Skip to main content

Posts

Showing posts from January, 2013

ஐராவதம் பக்கங்கள்....

ஐராவதம் பக்கங்கள்.... நான்காவது சிங்கம் - செல்வராஜ் ஜெகதீசன் - கவிதைகள் - பக்கம் 71 - விலை ரூ.60 - பிரதிகள் 600 - காலச்சுவடு பதிப்பகம் இது கவிஞரின் நான்காவது கவிதைத் தொகுப்பு.  முன்னரே 'அந்தரங்கம் (2008)', 'இன்னபிறவும்' (2009), 'ஞாபகம் இல்லாது போகுமொரு நாளில்' (2010) ஆகிய மூன்று கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளாராம் ஆசிரியர். தமிழ்ப்பட உலகில் ஒரு படம் எடுத்துவிட்டு ஓய்ந்துபோன இயக்குநர்கள் இருநூறுக்குமேல் உள்ளனராம்.   அதேபோலவே கைக்காசு போட்டு ஒரு புத்தகம் எழுதி ஓய்ந்துபோன கவிஞர்களும் நூற்றுக்கணக்கில் இருக்க வேண்டும்.  இத்தகைய சூழ்நிலையில் ஆசிரியர் காலச்சுவடு போன்ற பிரசித்துப் பெற்ற பதிப்பகம் மூலம் நாலாவது புத்தகம் வெளியிட முடிந்திருப்பது அவருக்கு கவிதைத் துறையில் உள்ள தொடர்ந்த ஈடுபாட்டைக் காட்டுகிறது.  ஆனால் பதிப்பாளர்களும் ஏமாந்தவர்கள் அல்ல.  அறுநூறு பிரதிகள்தான் அச்சிட்டு உள்ளார்கள்.  2009க்குப் பிறகு தமிழக நூலக துறையினர் புத்தகங்கள் எதுவும் வாங்காத சூழ்நிலையில் இதுவே அதிகம். 'எப்போதும்போல' (பக்கம் 68) என்ற கவிதை 6 வரிகள் கொண

ரயிலோடும் வீதிகள்..

ரயிலோடும் வீதிகள்..                                           அமைதிச்சாரல் கயிற்று வளையத்துள் அடைபட்டிருந்த பெட்டிகளெல்லாம் அலுத்துக்கொண்டனர், ரயில் மெதுவாகச்செல்வதாக.. குதித்துக் கும்மாளமிட்டுச் சூறாவளியாய்க் கிளம்பிய ரயில் பெட்டிகள் ஒன்றுக்கொன்று இடித்துத் தள்ளியதில் தடம்புரண்டோடிய உற்சாக ஊற்று சற்றுச்சுணங்கிற்று அவ்வப்போது. பிள்ளையார் கோவில் நிறுத்தம் இந்நேரம் தாண்டப்பட்டிருக்க வேண்டுமென்ற மூன்றாவது பெட்டி காளியப்பனை ஆமோதித்தாள் ஐந்தாவது பெட்டியான வேலம்மாள். “வெரசாத்தான் போயேண்டா” விரட்டிய குரலுக்குத்தெரியாது, ரயிலோட்டுனருக்கு அன்றுதான் காலில் கருவை முள் தைத்ததென்பது. அலுத்துப்போன கடைசிப்பெட்டி சட்டென்று திரும்பிக்கொண்டு இஞ்சினாகியதில் வேகம் பிடித்த ரயிலில் இழுபட்டு அலைக்கழிந்து வந்தது முன்னாள் இஞ்சின் வலியில் அலறிக்கொண்டு..

