Skip to main content

Posts

Showing posts from December, 2014

கசடதபற ஜனவரி 1971 - 4வது இதழ்

காலத்துக்கு வணக்கம் கி அ சச்சிதானந்தம் மண்டபம் பாழாகி தூண்கள் தலைமொட்டையாகி பரதேசிகளுக்குப் புகலிடமாய் பரிணமித்தது. மழையாலும் காற்றாலும் சிற்பங்கள் சிதையவில்லை எப்போதோவரும் ஆராய்ச்சியாளனுக்கு பிழைப்புத் தர நிலத்தினுள் மூழ்கிக் கொண்டிருக்கிறது. நிழல்தரும் தூண் ஒன்று அதன் இடையில் ஆண்பெண் இருவர் புணரும் உருவங்கள். சிற்பி இலக்கியத்தின் இலட்சணங்களையும் வாத்சாயனாவின் காமத்தையும் இரண்டறக் கலந்திருக்கிறான். முலைகளில் முதிர்ச்சி அடைய இடப்பையன்கள் கசங்கிய கறையும் அல்குலில் தாரைத் தடவிய முக்கோடும். அன்றொருநாள் அந்தத் தூணின் கீழ் துணி நீங்கிய இருவர் புணர்ந்திருந்தனர் திரும்பிப் பார்த்தேன் தொழுநோய்ப் பிச்சைக்காரர்கள் சிற்பம் உயிரானதைக் கண்டு காலத்திற்கு வணக்கம் செலுத்தினேன்.

கே பாலசந்ததர் சில நினைவுகள்

அழகியசிங்கர் சமீபத்தில் கே பாலசந்தரின் மரணம் திரைப்பட உலகத்தை ஒரு கலகலப்பை ஏற்படுத்தி விட்டது.  நான் மதிப்புக் கொடுத்துப் பார்க்கும் டைரக்டரில் கே பாலசந்தர் ஒருவர்.  அவருடன் ஸ்ரீதரையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.  கருப்பு வெள்ளைப் படங்களில் பல சாதனைகளை செய்து காட்டியவர் கே பாலசந்தர்.  அவருடைய முதல் படமான 'நீர்க்குமிழி' ரொம்ப அற்புதமான படம்.  அதில் நாகேஷ் நடிப்பு அபாரமாக இருக்கும்.  எந்த நடிகரையும் பாலசந்தர் அவருடைய படத்தில் நடிக்க வைத்துவிடுவார்.   அபூர்வ ராகங்கள் என்ற படத்தில் பொருந்தாத உறவு முறைகளைக் கொண்டுவந்து கதையை சிக்கலாக்கி பின் சாத்தியமில்லை என்பதுபோல் கொண்டு போய்விடுவார்.  அவருடைய படங்களில் சில கதாபாத்திரங்கள் சில சமிஞ்ஞைகள் செய்வார்கள்.  படம் முழுவதும் அது மாதிரியான சமிஞ்ஞைகளைத் தொடர்ந்து செய்துகொண்டு போவார்கள்.   என்னுடைய பால்ய காலத்தில் பாலசந்திரனின் எந்தப் படத்தையும் போய்ப் பார்த்துவிட்டு வந்துவிடுவேன்.   பாலசந்திரன் இதுமாதிரி அதிகமாகப் படங்கள் எடுத்தாலும், அவருடைய மதிப்பு வேறு சில புதுமுக ட...

