அழகியசிங்கர் 62 சிறுகதைகள், 7 குறுநாவல்கள், ஒரு நாடகம் கொண்ட üஅழகியசிங்கர் கதைகள்ý என்ற மொத்தப் படைப்புகளுக்கான புத்தகம் கொண்டு வருகிறேன். புத்தகக் காட்சிக்குள் வந்துவிடும். 650 பக்கங்களுக்கு மேல் உள்ள இப்புத்தகம் கெட்டி அட்டைப்ப்போட்டு தயாரிக்கப்பட உள்ளது. இதன் விலையை ரூ.600 ஆக வைப்பதாக உள்ளேன். நான் இதுவரை 12 புத்தகங்கள் கொண்டு வந்துள்ளேன். இத் தொகுப்பு என் 13வது தொகுப்பு. என் முதல் கதையின் பெயர் üசெருப்பு.ý 1978ஆம் ஆண்டு எழுதியது. ஒரு சிறுபத்திரிகையில்தான் பிரசுரம் ஆனது. அந்தக் கதையைப் படித்துவிட்டு என் அலுவலகத்தில் உள்ள ஒரு பெண்மணி, 'உங்கள் செருப்பு நன்றாக இருக்கிறது,' என்றாள். உடனே நான் என் காலில் மாட்டியிருந்த செருப்பைப் பார்த்தேன். 'உங்கக் கால் செருப்பைச் சொல்லலை, சார்.. உங்கக் கதையைச் சொல்றேன்,' என்றாள். அவள் சொன்னதைக் கேட்டு என் கையைக் கிள்ளிப் பார்த்துக்கொண்டேன். அந்த நேரத்தில அந்தப் பெண்மணி சொன்னது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அதேபோல் முதன் முதலாக போராட்டம் என்ற என் குறுநாவல் ஒன்று கணையாழியில் அக்டோப