Skip to main content

Posts

Showing posts from February, 2012

வீழ்வது

  குடை இல்லாமல் வெளியே செல்வது சரியல்ல - வெயிலானாலும் சரி மழையானாலும் சரி அட் லீஸ்ட் ஒரு குல்லாயாவது தேவை சிலருக்குக் கறுப்புக் கண்ணாடி சிலருக்குக் குறுந்தாடி எழுதும் வர்கமெனில் ஜோல்னாப்பை கருப்புச்சட்டை சிவப்புச் சட்டை அல்லது டிசைனர் துணிமணிகள் ...   இப்போதெல்லாம் மற்றபடியிருப்பது டன் தின்ங் இல்லை - ஓபனாக இருந்து அதன் இயல்பான உள்ளுரை முரண்பாடுகள் மருத்துவரிடம் செல்லும் கட்டாயத்தை ஏற்படுத்தி ஏன் இந்த வீண் வம்பு ?   இந்த ஞானம் நமது கனவுக் கன்னிகளும் உண்டென்பது உண்மைதானே     மெல்லச் சாகும் என்பது ஒருவகை சாஸ்வதமே ஏனெனில் செத்துக் கொண்டிருக்குமே தவிர சாவதில்லை கலிபுருஷனல்லாவா ஆள்கிறான் !   எல்லாமே ஒருவகை சாலென்ஜ் / மானேஜ் செய்யப்பட வேண்டியது எல்லாமே ரிலேடிவ் மதிப்பு உள்ளவையே கண்ணகிக்கும் சீதைக்கும் ராமனுக்கும் கிருஷ்ணனுக்கும்   துகில் உரிந்தால் உள்ளது தெரியுமென்று கடவுளரே எண்ணுவதாக கதைத்தவர் பெரியோர் சொல்லாமல் சொல்லிச் சென்றனர் -   நாமெல்லாம் எந்தமட்டு...

பாஞ்சாலி சபதம்

    தொலைபேசியில் உன் முகம் வாரந்தோறும் நிழலாடும்- இது தவிர வேறென்ன உன் நினைவு பாலைவனத்து எண்ணைக் கிணறுகள் டாலரின் முகம் காட்டி உன் முகத்தைப் பறித்தது பழங்கதை மறந்து போன கதை   நீ அனுப்பிய டாங்க் ஆரஞ்ஜ் யாருடைய தாகத்தை தணிக்காதே பெருக்கியதென்பதை நீ அறியாதிருப்பதே நலம்-   காலையின் உதயம் கலைந்ததைச் சரிசெய்யும் உன் நினைவுகள் அடுத்த வாரம் வரை காத்தேயிருக்கும்-   ஒன்றில் மட்டும் உறுதியுண்டு சபதமென- குழந்தையொன்று பேறானால் அது உன்னுடையதாகத்தான் இருக்கும் பிறக்கும் இது சத்தியமே  

விளக்குகளை அணை; வெளிச்சம் வரும்!

வீ ட்டுச் சுவரை இடித்துவிட்டு கதவுகளை மூடிக் கொள்பவர்கள், தெருவில் விளக்கிட்டுவிட்டு வீட்டிற்குள் வெளிச்சம் தேடி யலைகின்றோம்; வாசலில் கோலம்போட்டு  உள்ளே கோழி  வெட்டும் வீரர்கள், பேங்க் லாக்கரில் பணமும் நகையும் சேர்த்துவிட்டு தெருப்பாடகனுக்கு வெறுங் கையசைக்கும் வள்ளல்களாகின்றோம்; பட்டுப் புடவைக் கட்டி அசைவ பாவம்பற்றி பேசுபவர்கள், பட்டுப்பூச்சி வாழ்க்கையதை விதியின் வாளால் கொல்லவே விரும்புகின்றோம்; நெற்றிப்பொட்டில் அடிக்கும் சாபம் பணம் கொடுத்தால் அகன்றாப் போகும்? சற்றும் யோசனை இல்லா ஓட்டம் இடையேக் கரண்ட்டுப் போனால் கத்துமாட்டம்; மனிதம் வற்றிப் போன மனமே மலைக்கப் பெரிதாய் தெரிவது இருட்டோ? முழுக்க  முழுக்க விதிகளை தகர்த்து சுயநல அரசியல் புரிதல் தகுமோ? போய்; வீணாய் எரியும் விளக்கினை யணைத்து இருண்டவீட்டில் வெளிச்சமூட்டு, அல்லது வெட்டும் மின்களம் செய்து செய்து முண்டத்தின் தலையில் விளக்கை ஏற்று; அணுவை உடைத்து உயிரை குடிக்கும் விளையாட்டொன்றில் விளக்கைப் பூட்டி, எறியும் வெளிச்சத்தில் எம் எதிர்வரும் நாளில் பிறக்கும் தலைமுறைக்கு ஆபத்தைக் கூட்டு; மின்வ...

