Skip to main content

Posts

Showing posts from November, 2013

TWO POEMS BY KRISHNAKUMAR

பைத்திய வாழ்க்கை.. காய்ச்சலால் உடம்பு தகிக்கிறது வெளியில் மழை முடிவில்லாமல் பெய்கிறது தகிக்கும் அந்த கேவலமான உடம்போடு மழையில் சென்று வர வேண்டிய வாழ்க்கையை வாழ்கிறான் அந்த மனிதன் .   வெயில் என்றால் பாலைவன வெயில் சே , இந்த மஞ்சள் காமாலையின் மழுங்கிய கண்களோடு வெயிலில் அலைந்து திரிய வேண்டிய அற்பமான வாழ்க்கை அவனுடையது .   மழைக்கான தனி இடமும் , வெயிலுக்கு ஒரு பிடி நிழலும் வாய்க்கும்போது அனுபவிக்க தோதுபடாத பைத்திய வாழ்க்கை அந்த மனிதனுடையது .   ============================== ==================== முதல் கவிதையின் மாற்றுப்பிரதி ============================== =========== முதல் கவிதை எல்லோருக்கும் ஒரே மாதிரியாக அமைந்துவிடுகிறது . படிமகுறியீடுகளின் பிரக்ஞையற்றது அந்த கவிதை . ந . பிச்சமூர்த்தி முதல் சபரிநாதன் வரை எவர் சாயலுமற்ற மலட்டுத்தன்மை அதனுள் ஒளிந்திருக்கும் . " நேற்றுதானே உன்னை சந்தித்தேன் , இன்று என் இதயத்துக்குள் எப்படி வந்தாய் ?" என்று அந்த

90களின் பின் அந்தி -

-ஜெம்சித் ஸமான் ஒரு ஊசாட்டமும் இல்லை என் செம் மண் தெருவை தார் ஊற்றி கொன்றது யார் 90களின் பின் அந்தியா இது அப்போது காகங்கள் என்றாலும் தெருவை கலைத்துக் கொண்டிருக்கும் ராணுவ வீரர்களின் சூ கால்கள் தெருவின் விரை மீது ஊன்றி ஊன்றி மிதிக்கும் ஜீப் வண்டிகளின் டயர் தடங்களில் நசுங்கிய கைப் பாவைகளைக் கேட்டு எந்தக் குழந்தை என்றாலும் அழுது வடிந்து கொண்டிருக்கும் முரட்டு துப்பாக்கிகளைக் கண்டு தெரு நாய்கள் குரைத்து குரைத்து அச்சம் எழுப்பி தெருவெல்லாம் கதறி ஓடும் 90-91 களின் அதிகாலை வெண் பனிக்குள் உடல் கொடுகி விழி நிமிர்ந்து கைகள் கெஞ்ச ஒவ்வொரு மின் கம்பங்களுக்கும் உரமாக விதைக்கப்பட்டவர்களின் குருதி சொட்டிய பரள் மண் துகள்கள் எங்கள் உம்மாக்களின் கண்களுக்குள்ளும் விழுந்து கரிக்கும் ஒரு ஊசாட்டமும் இல்லை கைகளும் கண்களும் கறுப்பு துணியால் கட்டபபட்டு சும்மா கிடந்தது தெரு மார்பில் இரும்பு துப்பாக்கிகள் அழுந்தியிருக்கவில்லை 'நீல' வானத்தில் பறவைகளின் சஞ்சாரம் அறவே இல்லை பின் அந்தி 6.00 மணிக்கு எங்கள் விளையாட்டு திடல்களில் யுத்த விதை விழுந்து மண் பிளந்து வேர் கொண்டு எழுந்த நாட்களில் ஒன்றா இது 1999ல்

