Skip to main content

Posts

Showing posts from June, 2019
மனதுக்குப் பிடித்த கவிதைகள் - தொகுதி - 2 - 115 அழகியசிங்கர் கதவு கல்பனா ரத்தன் எங்கள் மூதாதையர் காலத்தில் கதவுகள் வைக்கவில்லை. எங்கள் பாட்டி காலத்தில் கதவு இருந்தது மூடியே... என் அம்மா காலத்தில் நிழலான வெளியுலகம் என் காலத்தில் அவ்வப்போது வேடிக்கை பார்க்க அனுமதி என் மகள் காலத்தில் விரும்பிய இடத்தில் கதவு வைக்க உரிமை. ஆனாலும் எங்களிடம் ஒருபோதும் இல்லை கதவின் சாவி. நன்றி : மனம் உதிரும் காலம் - கல்பனா ரத்தன் - கல்பதரு பதிப்பகம், 7 சேர்மன் சண்முகம் சாலை, சிவகாசி - 626 123 - தொலைபேசி : 9791065284 - பக்கங்கள் : 96 - விலை : ரூ.100

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - தொகுதி - 2 - 114

அழகியசிங்கர்    டீ குடிக்கி செல்வசங்கரன் நல்லவேளை டீ குவளையை அடைந்துவிட்டார் ஒரு டீயைக் குடித்து முடிப்பதற்கு இவ்வளவு நேரமென ஒரு நேரம் கிடையாது அதன் சூடு போவதற்குள் குடித்து முடிப்பதே நல்ல டீ குடிக்கிக்கான சவால் சூடு போய்க்கொண்டிருக்கிறது பாதி முடித்துவிட்டார் முழுவதும் அதன் கதையை முடித்து அங்கிருந்து கிளம்ப, இன்னொரு மலையையும் கடக்கவேண்டும் ரம்மியமான மலை இருபத்தைந்து ஆண்டுகளாக கடந்துகொண்டுதானே இருக்கிறார் அவரது நாற்காலிக்குக் கீழிருந்து விரியும் பழைய பூ போட்ட கல் படியிறங்கி வரும் வளைவில் திரும்பி சிறிது தூரம் நடந்தால் அந்த டீயை அடைந்துவிடலாம் இங்கிருந்தென அங்கிருந்தென அதற்காக அவர் நடந்து போய் வருவதைப் பார்த்தால் போங்கடா மயிருங்களாயென்று ஒரு நாள் எல்லாவற்றையும் உதறி அப்படியே கிளம்பிடுவாரோ என யாருக்கும் வரலாம் அப்படியரு கூத்து அப்படியரு லயிப்பு இருக்கையிலிருந்து எழுந்து செருமியபடி சமஸ்தானம் கீழிறங்க ஆரம்பித்துவிட்டால் அங்கு எதுவும் நடக்கலாம். நன்றி : கனிவின் சைஸ் - மணல்வீடு, ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல். மேட்டூர் வட்டம், சேலம் மாவட்டம் - 636453 தொலைபே

நீங்களும் படிக்கலாம் - 47

ஆல்பெர் காம்யுவின் அந்நியன்.. அழகியசிங்கர்  ரொம்ப நாட்கள் கழித்து இந்தப் புத்தகத்தைத் தூசித்தட்டிப் படிக்க ஆரம்பித்தேன். 1980 ஆண்டு க்ரியாவில் வாங்கியது.   எல்லாம் மறந்து விட்டது.  ஆனால் கொஞ்சமாக ஞாபகத்தில் அம்மா   முதியோர் இல்லத்தில் இறந்ததை ஒட்டி மெர்சோ என்பவன் ஊருக்குச் செல்வான் என்று படித்திருந்தேன். அந்த ஊரில் அம்மாவை சவ அடக்கம் செய்யும் வரை அம்மாவின் இறந்த தோற்றத்தைப் பார்க்க விரும்ப மாட்டான்.  ஏன்? இயல்பாக இருப்பான்.  அம்மா இறந்து விட்டாள் என்று அழ மாட்டான்.   இப்படி மெர்சோ நாவல் முழுவதும் வருகிறான்.  அவன் காதலி மேரி அவனிடம் கேட்கிறாள்.  தன்னைத் திருமணம் செய்துகொள்ள விருப்பமா? என்று. அதற்கு மெர்சோ, திருமணம் செய்துகொள்வது கொள்ளாதது எல்லாமே ஒன்றுதான் என்கிறான். வேலை மாற்றமாக பாரிஸில் செல்ல விருப்பமா என்று கேட்கிறார் மெர்சோவின் முதலாளி.   மெர்சோ இதற்குப் பதில் அளிக்கும்போது அவனைப் பொருத்தவரை இப்போது இருக்குமிடத்தில் இருப்பதாகக் கூறுகிறான்.  உண்மையில் இது குறித்து அவனுக்கு எந்தவித அபிப்பிராயமும் இல்லை.என்று தெரியப்படுத்துகிறான்.  ஏன்என்றால் இப

