Skip to main content

Posts

Showing posts from April, 2016

ஒரு கதை ஒரு கவிதை வாசிப்புக் கூட்டம் 4

அழகியசிங்கர் சென்னையில் சனி ஞாயிறுகளில் இனி கூட்டம் நடத்துவது சிரமமாக இருக்கும் போல் தோன்றுகிறது.  கூட்டம் ஏற்பாடு செய்தாலும் யாரும் வர மாட்டார்கள் என்று தோன்றுகிறது.  நாம் அரசியல் கட்சி நடத்தினால் பணம் கொடுத்து கூட்டத்திற்கு வரச் சொல்லிவிடாலாம்.  நாம் சாதாரணத்திலும் சாதராணம். எனக்கு வழக்கம்போல் கூட்டத்திற்கு வந்திருந்து சிறப்பு செய்யும் ஆடிட்டர் கோவிந்தராஜன் திருவனந்தபுரம் போய்விட்டார்.  அதனால் அவர் வர முடியாது.  எப்போதும் குவிகம் என்ற இலக்கிய அமைப்பு உள்ளது.  கடந்த ஓராண்டாக இலக்கியக் கூட்டங்கள் நடத்தி வருகிறது.  விருட்சம் கூட்டம் பார்த்து ஆரம்பித்தார்கள்.  நம்மைப் போல் ஏதோ ஆர்வக் கோளாறு என்று நினைத்தேன்.  ஆனால் அப்படி இல்லை.  ஓராண்டாக 12 கூட்டங்கள் நடத்தி அசத்தி விட்டார்கள்.  12வது கூட்டத்தில் ஒரு நாடகத்தையே அரங்கேற்றி விட்டார்கள்.   நமக்கு உறுதுணையாக அவர்கள் எப்போதும் இருப்பார்கள்.  ஆனால் நாளைக்கு அவர்கள் வேறு ஒரு இலககியக் கூட்டத்திற்குப் போய்த்தான் தீர்வார்கள். விஜய் மகேந்திரன், வேடியப்பன், வினாயக முருகன் போன்ற நண்பர்கள் நாளைக்கு நடக்கவிருக்கும் இலக்கிய

நீங்களும் படிக்கலாம்....21

அபத்த உலகத்தைப் படம் பிடித்துக் காட்டுகிறாரா? அழகியசிங்கர் சமீபத்தில் நான் இரண்டு சிறுகதைத் தொகுதிகளைப் படித்துக் கொண்டிருக்கிறேன்.  ஒன்று இத்தாலிய எழுத்தாளர் மொரவியா எழுதிய மதர் லவ் என்ற புத்தகம்.  இன்னொன்று தமிழவனின் நடனக்காரியான 34 வயது எழுத்தாளர்.  பெண்களின் உணர்வுகளைச் சித்திரிக்கும் ஆல்பெர்ட் மொரவியா ஒரு ஆண் எழுத்தாளர்.  அவருடைய புத்தகத்தில் காணப்படும் பெண்கள் பலவித இன்னல்களுக்கு ஆளாகிறார்கள்.  அவற்றை துல்லியமாக வடித்துக் கொடுத்திருக்கிறார் மொரவியா.  இன்னும் இந்தப் புத்தகத்தை நான் முடிக்கவில்லை. படிக்க படிக்க இன்னும் இன்னும் படிக்க வேண்டுமென்று தோன்றுகிறது.  சமீபத்தில் வந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட புத்தகங்களில் இதுவும் ஒன்று.  இப் புத்தகத்தை மாடியில் உள்ள வெயிலில் உலர்த்தி படிக்க ஆரம்பித்தேன்.  படிக்க படிக்க இந்தப் புத்தகத்தை கண்டு கொள்ளாமல் இத்தனை நாட்கள் ஏன் விட்டோம் என்று தோன்றியது.  இப்படி கண்டுகொள்ளமல் விடுப்பட்ட நூல்கள் அதிகமாகவே என்னிடம் இருப்பதாக தோன்றுகிறது. ஏற்கனவே நான் தமிழவனின் நாவல்கள், கட்டுரைகள், சிறுகதைகளைப் படித்திருக்கிறேன்.  அவர் க

ஏழு வரிகளில் கதை கதையாம்...காரணமாம்.

