Skip to main content

Posts

Showing posts from June, 2010

இலா கவிதைகள் 6

1. தாலாட்டு கீழிருந்து மேல் செல்லும் மழையில் கண்ணாடி அறைக்குள் கண் சுருக்கி எறும்பின் சிறுநடையில் சிலபொழுது செலிடாகி வினாடிகளைக் கோபித்து வேனிலை விரட்டும்படி செய்து பனிப்பாறை மீதேறி அமர்கையில் பவளங்கள் முத்துக்கள் முக்கனிகள் முன்வைத்து பால் பொங்கப் பசி நிறைக்க தாலாட்டில் சாய்ந்து மீளாமல் போனேன் 2. கண்ணாடிச் சாலை கண்ணாடிச் சாலையில் நடக்க வேண்டியதாயிற்று தவிர்த்து தள்ளிவைத்து காற்றாக மட்டுமே பயண முடிவு ஓரடி வைத்தேன் காலடியில் கும்மிருட்டு 3. பயணம் குழந்தைகள் ஆரவாரம் புதியவர்களின் வரவு கண்ணசைவில் கவனிப்பு வேளைக்கு உணவு உயிர் காக்கும் தவிப்பின்றி நீரலையில் பயணம் கண்ணாடியில் மோதிக்கொண்டே இருக்கிறேன் கடல் சென்று சேர்வதற்கு 4. மானும் புலியும் வரிக்குதிரையின் கோடுகளில் வரிசையாய்க் குருவிகள் சுவற்றில் சாய்த்து வைத்திருந்த வீணையின் கம்பிகள் மீதேறி பரணைக்குச் செல்லும் எறும்புகள் மூடாமல் இருந்த கிணற்றுக்குள் எட்டிப் பார்த்தபடி கொக்கு கரையேறும் யானைக் கூட்டம் கால் நீட்டிக் கதை பேசின அங்கு வந்த மானும் புலியும் 5. பூஜ்ஜிய வட்டம் ஒளிவட்டத்தின் உட்குழியில் நின்று கொண்டிருக்க நேற்று நடக்கப் போவதையும் ந

மொழிபெயர்ப்புக் கவிதை

மொழிபெயர்ப்புக் கவிதை மரத்தின் கீழ் கைவிடப்பட்ட அம்மாவிடமிருந்து என்னிடம் கூறப்பட்டதைப்போலவே - அதிகாலையில் மகனின் வாகனத்திலேறி அதிக தொலைவு பயணித்து நகரமொன்றின் தெருவோர மரநிழலில் வாகனத்தை நிறுத்தியவேளை மூச்சுத் திணறியபோதும் வெளிக்காட்டிக்கொள்ளவில்லை நான் நன்றாக நினைவுள்ளது இதே மரம்தான் மகனே உன்னைத் தூக்கிக்கொண்டு பிரயாணக் களைப்பைப் போக்கவென நின்றேனிங்கு முன்பொரு இரவில் - அதிசயம்தான் மீண்டும் அந்த இடத்துக்கே எனை அழைத்து வந்திருப்பது உனைப் பெற்றெடுத்த நாள்முதலாய் இணையற்ற அன்பைப் பொழிந்தவளிடம் போய்வருகிறேன் என்றேனும் பகராமல் நீ செல்கையில் உள்ளம் பொங்கி வழிகிறது விழிகளினுடாக கைக்குள் திணித்துச் சென்ற ஆயிரம் ரூபாய் நோட்டு பெரும் சுமையாகிட உள்ளத்தின் உறுதியைக் கண்களில் திரட்டுகிறேன் பதற்றமேதுமின்றி வாகனத்தை ஓட்டிக்கொண்டு பத்திரமாக வீடுபோய்ச் சேர்ந்திடுவாய் என் மகனே மூலம் - மஹிந்த ப்ரஸாத் மஸ்இம்புல

