மா சுற்றிக்கொண்டே இருக்குமென்று ஒரு கட்டுரையில் எழுதியிருந்தார். இதில் என்ன வேடிக்கை என்னவென்றால் ஆத்மாநாம் தற்கொலையைக் கண்டித்த ஸ்டெல்லா புரூúஸ தற்கொலை செய்து கொண்டு விட்டார். தற்கொலை எண்ணிக்கையைப் பார்க்கும்போது சென்னைதான் முதலிடம் வகுக்கிறது தற்கொலைக்கு. இரங்கல் கூட்டத்தில் ஆத்மாநாம் தற்கொலையைப் பற்றிப் பேசிய ஒரு கவிஞர், தற்கொலைக்கு முன் அந்தக் கடைசி தருணத்தில் வேறு விதமாக அதிலிருந

விருட்சம் சார்பில் சூம் மூலம் நடைபெற உள்ள 16வது கவிதை வாசிக்கும் கூட்டம்

அழகியசிங்கர்     வருகிற 11ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று விருட்சம் சார்பில் சூம் மூலம் 16வது கவிதை வாசிக்கும் கூட்டம் நடைபெற உள்ளது.  கவிதை வாசிக்கும் கூட்டம் ஒரு பக்கம் இருந்தாலும், பாரதியை ஞாபகப்படுத்தும் விதமாக இந்த மாதம் முழுவதும் வெள்ளிக்கிழமை அன்று பாரதி அன்பர்கள் பாரதியைக் குறித்து உரை நிகழ்த்த உள்ளார்.      இந்த வாரம் உரை நிகழ்த்த இசைவு தந்துள்ளவர் கடற்கரய் மத்தவிலாச அங்கதம்.  'பாரதியைத் தூக்கிச் சுமந்த கல்கி' என்ற தலைப்பில் அவர் உரை நிகழ்த்துகிறார்.     வழக்கம்போல் இந்த முறையும் கவிதை வாசிப்புக் கூட்டம் நடைபெறுகிறது.     இக் கூட்டத்திற்கு எல்லாக் கவிஞர்களும் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன்.     ஒவ்வொருவரும் 2 நிமிடத்திற்குள் கவிதை வாசிக்க வேண்டும். நீளமான கவிதைகளைத் தவிர்க்க வேண்டும்.     எந்தத் தலைப்பிலும் கவிதை வாசிக்கலாம்.  சூம் கூட்டத்தில் நேரிடையாக உங்கள் பெயர்களைப் பதிவு செய்து கொண்டு கவிதையை வாசிக்கத் தொடங்கலாம்.     இதுவரை பங்கு பெற்றவர்கள் கலந்து கொள்ளும்போது வாசிக்காத கவிதையை வாசிக்கவும்.     கவிதையை வாசிக்கும்போது உச்சரிப்பைச் சரியாகக் கவனித்து உச்சரி

அஞ்சலட்டைக் கதைகள் 19

 அழகியசிங்கர் இது என் 19வது கதை. இந்தக் கதை வாசிக்கும்போது இரண்டு நிமிடங்களுக்கு குறைவாக முடிந இலக்கியக் கூட்டம்..          அழகியசிங்கருக்காக நான் காத்துக்கொண்டிருந்தேன்.  இன்னும் வரவில்லை அவர்.   ஆறு மணி கூட்டத்திற்கு நாலரை மணிக்குக் கிளம்பினால்தான் சரியாக இருக்கும்.      ஒவ்வொரு மாதமும் மூன்றாவது சனிக்கிழமைதான் கூட்டம் நடைபெறுகிறது.  சரியாக ஆறுமணிக்குக் கூட்டம் தொடங்கிவிட வேண்டும்.  நான் கார் எடுத்துக்கொண்டு அழகியசிங்கரை அழைத்துக்கொண்டு போவதாக சொல்லியிருந்தேன்.      அவர் போஸ்டல் காலனியிலிருந்து வர வேண்டும்.  ஐந்தே கால் மணிக்குத்தான் வந்தார்.  வந்தவுடனே அவசரம்.      அவசரம் அவசரமாகக் கிளம்பினோம். எல்லாம் எடுத்துக்கொண்டாயிற்றா என்று கேட்டேன் அழகியசிங்கரைப் பார்த்து.       எடுத்துக் கொண்டாயிற்று என்றார் அழகியசிங்கர்.     கார் கதவைத் திறந்தவுடன் ஏறி உட்கார்ந்து கொண்டார்.      "என் பக்கத்தில் காரில் உட்கார உங்களுக்குப் பயமில்லையா?" என்று கேட்டேன்.    " இல்லை " என்று பதில் அளித்தார்.      " என் மனைவி நம்ப மாட்டாள்."    " நான் உங்களை நம்புகிறேன்.  நீங்கள் ந

.சூம் மூலமாக விருட்சம் நடத்தும் 15வது கவிதை வாசிக்கும் கூட்டம்.