எதையாவது சொல்லட்டுமா..90

அழகியசிங்கர்  சேலத்தில் உள்ள ஒரு எழுத்தாள நண்பர், ü400 பக்கங்களுக்கு மேல் ஒரு நாவல் எழுதியிருக்கிறேன், அதைப் புத்தகமாகக் கொண்டு வர, யாராவது பதிப்பாளரைத் தெரியுமா?ý என்று கேட்டார். ஒரு பதிப்பாளர் பெயரைக் குறிப்பிட்டேன்.  உடனே அவருக்குப் போன் செய்து பேசிவிட்டார்.   பதிப்பாளர் தற்போது நாவல் போடுவதில்லை என்று மறுத்துவிட்டாராம். கட்டுரைப் புத்தகங்களைத்தான் கொண்டு வருகிறாராம்.  திரும்பவும் எனக்கு போன் பண்ணி எழுத்தாள நண்பர் சொன்னார்.  அவர் நாவல் எப்படி இருக்கும் என்பது தெரியாது.  ஆனால் அவர் நூறுக்கும் மேற்பட்ட நாவல்கள் எழுதியிருக்கிறார்.  அவருடைய நாவல்கள் சினிமாப் படங்களாக ஒரு காலத்தில் வெளி வந்திருக்கின்றன.  வெகுஜன வாசகர்களுக்கு அவர் நன்றாக அறிமுகமானவர்.       ஆனால் இன்று கவிதைப் புத்தகம் சிறுகதைப் புத்தகம் மாதிரி நாவல்களும் விற்பதில்லையா? விற்கிறது.  ஆனால் ஒருசில பேர்களைப் பார்த்துதான் வாங்குகிறார்கள்.  குறிப்பிட்ட பதிப்பாளர் 1000 பக்கங்கள் கொண்ட ஒரு நாவலை சமீபத்தில் பிரசுரம் செய்திருக்கிறார்.ஆனால் சேலம் எழுத்தாளர் புத்தகத்தைப் பிரசுரம் செய்ய மாட்டார். 1000 பக்கங்கள் கொண்ட நாவல் எப்பட

ஒரு பூக்காலத்தில் நான் மிதக்கும் தோணி

 எம்.ரிஷான் ஷெரீப் மலைக் காடொன்றின் மத்தியில் தெளிந்த ஒற்றையடிப் பாதையின் முடிவில் ஒரு தனித்த குடில் வீடு உனது ஓவியமாகியிருந்தது விகாரைக் கூரையை அதற்கு ஏன் தீர்மானித்தாயென்ற கேள்விக்கு புறாக்களும் புனித தேவதைகளும் வந்து செல்வரெனச் சொல்லி நீ காதலைச் சொன்ன தருணம் மஞ்சள் அந்தி மாலை நேரத்தைப் போல எவ்வளவு அழகாக இருந்தது சின்ன மேசையருகே முழந்தாளிட்டு நாமருந்திய தேன்பானம் நீ தயாரித்தது சூடுமற்ற குளிருமற்ற இதமான காலநிலையில் நாம் நடந்துவரச் சென்ற அன்று நீ மழை வருமா எனக் கேட்ட பொழுது சிரித்தேன் பெருங்குளத்துக்கு மத்தியிலான காட்டைச் சுற்றிவர நிலத்தில் பதித்திருந்த பச்சை விளக்குகள் முன்னந்தியில் ஒளிர ஆரம்பிக்கையில் மழை சட்டெனப் பெய்து வலுத்தது கண்டு கை கோர்த்துக் கொண்டோம் அப்பொழுதெல்லாம் எவ் வடிவ மேகம் போல நீ மிதந்தாய் என் புன்னகை ஒரு மந்திரக் கோலென்றாய் எந்த அதிர்வுகளுக்கும் ஆட்படாத மனம் அதிர்ஷ்டம் வாய்ந்ததெனச் சொல்லி உனது தூரிகை தொடர்ந்தும் சித்திரங்களைப் பரிசளித்தது என் நேசம் உன் புல்லாங்குழலின் மூச்சென்றானது நீ இசைத்த