Skip to main content

மரபு கவிதைகளை ஒழித்தவர் பாரதியார்


அழகியசிங்கர்





பாரதியின் பிறந்த தினம் இன்று.  எல்லாவிதங்களிலும் இன்று எழுதிக்கொண்டிருக்கிற கவிஞர்கள் பாரதியாருக்குக் கடமைப் பட்டவர்கள். மரபு கவிதைகளை எழுதிக் குவித்த பாரதியார் ஒரு மாற்றாக வசன கவிதைகளை எழுதினார்.  அதவாது சுதந்திரமான கவிதைகள்.  அக் கவிதைகள்தான் பெரிய மாற்றத்தை தமிழில் இன்று ஏற்படுத்தி உள்ளது.
பாரதியாரின் வசன கவிதைகளைத் தொடர்ந்து ந பிச்சமூர்த்தி கொஞ்சம் மரபு கொஞ்சம் புதுவிதமான கவிதை என்று எழுதினார்.  க நா சு முழுவதும் மரபைத் தவிர்த்துவிட்டார். கவிதையில் புதிய உத்தியை கநாசுவும் நகுலனும் ஆரம்பதில் ஏற்படுத்தியவர்கள்.  இன்றும் சிலர் மரபு கவிதைகளை எழுதுவது வேடிக்கையாக இருக்கிறது.  ஏன்னெனில் புதுவிதமான கவிதைகள் எழுதுவதில் உள்ள சுதந்திரம் மரபு கவிதைகளில் இல்லை. இன்று அதன் எல்லை தாண்டி எங்கோ போய்க்கொண்டிருக்றது.

என்னிடம் 400க்கும் மேற்பட்ட கவிதைத் தொகுதிகள் உள்ளன.  எல்லாக் கவிதைப் புத்தகங்களும் மரபு கவிதையை உதறிவிட்டு எழுதப்பட்ட புதுவிதமான கவிதைகள்.

பாரதியாருக்குப் பின் பாரதிதாசன், சுரதா, நாமக்கல் கவிஞர் என்று பலர் மரபு கவிதைகள் எழுதி இருக்கிறார்கள்.  ஏன் இன்னும் கூட மரபு கவிதைகள் எழுதும் கூட்டம் இல்லாமல் இல்லை.  மரபு கவிதையில் வார்த்தையின் ஒழுங்கை ஏற்படுத்த முன்பு கற்பனையை கருத்தை விட்டுவிடுவோம். சொன்னதையே சொல்லும்படி இருக்கும்.  இதையெல்லாம் கருதிதான் பாரதியார் மரபு கவிதையிலிருந்து கவிதையை வசன கவிதைக்கு மாற்றிக்கொண்டு போயிருக்கிறார்.

பாரதிக்குப் பின் விருத்தத்தில் எழுதிய கண்ணதாசன் கவிதைகள் மீது எனக்கு ஒருவித லயிப்பு உண்டு.  ஆனால் அவரும் கூட தேரோட்டம் என்று எழுதினால் காரோட்டம் என்று எதுகைக்கு தடுமாறியதாகத் தோன்றுகிறது. ஆரம்பத்தில் நானும் வெண்பாக்கள் சிலவற்றை எழுதிப் பார்த்திருக்கிறேன். ஆனால் அதைத் தொடர முடியாது என்று தோன்றிவிட்டது.  ஏன்எனில் மரபு கவிதைகளில் சுதந்திரம் இல்லை.  நம் எண்ணங்களை எல்லோருக்கும் ùதியப்படுத்த மரபு ஒரு கடிவாளமாக நம்மைச் சிறைப்பிடித்து விடுகிறது. ஆனால் இன்னும் பலர் மரபு கவிதைகளை எழுதிக்கொண்டு வருகிறார்கள். புத்தகமாகப் போடுகிறார்கள்.  அதை ரசிக்கவும் செய்கிறார்கள். ஆனால் அங்கு போய் அதில் கலந்துகொள்ள என்னால் முடியவில்லை.  ஒரு பத்திரிகை வெண்பா போட்டி வைத்து அதை ஒவ்வொருமாதமும் பிரசுரம் செய்கிறது.  
பாரதியாரின் பிறந்த நாள்  ஆன இன்று அவர் வசன கவிதை ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறேன். 


சிற்றெறும்பைப் பார். 
எத்தனை சிறியது!
அதற்குள்ளே கை, கால், வாய், வயிறு எல்லா
அவய ங்களும் கணக்காக வைத்திருக்கிறது
யார் வைத்தனர்? மஹா சக்தி.
அந்த உறுப்புகளெல்லாம் நேராகவே தொழில் செய்கின்றன.
எறும்பு உண்ணுகின்றது, உறங்குகின்றது. மணம் செய்து
கொள்கின்றது. குழந்தை பெறுகிறது, ஓடுகிறது,
தேடுகிறது, போர் செய்கிறது, நாடு காக்கிறது.
இதற்கெல்லாம் காற்றுத்தான் ஆதாரம்.
மஹாசக்தி காற்றைக்கொண்டுதான் உயிர்
விளையாட்டுவிளையாடுகின்றாள்.
காற்றைப் பாடுகிறோம்
அஃது அறிவிலே துணிவாக நிற்பது;
உள்ளத்திலே விருப்பு வெறுப்புக்களாவது.
உயிரிலே உயிர் தானாக நிற்பது.
வெளியுலகத்திலே அதன் செய்கையை நாம் அறிவோம்.
நாம் அழிவதில்லை.
காற்றுத் தேவன் வாழ்க.

Comments