Skip to main content

Posts

Showing posts from 2023
 விருட்சம் அன்புடன் அழைக்கும் கதைஞர்களின்  69வது நிகழ்ச்சி  01.12.2023 அன்று மிக சிறப்பாக நடைப் பெற்றது. வெள்ளிக்கிழமை - மாலை 6.30 மணிக்கு நடந்த நிகழ்ச்சியை இப்போது காணொளியில் காணலாம். நிகழ்ச்சி எண் - 69 புதிய மாதவி சிறு கதைகளை எடுத்து 5  இலக்கிய நண்பர்கள் சிறப்பாக உரை நிகழ்த்தினார்கள். புதிய மாதவி கதைகள் மீனாட்சி சுந்தரமூர்த்தி - அப்பாவின் முகக் கவசம் சாந்தி ரஸவாதி  : 39 சைஸ் பேராசிரியர் ராமச்சந்திரன் -  ராஜ மாதா வைதேகி - தாத்தாவின் தேவதை நாகேந்திர பாரதி  - திரைகளும் வெளிகளும் அன்புடன்  அழகியசிங்கர். 9444113205 Please read : daily.navinavirutcham.in

கவிதை வாசிக்கலாம் வாங்க.. 13

14.09.2023 அன்று - (வியாழக்கிழமை) மாலை 6.30 மணிக்கு சூமில் நடந்து முடிந்தது. அதன் காணொளியை கண்டு களியுங்கள். இதுவரை கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி என்ற தலைப்பில் 100 வெற்றிகரமாக கூட்டங்களை நடத்தி முடித்து விட்டோம். இனிமேல் நமது குழுவின் தலைப்பு 'கவிதை வாசிக்கலாம் வாங்க.' கவிதை வாசித்தவர்கள் எல்லா விதமான கவிதைகளையும் வாசித்தார்கள். இந்த முறையும் எம்.டி.முத்துக் குமாரசாமியின் நான்காவது மொழி பெயர்ப்புப் புத்தகமான 'தாவே தெ ஜிங்' கவிதைகள் குறித்து சிறப்பாகப் பேசினார். கூடவே சண்முகம் அவர்களும் கலந்துகொண்டு சிறப்பு செய்தார்கள். அன்புடன் அழகியசிங்கர் Mobile 9444113205 Read daily.navinavirutcham.in

விருட்சம் அன்புடன் அழைக்கும் கதைஞர்களின் 63வது நிகழ்ச்சி

 விருட்சம் அன்புடன் அழைக்கும் கதைஞர்களின்  63வது நிகழ்ச்சி  08.09.2023 -   இன்று மாலை 6.30 மணிக்குச் சிறப்பாக  நடைப் பெற்றது. இப்போது காணோளியைப் பார்த்து ரசிக்கவும். நிகழ்ச்சி எண் - 63 இரண்டு கதைஞர்களின் கதைகளை எடுத்து 6 பேர்கள் பேசுகிறார்கள். 1. வாஸந்தி கதைகள் முபீன் சாதிகா - ஒரு பயணத்தின் முடிவு ரேவதி பாலு - நரிகள் பரிகளானது வைதேஹி - அவளது அந்தரங்கம்  2. சி.சு. செல்லப்பா கதைகள் நாகேந்திர பாரதி - கூடு சாலை எஸ்.ஆர்.ஸி - பந்தயம் பேராசிரியர் இராமச்சந்திரன் - குற்றப் பரம்பரை நிகழ்வு :         விருட்சம் .. கதைஞர்களைக் கொண்டாடும் நிகழ்ச்சி 63 அன்புடன்  அழகியசிங்கர். 9444113205 Please read : daily.navinavirutcham.in

கவிதை வாசிக்கலாம் வாங்க.. 11

18.08.2023  அன்று வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணிக்கு  சூமில் நடந்த நிகழ்ச்சியை காணொளியில் கண்டு களியுங்கள். இதுவரை கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி என்ற தலைப்பில் 100 கூட்டங்களை நடத்தி முடித்து விட்டோம். இனிமேல் நமது குழுவின் தலைப்பு  'கவிதை வாசிக்கலாம் வாங்க.'  இது பதினோராவது கூட்டம். எந்த வகையான கவிதையும் வாசித்தார்கள். சுரேஷ் ராஜகோபால் தலைமை ஏற்று நடத்தினார். போனமுறை பாஷோவின் ஹைக்கூ கவிதைகள் குறித்து சிறப்பாக உரை நிகழ்த்திய எம்.டி.முத்துக்குமாரசாமி அவருடைய இன்னொரு மொழி பெயர்ப்பு புத்தகமான  'ஃபெர்ணாண்டோ பெசோவா கவிதைகள் குறித்து  அரை மணி நேரம் உரை  ஆற்றினார். விருட்சம் அழைக்கும் சூம் கூட்டம். அன்புடன் அழைக்கும், அழகியசிங்கர் Mobile 9444113205 Read daily.navinavirutcham.in