60+இன் புலம்பல்

2010ல் ம். என்ன இது! கத்திரிக்காய் கிலோ ரூ.50; அரிசி 35/-; தங்கம் பவுண் 13000. இப்படி விலைவாசி இருந்தால் எப்படி? மாதம் 10000 வருமானம் வந்தால்கூட குடும்பம் நடத்துவது சிரமமாக இருக்கிறது. இந்த லட்சணத்தில் பிள்ளைகளோ பெற்றோரை மதிப்பது கூட இல்லை. வீட்டிலே உக்காந்து ‘நாக்கு முக்க’, என்று கூப்பாடு போடுகிறான். என்னடா என்றால், சினிமாப் பாட்டு என்கிறான். இப்படி ஒரு பாட்டு! இப்போ வருகிற பாடல்கள் எல்லாம்... ம்.. என்ன சொல்ல! 2 பேர் கள்ளக்கடத்தல் செய்கிறான். தாதாவாக இருக்கிறான். அதில் ஒருவன் கதாநாயகன்; மற்றவன் வில்லன் என்கிறான். என்னடா படம் இது, இரண்டு பேரும் அயோக்கியன்தானே என்று சொன்னால், அதெப்படி?! நடிப்பதில் ஒருவன் ஹீரோ, அதனால் அவன் நல்லவன் என்கிறான். மொத்தத்தில் எல்லாமே சுத்த மோசம்! எங்கள் காலத்தில் எல்லாம் இப்படியா? பாரதிராஜா, பாக்கியராஜ், இளையராஜா, எவ்வளவு அற்புதமானவர்கள்!! ம்.. அது ஒரு பொற்காலம் சார்!!! X---X---X 1985ல் மாதம் ரூ.1000 வருமானம் வந்தும் குடும்ப பட்ஜெட் உதைக்கிறது. கத்தரிக்காய் கிலோ 5ரூபாய்; அரிசி கிலோ 10/- தங்கம் பவுண் Rs.800. இந்த விலை விற்றால்

நானும் என் எழுத்தும்

நான் நான்காம் வகுப்பு முடிய திருச்சி ஜில்லாவில் லால்குடி தாலுகா ஆங்கரை என்னும் சிற்றூரில் படித்தேன். நான் படித்த பள்ளிக்கூடத்தில் ஐந்து வகுப்பு வரையே உண்டு. கிட்டத்தட்ட 200 மாணவர்கள் படித்தார்கள். அருள் புரிவாய் கருணைக் கடலே என்ற சுத்தானந்த பாரதியின் பாடல்தான் பிரார்த்தனைக்குரிய பாட்டு. ஊரில் 100 வீடுகள் போல உண்டு. நாங்கள் தெற்கு கோடியில் வசித்து வந்தோம். கர்ணம் மாமா (கணக்குப் பிள்ளை) வீட்டில்தான் தினமணி நாளிதழ் வாங்குவார்கள். அவர் யாருக்கும் வீட்டுக்கு எடுத்துப் போய்ப் படிக்க பேப்பர் தர மாட்டார். படிக்க ஆர்வமுள்ள பெரியவர்கள் அவர் வீட்டு கூடத்தில் கூடுவார்கள். ஒருவர் உரத்த குரலெடுத்து செய்திகளைப் படிப்பார். அப்பொழுது ஆளவந்தார் கொலை வழக்கு விசாரணையில் இருந்தது. தினமணி இரண்டாம் பக்கத்தில் வழக்கு விசாரணை விலாவரியாக அச்சிடப்பட்டிருக்கும். நான் அதைக் கேட்ட ஞாபகம் இன்னும் இருக்கிறது. இதுதான் பத்திரிகை உலகத்துடன் எனக்கு ஏற்பட்ட முதல் தொடர்பு. எங்கள் குடும்பம் வசதி குறைந்தது. ஆனால் சிறுதையூர் டூரிங் கொட்டகையில் சக்ரதாரி பார்த்தது, லால்குடி சினிமா தியேட்டரில் அந்தமான் கைதி (எம் ஜீ

A SHORT-STORY BY AZHAGIYASINGER

A note on AZHAGIYASINGER, Editor, Navina Virutcham, a Little Magazine in Tamil . Original name Chandramouli. He has been contributing as a poet, short-story writer and also the editor of a Tamil Literary Magazine by name Navina Virutcham, actively engaged in doing his might to enrich Contemporary Tamil Literature. So far, his two poem-collections titled ‘Yaarudanum Illai’ ( ‘With None’ - 1995) and ‘Tholaiyadha Dhooram’( ‘The Distance That Never Ceases To Be’ – 2001) and also a volume of his full collection of poems have been published. Already three short-story collections of Azhagiyasinger have been published. His short-story titled Uncle has fetched him the prestigious Katha Award. And, he has received the esteemed ‘Thirupur Thamizh Sangam Award for his translation-work titled ‘Yugantha’. Azhagiyasinger’s poems and short-stories have been translated into English, Hindi , Punjabi and several other Indian languages. Single-handedly and steadfastly, unmindful of the fact that his litera

