Skip to main content

Posts

Showing posts from February, 2021

என் கதைப்புத்தகமும் சுஜாதாவும்

  27.02.2021 துளி - 173 அழகியசிங்கர் சுஜாதாவிடம் ஒரு நல்ல குணம் உண்டு. கவிதையைப் படித்தாலும் சரி, சிறுகதையைப் படித்தாலும் சரி ஒரு வரி எழுதி விடுவார். மனதார வாழ்த்துவார். '406 சதுர அடிகள்' என்ற என் சிறுகதைத் தொகுப்பை சுஜாதாவிடம் கொடுத்தேன். அந்த மாதம் கணையாழியில் அந்தப் புத்தகத்தைப்பற்றி எழுதியிருந்தார். ஒரு வரி கூட எழுதிவிட்டார். அழகியசிஙகரே கேட்டாரே என்று நான் என் கருத்துகளைச் சொன்னேன் என்று. என்னடா இது இப்படி எழுதிவிட்டாரே என்று தோன்றியது. சுஜாதாவிடம் கொடுத்தால் நிச்சயம் படித்துவிட்டு எழுதுவார். அதன் மூலம் விளம்பரம் கிடைக்கும் என்று எண்ணித்தான் கொடுத்தேன். 406 சதுர அடிகள் புத்தகத்தில் 406 சதுர அடிகள் என்ற குறுநாவலைச் சிலாகித்து எழுதவில்லை. ஆனால் லாம்பி என்ற சிறுகதையைச் சிலாகித்து எழுதினார். பிப்ரவரி 1998ல் கடைசிப் பக்கத்தில் வந்திருந்தது. அப்போது அசோகமித்திரன் சுஜாதா எழுதியதைப் படித்து விட்டு ஒரு வார்த்தை சொன்னார். ஏன் நீங்கள் அவரைப் பார்த்துக் கொடுத்தீர்கள் என்று.

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - தொகுதி - 2 - 153

  மனதுக்குப் பிடித்த கவிதைகள் - தொகுதி - 2 - 153 அழகியசிங்கர் வீட்டுக்குள் வீடுகள் ஆர்.புருஷோத்தமன் மூலை முடுக்குகளெங்கும் நூலாம்படை அமைத்து மௌனமாய் அமர்ந்திருந்தன சிலந்திகள் வாசல் சரிவின் ஓடுகளின் பொந்துகளில் கிரீச்சிட்டு நுழைந்தன சிட்டுக்குருவிகள் உள்மண்ணை வெளித்தள்ளி அங்குமிங்குமாய் எறும்புகள் சில இன்று புதிதாய் இருக்கும் இடத்திற்குச் “ சொந்தக்காரன் யாரென்று குழம்பியிருந்த போது வீட்டுக்கு வரியென்றும் விளக்குகள் கட்டணமென்றும் ஒலிபெருக்கியில் சொல்லியபோதுதான் அறிந்து கொண்டேன் இருக்கும் வீடு எனதென்று நன்றி : மரங்களுக்காகவும் சில வீடுகள் - ஆர். புருஷோத்தமன் - விடியல் வெளியீடு, 6 கைலாசபுரம், முதல் தெரு, மேற்குத் தாம்பரம், சென்னை 600 045 - பக்: 80 - விலை: ரூ.25 - பதிப்பாண்டு: 2002 Like Comment Share Comments

40வது கவிதை வாசிக்கும் நிகழ்ச்சி

அழகியசிங்கர் சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 40வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி - 27.02.2021 - சனிக்கிழமை மாலை 6.30மணிக்கு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த முறை கவிதையின் பொது தலைப்பாக ம்..ம்.. என்ற தலைப்பில் கவிதை வாசிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். கொடுக்கப்பட்ட தலைப்பில் வாசிக்க முடியாவிட்டால் உங்களுக்கு விருப்பமான தலைப்பில் வாசிக்கலாம். வழக்கம்போல் மற்றவர்கள் கவிதைகளை வாசிக்கலாம். மொழிபெயர்ப்புக் கவிதைகளையும் வாசிக்கலாம். ஒவ்வொரு கவிதையும் 20 வரிகளுக்கு மேல் போகக் கூடாது. ஒருவார் ஒரு கவிதைதான் வாசிக்க வேண்டும். முதல் சுற்றில். கவிதைவாசித்தப்பிறகு அடுத்ததாக வாசிக்க உள்ள ஒருவர் உங்கள் கவிதையைக் குறித்து அபிப்பிராயம் கூறுவார். (குறைந்த நிமிடங்களில்). இது புதுமையான முயற்சி. எல்லோரும் பங்கு கொள்ள வேண்டும். Topic: சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 40வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி Time: Feb 27, 2021 06:30 PM India Join Zoom Meeting https://us02web.zoom.us/j/85019130324?pwd=ZU9OWmJmeDByOS9zS1BsVTRjKzZvQT09 Meeting ID: 850 1913 0324 Passcode: 067610

