Skip to main content

Posts

Showing posts from November, 2012
தோற்பாவைக்கூத்து சின்னப்பயல்   புதிதாக வெள்ளையடித்த சுவரில் நகத்தை வைத்துக்கீறும்போது ஏற்படும் மனக்குறுகுறுப்பை உள்ளூர ரசிப்பது , மண்ணெண்ணெய் பாட்டிலைத் திறந்து அதன் மணத்தை தான் மட்டும் நுகர்வது , ஆகக்கூடுதல் சிரமத்திற்குப்பின்னர் கைவிரல்களால் பிடித்த வண்ணத்துப்பூச்சியின் நிறத்தை உற்றுநோக்குவது , இப்போது அடிக்கப்போகும் பெரிய அலை கண்டிப்பாகத் தன் காலை நனைத்தே தீரும் என நினைக்கையில் அது அருகில் கூட வராமல் போவதை ரசிப்பது , தரைமட்டமான கட்டிட இடுபாடுகளிலிருந்து சிறு சிராய்ப்பு கூட இல்லாமல் மீண்டுவருவது , சிறு கண்ணாடிக்குடுவையின் உள்ளுக்குள் நீந்தும் மீனை வெளியிலிருந்து ஏதும் செய்ய இயலாது பார்க்கும் பூனை மனத்துடன் சில சமயங்களில் இருப்பது , எனக்கென்னவோ இவையெல்லாவற்றிற்கும் காதலுக்கும் தொடர்பிருக்கிறது என்பது போலத்தான் தோணுகிறது . -
  எப்போதும் உனக்குத் தேவை அமைதியான மனம்                                                                                                                                     - நிஸர்கதத்தா மஹாராஜ்                                                                                                                தமிழில் : அழகியசிங்கர்)       கேள்விகேட்பவர் : நான் நன்றாக இல்லை.  ரொம்பவும் பலவீனமாகத் தெரிகிறேன்.  நான் என்ன செய்வது?   நிஸர்கதத்தா மஹாராஜ் : யார் நன்றாக இல்லை. நீயா அல்லது உன் உடலா?  கே.கே : என் உடலாகத்தான் இருக்கும்.  நிஸர் : நீ உன் உடல் நன்றாக இருக்கும்போது மகிழ்ச்சி அடைகிறாய்.  உன் உடல் நன்றாக இல்லாதபோது வருத்தப்படுகிறாய்.  ஒருநாள் வருத்தமாகவும், ஒருநாள் மகிழச்சியாய் யார் இருக்கிறார்கள்.  கே.கே : மனம்தான்  நிஸர் :  யாருக்குத் தெரியும்?  மனதின் மாற்ற நிலை.  கே.கே : மனதிற்கு.  நிஸர் :  மனம்தான் தெரிந்தவர்.  ஆனால் யாருக்குத் தெரியும் தெரிந்தவரை.  கே.கே : தெரிந்தவருக்கு அவரைப் பற்றியே தெரியுமா?  நிஸர் : மனம் தொடர்பு அறுந்து போய்விடுகிறது.  திரும்ப திர
அசோகமித்திரன்     ஒவ்வொரு முறையும் எழுத உட்கார்ந்தவுடன் என்ன ezஎழுதுவது என்று என்னையே கேட்டுக்கொள்வேன். குழப்பமாகத்தான் இருக்கும். பல முறை முழுத்தாள்கள் எழுதி எழுதியதை ஒதுக்கி வைத்திருக்கிறேன்.   ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு நான் அடிக்கடி சந்திக்க நேர்ந்த ஒரு சாமியாருக்குப் புனைகதை மீது மிகுந்த ஆர்வம். நான் படிக்கவேண்டும் என்று அவரே நூலகங்களுக்குச் சென்று ஸ்டீஃபன் ஸ்வெய்க், காஃப்கா ஆகியோருடைய நூல்களை வாங்கி வந்து என்னைப் படிக்க வைத்தார். எழுத யோசனை ஏதாவது தோன்றியவுடனே அதைக் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும் என்பார். காலம் காலமாக எழுத்தாளர்கள் பல உத்திகள் கையாண்டிருக்கிறார்கள். அதில் குறிப்புகள் எழுதி வைப்பதும் ஒன்று.நான் அன்றிலிருந்து கையில் கிடைத்த தாள்களிலெல்லாம் குறிப்புகள் எழுதி வைக்கத் தொடங்கினேன். ஆயிரம் குறிப்புகளுக்கு மேல் இருக்கும். எவ்வள்வு பேருந்துச் சீட்டுகள் பின்னால் எழுதியிருப்பேன்! பல குறிப்புகளும் தாள்களும் மக்கிக்கூடப் போய்விட்டன.இதில் யதார்த்தம் என்னவெனில் ஒன்றிரு முறைதான் குறிப்புகள் பயன்பட்டிருக்கின்றன.ஆனால் நான் குறிப்புகள் எழுதுவதை விடவில்லை.   குறிப
