Skip to main content

Posts

Showing posts from September, 2015

இரண்டு முக்கிய ஆவணப்படங்கள்

அழகியசிங்கர்        விருட்சம் இலக்கியச் சந்திப்பின் 16வது கூட்டம் நேற்று நடந்தது. இரண்டு முக்கிய ஆவணப்படங்களை நேற்று ஒளி பரப்பினோம்.  ஒரு படம் அசோகமித்திரன் அவர்களிள் ஆவணப் படம்.  இன்னொன்று ஞானக்கூத்தன் படம்.  அசோகமித்ரன் அவணப்படத்தை கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்கு முன் அம்ஷன்குமார் இயற்றி உள்ளார்.  இக் கூட்டம் டிஸ்கவரி புத்தக பேலஸில் நடந்தது.      அசோகமித்திரன் பிறந்தநாள் கொண்டாட்டமாக  அவர் கேக் வெட்டினார்.  பின் அம்ஷன்குமார் அவர் ஆவணப்படத்தைத் தயாரித்த விதத்தைப் பற்றி தன் அனுபவங்களைளப் பகர்ந்து  கொண்டார்.  இந்த ஆவணப்படத்தைத் தயாரிப்பதற்காக அசோகமித்திரன் வாழ்ந்த இடமான ஹைதராபாத்திற்கே  சென்று எடுத்திருக்கிறார்.      அவர் ஆவணப்படத்தைப் பார்க்கும்போது அது ஒரு கதைபோல் எடுக்கப்பட்டிருந்தது.  அம்ஷன் குமார் குறிப்பிட்டார்.  ஒரு ஆவணப்படத்தை எடுக்கும்போது அந்தப் படத்தின் முக்கிய நாயகரான அசோகமித்திரன் இருப்பது ஆவணப்படத்திற்கு அதிக வலு சேர்க்கும் என்று.  அவரைப் பொறுத்தவரை இது எட்டாவது படம் என்றார்.  30 நிமிடங்கள் போனதே தெரியாமல் சுவாரஸியமான படமாக அது இருந்தது குறிப்பிடத்தக்கது.     விஷ்ணு

விருட்சம் பத்து கேள்விகள் பத்து பதில்கள் மற்றும் கவிஞர் வைதீஸ்வரனின் ஓவியங்கள்

விருட்சம் பத்து கேள்விகள் பத்து பதில்கள் (10:10) தொடரில் கவிஞர் எஸ். வைதீஸ்வரன்                       காணொளி கவிஞர் வைதீஸ்வரன் ஒரு சிறந்த ஓவியரும் கூட. அவரது சில ஓவியங்கள்

எது ஆபாசம்?

அழகியசிங்கர்         லெகின்ஸ் ஆபாசம் என்ற தலைப்பில் இந்த வார குமுதம் ரிப்போர்ட்டர் ஒரு கட்டுரையை பிரசுரம் செய்திருந்தது.  அந்தக் கட்டுரையை வெளியிட்ட விதம் இன்னும் ஆபாசமாக இருந்தது.  அதைப் படிக்கும்போது எல்லாமே ஆபாசமாக இருந்தது.     ஒருமுறை ஜே கிருஷ்ணமூர்த்தியை அவருக்கு உதவி செய்யும் பெண் ஒருவள் ஒரு கேள்வி கேட்கிறாள்.  "கிருஷ்ணாஜி. உங்களுக்கு செக்ஸ் உணர்வே இல்லையா?" என்பதுதான் கேள்வி.  அதற்கு அவர் பதில் சொல்கிறார்: எனக்கு ஒரு பெண்ணின் கையைத் தொடும்போதே அந்த உணர்வு ஏற்பட்டுவிடும் என்று. அவருடைய பதில் என்னை பலவாறு சிந்திக்கத் தூண்டியது.     உண்மையில் ஒரு பெண்ணைப் பார்க்கும்போதோ தொடும்போதோ ஒரு ஆணிற்கு ஏற்படும் இயல்பான நிலையில் செக்ஸ÷ம் ஒரு அங்கம்தான்.  இதில் எந்த ஆணும் தப்பித்து விட முடியாமா என்பது தெரியவில்லை.      ஒரு பெண் எந்த ஆடையைப் போட்டிருந்தாலும் ஆணின் கபட பார்வையிலிருந்து தப்ப முடியாது.  நான் அலுவலகத்தில் பணிபுரிந்தபோது டீ ஷர்ட் போட்டுக்கொண்டு  அலுவலகத்திற்கு பணிபுரிய ஒருவர் வந்திருந்தார்.  மேலதிகாரி அவரைக் கூப்பிட்டு, "இது மாதிரி டிரஸ் செ

