Skip to main content

Posts

Showing posts from April, 2009

இரு கவிதைகள்

அவசரக் கூட்டம் உறுப்பினர் வருகை சந்தேகமே நாளை நடத்தலாம் அவசரக் கூட்டம் நாளை என்ன நடந்திடுமோ மறுநாள் ஒருநாள் கணக்கில் வை பிறிதொரு நாளும் காரியம் ரத்து நானும் நீயும் கூடிடலாம் இருவர் சூழலும் இணைய மறுப்பின் ஏண்டா இப்படி அபசகுனம்? தீர்மானங்கள் நிறைவேறும் கவலை வேண்டாம் மாவீரா கூட்டம் நடந்ததாய்க் கணக்கில் வை. அன்னம், கிளி, மயில், மேகம்.......ஆனந்த் நாய்க்குட்டியைத் தூதுவிட்டுநித்யாவைக் கவர்ந்தவன் யார் நம்ம சிவலிங்கம் ஜோடிக் கிளியைப் பரிசளித்து ராமகிருஷ்ணன் கவர்ந்துவிட்டது யாரை நம்ம மீனாட்சியை புத்திசாலிப் பசங்க இந்த மதன்தான் தப்பு செய்து விட்டான் கீர்த்தியைக் கவர்ந்திழுக்க ஆனந்த்தைத் தூதுவிட்டான் அபாயத்தில் குரைக்கவும் தெரியாத நெல்மணிகளைக் கொத்தவும் பயனிலாத அசட்டு ஆனந்தைக் கண்டவுடன் செருப்பைக் காடடினாள் கீர்த்தி செருப்பு விடு தூது பற்றி ஆனந்த் படித்த இலக்கியம் வாழ்வோடியைந்து போனதே மதன்.

என் இனிய இளம்கவி நண்பரே

அன்றைக்கு நீங்களும் நானும் சேர்ந்து குடித்தோம் வழக்கம்போல எப்பொழுதுமே நம் சந்திப்பு இப்படித்தான் தொடங்கும் (அனேகமாக இன்றைய தினம் குடிக்காத இளம்கவிஞர்களே இல்லைதான்) நிறைபோதையில் கட்டற்ற சுதந்திரவெளியில் மிதந்து கொண்டிருந்தோம் இதுதான் பிரச்னையே இல்லையா உங்களுக்கு ஏன்தான் அந்த யோசனை தோன்றியதோ அந்தத் தோழரின் வீட்டுக்கு கூட்டிக்கொண்டு போனதில் அரசியல் இல்லையென்று நம்பமுடியவில்லை ஒரு காலத்தில் நீங்கள் எல்லோரும் ஒன்றாக இருந்தவர்கள்தாம் உங்களை வைத்துத்தான் அவரைத் தெரியும் ஏற்கனவே தோழரும் குடித்திருந்தார் மேலும் நாம் குடித்தோம் ஏதோ ஒரு புள்ளியில் பேச்சுத் தொடங்கியது பிறகு அது சர்ச்சையாக மாறியது உங்களைவிடவும் அமைப்பு சார்ந்த அந்த இளம்கவிஞருக்குத் தரப்படும் முக்கியத்துவத்தை கேள்வி கேட்டிருக்கக் கூடாது நான் இது இயல்புதானே அவர்களுக்கு (கள்ளின் இன்னொருபெயர் உண்மைவிளம்பி தெரியுமா குடித்திருக்கையில் ஒளிவு மறைவு கிடையாது) தோழருக்கு நியாயம் பேசமுடியவில்லை தவிரவும் அவர் நிதானத்தில் இல்லை உங்களிடம் காட்டமுடியாத கோபத்தை என்னிடம் பிரயோகித்தார் புகைத்துக்கொண்டிருந்த சிகரெட்டை என்மேல் விட்டெறிந்தார் வேட்டி தீப

சிறு கவிதைகள்

01 அழைத்துப் போய்வந்த ஆசிரியரின் அத்தனை கெடுபிடிகளுக்குப் பின்னும் இன்னமும் நினைவில் அந்த ஸ்கூல் பயணம் இன்பச் சுற்றுலா என்றே. o 02 இலவசமாய் அரிசி டிவி இயற்கை உபாதைக்கு கட்டண கழிப்பிடங்கள். o 03 எதிர்வரும் பேருந்தில் அடிபடும் அபாயம். இடப்புறம் நகர்ந்து நடந்தேன். இளவயது மாதொருத்தியை இடித்தபடி. o 04 யாருமற்ற பூங்காவில் ஊஞ்சல் ஆடிக்கொண்டிருக்கிறான் என் மகன். எவரையோ சேருமென்று கவிதைகள் எழுதிக்கொண்டிருக்கிறேன் நான். o 05 ஏதோவொன்றின் தொடர்பாகவே எதுவொன்றின் நினைவும்.

