கவிதையும் ரசனையும் அழகியசிங்கர் 2022-02-08 - Leave a Comment ஒவ்வொரு மாதமும் சனிக்கிழமைதோறும் நான்கு கூட்டங்கள் நடத்துகிறேன். ஒரு கூட்டம் கவிதைக்காக..இன்னொரு கூட்டம் கதைக்காக. இதுவரை 44 கதைஞர்களின் கதைகளைப் பேசி உள்ளோம். இக் கூட்டத்திற்குக் கதைகளைக் கொண்டாடுவோம் என்று பெயர் வைத்துள்ளேன். அதேபோல் கவிதைகள் குறித்து உரையாடல், கவிதைகள் வாசித்தல் என்றும் தொடர்ந்து செய்துகொண்டு வருகிறேன். வேறு விதமாகக் கவிதைகளைப் புரிந்து கொண்டவர்களை என் பாணியில் வேறுவிதமான கவிதைகளை வாசிக்கக் கொண்டு வருகிறேன். இதற்கென்று ஒரு வாட்ஸ்ஸப் குழு வைத்திருக்கிறேன். அவர்களிடம் வேறு விதமா கவிதை எழுதுபவர்களைப் புகுத்துகிறேன். எப்போதும் 20 பேர்கள்தான் இதில் கலந்து கொள்கிறார்கள். இந்த முறை கவிதைக் கூட்டத்தில் இரண்டு கவிதைகளை எடுத்துக் கொண்டு அலசுவது என்று தீர்மானித்தோம். ஒன்று ‘வியாதி அறிக்கை’ என்ற பிரமிள் கவிதை. இன்னொன்று தேவதச்சனின் ‘பொற்கணம்’ என்ற கவிதை. ஏற்கனவே இந்தக் கவிதைகளைக் குழுவிற்கு அனுப்பி விட்டேன். முன்னதாகப் படிக்கட்டுமென்றுதான். அன்று கலந்து கொண்டவர்கள் எல்லோரும் முதலில் பிரமிள் கவிதையும், அதன்பின் தே