அழகியசிங்கர் 
 ஒவ்வொரு குறளையும் திருவள்ளுவர் எளிதில் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளும்படி எழுதி உள்ளார்.  கடவுள் வாழ்த்து என்று துவங்கும் இந்த அதிகாரத்தில் கடவுளைப் பற்றியே எழுதி உள்ளார்.  திருவள்ளுவர் கூறும் கடவுள் யார்?  
 இந்த மூன்றாவது குறள்.
 மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் 
 நிலமிசை நீடுவாழ் வார்.
 இதற்கு கருத்துரை வழங்கிய நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை அவர்கள், அறிவுக்கெல்லாம் எட்டாப் பொருளான இறைவன் எங்கே இருக்கிறான் என்றால், நம்முடைய மனத்தாமரையில்.  அதை உணர்ந்து வணங்கினால் உலகில் கவலையின்றி வாழலாம் என்கிறார்.
 இந்தக் குறளில் மலர்மிசை நிலமிசை வார்த்தைப் பிரயோகங்கள் என்னை வசப்படுத்துகின்றன.  எட்டாப் பொருளான இறைவன் என்பதை கடவுள் தன்மையை என்று கூறலாமா?  கடவுள் தன்மை என்றால் என்ன?  இன்று யாரிடமும் அது இருப்பதாக தெரியவில்லை.  

Comments