கவிதை வாசிக்கலாம் வாங்க.. 10

   04.07.2023 அன்று  வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணிக்கு  சூமில் கூடி நடந்த நிகழ்ச்சியின் காணொளி. இதுவரை கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி என்ற தலைப்பில் 100 கூட்டங்களை நடத்தி முடித்து விட்டோம். இனிமேல் நமது குழுவின் தலைப்பு  'கவிதை வாசிக்கலாம் வாங்க.'  இது பத்தாவது கூட்டம்.   சமீபத்தில் வெளியான பாஷோவின் ஹைக்கூ கவிதைகள் பற்றி எம்.டி.முத்துக்குமாரசாமி அவர்கள் 60 நிமிடங்களா பேசிய முழு  உரையைக் காணொளியில் காணுங்கள். பானுமதி , ரத்னா வெங்கட் இருவரும் கவிதை வாசித்தார்கள். மதுவந்தி தலைமை வகித்து கூட்டத்தை நடத்தினார்.  முழு காணொளியைக் கண்டு ரசியுங்கள். அன்புடன் அழைக்கும், அழகியசிங்கர்

விருட்சம் அன்புடன் அழைக்கும் கதைஞர்கள் 60வது நிகழ்ச்சி 28.07.2023 அன்று மாலை 6.30 மணிக்கு சிறப்பாக நடை பெற்றது.

 விருட்சம் அன்புடன் அழைக்கும் கதைஞர்கள் 60வது நிகழ்ச்சி  28.07.2023 அன்று மாலை 6.30 மணிக்கு சிறப்பாக  நடை பெற்றது. இந்நிகழ்சியின் காணொளியை கண்டு களியுங்கள் நிகழ்ச்சி எண் - 60 இரண்டு கதைஞர்களின் கதைகளை எடுத்துப் பேசினார்கள். 1. சுரேஷ் ராஜகோபால் கதைகள் பேசுபவர்கள் : இராய செல்லப்பா- அத்தையம்மாள் மீனாட்சிசுந்தரமூர்த்தி - கணக்கு வாத்தியார் ஜெ.பாஸ்கரன் -  யார் அந்த ரோஸி? 2.  மதியழகன் கதைகள் பேசுபவர்கள்:  ஆர்க்கே - புற்று வைதேஹி  - கல்லுப்பிள்ளையார் மீ.விஸ்வநாதன் -  சிலந்தி நிகழ்வு :         விருட்சம் .. கதைஞர்களைக் கொண்டாடும் நிகழ்ச்சி. அன்புடன் அழைக்கிறேன் அழகியசிங்கர் 9444113205 Please read : daily.navinavirutcham.in

கவிதை வாசிக்கலாம் வாங்க.. 9

 (21.07.2023)  அன்று (வெள்ளி) மாலை 6.30 மணிக்கு  சூமில் கூடி கவிதை வாசித்த கூட்டம். காணொளியில் கண்டு  ரசியுங்கள். இதுவரை கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி என்ற தலைப்பில் 100 கூட்டங்களை நடத்தி முடித்து விட்டோம். இனிமேல் நமது குழுவின் தலைப்பு  'கவிதை வாசிக்கலாம் வாங்க.'  இது ஒன்பதாவது கூட்டம். எல்லாவிதமான கவிதைகளையும் வாசித்தார்கள். முதல் 20  நிமிடங்கள் சமீபத்தில் வெளிவந்த மூத்தக் கவிஞர் கல்யாண்ஜியின் 'வெயிலில் பறக்கும் வெயில்' என்ற புத்தகத்திலிருந்து  கவிதைகளை வாசித்தோம். விருட்சம் அழைக்கும் சூம் கூட்டம். அன்புடன்  அழகியசிங்கர் Mobile 9444113205 Read daily.navinavirutcham.in

அழகியசிங்கர் அழைக்கிறார் ' இசை புதிது ' குழுவின் இரண்டாம் நிகழ்வின் காணொளி.

  அழகியசிங்கர் அழைக்கிறார் ' இசை புதிது ' குழுவின் இரண்டாம் நிகழ்வின் காணொளி. இந்த நிகழ்ச்சி ஜூலை 8 சனிக்கிழமை , மாலை 6 30 மணிக்கு சிறப்பாக நடந்து முடிந்தது. நிகழ்ச்சி நிரல்  இறைவணக்கம்: சாந்தி ரசவாதி சனீஸ்வர கிருதி: சங்கரநாராயணன்  கிளாசிக்கல் சாங் :ரேவதி பாலு  சினிமாப்  பாடல்: க்ருபா  தனிப்பாடல்: வானவில் ரவி   சினிமாப்  பாடல் : தெய்வசிகாமணி சினிமாப்  பாடல் : ஜானகி மகேஷ்   கீபோர்ட் கர்நாடிக் : பவித்ரா   மிருதங்கம் தனி ஆவர்த்தனம் : P. சரத்  சினிமா பாடல்:  R. K --------------------------------------- அனைவரும் கலந்து நிகழ்வைச் சிறப்பிக்க வேண்டுகிறோம் அழகியசிங்கர்  அழகியசிங்கர் அழைக்கிறார் ' இசை புதிது ' குழுவின் இரண்டாம் நிகழ்வின் காணொளி. - YouTube

