Skip to main content
தஞ்சை ப்ரகாஷ÷ம் தஞ்சாவூர் கவிராயர்ரும்


அழகியசிங்கர்



நாளை மாலை 6 மணிக்கு நடைபெறும் விருட்சம் இலக்கியச் சந்திப்புக் கூட்டத்தில் தஞ்சாவூர் கவிராயர் தஞ்சை ப்ரகாஷ் குறித்துப் பேசப் போகிறார்.
எல்லாவிதங்களிலும் தஞ்சாவூர் கவிராயர் பேசுவது சிறப்பாக இருக்கும்.  ஏனென்றால் ப்ராகஷை பக்கத்ரில் இருந்து பார்த்துப் பழகியவர்.  
நான் ப்ராகாஷை இரண்டு மூன்று முறைகள் சந்தித்திருக்கிறேன்.  அவர் உடல்நிலை சரியில்லாதபோது டாக்டர் ரெட்டியிடம்தான் சிகிச்சை எடுத்துக்கொண்டார்.  டாக்டர் ரெட்டி ஒரு இயற்கை மருத்துவர்.  அவரிடம் போய் சிகிச்சைப் பெறுகிறாரே என்ற எண்ணம் அப்போது எனக்கிருந்தது.
கடைசிவரை இலகத்தியத்தைப் பற்றி சிந்தித்திருப்பவர் ப்ராகாஷ்.  சும்மா இலக்கியக் கும்பல் என்ற பெயரில் தஞ்சாவூரில் கூட்டம் நடத்தினார்.  இக் கூட்டதில் கலந்துகொண்டவர்கள் கதைகளைப் படிப்பார்கள்.  பேசுவார்கள்.  எனக்குத் தெரிந்து அவர் ஒரு பத்திரிகை நடத்தினார்.  அந்தப் பத்திரிகையின் பெயர் வெ சா எ.  வெங்கட்சாமிநாதன் ஒருவரே அந்தப் பத்திரிகையில் எழுதியிருக்கிறார்.  இப்படி ஒரு பத்திரிகை நடத்தத் துணிச்சல் வேண்டும்.  ப்ரகாஷ÷டம் இந்தத் துணிச்சல் இருந்தது.  
தஞ்சாவூர் கவிராயரைப் பற்றி சிலவற்றை சொல்லவேண்டும்.  எனக்கு அவரை அதிகமாக ஐராவதம் என்ற எழுத்தாளர் மூலம்தான் தெரியும்.  அவர் ஐராவதத்தைப் பார்க்க வரும்போதெல்லாம் அவர் வந்துபோனதுபற்றி செய்தி எனக்குக் கிடைத்துவிடும்.  இன்று அவருடைய சிறுகதைத் தொகுப்பும், கட்டுரைத் தொகுப்புகளும் புத்தகங்களாக  வந்துவிட்டன. தமிழ் இந்துவில் வாரம் ஒரு முறை எழுதும் கட்டுரைகள் முக்கியத்துவம் வாய்ந்தவை.  எழுத்திலும் பேச்சிலும் நகைச்சுவை உணர்வு மிக்கவர்.  

நீங்கள் தவறாமல் இக் கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.


Comments