துளி : 56 - சிறுகதையை கொண்டாடுவோம்

அழகியசிங்கர் கடந்த இரண்டாண்டுகளாக தினமணி சிவசங்கரி போட்டி வைத்து பரிசுக்குரியவார்களுக்கு நேரிடையாக பரிசு வழங்குகிறார்கள். சிறுகதைப் போட்டி வைக்கும் எந்தப் பத்திரிகையாவது இதுமாதிரி செயல்படுகிறதா?  இல்லவே இல்லை என்று சொல்ல வேண்டும். இன்று இரண்டாவது காட்சி அரங்கமானது.  பரிசுக்குரியவர்கள் எல்லோரையும் அழைத்து கவிக்கோ அரங்கத்தில் பெரிய கூட்டத்தைக் கூட்டிவிட்டார்கள்.   இதை வரவேற்க வேண்டிய ஒன்று என்று எனக்குத் தோன்றியது.  உண்மையில் சிறுகதைகளை கொண்டாடுகிறார்கள்.   ஒரே ஒருவரைத் தவிர பரிசுக்குரியவர்கள் எல்லோரும் வந்து விட்டார்கள்.  கவிக்கோ அரங்கம் முழுவதும் நிரம்பி விட்டது.  சிறப்புரை மாலன்.  பாராட்டுரை நீதியரசர் ஆர் மகாதேவன்.   போன ஆண்டு விட கதைகள் எண்ணிக்கை அதிகமாக வந்திருந்தாலும்,  குறிப்பிடும்படியான கதைகள் வரவில்லை என்றார் மாலன். ஆனால் உலகம் முழுவதும் கதை சொல்லும் முறையை உருவாக்க வேண்டும் என்று சொன்னார்.  தினமணிகதிர் ஆசிரியர் வைத்தியநாதன் பேசும்போது பள்ளி வகுப்பிலிருந்து எல்லாம் கதை சொல்லும் முறை வரவேண்டுமென்றார்.  நீதியரசர் ஆர் மகாதேவன் காஃப்கா, காம்யு, நபக்கோ என்றெ

பிரெஞ்சு இலக்கியமும் நானும் - 3

செவாலியர் விருதுபெற்ற வெ. ஸ்ரீராம் அவர்கள் 15.06.2019 அன்று பிரெஞ்சு இலக்கியமும் நானும் என்ற தலைப்பில் சனிக்கிழமை ஆற்றிய உரையின் கடைசிப் பகுதி ஒளிப்பதிவை வெளியிடுகிறேன்.  கண்டிப்பாக கண்டு மகிழவும்.   அழகியசிங்கர்

பிரெஞ்சு இலக்கியமும் நானும் - 2

செவாலியர் விருதுபெற்ற வெ. ஸ்ரீராம் அவர்கள் 15.06.2019 அன்று பிரெஞ்சு இலக்கியமும் நானும் என்ற தலைப்பில் சனிக்கிழமை ஆற்றிய உரையின் இரண்டாம் பகுதி ஒளிப்பதிவை வெளியிடுகிறேன். கண்டிப்பாக கண்டு மகிழவும். அழகியசிங்கர்