கவிதை வாசிக்கலாம் வாங்க.. 8

  (07.07.2023)  இன்று (வெள்ளி) மாலை 6.30 மணிக்கு  சூமில் கூடி கவிதை வாசித்தோம்.இந்த நிகழ்ச்சியை காணோளியில் கண்டு களியுங்கள்.இதுவரை கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி என்ற தலைப்பில் 100 கூட்டங்களை நடத்தி முடித்து விட்டோம்.இனிமேல் நமது குழுவின் தலைப்பு  'கவிதை வாசிக்கலாம் வாங்க.'  இது எட்டாவது கூட்டம்.எதுமாதிரியான கவிதையும் வாசிக்கலாம். முதல் 30  நிமிடங்கள் சமீபத்தில் வெளிவந்த மூத்தக் கவிஞர் நாரணோ ஜெயராமன் கவிதைகளை வாசிக்கிறோம். விருட்சம் அழைக்கும் சூம் கூட்டம்
 வேண்டாம்../அழகியசிங்கர் "இவள்தான் உன் அம்மா"  என்று புகைப்படத்தைக் காட்டி பையனிடம் அறிமுகப் படுத்தினான் பத்மநாபன். பையன் மகேஷ் "அம்மாவா!" என்று ஆச்சரியப்பட்டான்.  அவன் அப்பாவின் நிழலிலேயே இதுவரை வாழ்ந்து வருகிறான். அவனுக்கு அப்பாவைத் தவிர பாட்டியைத் தெரியும்.  ஒருமுறைகூட பாட்டி அம்மாவைப் பற்றி பேசியதில்லை. "அம்மா இப்ப எங்கேப்பா?" என்று மகேஷ் கேட்டான். "அவள் நம்மை விட்டுப் போயிட்டாள்" என்றான் பத்மநாபன். மகேஷிற்கு ஒன்றும் புரியவில்லை. "செத்துப் போயிட்டாளா.." "இல்லை. என்னைப் பிடிக்கலைன்னு போயிட்டா"  இதையெல்லாம் இதுவரை பையனிடம் சொல்லாமல் மறைத்து வைத்திருந்தான்.  என்னமோ இன்று மனைவியின் புகைப் படத்தைப் பார்த்தவுடன் சொல்ல தோன்றிவிட்டது. "அம்மா இப்ப எங்கே?" "இதே சென்னையிலே இன்னொரு மூலையிலே இருக்கா.." "அப்பா உன்னைப் பிடிக்கலைன்னு அம்மா போயிட்டாளா?"  "ஆமாம்" என்றான் பத்மநாபன் சோகமாக. அதைக் கேட்க மகேஷிற்கு வருத்தமாக இருந்தது. "நீ இவ்வளவு நல்ல அப்பாவாக இருக்கும்போது அம்மா உன்னை ஏன் விட்டுட்டுப

வல்லிக்கண்ணன் திரும்பவும் வந்து விட்டார்.

 20.06.2023 (செவ்வாய்) அழகியசிங்கர் 1.12.1992 அன்று என் பிறந்தநாள்.  முப்பது ஆண்டுகளுக்கு முன்னால்வல்லிக்கண்ணனை அவர் வீட்டில் சந்தித்ததைப் பற்றிக் கூற விரும்புகிறேன். 1.12.1992 அன்று வல்லிக்கண்ணனை அவர் வீட்டில் சந்திந்தேன்.  சந்தித்த நோக்கம்.  அவரைப் பேசக் கூப்பிடலாமென்றுதான்  . நான் அப் போது விருட்சம் இலக்கியச் சந்திப்பு கூட்டம் மாதம் ஒருமுறை நடத்திக் கொண்டிருந்தேன். கூட்டம் நடத்தும் செலவு எப்போதும் ரூ.100 தான்.   அதுமாதிரியான கூட்டத்தை இப்போது நினைத்தால் என்னால் நடத்த முடியாது. எப்படி ரூ.100 செலவு என்று சொல்கிறேன்.  கூட்டம் நடத்தும் இடத்திற்கு வாடகை ரூ.50.  எல்லோருக்கும் கூட்டம் பற்றித் தெரிவிக்க நான்  தபால் கார்டுகள் வாங்குவேன்.  100 கார்டுகள் விலை ரூ.25. கூட்டத்திற்கு வருகை புரிபவருக்குக் காப்பி அல்லது டீ செலவு ரூ.25. பேச வருபவருக்கு நான் எதுவும் கொடுப்பதில்லை.  என்னிடம் எதுவும் கேட்க மாட்டார்கள். பல எழுத்தாளர்கள் கலந்துகொண்டு பேசி இருக்கிறார்கள்.  வல்லிக்கண்ணனை அவர் படித்த தமிழ் நாவல்களைப் பற்றிப் பேச அழைத்தேன். அவரைச் சந்தித்த அன்று என் பிறந்தநாள்.  அவரிடம் தெரிவித்தேன்.   சாகித்

விருட்சம் அன்புடன் அழைத்த நிகழ்ச்சி - 16.06.2023. / அழகியசிங்கர்

   16.06.2023  -  இன்று  -  வெள்ளிக்கிழமை  மாலை 6.30 மணிக்கு விருட்சம் நடத்தும் கதைகளைக்  கொண்டாடும் நிகழ்ச்சி சூம் மூலம். சிறப்பாக நடந்து முடிந்தது.  நிகழ்ச்சி எண் - 57 இரண்டு கதைஞர்களின் கதைகளை எடுத்துப் பேசினார்கள். 1. சுப்ரஜா கதைகள் பேசுபவர்கள் : பிரசன்னா - தடக்..தடக்.. பேராசிரியர் ராமச்சந்திரன்  - விரல்கள் இந்திரன் நீலன் சுரேஷ்  - காற்றில் ஒரு வண்ணத்துப் பூச்சி  2. ஆ.மாதவன் கதைகள் பேசுபவர்கள் : SRC  - தாசில்தார் மரணம் H N ஹரிஹரன் - மலையாளத்து மழை மீனாட்சி சுந்தரமூர்த்தி - இலக்கியம் பேசி நிகழ்வு :         விருட்சம் .. கதைஞர்களைக் கொண்டாடும் நிகழ்ச்சி     அன்புடன் அழைக்கிறேன் அழகியசிங்கர் 9444113205

