Skip to main content

திருக்குறள் சிந்தனை 8


அழகியசிங்கர்




நேற்று அந்திப் பொழுதில் கலைந்த புத்தகங்களை என் போஸ்டல் காலனி நூலகத்தில் அடுக்கி வைத்துக்கொண்டிருந்த போது  என் கண்ணில் பட்டது இன்னொரு  திருக்குறள் புத்தகம்.  கோ பெரியண்ணனின் உரையில் இப்புத்தகம் வெளிவந்துள்ளது.  1,33,000 பிரதிகளுக்கு மேல் விற்பனையில் சாதனை புரிந்ததாகப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.  டாக்டர் சதாசிவன் திருமதி புஷ்பா சதாசிவம் அவர்களின் எண்பதாம் ஆண்டு விழாவிற்கு வருகை தந்தவர்களுக்கு இந்தத் திருக்குறள் புத்தகத்தை இலவசமாகப் பரிசளித்துள்ளார்கள்.  இந்த நிகழ்ச்சி 10.10.2011ல் நடந்துள்ளது.  இப்படி ஒளிந்துகொண்டிருக்கும் திருக்குறள் புத்தகங்களைத் தேடிக்கொண்டிருக்கிறேன்.
இன்றைய திருக்குறள் :

அறவாழி அந்தணன் தான்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.

அறக்கடவுளாக விளங்கும் கடவுளின் திருவடிகளை நினைப்பவர்களைத் தவிர மற்றவர்கள் பொருள், இன்பம் ஆகிய வேறு  கடல்களைக் கடக்க மாட்டார்கள் என்கிறார் பெரியண்ணன்.  இந்தக் குறளில் அந்தணன் என்று ஏன் திருவள்ளுவர் குறிப்பிடுகிறார்.  அந்தணன் என்றால் கடவுளா?
பிறவாழி நீந்தல் அரிது பிடித்த வரி. 


Comments