பூனைகள் பூனைகள் பூனைகள் பூனைகள்

11 விளையாடும் பூனைக்குட்டி க நா சு மல்லாந்து படுத்துக் கால்நீட்டிக் குறுக் கிக்கயிற்றின் நுனியைப் பல்லால்கடித் திழுத்துத் தாவி எழுந்து வெள்ளைப் பந்தாக உருண்டோடிக் கூர்நகம் காட்டி மெலிந்து சிவந்த நாக்கால் அழுக்குத் திரட்டித் தின்னும் பூனைக்குட்டி - என்னோடு விளையாடத் தயாராக வந்து நின்று, என் கால்களில் உடம்பைச் சூடாகத் தேய்த்துக் கொண்டு நிமிர்ந்து அறிவு ததும்பும் கண்களுடன் என்னைப் பார்க்கிறது. அப்போது நான் சிலப் பதிகாரம் படிந்திருந்து விட்டேன் பின்னர் நான் அதை விளையாட 'மியாவ் மியாவ் ஓடி வா' என்று கூப்பிடும் போது நின்று ஒய்யாரமாக ஒரு பார்வையை என் மேல் வீசிவிட்டு மீன் நாற்றம் அடிக்கும் கொட்டாவி விட்டுக்கொண்டே அடுப்படியிலே போய்ச் சுருண்டு படுத்துக்கொள்கிறது பூனைக்குட்டி (எழுத்து / ஏப்ரல் 1959)

இப்படி ஒரு பயணம் சி.மணி - (1936-1979)

சி.மணி மறைந்து விட்டார் நேற்று, என்று நண்பரும் விருட்சம் என்னும் சிறுபத்திரிகாசிரியருமான அழகியசிங்கர் தொலைபேசியில் சொன்னார். கொஞ்ச காலமாக அவர் உடல் நிலை சரியில்லாது இருக்கிறார் என்று க்ரியா ராம க்ரிஷ்ணனும் எனக்குச் சில மாதங்கள் முன் தொலைபேசியில் சொல்லியிருந்தார். ஐந்தாறு வருடங்களுக்கு முன் சேலத்தில் காலச்சுவடு நடத்திய சி.சு.செல்லப்பா - கு.ப.ராஜகோபாலன் பற்றிய கருத்தரங்கின்போது தானே நடக்க சக்தியில்லாத ஒரு தளர்ந்த முதியவரை கைத்தாங்கலாக ஹாலுக்குள் அழைத்து வந்து ஓர் இருக்கையில் அமர்த்தினர். பக்கத்தில் இருந்தவரிடம் (அனேகமாக சச்சிதானந்தமாக இருக்கவேண்டும்), "யார் அவர்?" என்று விசாரித்தேன். "யோவ், சி.மணிய்யா அது!" என்று என் அறியாமையை இடித்துப் பேசும் குரலில் அதிர்ந்து போனேன். உடனே அவரிடம் விரைந்து சென்று, என்னை அறிமுகப் படுத்திக்கொண்டேன். அவரது தளர்ந்த நிலை, என் அறியாமை, அதிர்ச்சி, என்னை அவருக்கு நான் அறிமுகப்படுத்திக்கொள்ள வேண்டி வந்த நிலை எல்லாம் எல்லாம் ஒரு விதத்தில் சொல்லப் போனால், தமிழ் உலகம் தன்னை அறிமுகப் படுத்திக்கொள்ள வேண்டிய இன்றைய நிலையின் அன்றைய முன் அறிவிப்