தனிமைக்குள் கடவுள் இருக்கலாகாது !

யாருமற்ற தனிமையில் கடவுள் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை கடவுள் எப்போதும் இனிமையானவன் தனிமை சில நேரம் இனிமை சில நேரம் துயரம் கடவுள் எப்போதும் பலம் வாய்ந்தவன் தனிமை சில நேரம் பலம் சில நேரம் பலவீனம் மிக நெருக்கத்தில் தனிமையை தரிசித்தல் சில நேரம் பரவசம் சில நேரம் பெருவலி யாருமற்ற தனிமையில் கடவுள் இருப்பதாக என்னால் நம்பமுடியவில்லை தனிமையில் அழுவதும் கடவுள் முன் அழுவதும் ஒரு வகை திருப்தி என்பது உங்கள் வாதமா? சமனற்றிருப்பதே தனிமைக்கு  அழகு ஒருவேளை கடவுள் தனிமைக்குள் இருந்தால் உடனடியாக அவரின் வெளியேற்றத்தை நான் விரும்புகிறேன் அதோ என் அந்த நாற்காலியில் அமர்ந்திருக்கும் தனிமை தனிமையில் கிடக்கட்டும் உங்கள் வாதப்படி கடவுள் அங்கிருந்தால் உடனே அவரை வெளியேற்றுங்கள் .

சொல்

  குதூகலம். மகிழ்ச்சி. சந்தோஷம். உவகை. சொற்கள் உணர்வின் அடையாளமாக பரிமாறப்பட்டன. திகட்டிவிட்டதென்று எழுந்து கொள்ள முடியாமல் முற்றுப்புள்ளி எங்கோ போய் ஒளிந்திருந்தது. அலுப்பு சலிப்பு வெறுப்பு இயலாமை சொற்களில்லாமல் சொன்னது உடல் மொழி. சொற்கள் முற்றுப்புள்ளியை அழைத்து வந்து பொருத்திக்கொண்டு அமைதியாயின. புன்னகை புன்முறுவல் குறும்புப்பார்வை வெடுக்கென எழுதல் உடல்மொழி கட்டைவிரலை உயர்த்திக்காட்டி வெளியேறியது... சொற்கள் அமைதியாய் காகிதத்தில் வந்தமர்ந்தன கவிதையாக. இறுமாப்புடன் திரும்பிய உடல்மொழி கவிதையாக உருக்கொண்ட சொற்களைக்கண்டு மோனமாகி நெற்றி அகன்று சிந்தனை வயப்பட்டது. ”வாய் வார்த்தையாகும் சொற்கள் எழுத்துருவாகியும் பேசுகின்றன.” சிந்தனையும் சொற்களாகவே வெளிப்படுவதை உணர்ந்த உடல் மொழி மரியாதையாய் தலை குனிந்தது.  சொற்கள் நிரம்பிய கவிதை புத்தகத்தின் பக்கங்கள் காற்றில் புரண்டன.

