Skip to main content

Posts

Showing posts from May, 2015

முத்துசாமியின் நாடக வெளியிட்டு விழா

அழகியசிங்கர் ந முத்துசாமியின் நாடகங்கள் வெளியீட்டு விழா போதி வனம் என்ற அமைப்பின் மூலம் நேற்று (30.05.2015) மினி ஹால், மியூசிக் அக்கடமியில் நடந்தது.  காலை 10 மணி முதல் மாலை 7 மணிவரை.  கூட்டத்திற்குச் செல்வதற்கு முன், நான் சில சில்லறை வேலைகளை எல்லாம் முடித்துக் கொண்டு நுழையும் போது, உட்கார இடம் கிடைக்கவில்லை.  நிஜ நாடக இயக்குநர் ராமசாமி என்பவர் பேசிக்கொண்டிருந்தார்.  ஒரு வழியாக இடம் தேடி  உட்கார இடம் கண்டுபிடித்து உட்கார்ந்தேன்.    கூத்துப் பட்டறை என்ற அமைப்பை ஆரம்பித்து, அதில் தீவிரமாக இயங்கியவர் முத்துசாமி.  அவர் பல நடிகர்களை கூத்துப் பட்டறை மூலம் உருவாக்கியவர்.   அவர் வெளிப்படையாகப் பேசக் கூடியவர்.  முதன் முதலில் அவருடைய சுவரொட்டிகள் என்ற நாடகத்தை லலித்கலா அகாதெமியில் நடைபெறும்போது பார்த்திருக்கிறேன்.  அப்போது என் அலுவலகத்தில் பணிபுரிந்த ரமணன் என்ற நண்பரையும் சந்தித்திருக்கிறேன்.  எனக்கு இந்த நாடகம் சுத்தமாகப் புரியவில்லை.  அப்போது நான் புரியவில்லை என்பதுபோல் ரமணனைப் பார்த்தேன்.  அவரும் அப்படித்தான் தலையை ஆட்டினார். முதலில் இந்த நாடகம் ஒரு மேடையில் குறுகிய இடத

கலந்துகொண்ட மே மாத இலக்கியக் கூட்டங்கள்

அழகியசிங்கர்                                                                                       1.   சமீபத்தில் நான் கலந்துகொண்ட இலக்கியக் கூட்டங்களைப் பற்றி என் நினைவில் என்ன எழுத முடியுமென்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.   ஒவ்வொரு மாதமும் கணையாழி நடத்தும் ஒரு கூட்டத்தில் இந்த மாதம் 16.05.2015 சனிக்கிழமை அன்று நானும் பிரமிள் பற்றி பேசியிருக்கிறேன்.  அந்தக் கூட்டத்தில் அமிர்தம் சூர்யா ஒரு சிறப்பான பேச்சை வழங்கி உள்ளார்.  நான் அந்தக் கூட்டத்திற்கு தயாராகும்போது, எழுதி கட்டுரையாக வாசிக்க நினைத்தேன்.  அதன்படி கட்டுரை ஒன்றையும் பத்து அல்லது பதினைந்து பக்ககங்களுக்குள் தயாரித்துக் கொண்டேன்.  ஆனாலும் பிரமிள் பற்றி எழுதிப் படிக்க வேண்டாம் என்ற எண்ணம் தோன்றியது.  அதனால் மனதிலிருந்து பேச தீர்மானித்திருந்தேன்.  எதைப் பற்றி பேச வேண்டுமென்று யோசித்துக்கொண்டிருந்தேன்.  அவர் படைப்புகளைப் பற்றி பேச வேண்டும் என்றால் இன்னும் நன்றாகத் தயாரிக்க வேண்டுமென்று நினைத்தேன்.   எழுத்து காலத்தில் அவர் எழுதிய கவிதைகள் எல்லாம் ஆன்மிகம் சம்பந்தப்பட்டது என்று ஒரு இடத்தில் பிரமிள் குறிப்பிட

புத்தக விமர்சனம் 4

அழகியசிங்கர் நடைவெளிப் பயணம் என்ற அசோகமித்திரன் புத்தகத்தைப் படித்து முடித்தேன்.  40 வாரங்கள் குங்குமம் இதழில் தொடராக வந்திருந்த கட்டுரைத் தொகுப்பு இது. பலவிதங்களில் இப் புத்தகம் சிறப்பாக இருப்பதற்குக் காரணம், 83வயதாகும் அசோகமித்திரன் தன் அனுபவங்களைச் சாராகப் பிழிந்து கொடுத்திருப்பதுதான். பொதுவாக புத்தகம் படிக்கும் அனுபவம் மகத்தானது.  பெரும்பாலோருக்கு இது பிடிபடுவதில்லை.  புத்தகம் படிக்கும் பலரைப் பார்த்திருக்கிறேன்.  ஒரு புத்தகத்தைப் படித்து முடித்தவுடன் அடுத்தப் புத்தகத்திற்கு அவர்களுடைய மனம் தாவிவிடும்.  முதல் புத்தகம் என்ன என்பதுகூட அவர்கள் முழுவதும் மறந்து விடுவார்கள். ஒவ்வொரு புத்தகத்தையும் நாம் திரும்பவும் படிக்கும்போது அப் புத்தகத்தின் நுன்ணுணர்வு நம்மிடம் வந்து சேரும்.   எப்போதும் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டிய தொகுதியாகவே எனக்கு இப் புத்தகம் தோன்றுகிறது.  இதில் பலதரப்பட்ட மனிதர்கள், பலதரப்பட்ட இடங்களைப் பற்றி விஸ்தாரமாகச் சொல்லிக்கொண்டே போகிறார் அசோகமித்திரன். 'மேலும் படிக்க' என்ற தலைப்பில் அமி அவர்கள் என்னன்ன புத்தகங்கள் ஒவ்வொருவரும்

