Skip to main content

Posts

Showing posts from June, 2014

பா எழுத...

முபீன் சாதிகா சிரத்தில் புகும் கால் கண்ணில் ஆழ ஏறி மறுபுறம் வந்த தாள் முடங்கும் சினை முயன்று அட்சரம் வரியாய் பதித்து நுடங்க மேலாய் மூக்கின் நுனியில் எழுத்தின் முகமதை வடிக்க இங்கு இவண் நுதல் பெயர்ந்து பறக்கும் காற்றில் கரைய கூந்தல் தாழ்ந்து இலக்கமிட என்பும் துருத்தி முதுகின் கூன் போல் மடிந்து வலியன்ன காணும் வளைவில் கதறியும் புறப்பட்டே கோவென் ஒலி  
கருணை கொள்ளுங்கள்; காரணமும் விளைவும் - சார்லஸ் புக்கோவ்ஸ்கி -ராமலக்ஷ்மி கருணை கொள்ளுங்கள் எப்போதும் மற்றவரின் கருத்துகளைப்  புரிந்து கொள்ளவே கேட்டுக் கொள்ளப்படுகிறோம்  அவை என்னதான் காலத்துக்குப் பொருந்தாமல் முட்டாள்தனமானதாய் வெறுப்பூட்டக் கூடியதாய் இருந்தாலும். தங்கள் மொத்தத் தவறுகளையும் பாழடிக்கப்பட்ட வாழ்க்கையையும் கருணையோடு நோக்குமாறு கேட்டுக் கொள்கிறார்கள், குறிப்பாக வயதாகி விட்டவர்கள். ஆனால் மூப்பென்பது நமது செயல்களின் மொத்தம். அவை மிக மோசமாக   மூப்படைந்திருக்கின்றன மங்கலாகவே வாழ்ந்து சரியாகப் பார்க்க மறுத்து. அவர்களுடைய தவறு இல்லையா? யாருடைய தவறு? என்னுடையதா? அவர்களுக்குப் பயம் வந்து விடும் என்கிற பயத்தினால் என்னுடைய கருத்துகளை அவர்களிடமிருந்து ஒளித்து வைக்க கேட்டுக் கொள்ளப்பட்டேன் மூப்பு ஒரு குற்றமில்லை ஆனால் வேண்டுமென்றே பாழடிக்கப்பட்ட வாழ்க்கை வேண்டுமென்றே பாழடிக்கப்பட்ட பல வாழ்வுகளுக்கு காரணமாய் இருப்பது வெட்கத்துக்குரிய குற்றம். * காரணமும் விளைவும் ஆகச் சிறந்தவர்க

ஓர் நடைபயணத்தில்

லக்ஷ்மி சிவகுமார் நடந்தாலென்ன   ? என்று நட்புமுகம் பார்த்து வினவிய மறுகணம் முகம் முழுக்க பச்சை சாயம் பூசிக்காட்டினான் . எப்போதும் நாணம் கொண்டே வளைந்து நெளிந்தோடிக்கிடந்த சாலைப் பயணம் . வலப்புறம் உள்ளடங்கி ஓங்கி வளர்ந்து நின்ற பள்ளியில் படித்த பருவங்களை ஏக்கத்துடன் அசைபோட்டு முடிக்கையில் போதுமான இடைவெளியற்றிருந்த அரசு மதுக்கடையில் ஆடை கலைந்தவர்கள் கூட்டம் அநாகரீக வார்த்தைகளை அள்ளி வீசிக்கொண்டிருந்தது . வெட்கப்பட்ட காதுகளை மூடிக்கொள்ள   உத்தரவிடாத மூளை முந்திச்செல்ல கால்களை பணித்தது   . அலைந்து திரிந்த கண்களுக்கு அடுத்ததாய் அகப்பட்டது அய்யாவு " டீ " கடையில் வெட்டவெளியில் பிரமீடுகளாய் தூசுதின்ற பலகாரம் . விபரீதம்   புரியாமல்   பசிப்பிணி   ப ோக்கமட்டும் எடுத்துக்கொண்டிருந்தனர் துப்புரவு பணியாள தோழர்கூட்டம் . சற்றே நாணி த்திரும்பிய   சாலை முக்கில் கணபதி மரப்பட்டறையில் கோங்கு மரம் கூர்போட்டுக்கொண்டிருந்தான் நாசிக்கவசம் அணியாத சுந்தரம் . கவலை க

