Skip to main content

Posts

Showing posts from June, 2018

திருக்குறள் சிந்தனை 14

அழகியசிங்கர் ஒரு குறளை எடுத்து வாசிக்கும்போது அதற்கிணையாக நவீன கவிதை என்ன சொல்ல வருகிறது என்பதையும் சேர்த்து வாசிக்க ஆரம்பித்துள்ளேன்.  ஒன்றரை அடியில் திருவள்ளுவர் சில உண்மைகளைக் கூறுகிறார்.  சில குறள்கள் மூலம் போதிக்கவும் செய்கிறார்.  வான் சிறப்பு என்ற இரண்டாவது அதிகாரத்தின் மூலம், வானின் சிறப்பாக மழையைப் பற்றியும் அந்த மழை மாத்திரம் இல்லாவிட்டால் நாமெல்லாம் ஒன்றுமில்லை என்பது போல் பத்து குறள்கள் மூலம் சொல்லிக்கொண்டு போகிறார்.   ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும் வாரி வளம்குன்றிக் கால். இது மிக எளிமையான குறள் இது.  புயல்என்னும் என்கிறார். ஏன் இப்படிச் சொல்கிறார் என்று யோசித்தேன்.  வானத்திலிருந்து பெய்யும் மழை புயல்போல் வரவேண்டும் என்கிறார்.  அப்படி வராவிட்டால் உழவர்கள் ஏர் ஓட்டி நிலத்தை உழமாட்டார்கள் என்கிறார்.   இதில் அதிகாரத்தில் கூறப்பட்ட கவிதைகள் எல்லாம் மழையின் பெருமையைக் கூறும் குறள்கள்.  மழையின் பெருமையைப் பற்றி திருவள்ளுவர் தவிர வேற யாராவது கூறியிருப்பார்களா என்பது சந்தேகம்.  மேலே குறிப்பிட்ட குறளில் எனக்குப் பிடித்த வார்த்தை புயல்என்னும்.  வை

திருக்குறளும் நானும்

அழகியசிங்கர்  திருக்குறளும்  நானும் என்ற தலைப்பில் சி ராஜேந்திரன், ஐஆர்எஸ் அவர்கள் பேசிய கடைசி ஒளிப்பதிவை இப்போது வெளியிடுகிறோம்.  16.6.2016ஆம் அன்று இக் கூட்டம் நடந்தது.  

திருக்குறள் சிந்தனை 13

திருக்குறள் சிந்தனை 13 அழகியசிங்கர் திருவள்ளுவர் வான் சிறப்பு என்ற அதிகாரத்தில் மழையைப் பற்றி பலவிதமாக பாடல்களைப் புனைந்துள்ளார்.  உயிர் வாழ்வதற்கு முக்கியமான காரணியாக இருப்பது மழை.  மழை அதிகமாகப் பெய்தாலும், மழையே பெய்யாமல் இருந்தாலும் அதிக ஆபத்தில் மக்கள் அவதிப்படுவார்கள். விண்ணின்று பொய்ப்பின் விரிநீர் வியன்உலகத்து உள்நின்று உடற்றும் பசி.  கடல்சூழ்ந்துள்ள இவ்வுலகத்தில் மழை உரிய காலத்தில் பெய்யாமல் போய்விட்டால், உயிரினங்கள் எல்லாம் பசியால் வாடுவார்கள் என்கிறார் திருவள்ளுவர்.  இதற்கு ஒப்பாக மழையைப் பற்றி நவீன கவிஞர்களும் கவிதைகள் எழுதி உள்ளார்கள். üமழைத்துளிகள்ý என்ற தலைப்பில் ஞானக்கூத்தன் ஒரு கவதை எழுதி உள்ளார். எல்லாப் பொருள்களைப் போலவே இரவும் நேராகவும் வளைந்தும் முறுக்கிக் கொண்டு இருந்தது வளைந்த இரவுகள் பலவற்றை என் புழைக்கடையில் நான் வைத்திருக்கிறேன் கரும்பு போல நேரான இரவுகள் சிலவற்றை வாசலில் வைத்திருக்கிறேன் ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் அதுவும் பௌர்ணமி நாளென்றால் ஒரு வளைந்த இரவை நேராக்க முடியுமா என்

திருக்குறளும் நானும் - 2

அழகியசிங்கர்  திருக்குறளும்  நானும் என்ற தலைப்பில் சி ராஜேந்திரன், ஐஆர்எஸ் அவர்கள் பேசிய இரண்டாவது ஒளிப்பதிவை இப்போது வெளியிடுகிறோம்.  16.6.2016ஆம் அன்று இக் கூட்டம் நடந்தது.  நேற்று (27.06.2018) முதல் பகுதியைக் கேட்டு ரசித்திருப்பீர்கள்.  