கல் எறிந்தவர்க​ள்

பிளாட் பாரத்திலிருந்து பிரிகிறது ரயில் ஒரே தருணத்தில் சில நூறு கரங்கள் உயர்ந்து கையசைக்கின்றன சட்டென எழும்பிப்பறக்கின்ற பறவைகள் போல்! கல் எறிந்தவர்கள் கண்களிருந்து மெதுவாகக் காணாமல் போகிறார்கள்

எதையாவது சொல்லட்டுமா......71

க.நா.சு வை நாம் மறந்துவிட்டோம்.  அவருடைய 100வது ஆண்டை நாம் வெறுமனே சில கட்டுரைகள் எழுதி நிறுத்தி விட்டோம்.  நான் அவருடைய கவிதைகளை இலவசமாக அச்சடித்து விநியோகம் செய்ததோடு நிறுத்தி விட்டேன். ஆனால் க.நா.சுவை நான் பல சந்தர்ப்பங்களில் நினைத்துக்கொள்ள வேண்டும்.  உண்மையில் அவர் மரணம் அடையும்வரை புத்தகங்கள் படிப்பதையும் எழுதுவதையும் நிறுத்தவில்லை. இது ரொம்ப ஆச்சரியம்.  வயது ஆக ஆக நம்மால் புத்தகம் படிப்பது முடியாது.  க.நா.சு கண் தெரியாவிட்டாலும் படித்துக்கொண்டிருப்பார்.  எழுதிக்கொண்டே இருப்பார்.  இன்னும்கூட அவர் எழுதியது பிரசுரமாகாமல் இருக்கும்.  ஒருமுறை நான் விருட்சம் ஆரம்பித்தபோது எதாவது கட்டுரை தரும்படி கேட்டுக்கொண்டேன்.  உடனே க.நா.சு ஒரு கட்டுரை ஏற்கனவே எழுதியதைக் கொடுத்தார். பல சந்தர்ப்பங்களில் நான் க.நா.சுவைப் பார்த்து வியந்திருக்கிறேன்.  கவிதை எழுதுவது, விமர்சனம் செய்வது, கதை எழுதுவது என்று தனக்கென ஒரு வழியை வகுத்துக் கொண்டிருந்தார்.   அவருடன் பேசுவது இனிமையான அனுபவமாக எனக்குத் தோன்றும்.  ஒருமுறை பெரிய கூட்டம் ஒன்று மயிலா...

எதையாவது சொல்லட்டுமா.........70

சமீபத்தில் நடந்த வங்கிக் கொள்ளையர்களைப் பற்றிய செய்தியைப் படித்தபோது, என் திகைப்பு அதிகமாகவே இருந்தது.  வங்கி வெகு எளிதாகக் கொள்ளை நடக்கும் இடமாக எனக்குத் தோன்றிகொண்டே இருக்கும். பீகாரிலிருந்து தமிழ்நாட்டில் பணிபுரிந்து கொண்டிருக்கும் என் வங்கி நண்பர், எப்படி இங்கே காவல் புரிபவர் இல்லாமல் ஏடிஎம் இயங்குகிறது என்று கேட்பார்.  அவர் இடத்தில் அப்படி இல்லையாம்.  சமீபத்தில் நடந்த வங்கித் தேர்வுகளில், பீகாரைச் சேர்ந்தவர்கள்தான் வங்கியில் அதிகமாக சேர்கிறார்கள்.  தமிழ் நாட்டுக்காரர்கள் மிகவும் குறைவாம்.  அதைக் கேட்கும்போது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.  ராம் என்கிற அந்த பீகார் நண்பர் தமிழ் தெரிந்துகொள்ள முயற்சி செய்கிறார்.  எல்லா வேலைகளையும் தட்டாமல் செய்கிறார்.  அவர் கோபம் என்பது இல்லை.  அவர் மனைவியையும் ஊரிலிருந்து அழைத்துக்கொண்டு வந்து விட்டார்.  நான் பந்தநல்லூர் என்ற கிராமத்தில் பணிபுரிய செல்லும்போது, அந்த இடம் ஹோ என்று இருக்கும். கொள்ளையர்கள் எளிதில் புகுந்து கொள்ளை அடிக்கலாம்.  ஏன் என்று கேட்க ஆள் இருக்காது.  ஆனால் அங்கே எல்லாம் எ...

