Skip to main content

104வது இதழ் நவீன விருட்சம் வெளிவந்துவிட்டது


அழகியசிங்கர்




செப்டம்பர் மாதம் நவீன விருட்சம் 103வது இதழ் வெளிவந்தது. 3 மாதங்களுக்குள் விருட்சம் இதழை எப்படியாவது கொண்டுவர நினைத்துக் கொண்டிருந்தேன்.  இதோ 104வது இதழ் டிசம்பர் மாதம் கொண்டுவந்துவிட்டேன்.  
கீழே குறிபபிடப்படுகிற படைப்பாளிகள் நவீன விருட்சத்தை அலங்கரித்துள்ளார்கள்.

அசோகமித்திரன் - புதிய மரபினைத் தோற்றுவித்த
எழுத்தாளர் - கட்டுரை -அம்ஷன்குமார் மரங்களும் மனிதர்களும் - சிறுகதை - வையவன்       
வான உள்ளம் - கவிதை -   பிரபு மயிலாடுதுறை      
தாமரை பாரதி கவிதைகள்       
ஒற்றை வார்த்தை - கவிதை - அதங்கோடு அனிஷ்குமார்
எம்.ஜி சுரேஷ் சில நினைவுகள் - அழகியசிங்கர்  
நடந்தது என்ன? - சிறுகதை - ஜி பு சதூர்புஜன்
லாரா - சிறுகதை - ஜெயராமன் ரகுநாதன்
வானிலை அறிக்கை - கவிதை - சிபிச்செல்வன்
சுந்திரமித்திரன் கவிதை
நெட்டிப் பந்து - கவிதை - லாவண்யா சுந்தர்ராஜன்
புதிர் - கவிதை - ஜான்னவி      
எழுத்துச் சுவர் - சிறுகதை - பிரபு மயிலாடுதுறை
மாற்றம் - சிறுகதை - அழகியசிங்கர்                  
ராஜாஜியின் ஜெயில் டைரி
சொல் - சிறுகதை - பானுமதி ந
புத்தக விமர்சனம் - அழகியசிங்கர்
வீடு - கவிதை - அழகியசிங்கர்
இலக்கணம் மாறாமல் - சிறுகதை - ஸிந்துஜா லத்தீன் அமெரிக்க சிறுகதை - தமி : ராஜேஷ் சுப்பிரமணியன் உரையாடல் - அழகியசிங்கர்

104வது இதழில் வெளிவந்த என் கவிதையை இங்கு அளிக்கிறேன்.

அழகியசிங்கர் 

வீடு
ஒரு நாள்
ஒரு முறை
வீட்டைப் பூட்டிவிட்டுச் சென்றேன்
தெருவில்
பைக்கில் போகும்போது
ஏனோ தோன்றியது

வீட்டைப் பூட்டிவிட்டுத்தான் 
செல்கிறேனா என்று

திரும்பவும் 
ஏன் வீட்டைப் பூட்டவில்லை
என்ற கேள்வியைக் கேட்டுக்கொண்டேன்
பைக்கை வேகமாய் அழுத்தினேன்

நான் சென்றடையும் இடத்திற்குப் போனவுடன்
அந்த வீடு திறந்துதான் இருந்தது
வா என்று அந்தப் பெண்மணி 
வரவேற்றாள்

அவள் உள்ளே சென்று
காப்பி எடுத்துக்கொண்டு வருவதற்குள்
நான் வெளியே சென்று
பைக்கில் என் வீட்டிற்கு
ஓடினேன்
வீடு பூட்டியிருக்கிறதா 
இல்லையா..



Comments