திருக்குறள் சிந்தனை 12

அழகியசிங்கர் கடந்த பத்து நாட்களுக்கு மேலாக நான் திருக்குறளை இவ்வளவு தீவிரமாகப் படித்துக்கொண்டு வருகிறேன்.  இப்படியெல்லாம் நான் படித்ததில்லை.  மயிலாடுதுறையிலிருந்து சீர்காழி வரை பஸ்ஸில் அலுவல் விஷயமாகத் தினமும் போயக் கொண்டிருப்பேன்.  பஸ்ஸில் பதிந்திருக்கும் திருக்குறளைப் படிப்பேன்.  ஒரு குறளை அப்படிப் படிக்கும்போது வள்ளுவர் தவறாகச் சொல்கிறார் என்று கூடத் தோன்றியது.  அது புகழ் பற்றிய குறள்.  அது குறித்து கூட விருட்சம் பத்திரிகையில் எழுதினேன்.  ஆனால் வள்ளுவர் சரியாக சொல்லியிருக்க மாட்டார் என்பதை இப்போது  நம்பவில்லை.  அக் குறளை நான் திரும்பவும் படிக்க நினைக்கிறேன். அப்படிப் படிக்கும்போது முன்பு என் மனதில் தோன்றிய எண்ணம் மாறிவிடும்.    இப்போது இன்னொரு குறள்  துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்  துப்பாய தூஉம் மழை.  இந்தக் குறளில் மழை என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார்.  11வது குறளில் மழை என்ற வார்த்தையைச் சொல்லாமல் மழையைப் பற்றி சொல்கிறார்.   தாகம் தீர்ப்பதற்கு மட்டுமல்லாமல் உணவு உற்பத்தி செய்வதற்கும் மழை தேவை.   எப்படியென்றால் உணவு இல்லையென்றா

திருக்குறளும் நானும்

அழகியசிங்கர்  திருக்குறளும்  நானும் என்ற தலைப்பில் சி ராஜேந்திரன், ஐஆர்எஸ் அவர்கள் பேசிய முதல் பகுதி ஒளிப்பதிவை இப்போது வெளியிடுகிறோம்.  16.6.2016ஆம் அன்று இக் கூட்டம் நடந்தது.

திருக்குறள் சிந்தனை 11

அழகியசிங்கர் திருக்குறள் பற்றி ஏகப்பட்ட உரைகள் எழுதப்பட்டிருக்கின்றன. கையடக்க அளவில் எல்லோரிடமும் திருக்குறள் எளிதாகக் கிடைத்துவிடுகிறது. எல்லார் வீட்டிலும் திருக்குறள் புத்தகம் இல்லாமல் இருக்காது. பலரும் அவரவர்களுக்குப் பிடித்த மாதிரியான குறள்கள் அவரவர் வாழ்க்கை முறையைப் புரிந்துகொள்ள பயன்படுத்துகிறார்கள். திருக்குறளை உதாரணம் காட்டிப் பேசும் அரசியல்வாதிகளும் உண்டு. நான் எங்காவது பேசினால் திருக்குறளை உதாரணம் காட்டிப் பேச மாட்டேன். ஆனால் ஒரு குறளை மாத்திரம் ஞாபகத்தில் வைத்திருக்கிறேன். உண்மையில் நான் இங்கு தினமும் ஒரு குரலை எடுத்துப் படிப்பதென்பது, திருக்குறள் மூலம் பயணம் செய்ய விரும்புகிறேன். அதை முகநூல் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். அவ்வளவுதான். வான் சிறப்பு என்ற பெயரில் பத்து குறள்களை எழுதியிருக்கிறார். 10 குறள்கள் மூலம் திருவள்ளுவர் எப்படியெல்லாம் சொல்லியிருக்கிறார் என்பதைப் பார்ப்போம். வான்நின்று உலகம் வழங்கி வருதலால் தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று. 'வான்நின்று உலகம் வழங்கி வருதலால்' என்கிறார் திருவள்ள

விருட்சம் என்ற பெயர் இருந்தாலும்.......

அழகியசிங்கர் ஜாபர்கான்பேட்டை,  7, 3வது தெரு, ராகவன் காலனியில் அமைந்துள்ள கிளை நூலகத்தில் விருட்சம் இலக்கியச் சந்திப்பு கூட்டம் நடைபெறுகிறது.  விருட்சம் என்ற பெயர் இருந்தாலும் நண்பர்கள் சிலர் சேர்ந்து நடத்தும் கூட்டம் இது.  ஏற்கனவே வாசகசாலை என்ற அமைப்பு அசோக்நகர் வட்டார நூலகத்தில் வாரம் செவ்வாய்க் கிழமை கூடி கூட்டம் நடத்துகிறார்கள்.  எங்களுக்கும்  இலக்கியக் கூட்டம் நடத்த அனுமதி அளித்த    மாவட்ட நூலக அலுவலருக்கு   நன்றிகள் பல.   இதேபோல் பல நூலகக் கட்டடங்களில்  கூட்டங்கள்  நடத்த இலக்கிய ஆர்வலர் பலர் முயற்சி செய்ய வேண்டும்.  அப்போதுதான் இலக்கியம் செழித்து ஓங்கும்.  நாங்கள் நடத்தும் கூட்டம் மாதம் ஒரு முறை.  கடைசி வியாழக்கிழமை மட்டும்.  அதற்கான அழைப்பிதழை இணைத்துள்ளேன். எல்லோரும் வரும்படி கேட்டுக்கொள்கிறேன்.  