அழகியசிங்கர் இன்னும் கொஞ்ச நாட்களில் முகநூலில் ஏழு வரிகளில் கதைகளை அள்ளி நிரப்பி விடுவார்கள் எல்லோரும்.  கதை என்பது வேறு; கவிதை என்பது வேறு.  மிகக் குறைவான வரிகளில் ஒரு கதையைப் படிப்பதுபோல் ஒரு திரில் வேற எதிலும் கிடைக்கப் போவதில்லை. இதில் கொஞ்சம் யோசித்தால் போதும் ஒரு கதை எழுத வந்துவிடும்.  தொடர்ந்து எழுதுங்கள். முகநூலிலும், பிளாகிலும் பதிவு செய்கிறேன். புத்தகமாகப் போடுவதற்கும் முயற்சி செய்கிறேன். படிக்கட்டில் ஏறிவந்த கர்ப்பணி பெண்ணிடம் கேட்டேன்.  'ஏழு வரிகளில் ஒரு கதை சொல்லேன்,' என்று.  'எனக்குக் கதையே சொல்ல வராது,' என்றாள்.  ஆனால் வயிற்றில் உள்ள குழந்தை, 'நான் பிறந்த பிறகு கதை சொல்கிறேன்,' என்றது. 1.  என் செல்வராஜ் , சிதம்பரம் பிரிந்து செல்லும் உயிர்           மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்பார்கள். அவனுக்கு மனைவி வரமாக வந்தவள் இல்லை.  அவனோடு வாழாமல் போனவள். இருந்தாலும் மனம் நினைக்கும் போது  கைப்பேசியில் அவளோடு பேசுவான். பல தடவை அது  சண்டையில் முடிவதுண்டு. சமாதானம் செய்ய கடவுளா வரமுடியும்? ஒரு நாள் அவள் சொன

ஏழு வரி கதைகளின் தொகுதி

அழகியசிங்கர்  ஏழு வரிகளில் கதை என்றால் ஏழு வரிகளில்தான் முடிய வேண்டுமென்பதில்லை, எட்டு வரிகள், ஒன்பது வரிகள், பத்து வரிகள் என்றெல்லாம் கூட எழுதலாம்.  தயவுசெய்து எழுதுபவர்கள் என் இ மெயிலில் அனுப்பவும்.  நான் பார்த்து விட்டு அடுத்த நாளே பதிவு செய்கிறேன்.  ஒருவரே எத்தனை கதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். என் நோக்கம் 100 பக்கங்களில் இது மாதிரியான கதைகளை அச்சடித்துக் கொண்டு வரலாமா என்பதுதான்.  அதனால் தயவுசெய்து  navina.virutcham@gmail.com இ மெயிலில் அனுப்புங்கள். 1.  வைதீஸ்வரன்      இட ஒதுக்கீடு                        பிளாட்பாரத்தில்  முக்கால்  மணி நேரமாக  உட்கார்ந்திருந்தோம்.  இரவு பத்து மணிக்கு புறப்படுகிற  ரயில்  அங்சு நிமிஷம் கழித்துத் தான் பிளாட்பாரத்துக்கு வந்து நின்றது.  வெளியே ஒட்டியிருந்த  பெயர் பக்கத்தை சரி பார்த்து கைப்பெட்டியுடன்  உள்ளே தள்ளாடி  முட்டி மோதி நகர்ந்து  என் ஸீட்டை ஒரு வழியாய்க் கண்டு பிடித்து விட்டேன்.  அதில்  ஏற்கனவே ஒரு  மாது  தடிக் கண்ணாடி போட்டுக் கொண்டு  உட்கார்ந்திருந்தாள்... சற்று வயதானவர்.    “அம்மா....இது  என் ஸீட்டு    A 

ஏழு வரிகளில் ஒரு கதை...