நண்பர்களே,

வணக்கம். நவீன விருட்சம் என்ற 97வது இதழ் வெளிவந்து விட்டது.  வழக்கம்போல் கதைகள், கவிதைகள், கட்டுரைகள் என்று 64பக்கங்கள் கொண்ட இதழ். இதழில் பங்கு கொண்ட படைப்பாளிகளின் விபரம். 1. என் தஙகையைப் புகழ்ந்து - விஸ்லாவா ஸிம்போர்ஸ்கா மொழி பெயர்ப்பு : பிரம்மராஜன் 2. எதிர்பாராத சந்திப்பு - விஸ்லாவா ஸிம்போர்ஸ்கா மொழி பெயர்ப்பு : தேஜøகிருஷ்ணா 3. விபத்தில் சிதைந்த காதல் கதை - சிறுகதை - உஷாதீபன் 4. நான் ஒரு சகாதேவன் - கட்டுரை - வைதீஸ்வரன் 5. ஏன் இப்படி ஆயிற்று - சிறுகதை - அழகியசிங்கர் 6. ம.பொ.சியின் ஆறு கதைகள் - கட்டுரை - பெ சு மணி 7. ஒரு பூவின் சாலை மரணம் - கவிதை - ஜெ பாஸ்கரன் 8. சந்திரா மனோகரன் கவிதை 9. மயிலாடுதுறை பாசஞ்சர் - கவிதை - சபரீஸ் 10. இரு கதைகள் - மா தக்ஷ்ணமூர்த்தி 11. புத்தக விமர்சனம் - அழகியசிங்கர் 12. பூத்துக் குலுங்கும் நித்தியம் - கவிதை - நா கிருஷ்ணமூர்ல்த்தி 13. ஜன்னவி கவிதைகள் 14. இரண்டு கவிதைகள் - அழகியசிங்கர் 15. அஞ்சுகிறேன் - கவதை - பிரதிபா 16. துரை ஜெயபிரகாஷ் கவிதைகள் 17. அற்புதத்தின் ஒரு துளி - கவிதை - நந்தாகுமாரன் 1

விருட்சம் இலக்கிய சந்திப்பு – 11.

டாக்டர் பாஸ்கரன்’  விருட்சம் தனது 11 ஆவது இலக்கிய சந்திப்பு நிகழ்வினை 25- 4 – 2015 அன்று மாலை, தி நகர் அலமேலுமங்கா திருமண மண்டபத்தில் நடத்தியது. சமீபத்தில் விஷ்ணுபுரம் பரிசு பெற்ற கவிஞர் திரு ஞானக்கூத்தன் அவர்கள் ‘படைப்பின் இரக்சியம்’ பற்றிப் பேசினார். கொல்லன் பட்டறையில் ஈயாக நானும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டேன்! முதுபெரும் எழுத்தாளர் திரு அசோகமித்திரன் அவர்களைச் சந்திக்கும் அவா மேலோங்கியிருந்தது ! சுஜாதா அவர்கள் பல கட்டுரைகளில், பல சந்தர்ப்பங்களில் ஞானக்கூத்தனைவாசிக்கச் சொல்லுவார்! கவிதையுலகில் தனக்கென ஒருதனியிடம் உள்ளவர் - அவர் கவிதைகள், காலம் கடந்தும் அவர் புகழ் பாடும். அவரது கவிதை உள்ளமும், வார்த்தைகளை அலசி ஆராயும் திறனும், தொலை நோக்குப் பார்வையும், பரந்துபட்ட இலக்கிய அறிவும், அவரது “கவிதைக்காக” ( கட்டுரைகள், மதிப்புரைகள்) – விருட்சம் வெளியீடு - புத்தகத்தை வாசிக்கும்போது புலப்படும் ! அவரைப் போல்,வரிகளுக்கிடையே, வார்த்தைகளுக்கு நடுவே, எழுத்துக்களுக்குப் பின்னே என அழகாகப் பொருள் சொல்லமுடியாது – அதற்கு, அவருள் இருக்கும் கவிஞனின் பார்வையும், தேடலும் தேவை !