ஒரு கதை ஒரு கருத்து

மா. அரங்கநாதனின் பூசலார் அழகியசிங்கர் இந்தக் கதை சற்று வித்தியாசமானது. இந்தக் கதையின் தலைப்பு எந்தவிதத்தில் கதையுடன் பொருந்தி வருகிறது என்பது தெரியவில்லை. நான் பார்த்தவரை கதையிலிருந்து கதையை வெளியேற்றுவதுதான் மா.அரங்கநாதனின் உத்தி என்று தோன்றுகிறது. பூசலார் என்ற கதையைப் படிப்பவருக்குப் பல சந்தேகங்கள் எழும். ஏன் மா. அரங்கநாதன் கதைகளில் பல சந்தேகங்கள் வரத்தான் வரும். முத்துக்கறுப்பன் என்ற பெயர் இவர் கதைகள் முழுவதும் நிரம்பி வழிகிறது. 23 வயது இளைஞன் முத்துக்கறுப்பன். கல்யாணம் செய்துகொள்ளப் போகிறேன் என்று அலுவலகத்தில் சொல்லிவிட்டு அவன் ஊருக்கு வருகிறான். தாயார் எதுவும் தெரிவிக்கவில்லை. கடைத்தெருவில் மாமனைப் பார்க்கிறான். மாமா வெளிப்படையாகச் சொல்லி விடுகிறார். மாமன் மீது மரியாதை அதிகம். உறவு முறையாக அவன் பேசும்போது இன்னும் கொஞ்சம் பேச மாட்டாரா என்று தோன்றும்.அவன் ஊருக்கு வந்ததே அவர் பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதற்காகத்தான். ஆனால் கடைத்தெருவில் மாமாவைப் பார்த்தபோது அவர் பெண் வடிவை வேறு இடத்தில் திருமணம் செய்ய முடிக

39வது விருட்சம் கவிதை வாசிக்கும் நிகழ்ச்சி

அழகியசிங்கர் சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 39வது  கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி 20.02.2021 அன்று சனிக்கிழமை மாலை 6.30மணிக்கு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.   20க்கும் மேற்பட்ட கவிஞர்கள் சிறப்பாக கவிதை வாசித்தார்கள். கவிதையை எப்படி உச்சரிப்பது என்பது குறித்து கவிஞர் தமிழ்மணவாளன் வாசித்துக் காட்டினார்.  அதன் ஒளிப்பதிவை இங்கு வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.  

உஷாதீபனின் 'உறங்காக் கடல்'

