Skip to main content

அப்பாவைத் தேடி

அப்பாவைத் தேடி


அழகியசிங்கர்





1970லிருந்து நான் மேற்கு மாம்பல வாசி.  நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும்போதுதான் அவரைச் சந்தித்தேன்.  அவர் பத்திரிகைகளில் கதை எழுதிக்கொண்டிருப்பார்.  பெரும்பாலும் கல்கி, அமுதசுரபி, கலைமகள்.  கதைப் போட்டிகளில் அவர் கதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பிரசுரமாகி இருக்கின்றன.  

ஒரு கதை பத்திரிகையில் வர என்ன செய்ய வேண்டுமென்பதற்காகத்தான் அவரைப் பார்க்கப் போயிருந்தேன்.  அவர் ஒரு டைப்ரைட்டர் முன் அமர்ந்துகொண்டு தட்டச்சு செய்து கொண்டிருப்பார்.  ஒரு கதையை எழுதிவிட்டு பலமுறை படித்துத் திருத்திக்கொண்டிருப்பார்.  அது செய்வது அவசியம் என்று சொல்வார்.  1953 ஆம் ஆண்டிலிருந்து எழுதியிருக்கிறார்.  அவருடைய கதைத் தொகுதியான அப்பாவைத் தேடி புத்தகத்தை விருட்சம் வெளியீடாகக் கொண்டு வந்திருக்கிறேன்.  25 கதைகள்.  278 பக்கங்கள்.  விலை ரூ.250.
இத் தொகுப்பு நூலை வ சா நாகராஜன் வீட்டிற்குச் சென்று முதல் பிரதியை அவருடைய மனைவியிடம் கொடுத்தேன்.

Comments