இருவரின் பிறந்தநாள்

அழகியசிங்கர் தமிழில் முக்கியமான படைப்பாளிகளான அசோகமித்திரன், எஸ் வைதீஸ்வரனின் பிறந்த நாள் இன்று.  இருவரும் ஒரே நாளில் பிறந்துள்ளார்கள்.  வைதீஸ்வரனுக்கு 80 வயது முடிந்து விட்டது. அசோகமித்திரனுக்கு 85 வயது.  முதலில் இருவருக்கும் என் பிறந்த தின வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் என் சார்பாகவும், விருட்சம் சார்பாகவும். நான் பெரும்பாலும் அசோகமித்திரன் புத்தகங்களைத்தான் படித்துக்கொண்டிருப்பேன்.  அவருடைய எல்லா நாவல்களையும், சிறுகதைகளையும் படித்திருக்கிறேன்.  சமீபத்தில் சாருநிவேதிதாவும், ஜெயமோகனும் குறிப்பிட்டிருப்பதுபோல உலக அளவில் சொல்லப்பட வேண்டிய எழுத்தாளர் அசோகமித்திரன் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.  ஏன் இந்தியா அளவில் அசோகமித்திரனுக்கு இணையாகச் சொல்லக்கூடிய எழுத்தாளர் யாராவது உண்டா என்பதில் எனக்கு சந்தேகம் இருக்கிறது.   அசோகமித்திரனின் துரதிருஷ்டம் அவர் தமிழ்நாட்டு எழுத்தாளராகப் போய்விட்டார்.  அவரே வங்காளி எழுத்தாளராகவோ மலையாள எழுத்தாளராகவோ இருந்திருந்தால், அவர் புகழ் இன்னும் பல மடங்கு அதிகரித்திருக்கும். ஞானபீட பரிசு என்று சொல்கிறார்களே அது நிச்சயமாகக் கிடைத்தி

எதையாவது சொல்லட்டுமா? ....101

 எதையாவது சொல்லட்டுமா? ....101  அழகியசிங்கர்      எனக்கு கார் வாங்கும் எண்ணமே நானோ கார் பற்றிய விளம்பரம் பார்த்தவுடன்தான் தோன்றியது.  ஒரு லட்சம் ரூபாய்ககு ஒரு காரா என்ற வியப்புத்தான் அதற்குக் காரணம்.  ஆனால் நான் முயற்சி செய்தபோது அதன் விலை ஒரு லட்சத்து முப்பத்திரண்டாயிரம் ரூபாய் வரை போய்விட்டது.   வேளச்சேரியில் உள்ள அந்தக் கடையின் முன்னால் நாநோ காரை எடுத்துக்கொண்டு வரும்போது, நான், மனைவி, மாமியார் மூவரும் கார் முன்னால் நின்று ஒரு போட்டோ எடுத்துக்கொண்டோம். அந்த மாதிரி போட்டோவை கார் விற்பவர்களே எடுத்து எங்கள் கையில் கொடுத்தார்கள்.   காரை எடுத்துக்கொண்டு போக ஒரு டிரைவரை ஏற்பாடு செய்தேன்.  அவருக்கு ரூ.200 கொடுத்தேன்.  காரை க்ரோம்பேட்டை வரைச் சென்று என் மனைவியின் இளைய சகோதரி வீட்டிற்குப் போனோம்.  üüநானோ வாங்கிவிட்டேன்.  நானோ வாங்கிவிட்டேன்,ýý என்று பெருமை அடித்துக் கொண்டேன்.  அதன் பின் தான் பிரச்சினை ஆரம்பித்தது.  காரை எடுத்துக் கொண்டு போய் என் பெண் வீட்டில் போய் வைத்தேன்.  என் வீட்டில் காரை நிறுத்த ரோடிற்குத்தான் செல்ல வேண்டும்.  போஸ்டல் காலனியில் நாங்கள் இருந்தபோது எங்கள்