திருக்குறள் சிந்தனை 10

அழகியசிங்கர் இன்று நான் படித்தது பத்தாவது குறள். கடவுள் வாழ்த்து என்ற தலைப்பில் திருவள்ளுவர் பத்து குறள்களை அருளி உள்ளார். இந்தப் பத்து குறள்களிலும் ஒரு பொதுத் தன்மை உள்ளது. அறத்துப் பால் என்ற தலைப்பின் கீழ் இதெல்லாம் வருகிறது. அதாவது கடவுளை அடைவதுதான் அந்தப் பொதுத் தன்மை. அப்படி கடவுளை அடைவதற்கு என்னன்ன வழி முறைகள் என்பதையும் சொல்லியிருக்கிறார். அவர் கடவுள் என்பதை பொதுவாக சொல்லுகிறார். முதல் குறளில் அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் தோன்றும்போது தோன்றியது என்கிறார். இன்னொரு குறளில் விருப்பு வெறுப்பு இல்லாதவன் கடவுள் என்கிறார். ஒருவர் அப்படி விருப்பு வெறுப்பு இல்லாத நிலையில் இருக்க வேண்டும் என்கிறார். கடவுள் என்பதை விட ஒருவர் கடவுள் தன்மையை அடைய உள்ள வழி முறைகள் என்று இக்குறள்களைக் குறிப்பிடலாமென்று நினைக்கிறேன். உலகத்தில் உள்ள எல்லா மொழிகளிலும் திருக்குறள் மாதிரி ஒரு படைப்பு வந்திருக்கிறதா என்ற கேள்வியைக் கேட்க விரும்புகிறேன். அப்படி ஒன்று உருவாகவில்லை என்றுதான் எனக்குப் படுகிறது. எதாவது இருந்தால் அதை அறிந்துகொள்ளவும் ஆவலாக உள்ளேன். இதோ பத்

திருக்குறள் சிந்தனை 9

அழகியசிங்கர் நான் சிலருடைய புத்தகங்களை வாங்கி வைத்துக்கொள்வேன். படிக்கிறேனோ இல்லையோ புத்தகங்களை வைத்துக்கொண்டிருப்பேன்.  யார்யார் புத்தகங்களை அப்படி வாங்கி வைத்துக்கொள்வேன் என்பதை பட்டியிலிட விரும்புகிறேன்.  1. காந்தியைப் பற்றிய புத்தகங்கள் 2. பாரதியார் குறித்து எழுதப்படுகிற புத்தகங்கள் அல்லது பாரதியார் புத்தகங்கள் 3. ஜே கிருஷ்ணமூர்த்தி புத்தகங்கள் 4. பெரியார் புத்தகங்கள் 5. ரமணர் புத்தகங்கள் 6.  திருக்குறள் புத்தகங்கள்.  திருக்குறள் புத்தகங்களைக் கண்ணால் கண்டால் வாங்கி வைத்துக்கொள்வேன்.  ஆனால் புரட்டிக்கூடப் பார்க்க மாட்டேன்.  ஆனால் இன்று வரை என் வாழ்க்கையில் ஒரு குறளை நான் விடாமல் பின்பற்றிக்கொண்டு வருகிறேன்.  சமீபத்தில் திருக்குறளைப் பற்றி ஒரு கூட்டம் நடத்தினேன்.  என் மனநிலையில் பெரிய மாற்றம் ஏற்பட்டு விட்டது.  தினமும் ஒரு குறளை எப்படியாவது படித்துப் பார்ப்பது என்று. இதோ இன்றைய குறள். கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை.  எல்லா நல்ல குணங்களும் வல்லமைகளும் உள்ளவனாகிய இறைவனை உணர்ந்து அவனை வணங்காத மனிதனுடைய மூளை எந்த சிந்தனைச் சக்தியும் இல்லாமல் ப

வரப்பெற்றோம் பகுதியில்

விருட்சம் வெளியீடாக பத்மஜா நாராயணன் எழுதிய கவிதைத் தொகுதி யான 'பிணா'  பற்றி  சனிக்கிழமை தமிழ் இந்துவில் வரப்பெற்றோம் பகுதியில் செய்தி வந்துள்ளது.

திருக்குறள் சிந்தனை 8

அழகியசிங்கர் நேற்று அந்திப் பொழுதில் கலைந்த புத்தகங்களை என் போஸ்டல் காலனி நூலகத்தில் அடுக்கி வைத்துக்கொண்டிருந்த போது  என் கண்ணில் பட்டது இன்னொரு  திருக்குறள் புத்தகம்.  கோ பெரியண்ணனின் உரையில் இப்புத்தகம் வெளிவந்துள்ளது.  1,33,000 பிரதிகளுக்கு மேல் விற்பனையில் சாதனை புரிந்ததாகப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.  டாக்டர் சதாசிவன் திருமதி புஷ்பா சதாசிவம் அவர்களின் எண்பதாம் ஆண்டு விழாவிற்கு வருகை தந்தவர்களுக்கு இந்தத் திருக்குறள் புத்தகத்தை இலவசமாகப் பரிசளித்துள்ளார்கள்.  இந்த நிகழ்ச்சி 10.10.2011ல் நடந்துள்ளது.  இப்படி ஒளிந்துகொண்டிருக்கும் திருக்குறள் புத்தகங்களைத் தேடிக்கொண்டிருக்கிறேன். இன்றைய திருக்குறள் : அறவாழி அந்தணன் தான்சேர்ந்தார்க் கல்லால் பிறவாழி நீந்தல் அரிது. அறக்கடவுளாக விளங்கும் கடவுளின் திருவடிகளை நினைப்பவர்களைத் தவிர மற்றவர்கள் பொருள், இன்பம் ஆகிய வேறு  கடல்களைக் கடக்க மாட்டார்கள் என்கிறார் பெரியண்ணன்.  இந்தக் குறளில் அந்தணன் என்று ஏன் திருவள்ளுவர் குறிப்பிடுகிறார்.  அந்தணன் என்றால் கடவுளா? பிறவாழி நீந்தல் அரிது பிடித்த வரி. 

