மனதுக்குப் பிடித்த கவிதைகள் - 81
அழகியசிங்கர்
400 கவிதைகளைத் தொகுக்கிறேன்...
இன்னும் சில தினங்களில் மனதுக்குப் பிடித்த கவிதைகளின் தொகுதி 1 பிரசுரமாகிவிடும். 100 கவிதைகள் அடங்கிய தொகுப்பாக அது இருக்கும். இதுமாதிரி 100 கவிதைகள் விகிதம் 400 கவிதைகளைத் தேர்ந்தெடுக்க உள்ளேன். ஏற்கனவே வெளிவந்த கவிஞர்களின் கவிதைகள் மற்றத் தொகுதிகளில் இடம் பெறாது. எல்லாக் கவிதைகளும் கவிதைப் புத்தகங்களில் வெளியாகி இருக்க வேண்டும். இதுமாதிரி 300 க்கும் மேற்பட்ட கவிதைத் தொகுதிகளை வைத்திருக்கிறேன். அதிலிருந்து இன்னும் 300 கவிதைகள் எடுக்க உள்ளேன்.
படிக்கட்டுகளில் அமர்ந்திருப்பவன்
அனார்
கோடை அந்தி நிழல் சாயும்
சதுக்கமொன்றின் படிக்கட்டுகளில் அமர்ந்திருந்தான்
தொலைவுப் பாலத்தின் மேலே
சூரியனையும்
படிக்கட்டுகளில் கீழே
செவ்விரத்தம் பூக்களையும் பார்த்துக் கொண்டிருந்தான்
'முழுச் சிவப்பேறிய சூரியன் பாலத்தின் மத்திக்கு வந்ததும்
கொலை முயற்சி நடந்து கொண்டிருக்கையில்
எதையும் ரசிக்க முடியாதென'
அன்று எழுந்து சென்றுவிட்டான்
படித்துறையில் அமர்ந்தவாறு
தூண்டிலில் மீன்பிடித்துக் கொண்டிருக்கையில்
சேர்ந்து குளிக்கையிலும்
üசடுதியாக வெடித்து
வித்துக்களை உதிர்க்கின்ற பருத்திகள்ý என உலைந்து
நிலை குலையுமொரு துயரப் பாடலையே
விடாமல் பாடிக்கொண்டிருந்தான்
நேர்ந்த விபத்தொன்றின் பிறகு
கடைசியாகப் பார்த்தபொழுது
மணல் குன்றுகளும் தாழை மரங்களும் தாண்டி
பாழைடைந்த பேய் வீட்டின்
உடைந்த குட்டிச் சுவரருகே
காளான்களும் புற்களும்மண்டிய எட்டாவது படிக்கட்டில்
அவன் அமர்ந்திருந்தான்
நன்றி : பெருங்கடல் போடுகிறேன் - கவிதைகள் - அனார் - பக்கங்கள் : 64 - விலை : ரூ.60 - காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ் (பி) லிட், 669 கே பி சாû, நாகர்கோவில் 629001 தொலைப்பேசி : 91-4652-278525
Comments