அழகியசிங்கர்
ஆனந்த் என் நெடுநாளைய நண்பர். நான் அலுவலகத்தில் அவரைப் பார்க்கப் போவேன். 'ஆனந்த், ஒரு கவிதை எழுதிக் கொடுங்கள்,' என்று கேட்பேன். உடனே ஒரு கவிதை எழுதித் தருவார். அந்தக் கவிதை நன்றாகவும் இருக்கும். பிரசுரிக்கும்படியாக சிறப்பாகவும் இருக்கும். ஆனந்த் தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ள மாட்டார். ஆனால் எல்லா விஷயங்களிலும் சுறுசுறுப்பானவர். அவருடைய நீண்ட கதைதான் 'இரண்டு சிகரங்களின் கீழ்' என்ற நீண்ட கதை. அதை கையெழுத்துப் பிரதியாகவே எல்லோரிடமும் படிக்கக் கொடுத்திருக்கிறார். அதை ஒரு பத்திரிகைக்கு அனுப்ப வேண்டும். பிரசுரிக்க வேண்டும் என்ற முயற்சி எடுத்துக்கொள்ள மாட்டார். ஒவ்வொருவரும் அந்த நீண்ட கதையைப் படிக்க வேண்டும். வாழ்க்கையைப் பற்றி தெரிந்துகொள்ளும் கதைதான் அந்தக் கதை. விருட்சம் வெளியீடாக அவருடைய கதைகளை முழுவதும் தொகுத்துள்ளேன். முதலில் வேர் நுனிகள் என்ற பெயரில் இத் தொகுப்பை கொண்டு வந்திருக்கிறேன் இப்போது பெயரை மாற்றி üபவளமல்லிகைý என்ற பெயரில் கொண்டு வந்துள்ளேன்.
110 பக்கங்கள் கொண்ட இப் புத்தகத்தின் விலை ரூ.100தான். சிறுகதைகளும், குறுநாவல்களும் கொண்ட 6 கதைகள் அடங்கிய நூல் இது.
Comments