கவிதை வாfசிக்கலாம் வாங்க.. 6 /அழகியசிங்கர்

(09.06.2023) மாலை 6.30 மணிக்கு  நாம் சூமில் கூடி கவிதை வாசித்தோம்.இதுவரை கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி என்ற தலைப்பில் 100 கூட்டங்களை நடத்தி முடித்து விட்டோம்.இனிமேல் நமது குழுவின் தலைப்பு  'கவிதை வாசிக்கலாம் வாங்க.'  இது ஆறாவது கூட்டம்.எதுமாதிரியான கவிதையும் வாசிக்கலாம். ஒன்றுக்கும் மேலான கவிதையும் எழுதி வாசிக்கலாம். கவிதை ஒவ்வொன்றும் 10 வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும். இந்தக் கூட்டத்தின் காணொளியைக் கண்டு களியுங்கள். அன்புடன் அழைக்கிறேன். அழகியசிங்கர் 9444113205 Please visit  : daily.navinavirutcham.in

விருட்சம் அன்புடன் அழைக்கும் கதைஞர்கள் நிகழ்ச்சி 02.06.2023 /அழகியசிங்கர்

  அன்று சிறப்பாக நடைபெற்றது. கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி.  விருட்சம் நடத்திய கதைகளைக்  கொண்டாடும் நிகழ்ச்சியைக் காணொளி மூலம் கண்டு களியுங்கள். நிகழ்ச்சி எண் - 56 இரண்டு கதைஞர்களின் கதைகளை எடுத்துப் பேசுகிறார்கள். 1. காந்தலக்ஷ்மி  சந்திரமௌலி கதைகள் பி.ஆர்.கிரிஜா - சலுகை இராய செல்லப்பா - அவர் ரொம்ப நல்லவர் ரேவதி பாலு - சந்நியாசம் 2. பால சாண்டில்யன் கதைகள் டாக்டர் ஜெ.பாஸ்கரன் - என் பெயர் கமலா ஆர்.கே - அழகு தேவதைகள் மஞ்சு முருகவேல் - வாடாமல்லி சரஸ்வதி நிகழ்வு :          விருட்சம் .. கதைஞர்களைக் கொண்டாடும் நிகழ்ச்சி அன்புடன்  அழகியசிங்கர் 9444113205

கவிதை வாசிக்கலாம் வாங்க.. 5

வெள்ளிக்கிழமை - (26.05.2023) மாலை 6.30 மணிக்கு   சூமில் கூடி கவிதை வாசித்தோம். இதுவரை கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி என்ற தலைப்பில் 100 கூட்டங்களை நடத்தி முடித்து விட்டோம். இனிமேல் நமது குழுவின் தலைப்பு  'கவிதை வாசிக்கலாம் வாங்க.'  இந்த முறை கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கூட்டத்தில் கூறப்பட்ட  6 தலைப்புகளில் கவிதை எழுதி  சிறப்பாக  வாசித்தார்கள். 1. பூனை 2. மின்னல் 3. கண்ணாடி 4. மெட்ரோ ஸ்டேஷன் 5. தெரு 6. வாழ்க வாழ்க கவிதை வாசிக்கும் முன்  சேக்கிழார் அடிப்பொடி டி.என். இராமச்சந்திரனின் புத்தகமான  'வழி வழி பாரதி ' என்ற புத்தகத்தைப் பற்றி  மீ.விஸ்வநாதன் உரை  நிகழ்த்தினார்.  இக் கூட்டத்தின் காணொளியை நீங்கள் கண்டு ரசியுங்கள். அழகியசிங்கர் 9444113205

இமையம் எழுதிய வாழ்க வாழ்க….

 அழகியசிங்கர்   ஆண்டாளின் பெண் வளர்மதி.  அவளுடைய குழந்தைக்கு உடம்பு சரியில்லை. ஆண்டாள் பெண்ணை சாடுகிறாள். "காசு இல்லாட்டி எப்படி ஆஸ்பத்திரிக்குப் போவது"  என்கிறாள் வளர்மதி. "தனியார் ஆஸ்பத்திரிக்குப் போனாத்தான் மருந்து மாத்திரையென்று ஐந்நூறு ஆயிரத்தைப் பிடுங்குவான்."  வெங்கடேசப் பெருமாள் ஆண்டாளிடம் பேசி கட்சி கூட்டத்துக்கு வர்ற சொல்கிறான்.  ஐந்நூறு ரூபாய் பணமும், புடவையும் கிடைக்குமென்று சொல்கிறான்.  இப்படிப் பலரை அந்தக் கிராமத்தில் உள்ளவர்களை ஆள் சேர்க்கிறான்.   இப்படிக் கூட்டத்திற்கு ஆள் சேர்ப்பதே அவன் கட்சியின் முக்கிய வேலை.  இதன் மூலம் ஏழையாக இருந்த அவன், பணம் சம்பாதித்து, படிப்படியாக சுமா கார் வாங்கற அளவுக்குப் பெரிய பணக்காரனாக உயர்ந்து விட்டான். கட்சிக்கூட்டம் விருத்தாசலத்தில் நடக்கிறது.  அந்தக் கிராமத்திலிருந்து விருத்தாசலம் போவதற்குக் கால் மணி நேரம் ஆகும்.  இப்படிப் பேச்சுத் தமிழில் சிறப்பாக எழுதிக்கொண்டு போகிறார் இமையம். “ எப்போதுமே வெங்கடேசப் பெருமாள் இருக்கிற சின்னக் கண்டியாங்குப்பத்தில், குறைந்த வாக்குகளே த.உ.மு கழகத்துக்குக் கிடைக்கும். அ