ஐராவதம் பக்கங்கள்

ஐராவதம் பக்கங்கள் நண்பனின் தந்தை - சிறுகதைகள், குறுநாவல்கள் - அசோகமித்திரன் - முதற் பதிப்பு-டிசம்பர் 2011 - பக்கம் 144 - விலை ரூ. 100/- நற்றிணை பதிப்பகம், சென்னை 5 தமிழ் இலக்கியத்தின் மகத்தான படைப்பாளுமையான (பதிப்பாளர் வரிகள்) அசோகமித்திரனின் சமீபத்திய படைப்புகளை நமக்குத் தருகிறது நண்பனின் தந்தை.  முதலில் பம்பாய் 1944 என்ற குறுநாவல் கல்கியில் தொடர்கதையாக 13 வாரம் வெளிவந்தது.  தொடர்கதை, நாவல் ஆகாது என்ற க.நா.சுவின் ஆட்கொல்லி முன்னுரை வரிகள் உடனடியாக என் நினைவுக்கு வந்தது.  இதில் வேடிக்கை என்னவென்றால் ஆட்கொல்லியே அகில இந்திய வானொலியில் வாரந்தோறும் தொடர்கதையாகப் படிக்கப்பட்டதுதான்.  தொடர்கதைக்கு உரிய லட்சணங்களை பரிபூர்ணமாகக் கொண்டது பம்பாய் 1944.  ஒவ்வொர அத்தியாயம் முடிவிலும் அந்தந்த வாரம் தொடர்ந்து கதையைப் படிக்க தூண்டும்  விதமான வரிகள்.ஆனால் அப்படி வாரப்பத்திரிகையில் வரும் தொடர்கதையை ஆவலுடன் படிக்க வாசகர் கூட்டம் இன்று உள்ளதா என்பது கேள்விக்குரியது.  சென்ற தலைமுறைக்காரர்கள் கல்கியை, அகிலனை, கொத்தமங்கலம் சுப்புவை அப்படி படித்தார்கள்.  இன்றைக்கோ பத்து தமிழ்  தொலைக்காட்சி கால

சி சு செல்லப்பா.....

சி சு செல்லப்பா.....                                          நான் சந்தித்த இரு முக்கிய இலக்கிய ஆளுமைகளைப் பற்றி இங்கு குறிப்பிடலாமென்று நினைக்கிறேன்.  ஒருவர் க.நா.சு.  இன்னொருவர் சி சு செல்லப்பா.  இவர்கள் இருவரையும் நான் சந்திக்க முடியுமென்றோ உரையாடமுடியுமென்றோ நினைத்துக்கூடப் பார்க்க வில்லை.  இவர்கள் இருவரைத் தவிர இன்னொரு படைப்பாளியையும் நான் சந்தித்திருக்கிறேன். அவர் சிட்டி.  இவர்கள் மூவரும் மணிக்கொடி எழுத்தாளர்கள்.   க.நா.சுவும், சி சு செல்லப்பாவும் இருதுருவங்கள்.  இருவரும் நேர் எதிரான இலக்கியக் கொள்கை உடையவர்கள்.  க.நா.சு ரசனை அடிப்படையில் தன் விமர்சனக் கொள்கையை வகுத்துக்கொண்டவர்.  சி சு செல்லப்பா புத்தக விமர்சனத்தைப் பகுத்துப் பார்க்கும் கொள்கையைக் கொண்டவர். ஏன் இவர்களைப் பற்றி சொல்கிறேனென்றால் இவர்கள் மூத்தத் தலைமுறை படைப்பாளிகள்.  க.நா.சுவை மயிலாப்பூரில் உள்ள ஒரு வீட்டில் சந்தித்தேன்.  அவரைச் சந்திக்க எழுத்தாளர்கள் பட்டாளமே சென்றது.   ஆனால் அந்தச் சந்திப்பு ஒரு இனிமையான அனுபவம். சி சு செல்லப்பா பங்களூரில் இருப்பதாக கேள்விப்பட்டேனே தவிர,  பங்களுரில