பூனைகள்.....பூனைகள்.....பூனைகள்...27

பூனை ப.மதியழகன் ஆட்களை கண்டால் உற்று நோக்கும் மாயக் கண்களில் ஆயிரம் மர்மங்கள் புதைந்திருக்கும் அதுவும் கறுப்புப் பூனையைக் கண்டாலே மனசு விதுக்கென்று இருக்கும் நாய் வீட்டில் நல்லது நடக்கும் நாலுவாய் சோறு திங்கலாம் என்று நினைத்திருந்தால் பூனை எப்ப இழவு விழும் யாருமற்ற வீடாகும் என்று நினைக்கும் புழங்காத இடம் தேடியலையும் பூனை மனிதர்களும் உலகில் உண்டு பதுங்கிப் பாயும் புலியினமாயிற்றே பூனை!

பழம் புத்தகக் கடை

அப்போது எல்லாருக்கும் மட்றாஸ்தான். சென்னை என்று சொல்லுவது நாகரிகமற்ற கர்னாடக வழக்கமாய்க் கருதப் பட்டிருக்கலாம். நான் மட்றாசுக்கு வருமுன்பே அப்பாவின் மூலம் அறிந்திருந்த முக்கியமான இடங்களில் ஒன்று மூர்மார்க்கெட். மதறாசில் எனக்கு மிகவும் பிடித்த இடமே இதுதான். இதன் இந்தோ சாராசானிகக் கட்டிட பாணியின் அழகை சொல்லி மாளாது. நுழைவாயில்களில் கருங்கள்களாலான வளைவுகளும், கூரைக் கைப்பிடிச் சுவர்களில் இடம் விட்டு இடமாய் கோயில் கலசங்களின் வடிவில் கல்கலசங்களுமிருந்தன. இன்று அல்லிக் குளத்தின் மேல் எழுப்பபட்டுள்ள புதிய மூர்மார்கெட் அங்காடியின் சுவர்களில் மேற்கூறிய கல் வடிவங்கள் பத்திரப்படுத்தப் பட்டிருந்தது பொருத்தப்பட்டுள்ளன. அந்தக் காலத்து அசல் மூர் மார்க்கெட்டின் உள்ளே மத்தியில் மரங்களுக்கிடையில் அழகிய நீரூற்று ஒன்றும் அமைக்கப் பட்டிருந்தது. இந்த மூர்மார்க்கெட்டில் அன்று பெற்ற அப்பா அம்மாவைத் தவிர மற்றது எல்லாம் கிடைக்கும். பழைய பொருளும் கிடைக்கும், புதிய பொருளும் கிடைக்கும். பழைய புத்தகங்கள், புதிய புத்ககங்கள், எல்லா மொழிகளிலும் புத்தகங்கள், பத்திரிகைகள் கிடைக்குமிடம். ஒரு கடையில் பத்து வருட

கழைக்கூத்தாடிச் சிறுவன்

எதற்காகவென்று தெரியவில்லை கண்ணீர் வந்தது சாலையோரத்தில் தன்னையே சாட்டையால் அடித்தடித்து வருவோர் போவோரிடம் காசு வாங்கிக்கொண்டிருந்தான் கழைக்கூத்தாடிச் சிறுவன் தினப்படி நடப்பது தான் இது இன்று என் செங்குருதி அவன் உடலிலிருந்து வழிந்தது.

பூனைகள்.....பூனைகள்.......பூனைகள்......26.

பூனைக் கவிதைகள் செல்வராஜ் ஜெகதீசன் 01 கடைசியாய் காரொன்றில் அடிபட்டு இறக்குமுன் அந்தக் கறுப்புப் பூனை முழித்தது யார் முகத்திலோ? o 02 திருடனொருவனை காட்டிக்கொடுத்த அடுத்த வீட்டுத் திருட்டுப் பூனைக்கு அதற்குப் பிறகும் அதே பெயர்தான். O 03 இருந்தும் கடந்தும் போயின எத்தனையோ. இன்னும் பல எங்கோ எப்படியோ இருந்து கடக்க. O