பிரேமிட்

கசடதபற ஜனவரி 1971  - 4வது இதழ் தருமு அரூப் சிவராம் மண்புயல் தணிந்து விட்டது. ஆனால் போர் தொடர்கிறது - இடம் பெயர்கிறது சாந்தி வீரர்கள்கூட ஆபீûஸ கலைத்து விட்டு யுதத சந்நத்தர்களாகின்றனர். இப்படியே, பிரெமிடபடிகளில் காலம் உயிர்களை உருளவிடுகிறது - மலைச்சரிவில் உதிரி இலைகளைப் போல. ஆனால் வீரனின் உயிரோ கற்பாறைப் பாலைகளின் சிறுகற்கள் போல கணம்தான் என்றாலும், ஏதோ ஒரு யோசனையில் உச்சியை நோக்கி எழக்கூடும் உடல் தான், பிரெமிட்டினுள்ளேயே பதுமையாய்க் கிடந்து கடவுளரை எதிர்பார்க்கிறது

பகவான் மீது தேள்கள்

21.12.2014 - ஞாயிறு எழுதியது. அழகியசிங்கர் கந்தாச்ரமத்தில் இருக்கும்போது ஒரு நாள், ரமண மகரிஷி மீது முன்பக்கம் ஒரு தேள் மேலே ஏறிக்கொண்டிருந்தது. அவருடைய பின்பக்கம் இன்னொரு தேள் கீழே இறங்கிக் கொண்டிருந்தது. அருகில் இருந்த வாசதேவ சாஸ்திரி என்ற அன்பர் பயந்துபோய் ஏதாவது செய்ய வேண்டுமென்று நினைத்தார். ஆனால் பகவான் ஒன்றுமே நடவாததுபோல் அமைதியாக உட்கார்ந்திருந்தார். அந்த இரண்டு தேள்களும் சுவற்றில் ஏறுவதுபோல் ஊர்ந்து சென்று  அவரை விட்டு கீழே இறங்கிவிட்டது. அவைகள் சென்ற பிறகு பகவான் அவர்களிடம், üüதரையிலோ சுவற்றிலோ மரத்திலோ ஊர்ந்து போவதுபோல் அவை நம்மீதும் ஊர்ந்து செல்கின்றன. சுவற்றின் மீது, தரையின் மீது போகும்போது அவை கொட்டிக்கொண்டோ போகின்றது. நீங்கள் அதைக் கண்டு பயந்து ஏதாவது செய்வதினால்தான் பதிலுக்கு அவைகளும் பயந்து போய் ஏதாவது செய்கின்றன,ýý என்று விளக்கினார். இந்த விபரம் ரமணரின் சரிதமும் உபதேசமும் பாகம் 1ல் இருந்து கிடைத்தது. பொதுவாக தேள் கொட்டி விட்டது என்றுதான் பிறர் சொல்லி நாம் அறிவோம். ஒரு தேளை நாம் பார்த்தால் அதன் பக்கத்தில் நெருங்க மாட்டோம். அதைக் கவனியாமல் இர...

விருட்சம் தேர்ந்தெடுத்த மனதுக்குப் பிடித்த கதைகள்

  அழகியசிங்கர்   இந்த அக்டோபர் மாதத்தின் சிறுகதைகளைத் தேர்ந்தெடுப்பதற்கு ரொம்ப தாமதமாகி விட்டது.  அந்த மாதம் தீபாவளி மாதம்.  தீபாவளி வருவதால் பத்திரிகைகளில் ஏராளமான கதைகள்.  மேலும் தீபாவளி மலர்கள் வெளியிட்ட கதைகள் வேறு. நான் தீபாவளி மலர்களில் வெளியிட்ட கதைகளைத் தேர்ந்தெடுக்கவில்லை.  பத்திரிகைகளில் வெளிவந்த கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்தேன்.  ஒவ்வொரு மாதமும் சிறுகதைகளைப் படிக்கும்போது உற்சாகம் அடைகிறேன்.  நல்ல தரமான கதைகளை சில பத்திரிகைகளில் தொடர்ந்து வாசிக்க முடிகிறது. இப்படி வாசிக்கிற கதைகளில் பத்திரிகை கதைகளிலிருந்து இலக்கியத் தரமான கதைகளைப் பிரித்து எடுக்க வேண்டி உள்ளது.  சில பத்திரிகைகளில் இலக்கியக் கதைகளே வர வாய்ப்பு இல்லாமல் இருக்கிறது.  இதை நான் தவறாகக் கருதவில்லை.  அப்படிப்பட்ட கதைகளையும் வாசிகக வேண்டும்.  அப்படிப்பட்ட கதைகளிலும் சிறந்த கதைகளைத் தேர்ந்தெடுத்த வெகு ஜன வாசகர்கள் விரும்பிப் படிக்கும் கதைகள் என்று தனிப் புத்தகமாகக் கொண்டு வரலாம்.   பொதுவாக கதைகள் என்ற அம்சம் குறைந்து போவதற்க...

