Skip to main content

திருக்குறள் சிந்தனை 2

திருக்குறள் சிந்தனை 2


அழகியசிங்கர் 




நான் இருக்கும் வீட்டில் 3 திருக்குறள் புத்தகங்களைக் கண்டுபிடித்தேன்.  நான் ஏகப்பட்ட திருக்குறள் புத்தகங்களை வாங்கியிருக்கிறேன்.  ஆனால் ஒன்றும் கண்ணில் படவில்லை. யாரிடம் கொடுத்தேன்? யார் எடுத்துக்கொண்டு போனார்கள் என்பது தெரியவில்லை.  நாமக்கல் கவிஞர் கருத்துரை எழுதிய திருக்குறள் புத்தகம் என்னிடமிருந்தது.  அதேபோல் மு வ.  
என் அலுவலக நண்பர் ஒருவர் பாக்கெட் சைஸில் திருக்குறள் புத்தகம் 50 அல்லது 100 என்று வாங்கி வங்கியில் வரும் வாடிக்கையாளருக்கு இலவசமாகக் கொடுப்பார்.  அவரை அடுத்த முறை பார்க்கும்போது ஒரு கேள்விக் கேட்க வேண்டும்.  திருக்குறளை நீங்கள் படித்தீர்களா என்று.
இன்று நான் படித்த இரண்டாவது குறள்.

கற்றதனால் ஆய பயன்என்கொல் வால்அறிவன்
நற்றாள் தொழாஅர் எனின். 

இந்தக் குறளில் வால்அறிவன் என்ற வார்த்தைப் பிரயோகம் என்னை யோசிக்க வைத்தது.  இதற்கான அர்த்தத்தை கீழ்க்கண்டவாறு உரையாசிரியர் இரா கோ அண்ணாமலை அவர்கள் கூறி உள்ளார்கள்.
கல்விதான் ஒருவருக்கு அறிவு, அன்பு, இன்பம் இவற்றை எல்லாம் தருவரு.  அறிவும், அன்பும் இல்லையெனில் பொருளில்லை, இன்பமும் இல்லையாகும்.  இவற்றையெல்லாம் தரக்கூடிய உண்மை அதாவது மூல பரம்பொருளை உணராதவன் பல நூல்களைக் கற்றும் பயனில்லை.
பரம்பொருள் என்பதை வால்அறிவன் என்கிறார் என்று நினைக்கிறேன்.

Comments