புத்தக விமர்சனம் 9

புத்தக விமர்சனம் 9                                                    அழகியசிங்கர் சமீபத்தில் சிறுகதைத் தொகுதியா கவிதைத் தொகுதியா எது விற்பனை ஆகிறது என்று கணக்கெடுக்கும்போது, இரண்டுமே பெரிதாக விற்பதில்லை என்பதைக் கண்டுகொண்டேன்.  பெரிய பத்திரிகைகள் சிறுகதைகளை நம்ப மறுத்ததால், சிறுகதைகள் வெளி வருவதே நின்றுவிட்டன.  அதுவும் இலக்கியத் தரமான கதைகளை கண்டு பிடிப்பதே பெரிய பாடாக இருக்கிறது.   இந்தத் தருணத்தில்தான் ராமலக்ஷ்மி எழுதிய 'அடை மழை' என்ற சிறுகதைத் தொகுதி என் கண்ணில் பட்டது. ஒரு புத்தகம் படிக்க எடுக்கும்போது, ஒரு நிதான வாசிப்பில் நம்மை தள்ளி விட்டால், அது ஓரளவு தரமான புத்தகமாக இருந்து விடும்.  கவிதைகளையும், சிறுகதைகளையும் நிதான வாசிப்பில்தான் நாம் அவற்றைப் புரிந்து கொள்ள முடியும். 108 பக்கங்கள் கொண்ட 13 கதைகளைக் கொண்ட தொகுப்புதான் அடை மழை என்ற தொகுப்பு. இதில் உள்ள எல்லாக் கதைகளும் பத்திரிகைகளில் பிரசுரம் ஆகி இருக்கின்றன.  2010லிருந்து இவர் கதைகள் எழுதி வருகிறார்.  கவிதை, மொழிபெயரப்பு கவிதைகள் என்று பல முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.  அகநாழிகை பதி

கசடதபற ஜøலை 1971 - 10வது இதழ்

அம்மாவின் பொய்கள் ஞானக்கூத்தன் பெண்ணுடன் சிநேகம் கொண்டால் காதறுந்து போகும் என்றாய் தவறுகள் செய்தால் சாமி கண்களைக் குத்தும் என்றாய் தின்பதற்கேதும் கேட்டால் வயிற்றுக்குக் கெடுதல் என்றாய் ஒருமுறத் தவிடடுக்காக வாங்கினேன் என்னை என்றாய் எத்தனைப் பொய்க் முன்பு என்னிடம் சொன்னாய் அம்மா அத்தனைப் பொய்கள் முன்பு சொன்ன நீ எதனாலின்று பொய்களை நிறுத்திக் கொண்டாய்? தவறு மேல் தவறு செய்யும் ஆற்றல் போய் விட்டதென்றா எனக்கினி பொய்கள் தேவை இல்லை யென்றெண்ணினாயா? அல்லது வயதானோர்க்குத் தகுந்ததாய்ப் பொய்கள் சொல்லும் பொறுப்பினி அரசாங்கத்தைச் சார்ந்ததாய்க் கருதினாயா? தாய்ப்பாலை நிறுத்தல் போலத் தாய்ப் பொய்யை நிறுத்தலாமா? உன் பிள்ளை உன்னை விட்டு வேறெங்கு பெறுவான் பொய்கள்? ஒருமுறை ஞானக்கூத்தன் சொன்னார்.  எழுத்து பத்திரிகையில்  அவர் கவிதைகள் வரவில்லை என்று.  எனக்கு அதைக் கேட்டபோது நம்பமுடியாமல் இருந்தது.  சிசு செல்லப்பாவுடன் அவர் நெருங்கி பழகியிருந்தாலும், ஞானக்கூத்தன் கவிதைகளை ஏன் அவர் பிரசுரம் செய்யவில்லை என்று தெரியவில்லை. ஞானக்கூத்தன் கவிதைகள் அதன் பின் 'நடை', &