  21.02.2021 துளி - 172 அழகியசிங்கர் இன்று மதியம்தான் வந்தோம்.   பெண்வீட்டிலிருந்து  கிளம்பி.  பெண் வீடு  மடிப்பாக்கத்திலிருக்கிறது .  மடிப்பாக்கத்தில் சில நண்பர்கள்/உறவினர்கள் இருக்கிறார்கள்.   உஷாதீபன்   பக்கத்திலிருக்கிறார் .  இன்று அங்கிருந்து  கிளம்பியபோது  உஷாதீபன்  வீட்டிற்குச் சென்று விடைபெற்றுக் கொண்டேன்.  மாம்பலம் வீட்டிற்கு வந்தபிறகு ஒரு பெரிய பெருமூச்சு என்னை விட்டு இன்னும் அகலவில்லை.  என்றுடைய இரண்டு புதியப் புத்தகங்களை அவருக்குக் கொடுத்தேன்.  அவர் தன்னுடைய  'உறங்காக் கடல்'  என்ற புத்தகத்தை என்னிடம் கொடுத்தார்.   எனக்குத் தெரிந்து முகநூலில்  சிலர் புத்தகங்களைப் பற்றி எழுதிக்கொண்டேயிருக்கிறார்கள்.  அதில்  உஷாதீபனும்  ஒருவர். அவர் கொடுத்த ‘ உறங்காக்  கடல்'  புத்தகமும் அப்படித்தான். 15 எழுத்தாளர்களின் படைப்புகளைப் பற்றி கட்டுரைகள் எழுதி உள்ளார். ஒவ்வொரு கட்டுரையும் இரண்டரை அல்லது மூன்று பக்கங்களில் முடித்து விடுகிறது.   இனிமேல்தான் படிக்க வேண்டும்.  புரட்டிப் பார்த்தேனே தவிர இன்னும் படிக்கவில்லை. நான் அவருக்குக் கொடுத்த ஒரு கதை ஒரு கருத்து என்ற என்

38 வது கவியரங்கம் - காதலர் தினத்தை முன்னிட்டு காதல் கவிதைகள்

விருட்சம் கவிதைகள் வாசிக்கும் கூட்டம் சூம் வழியாக   13.02.2021 அன்று 6.30 மணிக்கு நடந்துள்ளது. அதன் ஒளிபரப்பு. - அழகியசிங்கர். Reply Forward

சூம் மூலமாக விருட்சம்

  சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 37வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி. 06.02.2021 - சனிக்கிழமை மாலை 6.30மணிக்கு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. பெய்யெனப் பெய்யும் மழை என்ற ஈற்றடியை வைத்து கவிதை புனைய உள்ளார்கள். மரபுக் கவிதை எழுதுபவர்களும் புதுக்கவிதை எழுதுபவர்களும். நீங்கள் கலந்துகொண்டு நிகழ்ச்சியைச் சிறப்பிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். Join Zoom Meeting https://us02web.zoom.us/j/85195193964... Meeting ID: 851 9519 3964 Passcode: 880833

கவிதையும் ரசனையும் - 10

  அழகியசிங்கர் நான் இதை எழுதும்போது என் முன்னால் ஏகப்பட்ட கவிதைத் தொகுதிகள் படிக்கக் கிடைக்காமலில்லை. இதைப்பற்றியெல்லாம் பக்கம் பக்கமாக எழுத வேண்டுமென்று தோன்றுகிறது. ஒரு புத்தகத்தின் முழுப் பகுதியை எழுதவில்லை. ஒரு சில கவிதைகளைக் குறிப்பிட்டுத்தான் எழுதுகிறேன். என்னால் எதை ரசிக்க முடிகிறது என்று வரிசைப்படுத்த விரும்புகிறேன். அதே சமயத்தில் விட்டுப்போன கவிதைகளை இன்னொரு சந்தர்ப்பத்தில் குறிப்பிடலாமென்று தோன்றுகிறது. மணல்வீடு பதிப்பகம் சிறப்பாகக் கொண்டு வந்த ஜபூஜ்ய விலாசம்ஹ என்ற நெகிழன் கவிதைத் தொகுதியை எடுத்துக்கொள்வோம். அதில் பல கவிதைகள் சிறப்பாக எழுதப்பட்டுள்ளன. உண்மையான உணர்வுடன் எழுதப் பட்டிருக்கின்றன. நற்பெயர் என்ற கவிதையை எடுத்துக்கொள்வோம். ஒரு நாயைப் பற்றி கவிதை எழுதியிருக்கிறார். மிட்டு என்ற நாயைப் பற்றி. இங்கே அந்தக் கவிதையைக் குறிப்பிடுகிறேன். நற்பெயர் வாசலில் புதிதாக ஒரு ஆளைப்பார்த்துவிட்டால் போதும் மிட்டுவுக்கு ஒரே குஷி குரைப்பான் குரைப்பான் வாய் வலிக்கக் குரைப்பான் பழகிய முகங்கள் அவனிருப்பை இன்மைக்குத் தள்ளுகின்றன மேலுமவை ஒருபோதும் நற்பெயர் வழங்குவதில