ழ 6வது இதழ்

ஒரு கவிதை தோட்டம் வெறுமையாய்க் கிடந்தது. வேலிக்கான முட்புதரில் கொள்ளையாய் பூக்கள் பட்டாளத்துச் சிப்பாய்க்கு வருவாயுயர்ந்தது கூட்டான குடும்பம் குந்தித் தின்கிறது. ஏடுகள் நிறைந்த கல்வியால் குழந்தைகளின் சிந்தனை மழுங்கிப் போயிற்று உழைப்பில்லை காசில்லை கனவுகள் நிறைந்தன கருணையில்லை ஊரெல்லாம் கடவுள்கள் திருடர் வளர்க்கும் நாய்களின் குரைப்பில் பயப்படும் பிச்சைக்காரர்கள்! சந்துத் திருப்பங்களில் காந்தி சிலைகள் வீட்டு விருந்தில் மதுக் குப்பிகள்! மிகவும் எண்ணிய நல்லவர்கள் ஊர் கெட்ட; போகட்டும் என்று உவமைக்கான அரிச்சந்திரன் கெடாதிருக்க இடுகாட்டில் குடிவைத்தார்கள். ஆதிநாதன்

அகத்தின் அழகு

இன்னொரு   நாளின் தொடக்கம் . எல்லோருக்கும் கை அசைத்தபடி வந்து கொண்டிருந்த மகனின் மகிழ்ச்சி இழைகளால்   ஆன முகத்தை அணிந்தபடி சென்று கொண்டிருந்தேன் . இவனின்   கை   அசைப்பிற்கு எதிர்வினை   ஏதுமின்றி எதிர்ப்பட்ட முகமொன்றில்   அத்தனை   இறுக்கம்.   உற்றுப்   பார்க்கையில் சற்று முன் இறக்கி வைத்த என் முகம்.

காவேரி

           உடைகளில்லாதிருப்பதிலொரு          உல்லாசத்தை உணர்கிறேன்          உடலில் கவிந்த ஊர்ப்பழுதியை          ந்தியில் நனைந்து கரைக்கிறேன்          என் நேற்றைய வானவில்          நுரைக்குமிழிகளாகிக் கரையும் காட்சியை          ந்தியில் கப்பல்விட்ட சிறுவனாகி          வேடிக்கை பார்க்கிறேன்          புலரியின் இளஞ்சூட்டில் வியர்க்க          இலைகளால் விசிறிக்கொள்ளும்          கரையோர வாழைமரங்கள்          ந்தியின் நடுவில் உலர்ந்த மணற்திட்டில்          உறுமீன் வருமுன் உடற்பயிற்சி ...

பயணத் துணை

- தேரியின் சிவந்த மண்ணில் மரங்களும் பறவைகளும் பார்த்திருக்க பசியாறினோம் மேல்தளம் இருந்தவர்கள் ஒன்றிரண்டு படியேறியவர்கள் குறித்து நம்பிக்கையை நதியாக்கினர் முதல் படியில் இருப்பவனுக்கு தேவைப்படும் கவனத்தையும் பிடித்துக்கொள்ள வேண்டிய கைப்பிடிச் சுவற்றின் ரகசியங்களையும் அன்பால் செலுத்திக் கொண்டிருந்தனர் அருகிருந்த நெல்லி மெல்ல மெல்ல பெருக்கத் துவங்கியது தன் துவர்ப்பை இழந்துவிடாது சற்றைக்குப் பின் மதுக்குடுவைகள் வந்தமர அறை அன்பின் தேவாலயமானது பல்படாது செய்நேர்த்தியோடு செயலாற்றுபவனென்றும் இத்தனைபேர் இருக்க எனக்கென்னடாவென ஆசுவாசப் பறவைகளை மிதக்கச் செய்தும் இதேதான் பற்றிக்கொண்டாய் விட்டுவிடாது தொடரென்றும் வார்த்தைகள் குலைந்து குலைந்து பூ முத்தங்களாக மிளிர்ந்து அடங்கியது பயணிக்கிறேன் மயில்தோகையின் வருடல்களோடும் ஓயாது கூவிய சேவலின் இசையோடும்...