கவிதை புரிய வேண்டுமா வேண்டாமா

இரண்டு வாரங்களுக்கு முன் திரிசூலம் ரயில்வே நிலையத்தில் அமர்ந்திருந்தபோது எங்களுடைய முதல் கேள்வி கவிதை புரிய வேண்டுமா வேண்டாமா என்பதுதான். எங்களிடையே பலத்த சர்ச்சையை இந்தக் கேள்வி ஏற்படுத்தியது. என்னைப் பொறுத்தவரை கவிதை புரிய வேண்டும் என்ற கட்சியைச் சேர்ந்தவன். ஆனால் கவிதை மனதிலிருந்து எழுதுவதால் புரியாமல் போக வாய்ப்புண்டு. கவிதையை எழுதுகிற மனமும், கவிதையை வாசிக்கிற மனமும் வேறு வேறு தளங்களில் இயங்குபவை. அதனால் கவிதை புரியவில்லை என்று ஒரு வாசிப்பவன் சொல்லி கவிதையைத் தூக்கிப் போட்டுவிட முடியும். என் நண்பர்கள் சிலர் கவிதை புரியவில்லை என்றே சொல்லாதே என்று அறிவுரை கூறுவார்கள். ஏனெனில் கவிதை புரியவில்லை என்று சொன்னால் எழுதுபவர்களுக்குப் பெரிய கித்தாப்பு ஏற்பட்டுவிடும். ஆனால் கவிதை எளிதாகப் புரியவேண்டும் என்று பாரதியார் கூறியபடி எளிதாக பல கவிதைகளைப் படைத்திருக்கிறார். சிலசமயம் கவிதை புரியும் ஆனால் கவிஞர் என்ன சொல்ல வருகிறார் என்பது தெரியாது. அதனால் கவிதையைப் பொருத்தவரை இரண்டுவிதமான அபிப்பிராயங்கள் தோன்றாமல் இருப்பதில்லை. ஒன்று கவிஞரின் அபிப்பிராயம். இரண்டாவது வாசகனின் அபிப்பிராயம். எனக்குத் த

நான்கு கவிதைகள்

கவிதை ஒன்று ஓடிக்கொண்டிருந்தது நதி. கரையில் அமர்ந்திருந்தேன். வெயில் தாழ குளித்துக் கரைமீண்டாய் நீ நதியின் சுழல், ஆழம், குளிர்மை z எனப் பேசிக்கொண்டே போனாய். ஓடிக்கொண்டிருந்தது நதி. கேட்டுக்கொண்டிருந்தேன் ஒரு முடவனைப் போல. ஏதோ ஒரு தருணத்தில் உன் தலை சிலுப்பில் பூ தூறலாய் விழுந்தது நதி என் மேலும். நீந்த முடியாத நதி. கவிதை இரண்டு அம்மா காத்திருப்பாள் அப்பாவிற்காக. மிடறு தண்ணீரும் கவளம் சோறும் இறங்காது. தகிக்கும் வெயிலில். வெறிச்சோடிய தெருவும். ஆண்டணா கம்பிகளும் - ஒதிய மரமும் மெளனமாய் அம்மாவைப் பார்த்துக் கிடக்கும் அம்மா காத்திருப்பாள் அரவமற்ற வெளியில் ஏதோ ஒரு தேவகணத்தில் மலரும் கருஞ்சிறகுகள் அம்மாவின் மனங்குளிர. கவிதை மூன்று விரிந்த வானம். யாரோ இறைத்துபோன தானிய மணிகள்போல இறைந்து கிடக்கும் நட்சத்திரம் - முற்றம் வழி கூடம் நிறைக்கும் நிலவு என்பதாய் இருந்தது அப்பாவின் இரவுகள் எனக்குக் கிடைத்தது துண்டு வானம் - முட்டம் இல்லாத நாளில் இரண்டொரு நட்சத்திரம் சாளரம் வழியே கொஞ்சம் நிலவு. உன் வீடுதான் காரணமென்றாலும் நீயும் சொல்லக்கூடும் என் வீடு உன் வானத்தை மறைப்பதை. கவிதை நான்கு மிகவும் அழகானது நீ உட

