Skip to main content

Posts

Showing posts from November, 2009

காக்கை கூடு

எங்கள் வீட்டுமுன் வேப்பமரத்தில் புதிதாக இரண்டு காக்கைகள் கூடுவைத்துள்ளன . காக்கைகளினால் பொழுதுகளில் சங்கடமும் சமயங்களில் பலன்களும் வரலாம் . நாளை மறுநாள் வரப்போகும் பங்காளிகளை இன்றே கரைந்து காட்டிக்கொடுத்துவிடும் . தப்பித்தவறி எச்சமிட்டுவிட்டாலும் நல்ல அதிஷ்டக்காரன் என்றொரு பட்டம் கிடைக்கும் . கூட்டிலிருந்த கருவேல முள் விழுந்து முற்றம் முழுவதும் குப்பையாகிரதென்பாள் . துணி தொவைத்து ஒன்றைக்கூட மரத்தடியில் காயபோட முடியவில்லை என்பாள் . காக்கை என்பதை அருவருப்பாய் மட்டுமே பார்ப்பவளுக்கு எப்படி புரியவைப்பது ? இந்த கூடு நிறைய நேரங்களில் இருக்கும் வரை சொறுவைத்த அம்மையை நினைவுபடுத்துகிறதென்பதை.

இரண்டு கவிதைகள்

கண்ணீர் அஞ்சலி நான்கு நாட்கள் முன்பு தெருமுனை மின்சார கம்பத்தில் அவரை பார்த்தேன் கண்ணீர் அஞ்சலி எழுத்துகளுக்கு கீழே இரண்டு கண்கள் படம் யாருடையதென்று தெரியவில்லை அழுதுக்கொண்டிருந்தன கண்களுக்கு கீழே சோகமாக பார்த்துக் கொண்டிருந்தார். புகைப்படத்திற்கு கீழே வருந்துகிறோம் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் எ‌ன்று அச்சாகி இருந்தது. இரண்டாவது நாள் குடும்பத்தினரை காணவில்லை. நண்பர்கள் மட்டும் உட‌ன் இருந்தனர் மூன்றாவது நாள் நண்பர்களை மாடு நக்கி கொண்டிருந்தது. நான்காவது நாள் கிழிந்து தொங்கிக்கொண்டிருந்தார் யாரோ ஒருத்தன் சிறுநீர் அடித்துக்கொண்டிருந்தான் இறுதி வரை அழுதுக்கொண்டிருந்தன இரண்டு கண்கள் யாருடையதென்று தெரியவில்லை ஒருநாள் அதுவும் மறைந்து விட்டது விசாரித்தல் எங்கு பார்த்தாலும் அன்புடன் விசாரிப்பார் எனது நண்பர் சினிமா தியேட்டரில் விசாரிப்பார் என்ன படம் பார்க்க வந்தீங்களா? மருத்துவமனையில் விசாரிப்பார் என்ன டாக்டரை பார்க்க வந்தீங்களா? துணிக்கடையில் விசாரிப்பார் என்ன துணி எடுக்க வந்தீங்களா? கோயிலில் விசாரிப்பார் என்ன சாமி கும்பிட வந்தீங்களா? ந‌ல்ல மனுசன்.நெஞ்சுவலியாம். ஒருநாள் இறந்தும்விட்டார் ஒர

எதையாவது சொல்லட்டுமா....7

கடந்த 2 வாரங்கள் கும்பகோணத்தில் சுற்றிக்கொண்டிருந்தேன். காலையில் மயிலாடுதுறையிலிருந்து கும்பகோணம் சென்றால் வர இரவு ஆகிவிடும். திரும்பவும் காலையில் மயிலாடுதுறையிலிருந்து. நிச்சயமில்லாத பிழைப்பு என்பார்களே அப்படித்தான் இருந்தேன். ஆனால் வண்டியில் ஒரு மணி நேரப் பயணத்தில் தினமும் இந்துவையும் தினமணியையும் படித்துவிடுவேன். சால்மன் ரிஷ்டியின் ஷாலிமர் தி க்ளௌன் என்ற புத்தகத்தைப் படித்துக்கொண்டு வருகிறேன். புத்தகம் படிப்பதைத் தவிர வேறு பொழுதுபோக்கு இல்லை. புத்தகம் படிப்பதும் ஒரு அற்புதமான ஒன்றாகத்தோன்றுகிறது. சமையல் அறையில் சில புத்தகங்கள் என்ற பெயரில் புத்தக விமர்சனங்கள் பல எழுதியிருக்கிறேன். திரும்பவும் எழுத ஆரம்பித்து விடுவேன் என்று தோன்றுகிறது. திங்கள் கிழமையிலிருந்து மயிலாடு துறை சீர்காழி என்று பிழைப்பு நிச்சயமாகிவிடும். ஆனால் கணினி சென்னையில்தான் இருக்கிறது. அங்கு லாப்டப் வாங்கலாமா இன்னொரு கணினி தயார் செய்யலாமா என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன். கணினியில் எழுத ஆரம்பித்து பேப்பரில் எழுதும் பழக்கம் போயே விட்டது. கணினி இல்லாமல் கை ஒடிந்ததுபோல் ஆகிவிட்டது. கடந்த 2 வார