ஆறு கவிதைகள்

1. வானத்தில் நீண்ட தொலை தூரத்தில் எல்லாம் கணக்கில்லாமல் பறக்கும் புள்ளினங்கள் 2. விதிர்விதிர்த்துப் போனேன் எங்கும் ஓய்ச்சலில்லாமல் சத்தம் போட்டபடி பறக்கும் வாகனங்கள் 3. அந்தக் கோயிலில் வீற்றிருக்கும் வியாக்கிழமை ஓடணிந்து அமர்ந்திருக்கும் பிச்சைக்காரர்கள் காவித்துணியில் ஜொலிக்கிறார்கள் சிவனடியார்களாய் 4. பெட்டிபோல் வீட்டில் குடியிருக்கிறேன் பெட்டியிலிருந்து வெளியில் வந்து பெட்டிக்குள் நுழைந்து விடுகிறேன். 5. அந்தப் பெண்ணின் மார்பகங்கள் படபடத்துக் கொண்டிருந்தன தடவிக்கொடுக்க கையை நீட்டினேன் கை நீண்டுகொண்டே போயிற்று... 6. வெகுநேரம் வெகுநேரம் கண்ணை மூடிக்கொண்டிருக்கிறேன் கண்ணைத் திறந்தும் பார்த்தேன் உலகம் ஒன்றும் மாறவில்லை

3 கவிதைகள்

வேதாளம் நள்ளிரவில் நடைபாதையில் வேதாளம் நடமாட அதைக் கண்டு பயந்து மேனி காய்ச்சலில் படுத்து கிடக்க கனவினில் ஓர் காட்சி நள்ளிரவில் நடைபாதையில் தனியாய் செல்வதைப் போல வேதாளம் மட்டும் அங்கில்லை வேறு ஒருவரின் கனவுகளுக்குள் சென்று விட்டது போலும். யாருக்காக பொழுது யாருக்காக விடிகிறது சேவல் யாருக்காக கூவுகிறது மழை யாருக்காக பெய்கிறது தென்றல் யாருக்காக வீசுகிறது நாமனைவரும் யாருக்காக வாழ்கிறோம் சூட்சுமம் புரிபடவில்லை புரிந்துவிட்டால் புரிந்தவர்கள் எவரும் இப்பூமியில் இருப்பதில்லை எது ஊனம் யாருக்கு பின்னம் இல்லை உடலிலோ, மனசிலோ ஏசு சாமி சொன்னது போல உடலிலோ, மனதிலோ பின்னமில்லாதவர்கள் கேலி செய்யுங்கள் அங்கஹீனமானவர்களை படைப்புகளில் எது உயர்ந்தது எது தாழ்ந்தது எல்லாம் ஒரு பிடி சாம்பல் தானே இறுதியில் தலையில் கம்பால் அடிக்கும் வெட்டியானிடம் சொல்லுங்கள் நான் உயர்ந்தவனென்று இன்னும் இரண்டு அடிகள் கூடத் தருவான் வாங்கிப் போங்கள்

கிழிசல் சேலை

கன்னியாகுமரியிலிருந்து சென்னை நோக்கிச் சென்று கொண்டிருந்த அந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு செயயாதவர்களுக்கான பெட்டியில் பயணம் செய்வது தாயம்மா பாட்டிக்கு மிகவும் கடினமாகவே இருந்தது. நாகர்கோவிலில் ரயில் ஏறிய போது அந்த பெட்டியில் எல்லா இருக்கைகளிலும் ஆட்கள் அவ்வளவாக இல்லை. இருக்கையில் காலை வசதியாக நீட்டி வைக்க முடிந்தது. ரயில் ஆரல்வாய்மொழி, நாங்குநேரி, வள்ளியூர், என சினன ரயில் நிலையங்களைக் கடந்த போதுகூட பயணிகள் கூட்டம் எல்லா இருக்கைகளையும் நிரபபி விடடது. இருக்க ஓரததில் சிறிது இடம் கேடடவர்கள், சிறிது நேரததில் இடம் தந்தவர்களை இறுக்கி இருக்கையில் சவுகரியமாக உட்கார எததனித்தார்கள். தாயமமா பாடடி தன்னைவிட வயதான ஒருவருக்கும் , ஒரு கர்ப்பிணிப் பெண்ணுக்குமாக இடம் கொடுத்து கடைசியில் தரையிலேயே உட்கார்ந்தாள். தனக்கு துணையாக வந்த அந்த கோட்டாறுக் கடைக்காரப் பையன் பககவாட்டில் உயரததில் சாமான்கள் வைப்பதற்கான அநத குறுகிய இடத்தில் படுத்துக் கொண்டான். அதைப் பார்த்து தாயம்மா பாட்டிக்கு பயம் கொடுதது விடடது. 'எப்பா விழுந்திராதப்பா|கீழே இறங்கு|' என உட்காரச் சொ

