அழகியசிங்கர்
நான் வணங்கும் ஆசிரியர்கள் என்று யாருமில்லை
நான் சந்தித்த ஆசிரியர்கள் உண்டு
ஒருவர் பொய் சொல்லியே பழக்கப்பட்டவர்
என் ஆசிரியராக இருந்தார்
குடும்பத்தில் நடப்பதை மாணவர்களிடம்
பகிர்ந்து கொள்ளும் அசட்டு ஆசிரியரும் உண்டு
மாணவர்களைக் கிண்டல் செய்தே
பழக்கப்பட்ட பெண் ஆசிரியரும் உண்டு
ஆனால்
அவர்களிடமிருந்து இதெல்லாம்
கற்றுக்கொள்ளக் கூடாதென்று கற்றுக்கொண்டேன்
கல்லூரியை விட்டு வெளியே வந்தவுடன்தான்
நான் பார்க்கும் எல்லோரிடமும் எதாவது
கற்றுக்கொள்கிறேன்.
இன்னும் கூட...
Comments