திருக்குறள் சிந்தனை 7

அழகியசிங்கர் காலையில் எழுந்தவுடன் ஒரு குறளைப் படிக்கலாம் என்று எண்ணிப் படித்துக்கொண்டு வருகிறேன். இப்படிப் படிப்பது நல்ல அனுபவமாக இருக்கிறது. சில குறள்கள் படிக்கும்போதே நேரிடையாகவே நமக்குப் புரியும். சில குறள்களைப் படிக்கும்போது உரையின் தயவு நமக்குத் தேவைப்படும். பரிமேலழகர் உரையைப் படித்துப் புரிந்துகொள்வதுதான் சிரமம் என்று என் நண்பர்கள் பலர் கூறி உள்ளார்கள். என்னிடம் பரிமேலழகர் உரை இல்லாததால் நான் முயற்சி செய்யவில்லை. இப்போது இந்தக் குறளைப் பார்க்கலாம். தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால் மனக்கவலை மாற்றல் அரிது தனக்குவமை இல்லாதான் யார்? கடவுள் என்கிறார் நாமக்கல் கவிஞர். அந்தப் பகவானைப் பணிந்தால்தான் நாம் ஓரளவு ஆசைகள் குறைந்து மனக்கவலை இல்லாமல் வாழலாம் என்கிறார் . நாவலரோ அறிவாற்றலில் சிறந்த சான்றோர் என்கிறார். அந்தச் சிறந்த சான்றோர் யார் என்று கண்டுபிடித்து ஆசைகளைக் குறைத்துக்கொண்டு அவர்கள் வழியில் சென்று மனக்கவலையைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என்கிறார். இதில் கடவுளையோ சான்றோரையோ நான் சொல்ல விரும்பவில்லை. மனக்கவலை இல்லாம

பத்து கேள்விகள் பத்து பதில்கள் .....17

இந்துமதி பேட்டியின் இரண்டாவது பகுதி நேற்று இந்துமதி பேட்டியின் முதல் பகுதியை வெளியிட்டிருந்தேன்.  அதன் இரண்டாவது பகுதியை இப்போது வெளியிடுகிறேன். அழகியசிங்கர்

திருக்குறள் சிந்தனை 6

அழகியசிங்கர் கடவுள் வாழ்த்து என்ற பெயரில் 10 குறள்கள் எழுதி உள்ளார்.  ஒவ்வொரு குறளையும் ஒவ்வொரு விதமாக கட்டமைத்துள்ளார்.  இதோ இந்தக் குறளைப் பார்ப்போம். பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க  நெறிநின்றார் நீடுவாழ் வார். ஐம்பொறிகள் வாயிலாகச் செயல்படும் ஐம்புலன்களையும் நம் கட்டுக்குள் கொண்டு வந்தால் மெய்யான ஒழுக்க நெறியில் நாம் வாழலாம் என்கிறார் திருவள்ளுவர்.  இந்த ஐம்பொறிகளையும் கட்டுக்குள் கொண்டு வருபவர் கடவுள்தான்.  நாம் நீண்ட ஆயுளுடன் வாழ இந்த நெறி அவசியம் என்கிறார்.  நெறிநின்றார் நீடுவாழ் வார் என்ற வரி பிடித்திருக்கிறது.   ஐம்புவன்களான மெய், வாய், கண், மூக்கு, செவியைக் கட்டுக்குள் கொண்டு வருதல் என்றால் என்ன?  நம் கட்டுக்குள் இவை அடங்கி வருமா என்பது புரியவில்லை.  இந்தக் குறள் நம்மை யோசிக்க வைக்கிறது.   ஒருவிதத்தில் இக்குறள் மருத்துவக் கருத்தாகவும் இருக்கும்போல் தோன்றுகிறது. 