எழுத்தாளர் வாதூலன் நேற்று (20.05.2023) இரவு இறந்து விட்டார்.

அழகியசிங்கர் 15.04.2022 அன்று விருட்சம் கதைஞர்கள் கூட்டத்தில் வதூலன் கதைகளை எடுத்துப் பேசினோம். அந்தப் பேச்சை திரும்பவும் ஒளி பரப்புகிறோம். அவருடைய ஆத்மா சாந்தி அடைய இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.

விருட்சம் அன்புடன் அழைக்கும் கதைஞர்கள் நிகழ்ச்சி 19.05.2023./அழகியசிங்கர்

  19.05.2023  -  வெள்ளிக்கிழமை - மாலை 6.30 மணிக்கு விருட்சம் நடத்திய கதைகளைக்  கொண்டாடும் நிகழ்ச்சி சூம் மூலம் சிறப்பாக நடந்தது.  அதன் காணொளியைக்  கண்டு மகிழுங்கள்.   நிகழ்ச்சி எண் - 55 மூன்று கதைஞர்களின் கதைகளை எடுத்துப் பேசினார்கள். 1. ஜே.பி.சாணக்யா கதை 1. எஸ்ஆர்சி -  கடவுளின் நூலகம் 2. மனுபாரதி கதைகள் 1. நாகேந்திர பாரதி - மண் பிள்ளையார் 2. பானுமதி - சூரியனைத் தேடும் இலைகள் 3. ராஜாமணி - நீல மேஜை 3. ரவிபிரகாஷ் கதைகள் 1.  இந்திர நீலன் சுரேஷ்  - அன்பற்ற அப்பாவிற்கு  2. வைதேஹி - கொலை செய்யாள் பத்தினி விருட்சம் நடத்தும் கதைஞர்களைக் கொண்டாடும் நிகழ்ச்சி நிகழ்வு :         விருட்சம் .. கதைஞர்களைக் கொண்டாடும் நிகழ்ச்சி  நாள் - நேரம்  May 19, 2023  06:30 PM India       அன்புடன் அழைக்கிறேன் அழகியசிங்கர் 9444113205

கவிதை வாசிக்கலாம் வாங்க.. 3/அழகியசிங்கர்

வெள்ளிக்கிழமை - (12.05.2023) மாலை 6.30 மணிக்கு  சூமில் கூடி கவிதை வாசிப்பு கூட்டம் சிறப்பாக நடந்தது. இதுவரை கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி என்ற தலைப்பில் 100 கூட்டங்களை நடத்தி முடித்து விட்டோம். இனிமேல் நமது குழுவின் தலைப்பு  'கவிதை வாசிக்கலாம் வாங்க.'  கூட்டத்தில் கலந்து கொண்டு கவிதை வாசித்தார்கள். கவிதை வாசிக்கும் முன் கவிதையைக் குறித்து கேட்கப்பட்ட  கேள்விகளுக்கு சிறப்பான முறையில் பதில்கள்  அளித்தார்கள்.  இதன் காணொளியைப் பார்த்து ரசியுங்கள். அன்புடன் அழைக்கிறேன். அழகியசிங்கர் 9444113205 Please visit  : daily.navinavirutcham.in

விருட்சம் அன்புடன் அழைக்கும் கதைஞர்கள் நிகழ்ச்சி - 05.05.2023

 அழகியசிங்கர்  05.05.2023  - வெள்ளிக்கிழமை - மாலை 6.30 மணிக்கு விருட்சம் நடத்திய கதைகளைக்  கொண்டாடும் நிகழ்ச்சி சூம் மூலம்.   நிகழ்ச்சி எண் - 54 இலக்கியச் சிந்தனை 1993 ஆம் ஆண்டின் சிறந்த சிறுகதைகளை எடுத்துப் பேசினார்கள். 1.  கலாவதி பாஸ்கர் - திலகவதியின் 'இன்று முதல் தென்றல்   2. பேராசிரியர் ராமச்சந்திரன்   -  திலீப்குமார் எழுதிய கடிதம் 3. சுரேஷ் ராஜகோபால்  சோம. வள்ளியப்பன் எழுதிய பாதிப்புகள் 4. இராய செல்லப்பா  - கிருஷ்ணா எழுதிய காலி மனை 5. ரேவதி பாலு  - க.வை.பழனிசாமி எழுதிய பாட்டியின் வீடு 6. பிரசன்னா  - பாவண்னன் எழுதிய உப்பு நிகழ்வு :         விருட்சம் .. கதைஞர்களைக் கொண்டாடிய நிகழ்ச்சி  நாள் - நேரம்  May 5, 2023  06:30 PM India       அன்புடன் அழைக்கிறேன் அழகியசிங்கர் 9444113205