போன்சாய் ம‌ர‌ நிழல்

இருள் பூத்துத் தொங்கும் போன்சாய் ம‌ர‌ நிழலிலிருந்து வெளிவ‌ருகிறாள் அர‌ளிப்பூ தேவ‌தை பாம்புக‌ளின் பாதைத் த‌ட‌த்தின் மேல் க‌ம‌ழ்ந்து கொண்டிருக்கிற‌து தாழ‌ம்பூ ம‌ண‌ம் ப‌ழைய‌ க‌விதையொன்றின் பெண்ணைப் பிசாசென மொழிபெயர்க்கிறார் காதல் மொழி தெரியா பெயர்ப்பாளன் எல்லாக் க‌விதைக‌ளிலும் தேவ‌தை என‌ அடித்து எழுதுகிறான் ஆசிரிய‌ சித்த‌ன்

விமான நிலைய வரவேற்பொன்றில்...

# பயணக் களைப்பாய் இருக்கலாம். போய்வரும் இடத்தில் நேர்ந்த உறவைப் பிரிந்ததால் இருக்கலாம். எதிர்கொண்டழைக்க எவருமற்று காணும் புது இடம் குறித்த மிரட்சியாய் இருக்கலாம். ஏக்கமும் சோகமும் கொண்டு எதிர்பட்டவனை நோக்கி இதழ்க்கோடியில் தவழ விட்டேன் புன்னைகையொன்றை. சற்றே சலனம் காட்டி பின் சமாளித்து போய்க்கொண்டிருந்தவன் நினைத்திருக்கக்கூடும் ஏதும் என்னைப் பற்றி. இறுக்கிப் பிடிக்கும் வாழ்க்கையில் இன்னொரு முகத்தின் சோகத்தை இம்மியாவது இடம்பெயர்க்க முடிந்ததென்ற நிம்மதி எனக்கு.

வேறோர் உலகம்

1. புன்னகை சாத்தியப்படாத முகங்களில் நடுவே கற்பாவையென மெளனபுன்னகையுடன் நின்றிருந்தாய் நீ. ஜென்மங்கள் கடந்த காத்திருப்பில் வார்த்தைகள் தேவையின்றி தழுவிக்கொண்டழுதோம். ப்ரியங்கள் சுமந்துவந்த தேவதை குழந்தைகள் நிறைந்த உலகிற்குள் நம்மை அழைத்துச் சென்றாள். மீண்டும், எதிரெதிரே நிற்கும் பொம்மைகளானோம். 2. இடக்கை உடைந்து தனியே விழுந்தபோது உன் கண்களை கண்டேன். துயர்மிகுந்த பார்வைக்குள் உன் வலியை மறைத்துக்கொண்டிருந்தாய். யாருமற்ற பொழுதொன்றில் அருகில் வந்தமர்ந்தது தோள்களில் சாய்ந்துகொண்டாய். பின், அகன்று சென்றாய். பொம்மையுலகில் பிறவி கொண்டதற்காக உடைந்தழுதேன் நான்.

நாவிஷ் செந்தில்குமார்

உனக்குமட்டுமொரு ரகசியம் சொல்கிறேன் என்றொருவன் காதில் சொன்னதை எனக்குமட்டும் சொல்வதாகச் சொல்கிறான் இன்னொருவன்... ரகசியம் என்ற வார்த்தையிலுள்ள புள்ளிக்கும் நாளும் கசிகின்ற எங்கள் வீட்டு தண்ணீர்த்தொட்டியிலுள்ள ஓட்டைக்கும் நானறிந்து வித்தியாசமேதும் இல்லை