கைகளில் பிசுபிசுக்கும் இனிப்பின் நிறம்

  தேனு இனிப்பு வாங்கி உள்நுழையும் எதிர்பார்ப்பை உடைக்க ஓரிரு சொற்களையோ கற்களையோ என்னுள் எப்பொழுதுமே தேக்கி வைத்திருக்கிறாய்.. போதும் என்ற சொல் பந்து மீண்டும் மீண்டும் சுவர்களில் விழுந்து தெறிக்கிறது, படியும் காவி நிற வட்டங்கள் அச்சொல்லின் கூட்டு எண்ணிக்கையென பறைசாற்றிக் கொள்ள.. ஒவ்வொரு சொல்லாய் ஒவ்வொரு சொல்லடுக்காய் மென்மேலும் பரவி மெல்லியதொரு அறையென உருவாகும் சொல்வன்மம் உச்சத்தை உணர மட்டும் இல்லை.. ஒரு வனத்தின் அடர்த்தியைக் கொண்ட சொல்லறையின் கதவுகள் யாருக்கெனவும் திறவாது என்றபடி சொற்களைத் தின்ன துவங்குகிறது அகலவாய் கொண்ட இனிப்பு.. கதவிடுக்கு திறவும் தருணத்தில், தேக்கி வைத்த சொற்களையும் உண்டபடி கை நிறைய படிந்திருக்கிறது இனிப்பின் பிசுபிசுப்பு நிறம் மட்டும்..

எதையாவது சொல்லட்டுமா.....94

அழகியசிங்கர்     கோவிந்தன் ரோடில் நானும் மனைவியும் வண்டியில் வந்து கொண்டிருந்தோம்.  ஒரு கடையின் முன் கூட்டம் முண்டி அடித்துக்கொண்டு நின்று கொண்டிருந்தது.  அந்தக் கூட்டத்தைப் பார்க்கும்போது அருவெறுப்பாக இருந்தது. அது ஒரு டாஸ்மாக் கடை எல்லோரும் குடிக்க காத்துக்கொண்டிருந்தார்கள்.  இந்தப் பழக்கத்தை எல்லோராலும் ஏன் விடமுடியவில்லை.  ஒரு விருந்து என்றால் ஒரு கூட்டம் என்றால் நான்கைந்து பேர்கள் சேர்கிறார்கள் என்றால் புகையும் மதுவும் இல்லாமல் ஒன்றும் நடப்பதில்லை.     நான் கல்லூரி படித்தக் காலத்தில் ஒரு முறை ஐஐடியில் படிக்கும் சில மாணவர்களைச் சந்திக்கச் சென்றேன்.  எல்லோரும் பாட்டில்களோடு இருந்தார்கள்.  எல்லோரும் புகைத்தார்கள், குடித்தார்கள்.  நானும் குடித்தேன்.  எனக்கு அது முதல் அனுபவம்.  எல்லோரும் ஏன் இப்படி குடிக்கிறார்கள் என்றுதான் குடித்தேன். நான் வீடு திரும்பும்போது இரவு பதினொரு மணி மேல் ஆகிவிட்டது.  வீட்டு மொட்டை மாடியில் உள்ள அறையில் படுத்துக்கொண்டிருந்தேன்.  கொஞ்ச நேரத்தில் வயிற்றைப் புரட்டியது.  நான் குடித்ததை எல்லாம் வாந்தி எடுத்தேன்.  அன்றிலிருந்து நான் குடிப்பதையே நிறுத்தி விட்ட
                                                     விருட்சம் இலக்கியச் சந்திப்பு      நடைபெறும் நாள்               ::          14.06.2014 (சனிக்கிழமை)     நேரம்                                         ::        மாலை 5.30 மணிக்கு                         இடம்                                          ::         ஸ்ரீ அலர்மேலுமங்கா கல்யாண மண்டபம்                                                                     நடேசன் பூங்கா அருகில்                                                                     19 ராதாகிருஷ்ணன் சாலை,                                                                    தி. நகர், சென்னை 600 017        பொருள்           ::                               "நானும் என் கவிதைகளும்"     உரை நிகழ்த்துபவர்  :                   பயணி