நவீன விருட்சம் 92வது இதழ்

நவீன விருட்சம் 92வது இதழ் வெளிவந்துவிட்டது.    படைப்புகள்வெளிவந்த விபரம் கீழே தரப்பட்டுள்ளது. 1.கோட்டுப்பையும் குடிசைத் தொழிலும் - லாவண்யா   2 2. பிரமிடுகள் - கவிதை - லாவண்யா 3 3. க.நா.சு - கவிதை - எஸ் வைதீஸ்வரன் 4 4. கூழாங்கற்கள் - கவிதை - ராமலக்ஷ்மி 6 5. ஐராவதம் பக்கங்கள் 7 6. நதி ஈந்த எறும்பு - ந. பெரியசாமி 10 6. ஹலோ - சிறுகûú- அழகியசிங்கர் 11 7. நதியும் நானும்....- மொ.கவிதை 14 8. எனக்குப் பிடித்த முன்னுரை 15 9. கல் எறிந்தவர்கள் - ரவி உதயன் 19 10. வட்டம் - கவிதை - கணேஷ் 20 11. தோற்பாவைக் கூத்து - சின்னப்பயல் 21 12. அசோகமித்திரன் பக்கங்கள் 23 13. இரு கவிதைகள் - அழகியசிங்கர் 26 14. மரணப்படுக்கையில் வயதான பெண்மணி                             - குமரி எஸ் நீலகண்டன் 27 15. இரவு விழித்திருக்கும் வீடு - எம் ரிஷான் ஷெரீப்  29 16. பூனைகள் உலகம் - ஐயப்பன் கிருஷ்ணன் 30 17. நகுலனைப் பற்றி சில குறிப்புகள் - அழகியசிங்கர்  33 18. காக்கைச் சிறகினிலே - செல்வராஜ் ஜெகதீசன் 40 19. மிதக்கும் பல்லி - அ. இந்திரா காந்தி 44 20. விருட்சம்