வேர்கள்

அ மெரிக்க கவிஞர் ஜெர்ட்ருட் ஸ்டைன் ஒரு கவிதையில் A Rose is a rose is a rose is a rose என்று ஒரு வரி எழுதியிருந்தார்.அது மிகவும் புகழ் பெற்ற வரி கிவிட்டது. பல சமயங்களில் அந்த தொடர் ஆறு அல்லது ஏழு முறைகள் Rose என்கிற சொல்லுடன் உபயோகிக்கப்படுவதுமுண்டு. ஆனால் ஸ்டைன் நான்கு முறைகள்தான் Rose என்கிற சொல்லை எழுதியிருந்தார். எத்தனை முறை வந்தாலும் அர்த்தம் ஒன்றுதான். ரோஜா ரோஜாதான். ரோஜாவை ரோஜாவால்தான் முழுதாக அர்த்தப் படுத்திக் கொள்ளமுடியும். ரோஜா என்கிற சொல்லை மட்டுமல்ல எந்த சொல்லை எடுத்துக் கொண்டாலும் அதைப் பிறிதொரு சொல்லால் பெயர்த்துவிட முடியாது. அகராதியில் நாம் ஒரு சொல்லுக்கு காண்கிற அர்த்தங்கள் யாவும் அதை நெருக்கமாக அணுகத்தான் பயன்படுகின்றன. அகராதி இல்லாவிடில் அதன் அர்த்தத்தை பிரபஞ்சம் முழுவதும் தேட வேண்டி வரும். எந்த ஒரு சொல்லின் பொருளும் அதிலேயே உள்ளது. இதே போன்று நுண்மான் நுழைபுலத்துடன் இன்னொரு வரியையும் ஸ்டைன் எழுதியுள்ளார்.அது `There is no there there`. வசீகரமும் திறமையும் வாய்ந்த ஸ்டைன் தன் வாழ்நாளை பாரிஸிலேயே கழித்தார். அவர் பிகாஸோ, மாடீஸ், ஹெமிங்வே போன்ற பல பிரபலங்களின் சிநேகி

மூன்று கவிதைகள்

கவிதை ஒன்று வெகு நாட்களுக்குப் பிறகு எனக்கொரு கடிதம் வந்தது சுட்டெரிக்கும் வெறுமையின் மத்தியில் எனக்கென தோன்றிவிட்ட மாயையை அக்கடிதம் ஏற்படுத்தியிருந்தது நிரம்பி வழியும் தனிமையின் நிழலை அழித்துவிடுவதற்கேனும் கடிதம் வந்திருக்கலாம் இன்னும் கிழித்துப் படிக்கவில்லை இழந்து போனவர்களில் யாரோ ஒருவர் இதை அனுப்பியிருக்கக் கூடும் எதன் அடையாளமாகவேனும் தெரிந்து கொள்ளும் ஆவலில் கடிதத்தைக் கிழித்தேன் அதனுள் ஏதோவொரு பறவையின் முறிந்த சிறகு கிடந்தது கவிதை இரண்டு இரவுகளின் நடனத்தைக் கண்டவர் அவ்வளவு எளிதில் உர்ரான்குவதில்லை கழிதலறியும் உத்திகளை எவ்வழியிலேனும் கையாளத் தயாராக இருக்கிறார் சுயசெய்கைகளுக்கு உட்பட்ட காமவெளிப்பாடுகள் துருத்தி நிற்கும் கழியாத இரவொவ்வொன்றும் அவரை வீழ்த்த எப்பொழுதும் காத்துக்கிடக்கின்றன நடனத்தின் அசைவுக்குள் விழும் எம்முறையும் வெறுக்கிறார் நெடியுடன் பிறக்கும் விட்டிலை கவிதை மூன்று உதிர்தலில் வாடாத மரங்களின் பெருமூச்சைக் கடந்து செல்லும் நதியின் சலனமாக கடவுள் உறங்குகிறார் ஒரு பூனையின் சாதுர்யமாக கடவுளின் இல்லத்திற்குள் நுழைந்து அவரது பஞ்சனைக்கு அருகில் அமர்கிறேன் அவரின் பாதங்களில் பிர

தேர்தலும் நானும்........