காஞ்சனா   புதுமைப்பித்தன் இரண்டொரு வருஷயங்களுக்கு முன் அயல் நாட்டு இலக்கியாசிரியர் ஒருவர் இந்தியாவுக்கு வந்திருந்தார்.   இந்திய பாஷை இலக்கியங்களைப்பற்றி அறிந்துகொண்டு போக அவருக்கு ஆசை.    இப்படி இங்கு வந்து சேருகிற மற்றவர்களைப் போல இல்லாமல் அவர், அவசரப்படாமல். நிதானமாக, நின்று, ஆர்வத்துடன், பல விஷயங்களை விசாரித்து அறிந்து கொள்ள முயன்றார்.  வசதியும், தகுதியுமுள்ளவராக இருந்தார் அவர்.   பல பேச்சுக்கிடையில் அவர் என்னை ஒரு கேள்வி கேட்டார்.   üüபொதுவாக இந்தியா பூராவிலுமே, சிறப்பாகத் தமிழில், பழமை என்று ஒன்று தப்ப முடியாத ஆட்சி செலுத்துகிறது என்பது தெளிவவாகத் தெரிகிறது.  எங்கள் இலக்கியங்களில் எங்கள் அனுபவம் என்னவென்றால்,  பழமையின் பிடி மென்னியைப் பிடிப்பதாகவும் இருக்கக் கூடாது ; நழுவிவிடக்கூடியதாகவும் இருக்கக் கூடாது ; இன்றைய இலக்கியத்தில்  பழமையின் சாயை இருக்கத்தான் வேண்டும்.  ஆனால், அதுவே புதுமைக்கு  அனுசரணையாகவும் இருக்க வேண்டும்.  பழமையே புரட்சிகரமானதாக இருக்கலாம். அந்தமாதிரி எழுத்து ஏதாவது உங்களிடையே உண்டா?"     "உண்டு" என்று சொல்லிவிட்டுச் சிறிது தயங்கினேன்
எனது குடும்பம் விடிகாலையிலெழுந்து வேலைக்குப் போகும் அப்பா இருள் சூழ்ந்த பிறகு வீட்டுக்கு வருவார் விடிகாலையிலெழுந்து வேலைக்குப் போகும் அம்மா இருள் சூழ்ந்த பிறகு வீட்டுக்கு வருவார் விடிகாலையிலெழுந்து பள்ளிக்கூடம் செல்லும் நான் பள்ளிக்கூடம் விட்டு வகுப்புக்கள் முடிந்து இருள் சூழ்ந்த பிறகு வீட்டுக்கு வருவேன் எமக்கென இருக்கிறது நவீன வசதிகளுடனான அழகிய வீடொன்று - தக்ஷிலா ஸ்வர்ணமாலி தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை
பந்தநல்லூரில் கிடைத்த பதவி உயர்வு     அழகியசிங்கர்   11.   நான் பந்தநல்லூருக்கு வந்த புதியதில் கிராமம் என்றால் நடுங்கிக் கொண்டிருந்தேன்.  நான் சென்னை போன்ற இடத்தில் இருந்து பழகியவன்.  கிராமம் என்றால் மனிதர்களே இருக்க மாட்டார்கள்.  சாப்பிட நல்ல ஓட்டல் கிடைக்காது.  நல்ல மருத்துவமனை இருக்காது என்றெல்லலாம் பல குறைபாடுகள் கிராமத்தில் உண்டு.  என் நண்பர் ராஜேந்திரன் ஏன் பந்தநல்லூரிலேயே தங்கலாமே என்ற அறிவுரையை நான் ஏற்றுக்கொள்ளவில்லை.  கிராமாத்தைச் சுற்றி அருகாமையில் இருக்கிற ஒரு நகரத்தைத்தான் நான் பெரிதும் நம்பினேன்.  முதலில் சாப்பாடு.  இது பெரிய பிரச்சினை.  என் வீட்டில் நான் வெந்நீர் கூட சுடவைத்துப் பழகாதவன்.    ஆனால் பந்தநல்லூர் என்ற ஊர் கும்பகோணத்திற்கும், மயிலாடுதுறைக்கும் நடுவில் உள்ளது.  மயிலாடுதுறை 28 கிலோமீட்டர் தூரத்தில் இருந்தது.  கும்பகோணம் 30 கிலோமீட்டர் மேல் இருந்தது.  நான் கும்பகோணத்தில் இருப்பதைவிட மயிலாடுதுறையில் இருப்பதையே பெரிதும் விரும்பினேன்.  காரணம் என் உறவினர்கள் அங்கு இருக்கிறார்கள்.  எனக்கு உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டால் அவர்கள் உதவி செய்வார்கள்