எதையாவது சொல்லட்டுமா...80

எதையாவது சொல்லட்டுமா...80 அழகியசிங்கர்  சி சு செல்லப்பாவை முதன் முதலாக நான் கநா.சு இரங்கல் கூட்டத்தில்தான் சந்தித்தேன்.  அக் கூட்டம் கணையாழி என்ற பத்திரிகை நடத்தியது என்பது ஞாபகம்.அவர் கொஞ்சம் சத்தமாகவும், கோபமாகவும் பேசியதாக என் நினைபபு.  யாருக்குமே ஒரு புத்தகம் படிக்கிறோமென்றால் அப் புத்தகம் எழுதிய எழுத்தாளரையும் பார்க்க வேண்டுமென்ற எண்ணம்  ஏற்படுவது வழக்கம்.  அப்படிப் பார்க்கும்போது பெரிய ஏமாற்றமே மிஞ்சும்.  புத்தகத்தில் படித்த மாதிரி அந்த எழுத்தாளர்  தெரிய மாட்டார்.   அதேபோல் க.நா.சுவையும் மௌனி இரங்கல் கூட்டத்தில் பார்த்திருக்கிறேன்  மௌனியை சிதம்பரம் சென்று பார்த்துவிட்டு வந்ததை என் எழுத்தாள நண்பர்கள் சொல்லி கேட்டிருக்கிறேன்.  குறிப்பாக பிரமிள் மௌனி வீட்டிற்கு சென்று பார்த்ததை புள்ளி விபரமாக  கூறுவார்.  என்னமோ நேற்றுதான் அவரைப் போய்ப் பார்த்ததுபோல் இருக்கும் அவர் பேச்சு.  நானும் பல எழுத்தாளர்களைச் சந்தித்திருக்கிறேன்.  ஆனால் எனக்கு எந்தவித பிரமையும் இப்போது ஏற்படுவதில்லை  அப்போதெல்லாம் எனக்குப் பிரமை இருந்தது.  பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும் போது என் உறவ
  அன்புள்ள நண்பர்களுக்கு, வணக்கம். ஒவ்வொரு ஆண்டும் வழக்கம்போல் இல்லாமல் இந்த முறை தெரியாமல் நான்கு புதிய புத்தகங்களை விருட்சம் வெளியீடாகக் கொண்டு வந்துள்ளேன். அதேபோல் இந்த முறை சென்னைப் புத்தகக் கண்காட்சியில் விருட்சம் கடை எண் 570.  புத்தகங்களையும், நவீன விருட்சம் சந்தாவையும் கட்டி விருட்சத்திற்கு ஆதரவு தரும்படி கேட்டுக்கொள்கிறேன். விருட்சம் வெளியீடின் நான்கு புதிய புத்தகங்கள் 1. சம்பத் கதைகள் - தொகுதி 1 - அழகியசிங்கர்                                        விலை ரூ.120 தமிழில் குறிப்பிடப்பட வேண்டிய படைப்பாளியான சம்பத் எதிர்பாராதவிதமாய் அவர் கதைகளில் அடிக்கடி குறிப்பிட்டபடி மரணமும் அடைந்துவிட்டார்.  சாவைப் பற்றி தீவிரமான ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தவர்.  அவர் கதைகளில் பெரும்பாலும் பிரிவு, தீவிரமான உணர்வுநிலை, மரணம் குறித்த உரையாடல்கள் நடந்த வண்ணம் இருக்கும்.  அவருடைய கதைகளின் முதல் தொகுதி இது. 2. கெட்டவன் கேட்டது - ஐராவதம் - விலை ரூ.120 அசோகமித்திரன் ஐராவதம் பற்றி குறிப்பிடும்போது அவருக்குத் தெரியாத புத்தகங்கள் இல்லை என்பது.  உலகம் முழுவதும் உள்ள நல்ல தரமான
இரவு விழித்திருக்கும் வீடு   எம்.ரிஷான் ஷெரீப் ,     நீ கதிரறுக்கும் வயல்பூமியை மஞ்சளால் போர்த்திய அம் மாலை நேரம் எவ்வளவு அழகாயிருந்தது இறுதியாக செஞ்சாயத் தேனீரும் கறுப்பட்டித் துண்டும் சுமந்து வந்து அருந்த வைத்த உன் மனைவியின் காலடித் தடத்தில் முழுவதுமாக இருள் உறைந்த உனது தற்கொலைக்கு முன்னதான அக் கணம் வரை   பயிர்களை விதைக்கையில் நீயெழுப்பிய இனிய கீதம் அம் மலைச்சரிவுகளில் இன்னும் அலைகிறது மேய்ப்புக்காக நீயழைத்துச் செல்லும் செம்மறிகள் ரோமம் மினுங்க வந்து காத்துக் கிடந்தன களைகளகற்றுமுன் வலிய கைகளை நெடுங்காலமாய்க் காணா பூமி வரண்டிருந்தது மூதாதையர் தோண்டிய கிணற்றில் ஒரு துளி நீரிருக்கவில்லை   நிலம் வெடித்துப் புழுதி கிளம்பும் காலங்களில் அயல்கிராமங்களுக்கு கல்லுடைத்துச் சீவிக்கச் செல்லும் சனம் அனல்காற்றில் வெந்துருகிச் சில காசு பார்க்கும் விவசாயம்தான் மூச்சென வீராப்பாய் நீயிருந்தாய்   தந்தையைத் தேடியழும் பாலகிக்கு எதுவும் தெரியவில்லை நச்சுச் செடிகளுக்கென தெளிக்க வைத்திருந்த கிருமிநாசினியை உன் குடிசைக்கு எடுத்
மரணத்தின் தொலைவில் இருப்பவள் குமரி எஸ்.நீலகண்டன்   மரணப் படுக்கையில் வயதான பெண்மணி ...   பறந்து பறந்து சேவை செய்த அவளின் இறக்கைகளெல்லாம் ஒடுங்கிக் கிடக்கின்றன.   சுற்றி இருப்பவர்களெல்லாம் எமன் வந்து விட்டானா எமன் வந்து விடுவானோயென எட்டி எட்டிப் பார்க்கிறார்கள். அவள் யாரையும் பார்க்கவில்லை.. பழுத்த அவளின் கண்களுக்கு எல்லாம் வெறும் மண்ணாகத் தெரிகின்றன.   அவள் இறக்கைகள் அவ்வப்போது இப்படித்தான் தளர்ந்து அவளை மரணத்தின் வாசல் வரை தளர்வாய் நடக்க வைக்கும்.   மரணம் நெருங்குகையில் ஈரத்தில் தோய்ந்த ஈயின் இறக்கையில் சாம்பலைத் தூவியதுபோல் அவளது இறக்கைகள் சிலிர்த்து தனது சிறகினை விரிக்கும்...   அவள் அடுத்த தடவை இப்படி மரணத்தின் வாசலை பார்ப்பது வரை பறந்து கொண்டே இருப்பாள்.