பாரதியாரைப் பற்றிய நினைவுகள்

அழகியசிங்கர் 09.09.2015 புதன் கிழமை திருவல்லிக்கேணி போயிருந்தேன்.  போகிற வழியில் பாரதியார் நினைவு இல்லத்தைப் பார்த்துக் கொண்டேபோனேன்.   அலங்காரம் பண்ணி இருந்தார்கள்.  பாரதியாரின் நினைவு நாளைகொண்டாடுவதற்காக இருக்கும்.  பாரதியின் நினைவுநாள் 11ஆம் தேதி.  வெள்ளிக்கிழமை.  உண்மையில் பாரதியார் அந்த நினைவு இல்லத்தில் மட்டுமல்ல.  எல்லா இடங்களிலும் இருக்கிறார்.  எல்லார் மனதிலும் புகுந்து கொண்டிருக்கிறார்.  தி நகரில் ஒரு பிரபலமான ஓட்டல் ஒன்றில் டிபன் சாப்பிட ஒருமுறை சென்றபோது,  அந்த ஓட்டலைச் சுற்றி பார்வையை ஓட விட்டேன்.  சுவரில் ஒரு படம் தொங்கிக் கொண்டிருந்தது.  யார் படம் என்று சறறு உற்றுப் பார்த்தேன்.  பாரதியார் படம். பாரதியார் ஏன் சாப்பிடற இடத்திற்கு வந்திருக்கிறார் என்று யோசித்தேன். பாரதியார் எழுதி குவித்திருக்கிறார்.  அவர் படைப்புகள் எல்லாவற்றையும் எல்லோரும் படித்து விட முடியாது.  அவருடைய சில கவிதைகள் எளிதில் புரிந்து விடாது.  எப்படி பாரதியார் புகழ் பரவியது.  அவர் எல்லாவற்றையும் பாடியிருக்கிறார்.  உலகத்தைப் பற்றி, நாட்டைப் பற்றி என்று எல்லாவற்றைப் பற்றியும் கவலைப

எதையாவது சொல்லட்டுமா 100......

நீங்கள் இயற்கை வைத்தியரா?                                                               அழகியசிங்கர் . நான் வங்கியில் சேர்ந்தபோதுதான் அந்த இயற்கை வைத்தியரைச் சந்தித்தேன்.  அவரும் என்னைப் போல் ஒரு வங்கி ஊழியர்.  ஊழியராக இருந்தாலும் அவர் இயற்கை வைத்தியர்.  அவர் அந்தத் துறைக்கு வந்ததும் தற்செயலான நிகழ்ச்சி.  அவருக்கு ரத்த அழுத்தம் அதிகமாக இருந்தது.  அதைத் தடுக்க அலோபதி மருத்துவர்கள் கொடுத்த மாத்திரைகளை அவர் எடுத்துக்கொள்ள வில்லை.  அதற்குப் பதில் பச்சைக் காய்கறிகள், பழங்கள் சாப்பிட ஆரம்பித்தார்.  அப்போதுதான் அவர் இயற்கை வைத்தியத்தில் தீவிரமாக ஈடுபட்டார்.  ஒரு புத்தகம் கூட எழுதினார்.  அது ஆயிரக்கணக்கில் விற்று அவர் பெயர் பிரபலமானது.  அந்தச் சமயத்தில் நான் கவிதைப் புத்தகம் போட்டதால் என் பெயர் இருக்கிற இடம் தெரியாமல் போய்விட்டது. அவர் ஒழுங்காக பயிற்சி எடுத்துக்கொண்ட இயற்கை வைத்தியர் இல்லை.  இருந்தாலும் அவர் தன்னை இயற்கை வைத்தியர் என்று கூறிக்கொண்டார்.  பல ஊர்களுக்குச் சென்று இயற்சை வைத்தியத்தைப் பற்றி பிரச்சாரம் செய்தார்.    அலுவலகத்தில் அவரை மதியம் சந்திப்

புத்தக விமர்சனம் .........