பத்து கேள்விகள் பத்து பதில்கள் .....17

இந்துமதி  பேட்டி அளிக்கிறார். இந்தத் தலைப்பில் இதுவரை எழுத்தாளர் இந்துமதியையும் சேர்த்து 17  படைப்பாளிகளைப்  பேட்டி எடுத்துள்ளேன்.  எல்லாம் எளிமையான கேள்விகள் எளிமையான பதில்கள். üதரையில் இறங்கும் விமானங்கள்ý என்ற நாவல் மூலம் புகழ்பெற்றவர் இந்துமதி அவர்கள்.  இன்றும் தொடர்ந்து எழுதிக்கொண்டு வருகிறார்.  அவருடைய பேட்டியை இப்போது வெளியிடுகிறேன். அழகியசிங்கர்

திருக்குறள் சிந்தனை 5

அழகியசிங்கர் நான் சீர்காழி என்ற இடத்தில் பொது வங்கியில் பணிபுரிந்துகொண்டிருந்தபோதுதான், திருக்குறள் வெறியர் ஒருவரைச் சந்தித்தேன்.  அவர் நூற்றுக்கணக்கில் திருக்குறள் புத்தகங்கள் வாங்கி எல்லோருக்கும் இலவசமாக வழங்கிக் கொண்டிருப்பார்.  அவரும் என்னைப் போல என் அலுவலகத்தில் ஒரு அலுவலர்.  அவர் ஏற்பாடில் எங்கள் வங்கியில் ஒரு போர்டு வாங்கி ஒவ்வொருநாளும் திருக்குறளும் அதன் கருத்துரையும் எழுதி வாடிக்கையாளர் பார்வையில் படும்படி வைப்பேன்.  ஏதோ ஒரு திருக்குறள் புத்தகத்தில் உள்ள ஏதோ ஒரு குறளை எடுத்து மூலத்தையும் கருத்தையும் எழுதி வைப்பேன்.  உண்மையில் யாரும் படிக்க மாட்டார்கள்.  ஏன் என்பதற்கு ஒரு காரணம் கண்டுபிடித்தேன்.  உண்மையில் போர்டில் திருக்குறள் எழுதினாலும் எந்த உணர்வுநிலையும் இல்லாமல் மரக்கட்டைபோல் ஏதோ இதெல்லாம் செய்ய வேண்டுமென்று செய்து வந்தேன்.  இதைத்தான் வாடிக்கையாளர்களும் பிரதிபலித்ததாக நினைக்கிறேன்.   இதோ இப்போது ஒவ்வொரு நாளும் ஒரு குறள் விதம் எடுத்து எழுதிக்கொண்டிருக்கிறேன்.  உலகத்தில் உள்ள எல்லா தத்துவங்களும் திருக்குறளின் ஒன்றரை அடியில்  வந்து விடும்போல் தோன்றுகிறது.

சுனில் கிலநானியும் நானும் என்ற தலைப்பில் போனமாதம் நடந்த கூட்டத்தின் ஒளிபரப்பு -3

அழகியசிங்கர் மே மாதம் 3வது சனிக்கிழமை எழுத்தாளர்  சா கந்தசாமி தலைமையில் விருட்சம் இலக்கியச் சந்திப்பு கூட்டம் நடந்தது.   இந்தியா என்கிற கருத்தாக்கம் என்ற தலைப்பில் சுனில் கில்நானி எழுதிய புத்தகத்தை ஒட்டி இந்தக் கூட்டம் நடந்தது.   அந்தக் கூட்டத்தைப் பற்றிய 3 பகுதிகளாக உள்ள அந்த ஒளிப்பரப்பின் முதல் பகுதியையும் இரண்டாம் பகுதியையும் சில தினங்களுக்கு முன் வெளியிட்டேன்.  இதோ இப்போது மொழிபெயர்ப்பாளர் அக்களூர்  ரவி அவர்கள் பேசுகிறார்கள்.

திருக்குறள் சிந்தனை 4

அழகியசிங்கர் ஒரு குறளை எடுத்துப் படிப்பதற்கு முன், என்னிடம் உள்ள பல உரைகளை எடுத்துப் படித்துப் பார்க்கிறேன்.  பிறகுதான் புரிந்தது பலரும் பலவிதமாக குறள்களை எடுத்து அதன் கருத்துக்களைப் பலவிதமாக சொல்கிறார்கள் என்று.    கருத்தைப் படிப்பவர்க்கு தெளிவாகக் கூறிவிடுதற்கு குறளே உதாரணமாகத் திகழ்கிறது.  அது மட்டுமே படித்தால் போதும் என்றும் எனக்குப் படுகிறது. உதாரணமாக இந்தக் குறள் : வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல இந்தக் குறளே நமக்கு எல்லா அர்த்தங்களையும் வெளிப்படுத்தி விடுகிறது.  இதோ திருக்குறளுகஙகு நாவலர் உரை தந்திருக்கிறார்.  அதைத் தருகிறேன். விருப்பும் வெறுப்பும் அற்ற நடுநிலையில் நின்று, அறிவாற்றலில் சிறந்து வாழும் சான்றோர் காட்டிய வழியில், அவரைப் பின்பற்றி நடப்பவர்களுக்கு எந்த ஒரு காலத்திலும் துன்பம் ஏற்படுவது இல்லை.  இந்த இடத்தில் சான்றோர் என்பவர்கள் எங்கே இருக்கிறார்கள். யாரைச் சான்றோர் என்று குறிப்பிட முடியும்? நாமக்கல் கவிஞர் இப்படிக் கூறுகிறார்.  இறைவன் விருப்பு வெறுப்பு இல்லாதவன் என்பதை உணர்ந்து நாமும் விருப்பு வெ