பிரெஞ்சு இலக்கியமும் நானும் - 1

செவாலியர் விருதுபெற்ற வெ. ஸ்ரீராம் அவர்கள் 15.06.2019 அன்று பிரெஞ்சு இலக்கியமும் நானும் என்ற தலைப்பில் சனிக்கிழமை ஆற்றிய உரையின் முதல் பகுதியை வெளியிடுகிறேன். அழகியசிங்கர்

மணல்வீடு மணல்வீடு

அன்புடையீர்  வணக்கம் முன்னோடி படைப்பாளுமைகளை கௌரவிக்கும் முகமாகவும், தீவிர இலக்கிய உணர்வாளர்களுக்கு மரியாதை செய்யும் விதமாகவும் மணல்வீடு இலக்கியவட்டம் கடந்த இருவருடங்களாக இலக்கிய விருதுகள் வழங்கிவருவருகிறது. அதன் நீட்சியாக இந்த வருடம் அஃக் பரந்தாமன் நினைவு இலக்கியவிருதுக்கு நவீன விருட்சம் சிறுசஞ்சிகை தெரிவு பெற்று இருக்கிறது . மேற்சொன்ன விருது வழங்கும் விழா எதிர்வரும் ஆகஸ்து மூன்றாம் தேதி (03 - 08 -19) ஈரோடு சூரம்பட்டி நான்கு ரோடில் அமைந்துள்ள ராணா விடுதி நிகழ்வரங்கத்தில் நடக்க இருக்கிறது. ஆர்வலர்களும் அன்பர்களும் நேரில் வந்திருந்து விழாவை சிறப்பிக்க கேட்டுக் கொள்கிறேன் . இவண் மு . ஹரிகிருஷ்ணன் தெரிவுக்குழு செ. ரவீந்திரன் சுதாகர் கதக் விவேகானந்தன் ஐ . எப் . எஸ் நக்கீரன் குறிப்பு விருது ரூபாய் இருபத்தி ஐந்தாயிரம் தொகையும், சான்றிதழும் நினைவு பரிசொன்றும் உள்ளடக்கியது . மாற்றத்திற்குட்டபட்ட விழா நிகழ்ச்சி நிரல் இத்துடன். மணல்வீடு இலக்கிய வட்ட நிகழ்வு - 10 நிகழ்விடம் - ராணா விடுதி நிகழ்வர

அன்புடையீர்,

வணக்கம். நான் அமெரிக்கா சென்றதால் விருட்சம் இலக்கியச் சந்திப்பு கூட்டங்கள் மார்ச்சு, ஏப்ரல் மாதங்கள் நடத்தப்படவில்லை.   மே மாதம் திரும்பவும் வந்துவிட்டேன்.  ஆனால் கடுமையான வெயில் நடத்தவிடவில்லை.  இதோ ஜøன் மாதம் 15ஆம் தேதி கூட்டம்.  இது 47வது கூட்டம்.  மூகாம்பிகை காம்பளெக்ஸில்.  அவசியம் எல்லோரும் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பு செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன்.  இந்த முறை  செவாலியா விருதுபெற்ற வெ ஸ்ரீராம் அவர்கள் பேசுகிறார்.  இவர் நேரிடையாக பிரஞ்ச் மொழியிலிருந்து மொழி பெயர்த்துள்ளார்.  அவருடைய அனுபவத்தை கூறுகிறார். வரவும. விருட்சம் இலக்கியச் சந்திப்பு -  47         தலைப்பு  :   பிரெஞ்சு இலக்கியமும் நானும் சிறப்புரை :   செவாலியா விருதுபெற்ற வெ ஸ்ரீராம் இடம் :      ஸ்ரீராம் குரூப் அலுவலகம்     மூகாம்பிகை வளாகம்     சி பி ராமசாமி தெருவில் உள்ள பாலம் கீழே     ஆறாவது தளம்      மயிலாப்பூர்     சென்னை 600 004 தேதி 15.06.2019 (சனிக்கிழமை) நேரம் மாலை 6.00 மணிக்கு பேசுவோர் குறிப்பு  : மொழிபெயர்ப்பாளர் அன்புடன் அழகியசிங்கர் 9444113205