புத்தக விமர்சிப்பவர்  : ஜெ.பாஸ்கரன் மிஸ்டர் ஜூல்ஸுடன் ஒரு நாள் - டயான் ப்ரோகோவன் தமிழில்  ஆனந்த்  மரணம் எல்லோருக்கும் பொதுவானது. திடீரென எதிர்கொள்ளும்போது அது மரணித்தவர்களுக்கு ஓர் அமைதியையும், இன்னும் இருப்பவர்களுக்கு ஒரு மூர்க்கத்தனமான வலியையும் கொடுக்கவல்லது !அது தோற்றுவிக்கும் உணர்ச்சிக் கொந்தளிப்புகளும், காலங்களைக் கடந்த மிக நுட்பமான வாழ்க்கை பிம்பங்களும் ஆழ்மனதில் வலியைக் கொடுப்பவை ! ஒரு பனிப்பிரதேசத்தில் தனியாய்க் கணவன் ஜூல்ஸுடன் வசிக்கும் ஆலிஸ், பனி மிகுந்த ஒரு நாள் காலை, காபியின் மணத்துடன் எழுந்து கொள்கிறாள் – ஜூல்ஸ் வழக்கம்போல் காலைச் சிற்றுண்டியையும், காபியையும் தயார் செய்வதன் மணம்தான் அது. படுக்கையறையிலிருந்து வந்து, ஹாலில் சோபாவில் அன்றைய தினசரியுடன் அமர்ந்திருக்கும் கணவன் அருகில் அமர்கிறாள் ஆலிஸ். அசைவுகள் ஏதுமில்லாமல் அமர்ந்திருக்கும் அவரைக் கூப்பிடுகிறாள் – தோளில் கைவைத்த போதுதான் தெரிகிறது ஜூல்ஸ் இறந்து போயிருக்கிறார் என்று ! ஓலமிட்டு அழுது ஊரைக்கூட்டித் தன் துயரத்தினை வெளியிட்டால், உடனே – அலங்கரிக்கப் பட்ட அழக

முதுமையின் இடப்பெயர்தல்

பிரேம பிரபா கருணை துளியுமற்ற கட்டுப்பாடுகளின் முட்கிரீடம் தரித்த முதுமை கனிந்துறுகிய கடைசித் தருணங்களில் தவிப்பின் உச்சமாய் தத்தளிக்கிறது இமைகளின் மென் துடிப்பு. முதியவரின் அளப்பறிய யாசிப்பின் அனைத்து வேண்டுதல்களும் நிறைவேறிடத்  துடிக்கும் மௌனமாக இடப் பெயர்தல். துளியும் அறிமுகம் இல்லாத பெரு வெளியில் முதியவரின் முதல் சுதந்திரப்  பயணம். பாதைகளில் கிடக்கும் முட்கிரீடங்களை விலக்கி குழந்தையின் மகிழ்ச்சியில் முன்னேறுகிறார் முதியவர் புதுப் பிறவி அடைந்த மகிழ்ச்சியில்.

கசடதபற ஜøன் 1971 - 9வது இதழ்

பனி எதிர் பருவம் ஆங்கிலத்தில் : எட்வர்டு லீய்டர்ஸ்   தமிழில் : மகாகணபதி என்னுள் ஒரு                குழந்தை இருள் வெளியில் விழும் பனியை விரும்பும் என்னுள் ஒரு குழந்தை இருள் வெளியில் விழும் பனியிடம் அஞ்சும் என்னுள் ஒரு குழந்தை வெளியில் இருட்டில் விழும் பனியைக் காணமுடியும் அக் குழந்தை என்னுள்ளே நான் உள்ளே இருள் வெளியில் விழும் பனியை ஒவ்வொரு முறையும் பார்க்கும்போது குழந்தையாக மாறி விடுகிறது மனம். என்னுள்ளேயே குழந்தையும் இருக்கிறது.  

கசடதபற ஜøன் 1971 - 9வது இதழ்

என்னுடைய 30வது வயதில்                               சீனம் : ச்சி ஸ÷யென்      ஆங்கிலம் வழி தமிழில் : ப கங்கை கொண்டான் "சிகரெட் சாம்பல்கள் சிதறிப் படிகின்றன - எனது வாழ்க்கை மலரின் உதிர்ந்த இதழ்கள் அவை. தொடுவானத்தின் சங்கமத்திற்கும் அப்பால் - மிகவும் அப்பால் எனது ஒற்றை நிழல் வளர்கிறது நீளமாக - மிகவும் நீளமாக! " ஒரு கவிதையை எப்படி வேண்டுமானாலும் எழுதி விடுகிறார்கள்.  அதைப் புரிந்து கொள்பவர்கள் தன் மனநிலை, அறிவு நிலைக்கு ஏற்ப புரிந்து கொள்கிறார்கள்.  எழுதுகிறவர்களிடமிருந்து கவிதை நழுவிப் போய்விடுகிறது. படிப்பவர் ஒவ்வொருவரும் இந்தக் கவிதையை எப்படிப் புரிந்துகொள்கிறார்களோ அப்படித்தான் இந்தக் கவிதை தோற்றம் தரும்.