அழகியசிங்கர்  04.09.2020 அன்று நடந்த இக் கூட்டம்  பாரதிக்கு இக் கூட்டம் அர்ப்பணம் செய்யப் படுகிறது. இக்கூட்டத்தில் பாரதி குறித்து சிறப்புரை ஆற்றியவர் வானவில் ரவி அவர்கள். அவருடைய அனல் பறக்கும் பேச்சைக் கேளுங்கள். ...

இன்று ஆசிரியர் தினம்

அழகியசிங்கர் நான் வணங்கும் ஆசிரியர்கள் என்று யாருமில்லை நான் சந்தித்த ஆசிரியர்கள் உண்டு ஒருவர் பொய் சொல்லியே பழக்கப்பட்டவர் என் ஆசிரியராக இருந்தார் குடும்பத்தில் நடப்பதை மாணவர்களிடம் பகிர்ந்து கொள்ளும் அசட்டு ஆசிரியரும் உண்டு மாணவர்களைக் கிண்டல் செய்தே பழக்கப்பட்ட பெண் ஆசிரியரும் உண்டு ஆனால் அவர்களிடமிருந்து இதெல்லாம் கற்றுக்கொள்ளக் கூடாதென்று கற்றுக்கொண்டேன் கல்லூரியை விட்டு வெளியே வந்தவுடன்தான் நான் பார்க்கும் எல்லோரிடமும் எதாவது கற்றுக்கொள்கிறேன். இன்னும் கூட...

எழுத்தாளர் தேவகோட்டை வா மூர்த்தி ஞாபகமாய்

 02.09.2020 அழகியசிங்கர்     எழுத்தாளர் தேவகோட்டை வா மூர்த்தி கடைசியாக விருட்சம் சார்பில் ஜூலை 2019ல்  உரை நிகழ்த்தினார்.  வண்ணதாசன் கதைகள் குறித்து அவர் பேசினார்.  கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் நிகழ்த்திய அந்த உரைகளின் ஒளிப்பதிவுகளை இங்கே தருகிறேன்.     பொதுவாக அவர் ஒரு பேச்சாளர் அல்லர்.  ஆனால் என்ன பேச வேண்டுமென்பதை எழுதி வாசித்துவிடுவார். அவர் நீண்ட நேரம் பேசிய நிகழ்ச்சி இதுவாகத்தான் இருக்கும்.

உலக கடித தினமாம்

  துளிகள் 146 அழகியசிங்கர்       நவம்பர் மாதம் 2017ஆம் ஆண்டு நான் திடீரென்று அஞ்சல் அட்டைகளைத் தபால் நிலையத்தில் வாங்கிக்கொண்டு வந்து எல்லோருக்கும் கடிதங்கள் எழுத ஆரம்பித்தேன். எழுதிய கடிதங்களை என்ன எழுதினேன் என்பதைக் கணினியில் அடித்து வைத்திருந்தேன். பலருக்கு எழுதியதால் அவர்களும் பதில் எழுதினார்கள். அதற்கெல்லாம் நான் பதில் கடிதங்கள் எழுதி அதைத் திரும்பவும் கணினியில் பதிவு செய்து, ஒருநாள் முழுவதும் இப்படிப் பொழுது போயிற்று. என்னால் சமாளிக்க முடியவில்லை. பேசாமல் கடிதம் அனுப்புவதை நிறுத்தி விட்டேன். சிலர் என் அஞ்ச லட்டைக் கடிதங்களைப் பார்க்கிறார்களா என்பதே தெரியவில்லை. அவர்கள் யாரிடமிருந்தும் எந்தவிதப் பதிலும் வரவில்லை. சிலர் தபால் அலுவலகத்தில் போய் அஞ்சலட்டை வாங்க முடியவில்லை என்பார்கள். அவர்களுக்கு நான் அஞ்சலட்டைகளைக் கொடுப்பேன். உடனே பதில் எழுதட்டுமென்று. ஆனால் அப்படியும் அவர்களிடமிருந்து பதில் வராது. நான் எழுதும் இந்தக் கடிதங்களைத் தொகுத்துப் புத்தகமாகப் போடுமளவிற்குச் சேர்ந்து விட்டன. சில கடிதங்களை இங்கே குறிப்பிடலாமென்று நினைக்கிறேன். 8.11.201