கிழிபடும் மிச்சத்தின் பட்டியல்

பழைய பெயர் பட்டியலின் கிழிபட்ட மிச்சத்தின் மீது புதிய பட்டியல் ஒட்டப்படுகிறது ஒரு பிரிவு ஓர் ஏக்கம் ஒரு காதல் ஒரு புன்னகை ஒரு காமம் ஒரு பசலை ஒரு துக்கம் ஒரு வஞ்சம் ஒரு கருணை ஒரு துரோகம் ஒரு யாசிப்பு மற்றுமோர் பிரிவு மற்றுமொரு தொடக்கம் முற்றிலும் விடைபெறல் பயணத்தைத் தொடங்குகிறது ரயில் இன்னும் தீர்ந்திராத தவிப்புகளோடு  பழைய பயணிகளின் ஸ்டேஷன்களை நோக்கி  *******

எதையாவது சொல்லட்டுமா.........69

21ஆம் தேதி ஜனவரி மாதம் சீர்காழி கிளையிலிருநந்து  எனக்கு விடுதலை தந்துவிட்டார்கள்.  திடீரென்று திரும்பவும் சென்னை என்பதை என்னால் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை. வாரம் ஒருமுறை நான் சென்னைக்கு வராமலிருக்க மாட்டேன்.  திரும்பவும் சென்னையில் என் வாழ்க்கையைத் தொடர வேண்டும் என்பது திகைப்பாகவே இருந்தது. காலையில் 9 மணிக்கு பஸ்ஸைப் பிடித்து ரம்மியமான வயல்வெளிகளைப் பார்த்தபடி மயிலாடுதுறையிலிருந்து சீர்காழிக்குச் செல்வது அற்புதமான அனுபவமாக இருக்கும். அதை திரும்பவும் இனிமேல் நினைத்துப் பார்க்க முடியாது.  என்னால் மறக்க முடியாத இன்னொரு இடம் திருவல்லிக்கேணி.  நான் இங்குதான் கோஷ் மருத்துவமனையில்தான் பிறந்தேன். நான் மாம்பலவாசியாக மாறினாலும், திருவல்லிக்கேணிக்கு அடிக்கடி வருவேன்.  என் நண்பர்கள் இங்குதான் அதிகம்.  மேலும் விருட்சம் அச்சடிக்கிற இடமும் திருவல்லிக்கேணிதான்.  நான் கல்லூரியில் முதலில் காலடி எடுத்து வைத்தபோது, கணக்கு என்றால் ஒன்றும் தெரியாது.   அதைக் கற்றுக்கொள்ள திருவல்லிக்கேணியில் உள்ள என் உறவினர் வீட்டிற்கு வருவேன். ஒரு குறுகலான சந்தில...

ஒரு கவிதை

ஒரு கவிதை தன்னை எழுதிக்கொள்ள சொற்களை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறது. என்னிடம். இடையே வந்த தென்றல் கொஞ்சம் அதன் முடியை மயிலிறகு கொண்டு நீவிச்சென்றது அவ்வப்போது பெய்த சிறு மழைத்துளிகள் கலைந்த முடிகளை சிறு கற்றைகளாக்கிச்சென்றது அக்கற்றைகளிலிருந்து வடிந்த மழைத்துளிகள் காதோர மணிகளில் தொக்கி நிற்க, அதில் சூரியன் தன் முகம் பார்த்துச்சென்றது. இன்னும் தான் உனக்குப்போதுமான சொற்கள் கிடைக்கவில்லையா என அக்கவிதை என்னை கேலி செய்துகொண்டிருக்கிறது. ஒரு புன்முறுவல் கிடைத்தால் இந்தக்கவிதை முழுமை பெறும் யாரேனும் அதனிடம் சொல்வீர்களா..?!