(நன்றி : தினமணி) நான் சாதாரணத்திலும் சாதாரண வாக்காளன். ஓட்டுப் போட உரிமை எனக்கு வந்தபிறகு, ஓட்டுப் போடும் தருணத்தை வேண்டுமென்றே தவற விட்டிருக்கிறேன். ஏனோ இந்த அரசியல் கட்சிகளின் மீது அளவுகடந்த அலட்சியம். இந்தியா மாதிரியான ஒரு பெரிய தேசத்தை ஆள்வது சாதாரணமான விஷயமல்ல. எல்லோரையும் திருப்தி செய்யும்படியான ஒரு ஆட்சியை யாராலும் கொடுக்க முடியாது. பாரதிய ஜனதாவும், காங்கிரசும் குட்டி குட்டி மாநிலக் கட்சிகளின் தயவால் 5 ஆண்டுகள் ஒரு திருப்புமுனையும் இல்லாமல் ஆட்சியை முடித்துக்கொண்டது பெரிய சாதனையாகவே எனக்குத் தோன்றுகிறது. முதலில் இதைச் சாதித்தவர் முன்னாள் பிரதம மந்திரி நரசிம்மராவ்தான். இப்போதோ எந்த அளவிற்கு உடைய முடியுமோ அந்த அளவிற்கு தேசிய கட்சிகளான காங்கிரசும், பாரதிய ஜனதாவும் உடைந்து போயிருக்கின்றன. தேர்தல் நடப்பதற்கு முன்பே இந்தத் துண்டு துண்டான நிலையை உணர முடிகிறது. தேர்தலுக்குப் பிறகு என்ன நிலை என்பது தெரியவில்லை. தேர்தல் கவலைக்குரிய விஷயமாக உள்ளது. ஏராளமான பணம் செலவாகும். தேர்தலை வெற்றிகரமாக நடத்தி முடிக்க தேர்தல் அதிகாரிகள், காவல் துறையினர், ரா

தீவிரவாதக் கவிதை

ஒற்றைத் தோட்டாவை மட்டும் மிச்சம் வைத்து கண்ணுக்குப் பட்டதையெல்லாம் இலக்காக்கிக் குறிவைக்கிறேன் கருந்துளை நீண்ட எனது துப்பாக்கி முனையில். பொருட்களையெல்லாம் குறி வைக்கிறேன்- உயிர்களைக் குறிவைக்கிறேன்- தாவரங்களைக் குறிவைக்கிறேன்- விலங்குகளைக் குறிவைக்கிறேன்- பறவைகளைக் குறிவைக்கிறேன்- மனிதர்களைக் குறிவைக்கிறேன்- உறவுகளைக் குறிவைக்கிறேன்- நண்பர்களைக் குறிவைக்கிறேன்- எதிரிகளைக் குறிவைக்கிறேன்- துரோகிகளைக் குறிவைக்கிறேன்- உங்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியே குறிவைக்கிறேன்- காலூன்றி பூமிக்குக் குறிவைக்கிறேன்- நிமிர்ந்து நின்று வானத்தைக் குறிவைக்கிறேன்- பரிதியையும் நிலவையும் குறிவைக்கிறேன்- கோள்களைக் குறிவைக்கிறேன்- விண்மீன்களைக் குறிவைக்கிறேன்- என் சுட்டுவரல் நுனியில் இந்தப் பேரண்டத்தையே இலக்காக்கிக் குறிவைக்கிறேன்- இவை யாதொன்றையும் சுட்டுவிடாமல் விட்டுவிடுகிறேன். அவை இருந்துவிட்டுப் போகட்டும்... இலக்காக எனக்கு அவற்றின் பெயர்கள் மட்டும் போதுமானதால் பெயர்களையெல்லாம் எடுத்துக் கொள்கிறேன்- பெயர்களின் ஒலிக்குறிப்புகளை எடுத்துக்கொள்கிறேன்- பெயர்களின் பிம்பத்தை எடுத்துக்கொள்கிறேன்- பிம்பங்களின் பிரதிக

கவிதைகள் (குறும்பா என்றும் சொல்லலாம்)

1. வயோதிகம் கடிகாரமாய் துடித்துக் கொண்டிருக்கிறது இன்னொரு நாளைப் பார்த்துவிடும் உயிர்ப்புடன் 2.வெகுநாள் மீனவன் தொடர்ந்த வேட்டையில் மங்கிய தன் கண்களால் ஆமையைக் கும்பிட்டான் நின்று கொன்றால் எதுவும் தெய்வந்தான் 3.உனக்கான என் அன்பு உணரப்படாமலே புறக்கணிக்கப் பட்டுள்ளது பிரித்ததும் கசக்கப்பட்ட உறையின் உட்புறத்து இளஞ்சிவப்பு காகிதம் போல 4.உலர்த்தப்பட்ட ஆடையின் நாலைந்து கண்கள் உள்ளங்கைக் குளத்தில் பிணைந்திருந்த ரேகைகள்

