சுக்வீர் கவிதைகள் (மூலம் : பஞ்சாபி - ஆங்கிலம் வழி தமிழில் : மேலூர்) 1. நடத்தல் நான் நடக்கிறேன் என் கால்களால் அல்ல கண்களால் - சாலைகளையும் தெருக்களையும் இதயத் தொகுதிகளையும் இரவின் இருளையும் கடந்து செல்கிறேன் சுற்றிலும் மக்களின் காடு. என் கண்களின் துணையோடு அதைக் கடந்து செல்கிறேன் கண்களுக்கே அதனூடு செல்லும் திறன் உண்டு. என் கால்கள் களைத்துவிட்டன மிகவும் களைத்துவிட்டன. ஆனால் நான் நடந்துகொண்டேயிருக்கிறேன் மக்கள் கூட்டங்களில் சிக்குண்டு நான் முன்னேறிப் போகிறேன். என்றாலும் இதயங்களின் வலி என்னும் எல்லையைக் கடக்க என்னால் இயலவில்லை. நான் நடக்கிறேன் என் கால்களால் அல்ல கண்களால் - ஒரு நீண்ட பயணம் ( நவீன விருட்சம் ஜøலை - செப்டம்பர் 1989)