ஜப்பான் பேனா நண்பி

முன்னர் அவள் அனுப்பியவை நீண்ட கடிதங்களுடன் காய வைக்கப்பட்ட செர்ரி மொட்டுக்களும் செக்கச் சிவந்த மேப்பிள் இலைகளும் புகைப்படங்களில் பனி நிறைந்த சோலைகளில் ரோஸா நிறத்தில் மலர்ந்திருந்தாள் அனைத்து மடல்களிலும் ஆங்கில வகுப்பினைக் குறித்தும் குளிர்தினங்களில் நீச்சலை விரும்பாத குளத்தின் தங்க மீன்களைப் பற்றியுமே எழுதியிருந்தாள் காலம் செல்லச் செல்ல தற்பொழுது என்றாவது வருகிறது கடிதம் அதே இடம்தான் இது பெரிய கட்டிடத்தின் அடியில் வீட்டுக் குருவிப் பார்வையோடு அவளிருக்கும் இப் புகைப்படம் இப்பொழுதுதான் வந்தது எனக்கு 'நித்திரையேயில்லை இரவில் புகைபிடிப்பதை நிறுத்த முடியவில்லை என்ன செய்ய வேண்டும்?' புகைப்படத்தின் பின்னால் அவளது உடைந்த கையெழுத்து மூலம் - இஸுரு சாமர சோமவீர

கார்பொரேட் கூட்டங்களின் கடைசி நிமிடங்கள்

ஐயன்மீர் ! தொடக்கத்தில் திரையில் காட்டப்பட்ட    பாதுகாப்பு அட்டைகள் பற்றி எந்த ஆட்சேபமும் இல்லை எங்களுக்கு. அடுத்து முன்வைக்கப்பட்ட   வரவு செலவு கணக்கு பற்றியோ எதிர்கால திட்டங்கள் குறித்தோ நாங்கள் சொல்ல விரும்புவதும் ஏதுமில்லை. விடைபெறுவதற்கு முன் விருந்தோம்பல் சகிதம் திறக்கப்பட்ட மதுப் போத்தல்களைப் பற்றியே எங்களின்   இந்த தாழ்ந்த விண்ணப்பம். எங்களைப் போலவே உங்களின் வாகனங்களின் வருகைக்கும் காத்திருக்கும் எதிர்பார்ப்பின் கண்களுக்கு என்னவிதமான உத்திரவாதத்தை தரப் போகிறோம் நாம்.

பறத்தலின் மீதான புரிதல்

உனக்கான இடம் இதுவல்ல உள்ளுணர்வு சொல்லிய போது உணர்கிறான் தோளோடு இருந்த வலுவான இறக்கைகளை அடைய வேண்டிய உயரமும் போக வேண்டிய பாதையும் வரைபடமாக விரிந்த போதும் இறகுகளை நீவி அழகு  பார்த்தபடி நிற்கிறான்  எவருக்கும் தனை நிரூபிக்கும் விருப்பங்கள் அற்றவனாய் பறக்க அஞ்சுவதாக எழுந்த பரிகாசங்களைப் புறந்தள்ளுகிறான் வானத்துக்கு மட்டுமே புரிந்த புதிராக மேகங்களின் வேகமும் மாறும் அதன் வடிவங்களும் பறத்தலின் மீதான நம்பிக்கையை விடவும் பறத்தலின் மீதான புரிதல் மிகுந்திருக்க இறக்கைகளை இன்னும் இறுக்கிக் கொண்டு பாதங்கள் மண்ணில் பதியப்பதிய நடக்கிறவன் வானம் தாண்டிக் கோடானு கோடிக் கோள்களைப் பார்க்க இயலும் பிரபஞ்சத்தின் உச்சியை  அடைகின்ற பொழுதில்.. விரிக்கக் கூடும் தன் சிறகுகளை அளவற்ற ஆனந்தத்தில். ***

உதிர்வு

நெடிதாய் பேசி களிக்க ஆவலில் சோளமாய் பொறிந்திடுவேன் பக்கத்து வீட்டக்கா வந்திருக்காங்க அப்புறமென அணைச்சிச் செல்லவும்... உன் மலர்ச்சியை இந்நாள்வரை கண்டிலேன் எப்பூவிலுமெனும் எஸ் எம் எஸ்களை ஒருவழிப்பாதையில் கிடத்திடவும்... ஒரு இலையை உலர்த்தி உதிரச்செய்யும் செடியாகவும் மாற்றங்கொள்வதேன் மதுவாகினி.