கவிதை௧ள் 3

01 கொஞ்சமும். .. கொஞ்சமும் எதிர்பார்த்திருக்கவில்லை தேநீர்க் குவளையை வைக்கும் ஸ்டாண்டாக ஒரு கவிதை புத்தகத்தை வைத்திருப்பார் அந்த புத்தகக் கடைக்காரர் என்று. 02 சாயல்... இரு தலாங்களுக்கிடைப்பட்ட படிக்கட்டுகளில் வைத்து காதலைச் சொன்ன கணம் விழிகள் உருட்டி மருண்ட உன் முகத்தின் சாயலேதுமின்றி இருந்தது பிரிவதற்காய் நாம் தேர்ந்து கொண்ட ஒரு பிற்பகல் வேளையில் மூடிய லிப்டின் கதவுகள் உள் வாங்கிப்போன உன் முகம். 0 03 உதவும் பொருட்டு... லிப்டில் ஏறிய ஒருவனுக்கு உதவும் பொருட்டு விரைவாய் மூடும் பொத்தானை அழுத்தினேன் . அதுவரை பேசிக்கொண்டிருந்த அவன் அலைபேசியின் தொடர்பு விட்டுப் போனது.

கவிதை வாசிக்க வாருங்கள்.......

பல ஞாயிற்றுக்கிழமைகள் யோசனை செய்துகொண்டே இருந்தேன். காலையில் 7.30 மணிக்கு சைதாப்பேட்டை ரயில்வே ஸ்டேஷனில் ஏறினால், இரவு 7.30 மணி ஆகிவிடும். ஓவ்வொரு ஸ்டேஷனிலும் கூட்டம் அலைமோதும். ஆனால் என்னை கவர்ந்த ஒரு விஷயம் பென்சுகள். மரத்தடி பக்கத்தில் பளபளவென்று கருப்பு நிறத்தில் இருக்கும் சலவைக்கல் பெஞ்சுகள். இதுதான் எல்லோரையும் சந்திக்கும் இடமாகத் தோன்றியது. என் அலுவலக நண்பர் ஒருவரை பல மாதங்கள் பார்க்கவில்லை. அவரை மாம்பலம் ரயில் நிலையத்தில் சந்தித்தேன். பெஞ்சில் அமர்ந்துகொண்டு வெகுநேரம் பேசினோம். திடீரென்று எனக்கு ஐடியா தோன்றியது. ஏன் கவிதை வாசிக்கக் கூடாது? என்று. முதலில் கவிதை எழுதுபவர்களில் பலர் இதுமாதிரி இடத்திற்கு வந்து கவிதை வாசிக்க வர மாட்டார்கள். ஆனால் நிச்சயமாக சிலர் வருவார்கள். எல்லோரையும் கூப்பிடலாம் என்றெல்லாம் யோசனை செய்து கொண்டிருந்தேன். தாம்பரம் முதல் பீச் வரை உள்ள எந்த ஸ்டேஷனிலும் அமர்ந்துகொண்டு கவிதை வாசிக்கலாம் என்றெல்லாம் தோன்றியது. முதலில் ஒரு ஞாயிற்றுக்கிழமையைத் தேர்ந்தெடுத்து கவிதை வாசிக்கலாம் என்று தோன்றியது. கவிதை வாசிக்கலாம். ஆனால் போலீஸ் அனுமதி வாங்க வேண்டும் என்று ஒருவர

கோவில் யானை

கோவிலில் எப்போதும் பார்க்க முடிகிறது அந்த யானையை காசு தந்தால் பாகனுக்கு தின்பண்டங்கள் அதற்கு எதுவாயினும் பதிலுக்கு ஆசீர்வதிக்க தவறியதில்லை கழுத்து மணியை ஆட்டி தனக்கான இசையை பிறக்கச்செய்கிறது பிறருக்கு கேட்காத எதோவொரு தாளத்திற்கு பெருத்த உடலை அசைத்துக் கொள்கிறது தொலைதொடர்புகளற்ற அதன் உலகில் காட்டுலா குறித்த ஏக்கங்களோ பிச்சையெடுக்கும் தன்னிலை குறித்த கவலைகளோ இல்லாதிருக்கலாம் முதன்முதலாய் இன்னொரு யானையை முகாமில் சந்திக்கும் வேளை என்ன சொல்ல எத்தனிக்கும் கோவில் யானை?