முடியுமெனில் சுட்டுத் தள்ளு

மொழிபெயர்ப்புக் குறுங்கதை தனக்குச் சொந்தமான சூதாட்டவிடுதியொன்றில், பொறுப்பாளராகவிருக்கும் என்ஸோ (ENZO), 25 மில்லியன் டொலர்களைக் கையாடியிருப்பதாக மாஃபியா தலைவரான கோட்ஃபாதருக்கு தகவல் கிடைத்தது. என்ஸோ காதுகேளாத, சற்று வயதான ஒருவர். அதனால் கோட்ஃபாதர், என்ஸோவுடன் கதைக்கச் செல்வது தனது சட்டத்தரணியுடன்தான். அந்தச் சட்டத்தரணிக்கு சைகை பாஷை தெரியும். "என்னிடமிருந்து களவாடிய 25 மில்லியன் டொலர்களும் எங்கே?" என்று என்ஸோவிடம் விசாரிக்கும்படி கோட்ஃபாதர், தனது சட்டத்தரணியிடம் உத்தரவிட்டார். சட்டத்தரணி, சைகை பாஷையை உபயோகித்து அந்தக் கேள்வியை என்ஸோவிடம் கேட்டார். 'நீங்கள் என்ன கேட்கிறீர்களென்றே எனக்கு விளங்கவில்லை' என்ஸோ சைகை பாஷையிலேயே பதில் சொன்னார். "நாங்கள் எதைப் பற்றிப் பேசுகிறோமென்றே அவருக்கு விளங்கவில்லையென்று அவர் சொல்கிறார்" சட்டத்தரணி, கோட்ஃபாதரிடம் கூறினார். தனது கைத்துப்பாக்கியை வெளியே எடுத்த கோட்ஃபாதர், கோபத்தோடு அதனை என்ஸோவின் நெற்றியில் வைத்து, "திரும்பவும் கேள்" என சட்டத்தரணிக்குக் கட்டளைய

குட்டிக்கதைகள்

ஒரு தேதி அ வன் கதவைத் திறந்துகொண்டு படிக்கட்டில் உட்கார வந்ததுமே ஒரு பழுப்பு நிற பூனைக்குட்டி விருட்டென்று பாய்ந்தோடியது. சற்று நேரத்திற்கு முன்தான் மழை பெய்து ஓய்ந்திருந்தது. சுற்றிலும் ஈரம் புற்களும் சின்னஞ்சிறு செடிகளும் ஆங்காங்கே மழையில் பளிச்சென்றிருந்தன. சாலையின் இரண்டு புறங்களிளும் எதிரெதிராய் இரண்டு தெரு நாய்கள் ஒன்றையொன்று கடந்தன. மாலை மணி ஐந்திற்கே மணி ஆறுபோல் ஒளி மங்கியிருந்தது. வானத்தின் நீலம் முற்றிலும் மறைந்து கொஞ்சம் கொஞ்சம் இடைவெளி விட்டு மேகங்கள் திரண்டிருந்தன. அந்த இடைவெளியில் வெள்ளை நிற மேகங்கள் முன்முகம் காட்டிக் கொண்டிருந்தன. திடீரென்று பூனைக்குட்டி பக்கத்தில் வந்து அதனுடைய ஓசையை எழுப்பத் துவங்கிற்று. எட்டிப் பார்த்தான். உருண்டைக் கண்கள் இரண்டையும் விழித்தபடி அவனைப் பார்த்து கத்திக் கொண்டிருந்தது. அதனுடைய இடத்திற்கு தான் வந்து தொல்லை கொடுத்து விட்டோமோ என்று எண்ணினான். சிறிது நேரத்தில் பூனைக்குட்டி ஓடிப்போய் தூரத்திலிருந்து கத்திக் கொண்டிருந்தது. அவன் உட்கார்ந்த இடத்திற்குப் பின்னால் சிறிய கறுப்பு எறும்புகள் சென்று கொண்டிருந்தன. படிக்கட்டுகளில் இரண்டிர