திருக்குறள் சிந்தனை 3

அழகியசிங்கர்  ஒவ்வொரு குறளையும் திருவள்ளுவர் எளிதில் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளும்படி எழுதி உள்ளார்.  கடவுள் வாழ்த்து என்று துவங்கும் இந்த அதிகாரத்தில் கடவுளைப் பற்றியே எழுதி உள்ளார்.  திருவள்ளுவர் கூறும் கடவுள் யார்?   இந்த மூன்றாவது குறள். மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்  நிலமிசை நீடுவாழ் வார். இதற்கு கருத்துரை வழங்கிய நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை அவர்கள், அறிவுக்கெல்லாம் எட்டாப் பொருளான இறைவன் எங்கே இருக்கிறான் என்றால், நம்முடைய மனத்தாமரையில்.  அதை உணர்ந்து வணங்கினால் உலகில் கவலையின்றி வாழலாம் என்கிறார். இந்தக் குறளில் மலர்மிசை நிலமிசை வார்த்தைப் பிரயோகங்கள் என்னை வசப்படுத்துகின்றன.  எட்டாப் பொருளான இறைவன் என்பதை கடவுள் தன்மையை என்று கூறலாமா?  கடவுள் தன்மை என்றால் என்ன?  இன்று யாரிடமும் அது இருப்பதாக தெரியவில்லை.  

நேஷனல் புக் டிரஸ்ட்டும், சாகத்திய அகாதெமியும்.....

அழகியசிங்கர் இந்த இரண்டு அமைப்புகளும் இந்தியாவில் உள்ள பல மொழிகளிலிருந்தும் தமிழில் புத்தகங்களைக் கொண்டு வருகின்றன.  பல தமிழ் அறிஞர்கள் தங்களுடைய உழைப்பால் இவற்றைச்  சாத்தியமாக்கி உள்ளார்கள்.  இவர்கள் கொண்டு வருகிற புத்தகங்களும் மிகக் குறைவான விலையில் உள்ளன.                                                                            நான் ஒரு புத்தகம் வைத்திருக்கிறேன்.  முதல் பதிப்பு 1975ஆம் ஆண்டு.  புத்தகம் பெயர்.கறையான். வங்காளத்தில் குண்பேகா.  எழுதியபர் சீர்ஷேந்து முகோபாத்யாய.  இது இவருடைய முதல் நாவல். 1971ஆம் ஆண்டு எழுதிய இவருடைய இன்னொரு நாவலான பாரா பாரும் என்ற வங்காளி நாவலையும் படிக்க விரும்புகிறேன்.  ஆனால் மொழி பெயர்க்கப்பட்டதா என்பத தெரியவில்லை. கறையான் என்ற நாவலை  வங்காளி மொழியிலிருந்து தமிழில் மொழி பெயர்த்தவர் சு கிருஷ்ணமூர்த்தி.  இந்தப் புத்தகத்தை இரண்டாவது முறையாகப் படிக்கிறேன்.  நேரிடையான மொழிபெயர்ப்பு.  பல ஆண்டுகளுக்கு முன்னால் இப்புத்தகத்தை ரசித்துப் படித்தவன்.  திரும்பவும் எடுத்துப் படிக்கும்போது நான் ரசித்த நாவல்களில் இது ஒன்று என்ற எண்ணம் இருந்தது தவி

திருக்குறள் சிந்தனை 2

திருக்குறள் சிந்தனை 2 அழகியசிங்கர்  நான் இருக்கும் வீட்டில் 3 திருக்குறள் புத்தகங்களைக் கண்டுபிடித்தேன்.  நான் ஏகப்பட்ட திருக்குறள் புத்தகங்களை வாங்கியிருக்கிறேன்.  ஆனால் ஒன்றும் கண்ணில் படவில்லை. யாரிடம் கொடுத்தேன்? யார் எடுத்துக்கொண்டு போனார்கள் என்பது தெரியவில்லை.  நாமக்கல் கவிஞர் கருத்துரை எழுதிய திருக்குறள் புத்தகம் என்னிடமிருந்தது.  அதேபோல் மு வ.   என் அலுவலக நண்பர் ஒருவர் பாக்கெட் சைஸில் திருக்குறள் புத்தகம் 50 அல்லது 100 என்று வாங்கி வங்கியில் வரும் வாடிக்கையாளருக்கு இலவசமாகக் கொடுப்பார்.  அவரை அடுத்த முறை பார்க்கும்போது ஒரு கேள்விக் கேட்க வேண்டும்.  திருக்குறளை நீங்கள் படித்தீர்களா என்று. இன்று நான் படித்த இரண்டாவது குறள். கற்றதனால் ஆய பயன்என்கொல் வால்அறிவன் நற்றாள் தொழாஅர் எனின்.  இந்தக் குறளில் வால்அறிவன் என்ற வார்த்தைப் பிரயோகம் என்னை யோசிக்க வைத்தது.  இதற்கான அர்த்தத்தை கீழ்க்கண்டவாறு உரையாசிரியர் இரா கோ அண்ணாமலை அவர்கள் கூறி உள்ளார்கள். கல்விதான் ஒருவருக்கு அறிவு, அன்பு, இன்பம் இவற்றை எல்லாம் தருவரு.  அறிவும், அன்பும் இல்லையெனில்