நான் பார்த்த சினிமாப் படங்கள்

அழகியசிங்கர் 12ஆம் தேதி கணினி முன் அமர்ந்து நவீன விருட்சம் தயாரித்துக் கொண்டிருந்தேன்.  மதிய நேரம்.  அப்போது ஒரு போன் வந்தது.  போன் செய்தவர் பிரபு.  அவர் ரஜனிகாந்த் ரசிகர்.   \\லிங்கா பார்க்க வர்றீங்களா?" "இப்பவா?" "இப்பத்தான்," என்றார்.   "எத்தனை மணிக்கு வரணும்." "ஒன்றரை மணிக்கு வந்திடுங்க." நான் மடிப்பாக்கம் கிளம்பினேன்.  நானும் பிரபுவும் 2.15 க்குக் கிளம்பினோம்.  படம் 2.45க்கு. புழுதிவாக்கத்தில் உள்ள குமரன் தியேட்டர்.  அங்கு போனவுடன் தெரிந்தது.  படம் பார்க்க 4 மணிக்கு வரவேண்டுமென்று.  "வீட்டுக்குப் போய்விட்டு, அங்கே ஓய்வெடுத்துவிட்டுச் செல்லலாம்," என்று சொன்னேன். பிரபு வீட்டிற்குப் போய் சற்று ஓய்வெடுத்தோம்.  திரும்பவும் 4 மணி சுமாருக்கு தியேட்டருக்கு வந்தோம்.  ஒரே கூட்டம்.  முண்டி அடித்துக்கொண்டு போனோம்.  40 ஆண்டுகளுக்கு முன் ஒரு தீபாவளியின் போது, சிவாஜியின் இரு மலர்கள் என்ற படத்தை முதல் நாளே போய்ப் பார்த்தேன்.  அதன் பின் இப்போதுதான் தியேட்டரில் முதல்...

விருட்சம் இலக்கியச் சந்திப்பு - 8

9.12.2014                  விருட்சம் இலக்கியச் சந்திப்பு-8  நடைபெறும் நாள்                   :      13.12.2014 (சனிக்கிழமை) நேரம்                 :        மாலை 6 மணிக்கு இடம்             :    ஸ்ரீ அலர்மேலுமங்கா கல்யாண மண்டபம்                                            அகஸ்தியர் கோயில் பின்பக்கம்                                            19 ராதாகிருஷ்ணன் சாலை,                                           தி. நகர், சென்ன...

மழைக்காலம்.

ரவிஉதயன் தவறி விடுமென்று நம்பிக்கையில் பயமின்றி நடுங்கும் கைகளோடு குறி பார்க்கும் கண்களின் துப்பாக்கி முனையில் நிற்கிறேன். ஊசி மழைத் துளிகள் போல என்னுள் நுழைகின்றன ரவைகள். விரிபடாத குடையை விரிக்க முயலுகிறவனைப் போல விலுக்கென்று அப்படியே நிற்கிறேன். காதலாகி கசிகிறது மழைத்துளிகளின்  ரத்தம்.

ஞானக்கூத்தனும் விஷ்ணுபுரம் பரிசும்....