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - தொகுதி - 2 - 113

அழகியசிங்கர்   பேப்பர் பையன்  பயணி விடிந்தும் விடியாத காலை தெருக்களில் சைக்கிளில் பேப்பர் போட்டுக்கொண்டு வருகிறான் பேப்பர் பையன் மாடியில் குடியிருப்போருக்குக் கீழிருந்து வீசப்படும் பேப்பர் வழக்கம்போல் பால்கனியில் விழாமல் பால்கனியைக் கடந்து மாடியைக் கடந்து காலைவேளை பறவைகளைக் கடந்து வானத்தை நோக்கிச் செல்கிறது வானம் நெருங்க நெருங்க பேப்பர் தன்னைப் பூதாகரமாக விரித்துக் கொள்கிறது வானமே கூரையாகவிருந்த இந்த நகருக்கு இப்பொழுது பேப்பரே கூரையாகிவிட்டது பேப்பரின் இருளும் ஒளியுமே நகரின் இரவு பகலாக மாறுகிறது ஒவ்வொரு நாள் காலையிலும் பேப்பரிலுள்ள செய்திகள் மாற்றமடைகின்றன இதைக் கண்டு பேப்பர் பையன் கலக்கமடைகிறான் காலப்போக்கில் அவன் குல்பி ஐஸ்காரனாக மாறுகிறான் இரவுகளில் குல்பி ஐஸ் விற்கும்போது அதை வாங்குவோர் சிலர் கேட்கிறார்கள் உன் கரத்தில் பேப்பர் வாசம் அடிக்கிறதே மேலே அண்ணாந்து பார்த்து அவன் தனக்குள்ளே சிரித்துக்கொள்கிறான் நன்றி : மீள மேலும் மூன்று வழிகள் - புது எழுத்து, 2/205 அண்ணாநகர், காவேரிப்பட்டிணம் 12, கிருஷ்ணகிரி மாவட்டம் - முதல் பதிப்பு : டிசம்பர் 2013 - வ

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - தொகுதி - 2 - 112

அழகியசிங்கர்   பட்டினி போட்ட அலாவுதீன் விளக்கு செந்தூரம் ஜெகதீஷ் எதற்குமே பயனற்றவன்தான் ஒரு படைப்பாளி காய்கறி கூட பேரம் பேசி வாங்க அவனுக்குத் தெரியாது ரிக்ஷாக்காரனிடம் மாரடிக்க அவனால் முடியாது பணங்காசுக்கு ஆலாய்ப் பறக்க அவனால் இயலாது இல்லறத் தேவைகளின் பூதாகரமான பசியை அவன் புரிந்து கொள்ளவே மாட்டான் லௌகீக வலையில் சிக்காமல் நழுவும் மீன் அவன் ஆனாலும் யதார்த்தம் என்னும் நெருப்பில் அவனும் வெந்து குழம்பாகிப் போகிறான் ருசியின் மயக்கத்தோடு நன்றி : இன்னும் மிச்சமிருப்பவை - நவம்பர் 1999 - சிந்து பதிப்பகம்,  112 ஜானிஜான்கான் சாலை, இராயப்பேட்டை, சென்னை 14 வெளியான ஆண்டு : 1999 - விலை : ரூ.30  