கவிதை வாசிக்கலாம் வாங்க.. 2/அழகியசிங்கர்

வெள்ளிக்கிழமை  (28.04.2023) மாலை 6.30 மணிக்கு  நடந்த    சூம்   கூட்டத்தில்    சிறப்பாகக்   கவிதை வாசித்தோம். ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்து கொண்டோம். அதன்   பதிவைக்   காணொளியில் இங்குப் பதிவிடுகிறோம். கண்டு ரசியுங்கள். மற்றவர்க்கு விண்டு கூறுங்கள். இதுவரை கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி என்ற தலைப்பில் 100 கூட்டங்களை நடத்தி முடித்து விட்டோம். இனிமேல் நமது குழுவின் தலைப்பு 'கவிதை வாசிக்கலாம் வாங்க.' கூட்டத்தில் கலந்து கொள்பவர்கள் எந்தக் கவிதையும் வாசிக்கலாம். நீங்கள் வாசிக்கும் கவிதையைப் பற்றி  இன்னொருவர் விமர்சிப்பார். உதாரணமாக A கவிதை வாசிக்கிறாரென்று வைத்துக் கொள்ளுங்கள் அக்கவிதையை B விமர்சிப்பார். B கவிதையை C விமர்சிப்பார். அன்புடன்  அழகியசிங்கர் 9444113205

விருட்சம் நடத்தி முடித்த கதைஞர்களின் நிகழ்ச்சி - 53/அழகியசிங்கர்

  வெள்ளிக்கிழமை - மாலை 6.30 மணிக்கு விருட்சம் நடத்திய கதைகளைக் கொண்டாடும் நிகழ்ச்சி சூம் மூலமாக. கூட்டத்தின் காணொளியைக் கண்டு களியுங்கள். நிகழ்ச்சி எண் - 53 சமகால இந்தியச் சிறுகதைகளை எடுத்துப் பேசினார்கள். 1. ந.பானுமதி - குஜராத்தி மொழியில் கன்ஷ்யாம் தேசாய் எழுதிய கூட்டம் 2. ராஜாமணி - டோக்ரி மொழியில் வேத்ராஹி எழுதிய பால்காக்கும் நோனோவும் 3. இந்திர நீலன் சுரேஷ் - கன்னட மொழியில் வைதேஹி எழுதிய சௌகந்தியின் - தனிமொழிகள் 4. நாகேந்திர பாரதி - கொங்கணி மொழியில் ஹேமாச்சார்யா எழுதிய சுமதி 5. ஜெ.பாஸ்கரன் - மணிப்புரி மொழியில் ஒய்.இபோம்சா எழுதிய தண்ணீர் 6. எஸ்ஆர்சி - பஞ்சாப் மொழியில் கே.எஸ்.துக்கல் எழுதிய வாடகைக் காரோட்டி அழகியசிங்கர் 9444113205 Please read daily.navinavirutcham.in

கவிதை வாசிக்கலாம் வாங்க.. 1

   வெள்ளிக்கிழமை - தமிழ் வருடப் பிறப்பன்று  (14.04.2023) மாலை 6.30 மணிக்கு   சூமில்  சிறப்பாக நடந்து முடிந்தது. இனிமேல் நமது குழுவின் தலைப்பு 'கவிதை வாசிக்கலாம் வாங்க.' கூட்டத்தில் கலந்து கொள்பவர்கள் எந்தக் கவிதையையும்  வாசிக்கலாம். ஆனால் ஒரு நிமிடம் நீங்கள் வாசிக்கும் கவிதையைப்  பற்றிப்  பேச வேண்டும்   நீங்கள் வாசிக்கும் கவிதையைப் பற்றி  கருத்துகளைத் தெரிவித்த உங்களுக்கு நன்றி. நிகழ்ச்சியின் காணொளியைக் கண்டு களியுங்கள். அன்புடன்  அழகியசிங்கர்

விருட்சம் நடத்திய கதைகளைக் கொண்டாடும் நிகழ்ச்சி - 52

 07.04.2023 -  மாலை - (வெள்ளிக்கிழமை) - 6.30 மணிக்கு விருட்சம் நடத்திய கதைகளைக்  கொண்டாடும் நிகழ்ச்சியின் காணொளியைக் கண்டு ரசியுங்கள்.  நிகழ்ச்சி எண் - 52 முதன் முறையாக ஒரே குடும்பத்தைச் சார்ந்த இரண்டு பெண் எழுத்தாளர்கள்  கதைகளை எடுத்துப் பேசினோம். எழுத்தாளர் கமலா நடராஜன் (அம்மா) சிறு கதைகளைக் குறித்து  1.   ந.பானுமதி  - ராமனைக் தேடி 2.  ரம்யா வாசுதேவன் -  சாதிகள் இல்லையடி பாப்பா 3.  பி.ஆர். கிரிஜா -    - இழப்பு இரண்டாம் நிகழ்வு எழுத்தாளர் கிரிஜா ராகவன் (மகள்) சிறு கதைகளைக் குறித்து 1.   ரேவதி பாலு  - ரௌத்திரம் பழகு 2.  சாந்தி ரஸவாதி  -   மகள் தாய்க்காற்றும் உதவி 3. மீனாட்சி சுந்தரமூர்த்தி  - அழகி அன்புடன் வரவேற்கிறேன், அழகியசிங்கர் 9444113205 Pl visit daily.navinavirutcham.in