அழகியசிங்கர் ஏழு வரிகளில் கதை எழுத முடியுமா என்ற கேள்வி கேட்டு ஒன்றை நானும் எழுதி முகநூலில் வெளியிட்டேன்.  நான் மதிக்கும் எழுத்தாளர் அசோகமித்திரன்  கதைகளை எழுதி அனுப்பி உள்ளார். நீங்களும் முடிந்தால் எவ்வளவு கதைகள் வேண்டுமானாலும் அனுபபலாம்.  navina.virutcham@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.  எல்லாவற்றையும் ஒரு புத்தகமாக பதிவு செய்ய உத்தேசம். இதோ அசோகமித்திரனின் கதைகள். 1. ஒரூ காகம் வழக்கம் போல, டெய்லி தவறாமல் வந்து  உட்டான்ஸ் எல்லாம் உடர சீனு அன்னிக்கும் நல்ல பார்ம்ல.. சுனாமி வரும்னு மிருகங்கள் பறவைகள் இதுக்கெல்லாம் முன்னமே தெரிஞ்சிடுமாம். யார் கிட்ட கதை உடராங்க.. எனக்கு சுத்தமா இந்தமாதிரி மூட நம்பிக்கைஎல்லாம் கிடையாது. அப்போது ஒரு காக்காய் அவர் தலை மீது இடித்தும் இல்லாமலும் சென்றது. பக்கத்தில் ஜாக்கிங்கில் இருந்த ஒரு மாமி சொன்னாள்- காக்காய் தலைல தொட்டுதுன்னா சனீஸ்வரன் இல்லன்னா பிரம்மஹத்தி பிடிக்குமாம், ஜாக்கிரதை . அடுத்த நாள் சீனுவைக் காணும் - சனிக் கிழைமை.. எங்கு சென்றாரோ  2. ட்ரா ஜி்க் கதை நடேசன் பூங்கா கதை கேட்போர் எல்லோரும் சென்று அரைமணிக்கும் மே

ஒரு கதை ஒரு கவிதை கூட்டம் இன்று இல்லை

அழகியசிங்கர் இந்த வாரம் நடை பெற வேண்டிய ஒரு கதை ஒரு கவிதை கூட்டம் தவிர்க்க முடியாத காரணத்தால் அடுத்த வாரத்திற்கு தள்ளி வைத்துள்ளேன். 7 வரிகளில் யாராவது கதை எழுதி அனுப்ப முடியுமா? கதை : நடேசன் பூங்காவில் கண்ணயர்ந்துவிட்டேன். பின் பல குரல்களின் சத்தம் கேட்டு எழுந்து சுற்றும் முற்றும் பார்த்தேன்.மேடையில் ஒருவர் உரத்தக் குரலில் சத்தம் செய்தபடி இருந்தார். கதை படிக்கிறாராம். சிலர் நடந்து கொண்டிருந்தார்கள். நானும் கதை சொல்லும கூட்டத்தில் கலந்து கொண்டேன் 'கதை என் முன் நடந்து கொண்டிருக்கிறது,' என்றேன்.

இன்று உலகப் புத்தக தினம்

அழகியசிங்கர்  இன்று புத்தக தினம்.  புத்தகம் படிக்க வேண்டும் என்று அறிவுரை கூறலாம். ஆனால் புத்தகம் படிக்க ஆர்வம இருந்தால் மட்டும் புத்தகம் படிக்க முடியும். பதிப்பாளர், எழுத்தாளர், வாசகர் மூவரும் சேர்ந்து எடுக்கும் முடிவுதான் ஒரு புத்தகம்.  ஒரு தரமான புத்தகத்தைக் கொண்டு வர ஒரு பதிப்பாளர் முன் வர வேண்டும், ஒரு தரமான எழுத்தை எழுத ஒரு எழுத்தாளர் முன் வர வேண்டும், அதை வாசிக்க ஒரு வாசகனும் தயாராக இருக்க வேண்டும். ஒரு புத்தகம் வாசிப்பவன் புத்தகத்தை எடுத்துப் படிக்க பலவிதத் தடைகளை கடக்க வேண்டிய நிலையில் உள்ளான்.  என் குடும்பத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாய் புத்தகம் படிப்பார்கள். என் தந்தை எனக்குத் தெரிந்து புத்தகமே படிக்க மாட்டார்.  அவர் தினசரி தாள்களையே இப்போதுதான் படிக்கிறார்.  ஆனால் படித்தாலும் ஒன்றும் சொல்ல மாட்டார். என் மனைவி, 'லட்சுமி' என்ற எழுத்தாளர் புத்தகங்களை அதிகம் விரும்பிப் படிப்பார்.  ஆனால் இப்போதெல்லாம் அவருக்கு டிவியில் பொழுது போய் விடுகிறது.  என் சகோதரன் முன்பெல்லாம் தமிழ் புத்தகம் படிக்க ஆர்வம் காட்டுவான்.  இப்போது சுத்தமாக இல்லை.  அவன் படிப்ப