நகுலனைப் பற்றி சில நினைவுக் குறிப்புகள்

    முதன்முதலாக நகுலனைப் பற்றி எப்போது நான் தெரிந்துகொண்டேன்.  ஒருமுறை வைத்தியநாதனுடன் (தீவிர வாசகர், ழ, விருட்சம் இதழ்களில் கவிதைகள் அதிகம் எழுதியவர்) நான், ஆத்மாநாம், மூவரும் ஆனந்த் வீட்டிற்குச் சென்றோம்.  எனக்கு வைத்தியநாதனைத் தெரியும்.  அவருடைய கவிதைகள் சில 'ழ 'வில் அப்போது வெளிவந்து கொண்டிருந்தன.  நான் அப்போது வங்கியில் பணிபுரிந்து கொண்டிருந்தேன். கதை, கவிதைகள் எழுதத் தெரிந்தவன்.  ஆனால் தமிழில் தீவரத்தன்மை கொண்ட படைப்புகளை ஆர்வமாய் தேடிப் போய் வாசிப்பவன்.  என்னை தீவிர எழுத்துக்கு அறிமுகப்படுத்தும் நோக்கமாகத்தான் வைத்தியநாதன் என்னை ஆனந்த் வீட்டிற்கு அழைத்து வந்தார்.  கூடவே எங்களுடன் வந்துகொண்டிருந்த ஆத்மாநாமிடம் என்னை அறிமுகப் படுத்தினார்.     ஆனந்த் வீட்டிற்கு வந்தவுடன், வைத்தியநாதன் சொல்லியபடி, ஆனந்த் நாலைந்து 'ழ' வெளியீடு புத்தகங்களைக் கொடுத்தார்.  நான் மகிழ்ச்சியுடன் அவற்றை விலைக் கொடுத்து வாங்கினேன்.  'ழ' புத்தகங்கள் எல்லாம் விலை குறைவாக இருந்ததோடல்லாமல் நல்ல தரத்துடன் தயாரிக்கப்பட்டிருந்தன.  உயர...

காதலுக்குப் பின் என் அடையாளம்

                                                    உன்னைச் சிந்தித்து ஒரு பறவையின் சிறகினில் அமர்ந்திருப்பேன் அது உன் ஊருக்குள் வந்திடுமென்றால் அங்கு நான் குதித்திடுவேன் ஊர் வாசி ஒருவனின் தலையில் காகம் பீச்சுவது எப்படி? அப்படி என் வருகை இராணுவ வீரனின் ஆடையில் அலையும் சிறுவர்களிடம்தான் உன் முகவரியை கேட்டு எழுதியெடுப்பேன் ஊருக்குள் பறந்து திரிந்ததில் பசியெடுத்துவிட்டது பறவைகள் உண்பதையெல்லாம் என்னால் உண்ண முடியாதுபோயிற்று அதோ மொட்டைத் தலை பொருத்திய ஒருவன் சூடான கஞ்சி விற்றுவருகிறான் கண்டு ஒரு கிளாஸ் அருந்திட பயமெனக்கு யாரோ! என்னையும் சுட்டுப் பொசுக்கிவிடுவாரோ என்ற பயமெனக்கு இதையெல்லாம் கதைக்க உன் அருகில் உரசி அமர்ந்திட முடியவில்லை பஸ்ஸில் பயணிப்பதுபோல் நடுவில் சிறுவனுமில்லை,சிறுமியுமில்லை,பிள்ளைக்காரியும...