இது க.நா.சு வின் சிறப்புக் கூட்டம்

  அழகியசிங்கர்  100வது சிறப்பான விருட்சம்  கவிதை  நேசிப்புக் கூட்டம் சிறப்பாக நடந்து முடிந்தது. சூம்  மூலமாக விருட்சம் பெருமையுடன்  நடத்திய 100வது  கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி.  வெள்ளிக்கிழமை  (31.03. 2022)   -  மாலை 6.30  மணிக்குக்  கூட்டம் நடந்தது. மூத்தப் படைப்பாளி க.நா.சு கவிதைகளைக் குறித்து  1. எம்.டி. முகத்துக்குமாரசாமி 2. ப. சகதேவன் 3.  முபீன்   சாதிகா மூவரும்  சிறப்பாகப் பேசினார்கள். கூடவே, க.நா.சு  கவிதைகளை எல்லோரும் படித்து அவருக்குப் புகழ் அஞ்சலி செலுத்தினார்கள். இந்த நிகழ்ச்சியைச் சிறப்பாக நடத்தி முடித்தோம்.  அதன் காணொளியைக் கண்டு களிக்கவும்.

இது க.நா.சுவின் சிறப்புக் கூட்டம்

  100வது சிறப்பான விருட்சம்  கவிதை  நேசிப்புக் கூட்டம் சூம்  மூலமாக விருட்சம் பெருமையுடன்  வழங்கும் 100வது  கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி. வரும் வெள்ளிக்கிழமை - (31.03. 2022)   -  மாலை 6.30 மணிக்கு. மூத்தப் படைப்பாளி க.நா.சு கவிதைகளைக் குறித்து  1. எம்.டி. முத்துக்குமாரசாமி 2. ப. சகதேவன் 3. தேவேந்திரப் பூபதி 4.  முபீன்   சாதிகா நால்வர் பேசுகிறார்கள். உரை நிகழ்த்துபவர்கள் ஒவ்வொருவரும் பத்து நிமிடங்களுக்கு மேல் பேச எடுத்துக்கொள்ள மாட்டார்கள். கூடவே, க.நா.சு  கவிதைகளை எல்லோரும் படித்து  அவருக்குப்  புகழ் அஞ்சலி செலுத்துகிறார்கள். கவிதைகுறித்து   ஒவ்வொரிடம்  கேள்விகள்  கேட்கப்படும். இந்த  நிகழ்ச்சியைச்  சிறப்பாக நடத்தி முடிக்க உங்களை அழைக்கிறேன். Join Zoom Meeting https://us02web.zoom.us/j/84204740152?pwd=RGo0Yk5RN0NLYnJ3b3F5RkViUURLdz09 Meeting ID: 842 0474 0152 Passcode: 618356 அன்புடன்  அன்பன் அழகியசிங்கர் 9444113205

விருட்சம் நடத்தும் கதைகளைக் கொண்டாடும் நிகழ்ச்சி. - 51

 25.03.2023 -  மாலை - (சனிக்கிழமை) - மாலை 4 லிருந்து 5.30 மணிவரை  சிறப்பாக நடந்து முடிந்தது. அதனுடைய காணொளியைக் கண்டு மகிழுங்கள்.   நிகழ்ச்சி எண் - 51 முதல் நிகழ்வு எழுத்தாளர் எம்.டி.முத்துக்குமாரசாமி சிறு கதைகளைக் குறித்து  1.   பேராசிரியர் ராமச்சந்திரன்  - மீனா அழுகிறாள், ரகுநந்த் 2.  மீனாட்சி சுந்தர மூர்த்தி  -  நாடகத்திற்கான குறிப்புகள் 3.  முபீன் சாதிகா  - நுனி இரண்டாம் நிகழ்வு தஞ்சை ஹரணி  சிறுகதைகளைக் குறித்து 1. எஸ்.ஆர.ஸி   -  அவளும் அம்மாதான் 2.  இராய செல்லப்பா -   மூங்கில் சுமந்தவர்கள் 3. ரம்யா வாசுதேவன் - வீட்டில் வசிக்கும் கடவுள் அழகியசிங்கர் 9444113205

சிறப்பாக நடந்து முடிந்தது 99வது விருட்சம் கவிதை நேசிப்புக் கூட்டம்

  அழகியசிங்கர் சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன்  வழங்கிய 99வது  கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி. ஒவ்வொருவரும் அவரவர் கவிதைகளை வாசித்துச் சிறப்பு செய்தார்கள். கூடவே  நகுலன் கவிதைகளைப் பற்றிப் பேச நீல பத்மநாபனும்,  முபீனும் பேசினார்கள். நகுலன் கவிதைகளை எல்லோரும் வாசித்து அவருக்கு சிறப்பு செய்தோம்.                எல்லோருடைய  கவிதைகளையும் கேட்டு கருத்துரை வழங்கினார் ஆர்.கே. இது ஒரு நிறைவான நிகழ்வு.  

