Skip to main content

உலக தற்கொலை தினம்

அழகியசிங்கர்
உலக தற்கொலை தினமாம் இன்று தற்கொலையைப் பற்றிப் பேசும்போது இரண்டு தற்கொலைகளை என்னால் மறக்க முடியாதது. ஒன்று ஆத்மாநாம். இரண்டு ஸ்டெல்லா புரூலு;. ஆத்மாநாம் தற்கொலை குறித்து நான் ஒரு சிறுகதை எழுதியிருக்கிறேன். ஆத்மாநாமிற்கு இரங்கல் கூட்டம் நடந்தபோது ஸ்டெல்லா புரூஸ் கலந்துகொள்ளவில்லை. முதன்முறை ஆத்மாநாம் தற்கொலைக்கு முயற்சி செய்தபோது, ரொம்பவும் பாதிப்பு அடைந்தவர் ஸ்டெல்லா புரூஸ். அந்த நிகழச்சிக்குப் பிறகு அவர் தனியாக இருக்கப் பிடிக்காமல் அவருடைய சகோதரி வீட்டில் தங்கியிருந்தார். அந்த அதிர்ச்சியிலிருந்து மீளப் பல நாட்கள் ஆயின. தற்கொலை செய்து கொண்டவர்கள் ஆத்மா சுற்றிக்கொண்டே இருக்குமென்று ஒரு கட்டுரையில் எழுதியிருந்தார். இதில் என்ன வேடிக்கை என்னவென்றால் ஆத்மாநாம் தற்கொலையைக் கண்டித்த ஸ்டெல்லா புரூúஸ தற்கொலை செய்து கொண்டு விட்டார். தற்கொலை எண்ணிக்கையைப் பார்க்கும்போது சென்னைதான் முதலிடம் வகுக்கிறது தற்கொலைக்கு. இரங்கல் கூட்டத்தில் ஆத்மாநாம் தற்கொலையைப் பற்றிப் பேசிய ஒரு கவிஞர், தற்கொலைக்கு முன் அந்தக் கடைசி தருணத்தில் வேறு விதமாக அதிலிருந்து மீண்டு வந்து விடலாமென்று சொன்னார். மனைவியின் மரணம் தாங்கமுடியாமல் தற்கொலை செய்து கொண்டுவிட்டார் ஸ்டெல்லா புரூஸ். மனைவி இறந்து 6 மாதம் கழித்துதான் தற்கொலை செய்து கொண்டார். மனைவியின் பிரிவுத் துயரை 6 மாதம் வரை தாங்கியவர் இன்னும் சில மாதங்கள் கழித்திருந்தால் அவர் தற்கொலை செய்துகொள்வதைத் தவிர்த்திருப்பார். இன்னும் கேட்டால் அவர் தங்கியிருந்த இடத்திலிருந்து வேற இடம் மாறிப் போயிருந்தால், தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்திலிருந்து விடுபட்டிருப்பார். ஆத்மாநாம் தற்கொலையாக இருந்தாலும் சரி, ஸ்டெல்லா புரூஸ் தற்கொலையாக இருந்தாலும் சரி தவிர்க்க வேண்டிய தற்கொலைகள். இதோ இந்தக் கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கும் போதே எத்தனைப் பேர்கள் இந்தியாவில் தற்கொலை செய்து கொண்டிருப்பார்களோ தெரியாது

Comments