அழகியசிங்கர் விஷ்ணுபுரம் விருது இந்த ஆண்டு ஞானக்கூத்தனுக்குக் கிடைத்துள்ளது.  முதலில் அவரை வாழ்த்துகிறேன்.  ஒரு விருது ஒருவருக்கு வழங்கினால், அதனுடைய எல்லாத் தகுதிகளும் அவருக்கு இருக்க வேண்டும்.  ஞானக்கூத்தனுக்கு அந்தத் தகுதி உண்டு.  கவிதை மட்டும் அவர் சிந்திப்பவர்.  விருட்சம் வெளியீடாக அவருடைய முழுத் தொகுப்பையும் நான் கொண்டு வந்துள்ளேன்.  ஞானக்கூத்தன் கவிதைகள் என்ற தொகுப்பு வெளிவரும்போது, ஞானக்கூத்தன் எழுதியும் பாதுகாக்காத கவிதைகள் பலவும் தீபம் பார்த்தசாரதியின் வீட்டிற்குச் சென்று (சிஐடி நகரில் உள்ள) பார்த்தசாரதியின் புதல்வரிடமிருந்து தீபம் இதழ்களைத் தேடி அதில் காணப்பட்ட ஞானக்கூத்தன் பல கவிதைகளை கையால் தாளில் எழுதி ஞானக்கூத்தன் கவிதைகள் தொகுதியில் சேர்த்தேன்.  அதன்பின் பென்சில் படங்கள் என்ற இன்னொரு தொகுதியை நானே கணினியில் அடித்துப் புத்தகமாகக் கொண்டு வந்துள்ளேன்.  மூன்றாவதாக நான் கொண்டு வந்த அவர் புத்தகம் கவிதைக்காக.  இது ஒரு கட்டுரைத் தொகுதி மொத்தம் 300 பிரதிகள்தான் அடித்து வைத்துள்ளேன்.  கவிதையைப் பற்றி அறிய வேண்டியவர்...

கசடதபற ஜனவரி 1971 - 4வது இதழ்

கொடும்பாவி ப கங்கைகொண்டான்                          காய்ந்த வைக்கோலால் கட்டி வைத்துத் துணி போர்த்தி கரித்துண்டால் அரக்கிப் பல்வரிசை அரக்கன் கொடு மீசை உடல் முழுதும் கறுப்புத் தார் அங்கி தாரை தப்பட்டை தரங்கெட்ட ஒப்பாரி செருப்புப் பூக்களால் செய்த மலர்மாலைச் செண்டாக்கி எரியூட்ட இழுத்து நடப்போரே- எதற்குக் கொடும்பாவி? எரிக்கின்ற உடலுக்கோ இளகாத மனதுக்கோ?

நானும் பார்க்கிறேன் சினிமாக்களை......

அழகியசிங்கர்                                       நான் பார்த்து ரசித்தப் படம் தி வே ஹோம் ( (THE WAY HOME).). இந்தப் படத்தை டைரக்ட் செய்தது தென் கொரிய பெண்.  பெயர் லீ ஷியான் ஹியான்.   காது சரியாக கேட்காத வாய் பேச முடியாத 75 வயது  வயதானவளுக்கும், ஏழு வயதுப் பேரனான சாங்க்வுக்கும் ஏற்படும் சமர்தான் இந்தப் படம்.  சாங்க்வின் அம்மா, அவள்  அம்மாவிடம் தன் பையனை சிலகாலம் அவன் பள்ளி விடுமுறையில் விட்டுவிட்டு செல்கிறாள்.  ஒரு பொட்டல் கிராமம்.  அருமையான மலையைச் சுற்றி உள்ளது.  அதிக வசதி இல்லாத மிகக் குறுகலான வீடு.  சாங்க்விற்கு அங்கு தங்குவதற்கே பிடித்தம் இல்லை.  அம்மாவிடம் சண்டை போடுகிறான்.  அம்மா அவனை அடித்து தரதரவென்று அழைத்துப் போகிறாள்.  அந்தக் கிராமத்தில் அதிகமாக மனிதர்கள் இல்லை.  வேறு வழியில்லை சாங்க்வி பாட்டியைப் பார்த்தபடிதான் இருக்க வேண்டும். பாட்டி அவனிடம் அன்பை பொழிந்து கொண்டிருக்கிறாள்.  அவனோ அவள...