திருக்குறள் சிந்தனை 1

அழகியசிங்கர்  நேற்று (16.06.2018) - சனிக்கிழமை -  திருக்குறளும் நானும் என்ற தலைப்பில் சி ராஜேந்திரன் ஐஆர்எஸ் அவர்கள் பேசினார்கள்.  கிட்டத்தட்ட 1.30 மணி நேரம் பேசினார்.  இன்னும் சில தினங்களில் அவர் பேசியதை ஒளிப்பதிவில் அளிக்க உள்ளேன்.  இதில் முக்கியமான விஷயம் கலந்துகொண்ட அனைவரும் ஒவ்வொரு திருக்குறளைக் கூறி ஏன் அந்தக் குறள் பிடிக்கிறது என்பதைக் குறிப்பிட்டார்கள்.   நான் ஒரு முடிவுக்கு வந்தேன்.  தினமும் ஒரு குறளைப் படிப்பது என்று.  பின் அது குறித்து கருத்து எதாவது தோன்றினால் எழுதலாம் என்று நினைக்கிறேன்.   இதோ நான் இன்றிலிருந்து ஆரம்பிக்கிறேன். அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவான் முதற்றே உலகு. இதற்கு கருத்துரை வழங்கியவர் இரா இளங்குமரனார்.  அவர் என்ன கூறியிருக்கிறார் என்றால் எழுத்துக்களுக்கு எல்லாம் அகரமே முதல்.  அதுபோல் பகுத்து வழங்கிய ஆற்றலே உலகுக்கு முதல் என்கிறார். இந்தக் கருத்துரை சரியா என்பது சந்தேகமாக உள்ளது.  வள்ளுவர் ஆதி பகவான் என்று கூறி உள்ளார்.  இந்தக் கருத்துரையில் அது வரவில்லை என்று படுகிறது.  ஆதிபகவான் முதன் முதலாக உலகத்தில் தோன்றியதுபோல் எழ
சுனில் கிலநானியும் நானும் என்ற தலைப்பில் போனமாதம் நடந்த கூட்டத்தின் ஒளிபரப்பு -2 மே மாதம் 3வது சனிக்கிழமை எழுத்தாளர் சா கந்தசாமி தலைமையில் விருட்சம் இலக்கியச் சந்திப்பு கூட்டம் நடந்தது. இந்தியா என்கிற கருத்தாக்கம் என்ற தலைப்பில் சுனில் கில்நானி எழுதிய புத்தகத்தை ஒட்டி இந்தக் கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்தைப் பற்றிய 3 பகுதிகளாக உள்ள அந்த ஒளிப்பரப்பின் முதல் பகுதியை சில தினங்களுக்கு முன் வெளியிட்டு உள்ளேன். இதோ இப்போது எழுத்தாளர் சா கந்தசாமி அவர்களின் பேச்சை வெளியிடுகிறேன்.

சுனில் கில்நானியும் நானும் என்ற தலைப்பில் போனமாதம் நடந்த கூட்டத்தின் ஒளிபரப்பு -1

அழகியசிங்கர் போன மாதம் சா கந்தசாமி தலைமையில் விருட்சம் இலக்கியச் சந்திப்பு கூட்டம் நடந்தது.   இந்தியா என்கிற கருத்தாக்கம் என்ற தலைப்பில் சுனில் கில்நானி எழுதிய புத்தகத்தை ஒட்டி அந்தக் கூட்டம் நடந்தது.   அந்தக் கூட்டத்தைப் பற்றிய 3 பகுதிகளாக உள்ள அந்த ஒளிப்பரப்பின் முதல் பகுதியை இன்று அளிக்க விரும்புகிறேன். 

அன்புடன் அழைக்கிறேன்

அழகியசிங்கர் நடக்கப்போகும் விருட்சம் இலக்கியச் சந்திப்பு கூட்டத்திற்கான அழைப்பிதழை இத்துடன் இணைத்துள்ளேன்.  திருக்குறளுக்கு உரை எழுதிய பரிமேலழகர் உரையை எளிமையாகப் புரிந்துகொள்ளும் முறையில் உரை எழுதிக்கொண்டிருப்பவர் ஸ்ரீ சி ராஜேந்திரன் அவர்கள்.  திருக்குறளைக் குறித்து அவர் கூறப்போகும் அரியக் கருத்துக்களை அறிய ஆவலுடன் நானும் காத்திருக்கிறேன்.  நீங்களும் கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன். அன்புடன்  அழகியசிங்கர்

விருட்சம் இலக்கியச் சந்திப்பு - 37

                   திருக்குறளும் - நானும்        சிறப்புரை :     சி ராஜேந்திரன், ஐஆர்எஸ்                           (வள்ளுவர் குரல் குடும்பம்) இடம் :      ஸ்ரீராம் குரூப் அலுவலகம்      மூகாம்பிகை வளாகம்      சி பி ராமசாமி தெருவில் உள்ள பாலம் கீழே      ஆறாவது தளம்       மயிலாப்பூர்      சென்னை 600 004        தேதி 16.06.2018 (சனிக்கிழமை) நேரம்  மாலை 6.00 மணிக்கு பேசுவோர் குறிப்பு :   C RAJENDIRAN, IRS, Vice Chairman, Settlement Commission, Customs, Central Excise and Service Tax, Additional Bench, South Zone, Chennaim.   voiceof  valluvar1330@gmail.com அனைவரும் வருக, அன்புடன் அழகியசிங்கர்  9444113205

ரொம்ப துணிச்சல் வேண்டும்..