நிழற்படங்கள்

சிறுகதை `நான் அப்படிக் கேட்டிருக்கக் கூடாதுதான். மிகவும் சோகத்துக்குள்ளான அந்த நண்பரது கண்கள் எனது கண்களை நேரே பார்த்தன. பின்னர் தாழ்ந்துகொண்டன. அறையிலிருந்த என் கணவர் 'என்னடா இது?' என்பது போல முறைப்புமில்லாமல் அதிகளவான திகைப்புமில்லாமல் கேள்வியோடு என்னைப் பார்த்தார். 'பொண்ணு வீட்டுக்கும் இந்த போட்டோவைத்தான் கொடுத்தீங்களா?' என்ற எனது கேள்வி, இயங்கிக்கொண்டிருந்த குளிரூட்டியின் சத்தத்தோடு யன்னல்களேதுமற்ற அந்த அறையின் எல்லாப்பக்கங்களிலும் பதில்களற்று உலாவருமென எனக்கு எப்படித்தெரியும்? நான் விளையாட்டாகத்தான் அதைக் கேட்டேன். சில நிகழ்வுகளையொட்டிக் கேள்விகள் தானாக உதித்துவிடுகின்றன. எல்லாக் கேள்விகளுக்கும் எல்லோரிடமும் பதில்கள் இருப்பதில்லை. சொல்ல வேண்டிய பதில்களைக் காலம் கொண்டிருக்கும். அதன் வாய்க்குள் புகுந்து விடைகளை அள்ளிவர எல்லோராலும் இயல்வதில்லை. அவ்வாறு இயலாமல் போனவர்கள் மௌனம் காக்கிறார்கள். இல்லாவிடில் சிரிக்கிறார்கள் அல்லது அழுகிறார்கள். வேறு ஏதேனும் சொல்லிச் சமாளிப்பவர்களும் இருக்கிறார்களெனினும் அந்தக் கேள்விக்கு அந்த மழுப்பல் உண்மையான பதிலென ஆகிவிடுவதில்லை. அவ்வளவு

கவிதையும் பார்வையும்

கவிதைகள் ஒரே பார்வையைக்கொண்டு வெளி வருகின்றன. அப்படி வெளி வருகின்ற கவிதைகளைப் படிக்கும்போது, ஒரே மாதிரியான கவிதைகளை வாசிக்கிறோம் என்ற உணர்வு எழுந்தாலும், ஒவ்வொரு கவிதையும் வெவ்வேறு உணர்வு உலகத்தை நமக்குச் சித்தரித்துக் காட்டுகிறது. உதாரணமாக சமீபத்தில் மரணத்தைப் பற்றி அதிகமான கவிதைகளை இரு கவிஞர்கள் ஒரே சமயத்தில் எழுதி உள்ளார்கள். இது ஒருவரைப் பார்த்து இன்னொருவர் எழுதியிருக்கலாம் அல்லது கவிதைகளைப் பரிமாறிக்கொள்ளாமலே எழுதியிருக்கலாம். இப்படி வாசிக்கிற கவிதைகளில், கவிதையின் பொருள் ஒன்றாக இருந்தாலும், ஒவ்வொருவரும் மரணத்தை எப்படி எழுதியுள்ளார்கள் என்பதை கவனிக்க வேண்டும். இப்படிப் பார்க்கும்போது மரணத்தைப் பற்றி இவர்கள் இருவர்தான் எழுதி உள்ளார்கள் என்பது அர்த்தமில்லை. இதற்குமுன் மரணத்தைப் பற்றி பலர் எழுதி உள்ளார்கள். காலச்சுவடு இதழில் வெளிவந்த 'சிபிச்செல்வன் ' கவிதையான 'சாவிற்காகக் காத்திருக்கும் துயரம் மிகுந்த கணங்கள்' என்ற கவிதையை எடுத்துக் கொள்வோம். இக் கவிதை மரணத்தைப் பற்றி எழுதப்பட்ட கவிதைகளின் தொடர்ச்சி. பெருந்துயரிலலைகிறேன் சுடு பாலைவெ