Skip to main content

விருட்சம் என்ற பெயர் இருந்தாலும்.......





அழகியசிங்கர்



ஜாபர்கான்பேட்டை,  7, 3வது தெரு, ராகவன் காலனியில் அமைந்துள்ள கிளை நூலகத்தில் விருட்சம் இலக்கியச் சந்திப்பு கூட்டம் நடைபெறுகிறது.  விருட்சம் என்ற பெயர் இருந்தாலும் நண்பர்கள் சிலர் சேர்ந்து நடத்தும் கூட்டம் இது.  ஏற்கனவே வாசகசாலை என்ற அமைப்பு அசோக்நகர் வட்டார நூலகத்தில் வாரம் செவ்வாய்க் கிழமை கூடி கூட்டம் நடத்துகிறார்கள். 
எங்களுக்கும்  இலக்கியக் கூட்டம் நடத்த அனுமதி அளித்த    மாவட்ட நூலக அலுவலருக்கு   நன்றிகள் பல.   இதேபோல் பல நூலகக் கட்டடங்களில்  கூட்டங்கள்  நடத்த இலக்கிய ஆர்வலர் பலர் முயற்சி செய்ய வேண்டும்.  அப்போதுதான் இலக்கியம் செழித்து ஓங்கும். 
நாங்கள் நடத்தும் கூட்டம் மாதம் ஒரு முறை.  கடைசி வியாழக்கிழமை மட்டும்.  அதற்கான அழைப்பிதழை இணைத்துள்ளேன்.
எல்லோரும் வரும்படி கேட்டுக்கொள்கிறேன்.  

Comments