அழகியசிங்கர்
வருகிற 11ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று விருட்சம் சார்பில் சூம்
மூலம் 16வது கவிதை வாசிக்கும் கூட்டம் நடைபெற உள்ளது. கவிதை வாசிக்கும்
கூட்டம் ஒரு பக்கம் இருந்தாலும், பாரதியை ஞாபகப்படுத்தும் விதமாக இந்த
மாதம் முழுவதும் வெள்ளிக்கிழமை அன்று பாரதி அன்பர்கள் பாரதியைக் குறித்து
உரை நிகழ்த்த உள்ளார்.
இந்த வாரம் உரை நிகழ்த்த இசைவு தந்துள்ளவர் கடற்கரய் மத்தவிலாச அங்கதம். 'பாரதியைத் தூக்கிச் சுமந்த கல்கி' என்ற தலைப்பில் அவர் உரை நிகழ்த்துகிறார்.
வழக்கம்போல் இந்த முறையும் கவிதை வாசிப்புக் கூட்டம் நடைபெறுகிறது.
இக் கூட்டத்திற்கு எல்லாக் கவிஞர்களும் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன்.
ஒவ்வொருவரும் 2 நிமிடத்திற்குள் கவிதை வாசிக்க வேண்டும். நீளமான கவிதைகளைத் தவிர்க்க வேண்டும்.
எந்தத் தலைப்பிலும் கவிதை வாசிக்கலாம். சூம் கூட்டத்தில் நேரிடையாக உங்கள் பெயர்களைப் பதிவு செய்து கொண்டு கவிதையை வாசிக்கத் தொடங்கலாம்.
இதுவரை பங்கு பெற்றவர்கள் கலந்து கொள்ளும்போது வாசிக்காத கவிதையை வாசிக்கவும்.
கவிதையை வாசிக்கும்போது உச்சரிப்பைச் சரியாகக் கவனித்து உச்சரிக்கவும். அரசியல், மத சம்பந்தமான கவிதைகளை வாசிப்பதைத் தவிர்க்கவும். கவிதையில் ஆபாசத்தைத் தவிர்க்கவும்.
Virutcham Poetry Meeting
Comments