லாவண்யாவின் கடலின் மீது ஒரு கையெழுத்து

அழகியசிங்கர் எங்கள் வங்கி அலுவலகம் இருந்த தெரு முனையில்தான் பாரத வங்கி இருந்தது.  ஒரு காலத்தில் அங்கு வண்ணதாசன் பணி புரிந்திருக்கிறார். நான் அந்த வங்கிக்குப் போகும்போது அவரைப் பார்த்திருக்கிறேன்.  அவர் எங்கோ எழுந்து போவதுபோல் இருக்கையில் அமர்ந்திருப்பார். ஆனால் நான் சொல்ல வந்தது அவரைப் பற்றி அல்ல. சேதுராமன் என்ற நண்பர்.  பாரத வங்கியில் உயர் அதிகாரியாகப் பணிபுரிந்தவர்.  அவரைப் பார்க்க விருட்சம் இதழை எடுத்துக் கொண்டு போவேன்.  வா என்று வரவேற்பார்.  பல நண்பர்களிடம் அறிமுகப் படுத்துவார். விருட்சம் இதழுக்காக சந்தாத் தொகையைக் கொடுப்பதோடல்லாமல், இன்னும் சிலரிடம் சொல்லி வாங்கிக் கொடுப்பார்.  அவர் ஒரு புத்தக நண்பர்.  எழுத்தாளர் சுந்தர ராமசாமியின் நண்பர்.  அவரைப் பார்க்கப் போவதே எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும். ஒருமுறை அவர் கவிஞர் ஒருவரை அறிமுகப் படுத்தினார். "சார், இவர் சத்தியநாதன்.  லாவண்யா என்ற பெயரில் கவிதைகள் எழுதுவார்," என்றார் அவர். வந்தது ஆபத்து விருட்சத்துக்கு என்று நினைத்துக் கொண்டேன்.  லாவண்யா என்ற பெயரில் எழுதும் சத்தியநாதன், வேடிக்கையாகப் பேசக் கூடி

ஒருநாள் பிரமிள் வீட்டிற்கு வந்தார்.

அழகியசிங்கர் ஒருமுறை பீச் ரயில்வே ஸ்டேஷனலில் உள்ள மின்சார வண்டியில் கவனம் என்ற சிறுபத்திரிகையைப் படித்துக்கொண்டு வந்தேன்.  பொதுவாக எதாவது புத்தகம் அல்லது பத்திரிகை படித்துக்கொண்டு வருவது வழக்கம்.  என் பக்கத்தில் பேசுவதற்கு நண்பர்கள் கிடைத்தால் பேசிக்கொண்டே வருவேன். நான் படிக்கிற பத்திரிகை அந்த மின்சார வண்டியில் வந்து கொண்டிருக்கும் சக பயணிகளுக்கு என்னவென்று தெரியாது. கவனம் என்ற சிற்றேட்டின் முதல் இதழைப் படித்துக்கொண்டு வந்தேன்.  சில தினங்களுக்கு முன்புதான் அந்தப் பத்திரிகையை திருவல்லிக்கேணியில் உள்ள ஆர் ராஜகோபாலன் என்பவரிடமிருந்து வாங்கி வந்திருந்தேன். மாம்பலம் வரை என் மின்சார வண்டிப் பயணம் முடிந்து விடும். பின் அங்கிருந்து நடந்து வீட்டிற்குப் போய்விடுவேன்.  பின் அடுத்தநாள் மின்சார வண்டியில் அந்தப் பத்திரிகை அல்லது எதாவது புத்தகம் படிப்பது தொடரும். அப்படி அன்று கவனம் பத்திரிகையைப் படித்துக் கொண்டு வரும்போது எதிரில் ஒருவர் அமர்ந்து இருந்தார். என்னை உற்றுப் பார்த்துக் கொண்டு வந்தார்.   "உங்கள் கையில் உள்ள பத்திரிகையைத் தர முடியுமா?" என்று கேட்டார். நான் கவ