பந்தநல்லூரில் கிடைத்த பதவி உயர்வு     அழகியசிங்கர் 10.     நான் இங்கு வந்தபிறகு அழகியசிங்கர் என்னைப் பற்றி சில கவிதைகள் எழுதினார்.  ஒரு கவிதை பந்தநல்லூரில் கிடைத்த பதவி உயர்வு என்ற கவிதை.  அந்தக் கவிதை எழுதும்போது நான் என் பெண்ணிற்குத் திருமணம் ஏற்பாடு செய்திருந்தேன்.  அந்தத் தருணத்தில் நான் சென்னையில் இல்லாமல், மயிலாடுதுறையில் அல்லல்பட்டுக் கொண்டிருந்தேன்.  என் பெண் அப்போது சொன்ன ஒரு விஷயம் எனக்கு உறுத்தலாக இருந்தது.  ''ஏன்ப்பா..என் கல்யாணம் நடக்கும்போதுதான் நீ அங்கே போகவேண்டுமா?''  சொல்லும்போது அவள் குரலில் வருத்தம். உண்மையில் பெண்ணின் திருமணம்போது நான் சென்னையில் இருந்தால் பலவிதங்களில் நான் பயன்படுவேன்.  திருமணம் என்கிற பதைப்பு ஒருவரை ஒருவர் பார்க்கும்போது குறையும் வாய்ப்பு அதிகம். என் விதி அந்தச் சமயத்தில் நான் அங்கில்லை.  பின் திருமணத்திற்கு லீவு.  அது கொடுப்பார்களா என்ற அச்சம் என்னிடம் இருந்துகொண்டே இருந்தது.  எனக்கு ஒரு மாதமாக லீவு வேண்டியிருக்கும்.  அதற்கான முனைப்பை செய்து கொண்டிருந்தேன். அழகியசிங்கர் என்னைக் கிண்டல் செய்ததுபடி, லீவு கிடை

காக்கைச் சிறகினிலே (சிறுகதை)

                                                                   செல்வராஜ் ஜெகதீசன்       அ தற்குள் அப்படியொன்று இருக்குமென்று சத்தியமாக நான் எதிர்பார்க்கவே இல்லை . அதன் விளைவாக நடந்த அத்தனை நிகழ்வுகளையும் நினைவுக்கு கொண்டு வந்து போட்டது , மைக்கேல் சாரை , அவரின் மனைவியோடு எதிர்கொள்ள நேர்ந்த இந்த மாலைப் பொழுது . தம்பதி சமேதராய் எதிரில் கடந்து போனவருக்கு என்னை அடையாளம் தெரியவில்லை . அருகில் போய் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கலாம் . ஒரு பதினைந்து வருடத்திற்கு முன் , தன் வீடே பழியாய்க் கிடந்தவனை , இப்போது அவருக்கு நினைவில் இருக்குமா ?   அ ப்போது நான் ஏழாவது படித்துக் கொண்டிருந்தேன் . மைக்கேல் சார் எங்கள் பள்ளிக்கு வந்திருந்த புது ஹெட் மாஸ்டர் . சொந்த ஊர் காஞ்சிபுரம் பக்கம் ஒரு கிராமம். வேலையில் சேர்ந்த புதிதில் சென்னைக்கு த ினமும் பஸ்சில் வந்து போய்க் கொண்டிருந்தார். ‘ தில்லு முல்லு ’ படத்தில் வரும் ரஜினிக்குமீசை வைத்த மாதிரி இருப்பார் . எப்போதும் வெள்ளை பாண்ட் வெள்ளை முழுக்கை சட்டையுடன் பளபளக்கும் பெல்ட் ஒன்று அணிந்துதான் அவரை பெரும்பாலும் காண
எதையாவது சொல்லட்டுமா....78   அழகியசிங்கர்    செப்டம்பர் மாதம் ஐந்தாம்தேதி என் மாமியார் சுப்புலட்சுமி அம்மாள் இறந்துவிட்டார்.  அவருக்கு வயது 89.  உலகில் எல்லா மூலைகளிலும் இப்படி எத்தனையோ சுப்புலட்சுமிகள் இறந்து போய்க்கொண்டே இருப்பார்கள். ஆனால் முதியவர்களை நாம் எப்படி நடத்துகிறோம் என்பது முக்கியமான விஷயமாக எனக்குப் படுகிறது.  ஒருமுறை ஜீ எஸ்டி ரோடில் உள்ள சாலை ஓரத்தில்  ஒரு முதியவர் யார் கவனிப்பின்றி கிடக்க, போலீஸôர் அவரை விஜாரித்தபோது யார் அவரை அப்படி தள்ளிவிட்டுப் போனார்கள் என்பதை அவர் சொல்ல மறுத்துவிட்டார்.  என் வீட்டில் கீழே இருந்த ஒருவர், அவர் அம்மாவைப் பார்த்துக்கொள்ள முடியாது என்ற நிலைக்கு வந்து அவரும் அவர் மனைவியும் சேர்ந்து தாம்பரத்தில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் கொண்டு போய் விட்டுவிட்டார்கள்.  அங்குபோய் சேர்ந்த சில வாரங்களுக்குள் அவர் தாயார் இறந்து விட்டார்.  அம்மாவைப் பார்த்துக்கொள்ள முடியாத  கொடுமையாக இது என் மனதில் பட்டது.  அவர்கள் பார்த்துக்கொண்டிருந்தால், இன்னும் கொஞ்சநாட்கள் அவர் உயிரோடு இருந்திருக்கலாம்.  ஏன் நமக்கு இந்தப் பொறுமை ஏற்படுவதில்லை? நம்மை வளர்