Skip to main content

மாம்பலம் டாக் பார்த்தீர்களா?


அழகியசிங்கர்



இன்று வந்துள்ள மாம்பலம் டாக் என்ற பத்திரிகையில்  போஸ்டல் காலனியில் துவங்கியுள்ள நூல் நிலையத்தைப் பற்றி எழுதியிருந்தது.  இன்னும் சில தகவல்களை சரியாகப் பத்திரிகையில் தரவில்லை.  
புத்தகம் படிக்க விரும்புவோர் பதிவு செய்துகொண்டு வரவேண்டும்.  ஒரு மணி நேரத்திற்கு மேல் ஒருவர் இருக்கக் கூடாது.  புத்தகம் படிக்க ஒரு மணி நேரத்திற்கு ரூ.10 செலுத்த வேண்டும்.  புத்தகம் படித்துவிட்டு அங்கயே வைத்துவிடவேண்டும்.  இரவல் கொடுக்கப்பட மாட்டாது.  யாராவது இலவசமாக தங்களுடைய புத்தகங்களை நூல்நிலையத்திற்குக் கொடுக்கலாம்.  
விருட்சம் புத்தகங்கள் விற்கப்படும்.  கூடவே மற்றப் பதிப்பாளர்களின் புத்தகங்களும் விற்கப்படும்.  ஆனால் முன்னதாகவே சொல்ல வேண்டும்.
10பேர்கள் கொண்ட கூட்டம் நடக்க அனுமதி உண்டு.  ஒரு மணி நேரக் கூட்டத்திற்கு ரூ.100 தரவேண்டும்.  
தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் : 9444113205 மற்றும் 9176613205.   

Comments