04.06.2018 அழகியசிங்கர் துணிச்சல் வேண்டும் கால சுப்பிரமணியத்திற்கு. பிரமிளின் படைப்புகள் அனைத்தையும் ஆறு தொகுதிகளாக ரூ.3000 க்குக் கொண்டு வந்துள்ளார். 3400 பக்கங்கள். சமீபத்தில் அவரைச் சந்தித்தப்போது அவர் இதைத் தெரிவித்தார். இந்த முழுத் தொகுதியை தயாரிப்பதற்கு அவர் செலவு செய்யும் தொகையைக் கேட்டவுடனே எனக்கு சங்கடமாக இருந்தது. அன்று முழுவதம் அது குறித்து யோசித்துக்கொண்டிருந்தேன். ஏன் எனில் அதிகப் பிரதிகள் புத்தகங்கள் அச்சடித்துத் திண்டாடுபவனின் நானும் ஒருவன். இன்றைய தமிழ்ச் சூழலில் விற்பது என்பது அவ்வளவு சுலபமில்லை. ரூ.3000 கொடுத்து யார் வாங்க முன் வருவார்கள் என்ற சந்தேகம் எனக்கு இருக்கிறது. ஆனாலும் அவர் முயற்சிக்கு என் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன். ஒரு தொகுதி வாங்கிக்கொள்கிறேன் என்று அவரிடம் அப்போதே சொல்லிவிட்டேன்.

நேற்று பார்த்த நாடகம்

அழகியசிங்கர்   நேற்று மாலை 'பகவான் ஸ்ரீ ரமணர்' நாடகம் பார்த்தேன்.   தி.நகரில் உள்ள முப்பாத்தம்மாள் கோயில் எதிரில் உள்ள கிருஷ்ணகானசபாவில்.  ஒரே கூட்டம்.  உட்கார்ந்து பார்க்க இடம் கிடைக்காது திரும்பித்தான் போகவேண்டுமென்று நினைத்தபோது இடம் கிடைத்தது.   பாம்பே ஞானம் என்பவர் தயாரித்த நாடகம்.  முழுவதும் பெண்கள் நடித்த நாடகம்.  ஒரு சில பாத்திரங்களில் ஒருவரே பல வேடங்களிலும் நடிக்கிறார்.  உண்மையில் ரமணரைப் பற்றி வரலாறுதான் இந்த நாடகம்.  விறுவிறுப்பாக இரண்டு மணி நேரங்களுக்குக் குறைவில்ûலாம்ல் இந்த நாடகம் நடந்து முடிந்தது.  நாடகத்தில் இசை எந்தவிதத் தொந்தரவும் இல்லாமல் வந்து செல்கிறது. இந்த நாடகத்தைப் பார்த்தபோது ஒன்று தோன்றியது இந்த நாடகத்தில் ரமணரைப் பற்றி இவ்வளவு தூரம் சொன்னது நல்லது என்று.  முழு வரலாற்றையே கொண்டுவந்து விடுகிறார்.   எனக்கு முதலில் நாடகத்திற்கு டிக்கெட் கிடைக்கவில்லை.  அதாவது இலவசமாகப் பார்ப்பதற்கு அனுமதிச்   சீட்டு.   ஒரு நாடகத்தைப் பார்க்க இலவசமாக அனுமதிக்கிறார்களே என்பது ஆச்சரியமாக இருந்தது.    நாடகம் விட்டு வீட்டிற்கு வரும்போது மட்டும

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - 87

அழகியசிங்கர்   தோன்றி மறையும் கடற்கரய் குட்டிக் கைப்பையோடு உத்யோகத்திற்கு விரையும் சீனத்துக்காரி வெளியேறுவதற்கு முன்னதாக ஆடியில் காண்கிறாள் முகத்தை. குட்டைப் பாவாடை குறுஞ்சிரிப்பு தோன்றி மறைகிறது அதில். அலுவல் அழைக்கும் நேரம் முகத்திற்குப் பொலிவு கூடுகிறது. மாலை காய்ந்த குப்பையாகிவிடும் என்பதை அறிவாள். ஆடியில் விழும் முகம் மெல்ல அலையுறத் தொடங்குகிறது. தலைக்கு அவள் சூடியிருந்த வாசனை மலர்கள் தழைத்து   அரும்புகின்றன ஒரு வைகறைத் தோட்டத்தின் வைராக்கியத்தோடு. நன்றி : கண்ணாடிக் கிணறு - கவிதைகள் - கடற்கரய் - 80 பக்கங்கள் - முதல் பதிப்பு : டிசம்பர் 2010 - வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம் - 669 கே பி சாலை, நாகர்கோவில் 629001 - விலை : ரூ.60 - தொலைபேசி : 91-4652-402888