விருட்சம் நடத்தும் கதைகளைக் கொண்டாடிய நிகழ்ச்சி

 மாலை - சனிக்கிழமை) - மாலை 6.30 மணிக்கு விருட்சம் நடத்தும் கதைகளைக்  கொண்டாடிய நிகழ்ச்சி. அதன் காணோளியைக் காணுங்கள். நிகழ்ச்சி எண் - 50 முதல் நிகழ்வு எழுத்தாளர் த.நா.குமாரசாமி  சிறு கதைகளைக் குறித்து  1.  கலாவதி பாஸ்கரன் - இது சகஜம்தானோ? 2.  பானுமதி   - வீடு மாற்றம் 3.  நாகேந்திர பாரதி  - கதைக்குக் கிடைத்த விஷயம் இரண்டாம் நிகழ்வு ருஷ்ய எழுத்தாளர் ஆன்டான் செகாவ் சிறுகதைகளைக் குறித்து 1. இந்திர நீலம் சுரேஷ்  -  ஓர் அரசாங்க குமாஸ்தாவின் மரணம் 2.  ஜெ.பாஸ்கரன் -   சொற்பொழிவாளர் 3. ராஜாமணி  - பந்தயம் கூட்டம் சிறப்பாக நடந்து முடிந்தது.

98வது விருட்சம் கவிதை நேசிப்புக் கூட்டம்.

 சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன்  வழங்கும் 98வது  கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடந்து முடிந்தது. 03.03.2023 அன்று நடந்த கூட்டத்தின் காணொளியைக் காணத் தவறாதீர்கள். ஒவ்வொருவரும் அவரவர் கவிதைகளை வாசிததார்கள். கூடவே  சி.மணி கவிதைகளைப் பற்றி கால சுப்ரமணியம் சிறப்பாக உரை நிகழ்த்தி உள்ளார். சி மணி கவிதைகளை எல்லோரும் வாசித்தார்கள்.                எல்லோருடைய  கவிதைகளையும் கேட்டு சிறப்பாகக் கருத்துரை வழங்கினார் எஸ்.ஆர்.சி. அன்புடன்  அழகியசிங்கர்

கதைகளைக் கொண்டாடும் நிகழ்ச்சியின் காணொளி தொகுப்பு

  24.02. 2023 - மாலை - வெள்ளிக்கிழமை - மாலை 6.30 மணிக்கு அழகியசிங்கர் விருட்சம் நடத்திய கதைகளைக் கொண்டாடும் நிகழ்ச்சியின் காணொளி தொகுப்பு. நிகழ்ச்சி எண் - 49 முதல் நிகழ்வு எழுத்தாளர் சுரேஷ் குமார இந்திரஜித் சிறு கதைகளைக் குறித்து 1. மருத்துவர் ஜெ.பாஸ்கரன்- மாபெரும் சூதாட்டம் 2. முபீன் சாதிகா - கடந்து கொண்டிருக்கும் தொலைவு 3. பேராசிரியர் இராமச்சந்திரன் - எலும்புக்கூடுகள் இரண்டாம் நிகழ்வு எழுத்தாளர் குமுதா ஸ்ரீநிவாசன் சிறுகதைகளைக் குறித்து 1. ரேவதி பாலு - கடவுள் சித்தம் 2. மீனாட்சி சுந்தர மூர்த்தி - துணை 3. பி.ஆர். கிரிஜா - யார் அறிவாளி பேசியவர்கள் அனைவரும் சிறப்பாகப் பேசினார்கள். இக்கூட்டத்தைக் கனடா தேசத்தில் வசித்த சமீபத்தில் மறைந்த தமிழ் அறிஞர் பசுபதி அவர்களுக்குச் சமர்ப்பணம் செய்துள்ளோம்.

97வது விருட்சம் கவிதை நேசிப்புக் கூட்டம்

சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கிய கூட்டம் சிறப்பாக நடந்து முடிந்தது. வெள்ளிக்கிழமை - 17.02. 2022 அன்று மாலை 6.30 மணிக்கு நடந்து முடிந்தது. ஒவ்வொருவரும் அவரவர் கவிதைகளை வாசித்தார்கள். சுந்தர ராமசாமியின் கவிதைகளைப் பற்றி க.வை. பழனிசாமி சிறப்பாக உரை நிகழ்த்தினார். முபீன் சாதிகா ஆத்மாநாமின் நிஜம் கவிதையை வெகு சிறப்பாக விளக்கினார். வாசிக்கும் கவிதைகளைக் கேட்டு இராய செல்லப்பா தன் மேலான கருத்துகளைத் தெளிவாக எடுத்துரைத்தார். இந்த நிகழ்ச்சியை இப்போது காணொளியில் கேட்டு ரசியுங்கள்.

96வது விருட்சம் கவிதை நேசிப்புக் கூட்டம்

  அழகியசிங்கர் சூம்  மூலமாக விருட்சம் பெருமையுடன்  வழங்கும் 96வது  கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி 03.02.2022 அன்று சிறப்பாக நடந்து முடிந்தது. ஒவ்வொருவரும் அவரவர் கவிதைகளை வாசித்தார்கள். கூடவே  நாமக்கல் கவிஞர் கவிதைகளைப் பற்றி கோ.வைதேகி சிறப்பாக உரை நிகழ்த்தினார். வாசித்த  கவிதைகளைக் கேட்டு வளவ. துரையன்  தன் மேலான கருத்துத் தெரிவித்தது சிறப்பாக இருந்தது. இந்த நிகழ்ச்சியின்  காணொளியைப்  பார்க்கவும்.