Skip to main content

114வது இதழ் நவீன விருட்சம்...

அழகியசிங்கர்
கொரானா நேரத்தில் நான் 112வது இதழ் நவீன விருட்சம் அச்சிட்டு எல்லோருக்கும் அனுப்பியிருந்தேன். அதன்பின் 113வது இதழைத் தயாரித்தேன். முதலில் வோர்டில் தயாரித்ததால் சில சிக்கல்கள் ஏற்பட்டுவிட்டன. சரிசெய்து 113வது இதழை அச்சடிக்க வேண்டும். ஆனால் இப்போது 114வது இதழை எப்போதும் போல் பேஜ்மேக்கரில் தயாரித்து அச்சடித்து விட்டேன். பிஒடியாக அச்சடித்துள்ளேன். ஒரு இதழ் தாயாரிச்சும் செலவு ரூ.33. ஆனால் பத்திரிகையின் விலையோ ரூ.20 தான். இந்த இதழை முதலில் சந்தாதாரர்களுக்கு மட்டும் அனுப்புவதாக உள்ளேன். இன்னும் தேவையான பிரதிகளை அச்சடித்து விடுவேன். செலவு அதிகமாக இருந்தாலும் தேவையான பிரதிகளை அச்சடித்து நிறுத்தி விடலாம். சாதாரண ஆப்செட்டில் அடிக்க வேண்டுமானால் குறைந்தபட்ச 300 எண்ணிக்கையில் அடிக்க வேண்டும். இதழ் பிரதிகள் மீந்து போய்விடும். வழக்கம்போல இந்த இதழிலும் 5 கதைகள் இடம் பெற்றிருக்கின்றன. பொதுவாக என்பெண், மனைவியெல்லாம் நவீன விருட்சம் இதழைப் பார்த்தால் படிக்க மாட்டார்கள். படி, படி என்று கெஞ்ச வேண்டும். ஆனால் இந்த முறை விதிவிலக்காக அவர்கள் படித்து விட்டார்கள். எல்லாக் கதைகளையும் என் பெண் படித்துவிட்டுப் பாராட்டினாள். இது என்னமோ பெரிய அதிசய நிகழ்ச்சி நடந்ததுபோல் தோன்றியது. வழக்கம்போல் சிறுபத்திரிகை என்றால் சில கதைகள், கவிதைகள், மொழிபெயர்ப்புகள். ஆனால் கட்டுரைகள் பெரிதும் வருவதில்லை. ஒரு சிறுபத்திரிகையில் எழுத்துதான் இருக்கும். ஒரு கதைக்குப் படம் வரைவதெல்லாம் கிடையாது. அப்படித்தான் தயாரித்திருக்கிறேன் இந்த இதழை. 113வது இதழில் படங்கள் சேர்த்ததால் சில டெக்னிக்கல் பிரச்சினை. கூடிய விரைவில் சரிசெய்து அதையும் சந்தாதாரர்களுக்கு அனுப்பி விடவேண்டுமென்று தோன்றுகிறது. வழக்கம்போல் 5 சிறுகதைகள். இந்தக் கதைகளைப் பற்றி ஒரு வார்த்தை சொல்ல வேண்டும். இந்த இதழில் உறைபனி என்கிற வசந்த தீபன் கதை சிறப்பாக உள்ளது. ஒவ்வொருவரும் படிக்க வேண்டும். மாறும் கணக்குகள் என்கிற ஜெயஸ்ரீ கதை முதன் முறையாக விருட்சத்தில் கதை எழுதி உள்ளார். இன்னும் பலருடைய கதைகளை உரிய நேரத்தில் பிரசுரிக்க முடியவில்லை. எல்லோரும் கதைகளை பத்து பக்கங்களுக்குக் குறைவில்லாமல் எழுதி அனுப்புகிறார்கள். நான்குப் பக்கங்களுக்குள் கதையோ கட்டுரையோ வரவேண்டும். பலர் கவிதைகள் அனுப்புகிறவர்கள் ஒரே ஒரு கவிதைதான் ஒவ்வொருவரும் அனுப்ப வேண்டும். அப்படி அனுப்பினால் அதிகமாகப் படைப்புகளைச் சேர்க்க முடியும். படைப்பை அனுப்புவர்கள் அந்தப் படைப்புகள் விருட்சத்தில் பிரசுரமாகும் வரை வேறு எங்கும் அனுப்பப் போவதில்லை என்று உறுதி மொழி எடுத்துக்கொள்ள வேண்டும். பா.ராகவன், ஸிந்துஜா, தொடர்ந்து தஞ்சாவூர் கவிராயர் பேட்டிகளை வெளியிட்டிருக்கிறேன். மிலான் குந்தரா வின் ஒரு பேட்டியை வெளியிட்டிருக்கிறேன். அய்யப்பப் பணிக்கரின் மலையாளக் கவிதைகளை மொழிபெயர்த்திருப்பவர் தி.இரா மீனா அவர்கள். இதோ பத்திரிகையில் வெளிவந்த படைப்பாளிகளின் பட்டியல். 1. பத்து கேள்விகள் - பத்து பதில்கள் - தஞ்சாவூர் கவிராயர் 2. செல்லத்தாயிக்குப் பேய் பிடித்துவிட்டது - சிறுகதை - சோ.சுப்புராஜ் 3. கறுப்பு அஞ்சல் அட்டைகள் (ஸ்வீடன் நாட்டுக் கவிஞர் டோமஸ் ட்ரான்ஸ்ட்ரோமெர்) 4. நேயம் - சிறுகதை - ஸிந்துஜா 5. கொரோனா கேட் - கவிதை - அழகியசிங்கர் 6. கதைக் கொலைகள் - கட்டுரை - கிருபானந்தன் 7. ஒரு கவிதை - அழகியசிங்கர் 8. மாறும் கணக்குகள் - சிறுகதை - ஜெயஸ்ரீ 9. 4 கவிதைகள் - பானுமதி ந 10. மலையாளக் கவிதைகள் - அய்யப்பப் பணிக்கர் 11. மிலான் குந்தரே - நேர்காணல் - ராம் முரளி 12. ஸ்..ஸ் சுரங்கம் 2 - சிறுகதை - சிறகு இரவிச்சந்திரன் 13. தீக்குளி - கவிதை - ந. பிச்சமூர்த்தி 14. உறைபனி - சிறுகதை - வசந்த தீபம் 15. நானும் பராசக்தியும் நலம் - சுப்பு 16. கவிதை வாசிக்கும் கூட்டங்கள் - கவிதை - அழகியசிங்கர் என்பது

Comments