துளி : 55 இந்தி கற்றுக்கொள்ள முடியவில்லை

அழகியசிங்கர் நான் இந்தி கற்றுக்கொள்ள வேண்டுமென்று நினைக்கிறேன். ஆனால் இனிமேல் முடியாது.  அதாவது நான் ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும்போது கலவரமாக இருந்தது.  முன்பெல்லாம் ஒன்பதாம் வகுப்பிலிருந்துதான் இந்திப் பாடம் நடத்துவார்கள்.  அப்போது தீவிரமாக இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடந்ததால் இந்தியைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது.  குடுமி வைத்துக்கொண்டிருப்பார் இந்தி கற்றுத் தரும் ஆசிரியர்.  கூட்டமாக மாணவர்கள் எல்லாம் கெரோ செய்தார்கள்.  நான் படித்தப் பள்ளிக்கூடத்தில் அந்த ஆசிரியரை அதன் பின் பார்க்கவில்லை.  பள்ளிக்கூடத்திலிருந்து துரத்தி விட்டார்களா? என்ன செய்தார்கள் என்று தெரியவில்லை.  ஆனால் பாவம்.   பள்ளிக்கூடத்திலிருந்து வரும் மாதச் சம்பளம் அவருக்குப் போயிருக்கும். அதன் பின் இந்தி கற்றுக்கொள்ளும் வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது.  எனக்கும் இந்தி ஞாபகமில்லை.  பின் வேலையெல்லாம் கிடைத்து சிறிது மூச்சு வாங்க நேரம் இருந்தபோது இந்தி கற்றுக்கொள்ளலாம் என்று யோசித்தேன்.  மாம்பலத்தில் எங்கே இந்தி கற்றுக் கொடுக்கிறார்கள் என்று பார்த்தேன்.  கோதண்ட ராமர் கோய

துளி - 54 பழையப் புத்தகங்களைப் பாதுகாத்து வைத்திருக்கிறேன்..

.. அழகியசிங்கர் என்னிடம் பழையப் புத்தகங்கள் கைவசம் இருக்கின்றன.  ஓரளவு இப் புத்தகங்கள் மோசமான நிலையில்தான் இருக்கின்றன.  சில புத்தகங்களுக்கு அட்டை கிழிந்திருக்கும்.  நான் அதுமாதிரியான சில புத்தகங்களை பைன்ட் செய்திருப்பேன்.  அட்டை இல்லாமல்.  அப்படி ஒரு புத்தகம் ஆல்பெர் காம்யு வின் மொழிபெயர்ப்புப் புத்தகம். பிரஞ்சிலிருந்து தமிழுக்குப் மொழி பெயர்த்தவர் வெ ஸ்ரீராம். 1980ஆம் ஆண்டு இந்தப் புத்தகம் க்ரியா மூலம் அச்சாகி உள்ளது.  கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் என்னுடன் இப் புத்தகம் உள்ளது.  அப்போது இதன் விலை ரூ.15.  இப்போது எடுத்துப் படித்தாலும் படிக்க வேண்டுமென்ற எண்ணத்தைத் தூண்டும் புத்தகம்.   இப் புத்தகத்தை தமிழில் வெளியிட அனுமதி அளித்த காலிமார் பதிப்பகத்திற்கும் திருமதி காம்யு அவர்களுக்கும் நன்றி என்று எழுதி உள்ளார்கள்.  அந்நியன் என்ற இந் நாவல் 1942 ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது.  இன்றைய மனிதனின் மனசாட்சி குறித்த பிரச்சினைகளைத் தெளிவான நேர்மையுடன் விளக்கியிருக்கும் இவரது இலக்கியப் படைப்புகளுக்காக இவருக்கு 1957-ம் ஆண்டு நோபல் பரிசு அளிக்கப்பட்டது.  1960-ம்ஆண்டு ஜனவரி 4-ம்த

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - தொகுதி - 2 - 111

அழகியசிங்கர்   வீதிக்காட்சி எம் யுவன் தனக்குத் தானே பேசிக் கொள்ளும் கலையை ஒரு குழந்தையிடம் கற்றேன். ஜனம் நெரியும் வீதியில் தானறியாது யாவரும் கைவீசி நடக்கும் மாய நாட்டியத்தில் நானும் கைவீசிப் பங் களித்தேன். திகம்பரமாய்க் கடந்து போன ஜைனத் துறவி உடை அணிந்து உடை விலக்கத் துடிக்கும் என்னை நொறுக்கிப் போனான். கைதட்டும் கடைசிப் பார்வையாளன் மறைந்ததும் தொடங்கிவிட்டது முற்றிலும் புதிய நாடகம். நன்றி : வேறொரு காலம் - எம் யுவன் - மையம் - 7 ராகவன் காலனி, மேற்கு மாம்பலம், சென்னை 600 033 - பக்: 64 - முதல் பதிப்பு : டிசம்பர் 1999 விலை : ரூ.30